பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பியாரிட்ஸ். இந்த நகரம் பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள் இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு செல்கின்றனர். தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது தொடருந்து ஏறியதில் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.
அந்த வகையில் கடந்த 11ம் திகதி பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள தொடருந்து தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி 11ம் திகதி அதிகாலை 6 மணிக்கு இந்த தண்டவாளத்தில் தொடருந்து வந்தது. அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகளை தொடருந்து சாரதி கவனிக்காததால் அவர்கள் மீது ரெயில் ஏறியது.
இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒரு அகதிக்கு கால் உடைந்தது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.