மண்டைதீவு புதைகுழி வழக்கில் காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு

மண்டைதீவு புதைகுழி தொடர்பில் விசாரணை அறிக்கையை கையெழுத்து பிரதியாக வழங்காது, தட்டச்சு பிரதியாக வழங்குமாறு காவல்துறையினருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இற்கும் அதிகமான சடலங்கள் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன.

அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் சடலங்கள் இருக்கின்றன.
எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து சடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த Translation மாதம் தனது மகனை ஒருவர் ஊர்காவற்துறை  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினருக்கு ஊர்காவத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து சான்று ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு , நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.