மன்னார் பெரியமடு பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாமல் மக்கள் பாதிப்பு

139 Views

230516 001 001 மன்னார் பெரியமடு பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாமல் மக்கள் பாதிப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியமடு பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாமையினால்  பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளார்கள்.

விடத்தல்தீவு பள்ளமடு இலுப்பக்கடவை பெரியமடு சன்னார் ஈச்சளவக்கை கூராய் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாமையினால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.

பெரியமாடு சன்னார் போன்ற பகுதியில் உள்ள மக்கள் எரி பொருட்கள் நிரப்புவதற்கு 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கேதீஸ்வரம் அல்லது மன்னார் நகரத்திற்கு வர வேண்டியுள்ளது.

அனைத்து நேரங்களிலும் குறித்த கிராமத்து கடைகளில் எரிபொருட்கள் இருப்பதில்லை திடீரென ஒரு ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படும் பொழுது மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

மேலும் இந்நிலையைப் பயன்படுத்தி  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைக்கு  எரிபொருள்களை பெற்றுவிட்டு கிராமத்து கடைகளில் அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

எனவே உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து பெரியமடு பகுதியில் ஒரு பொதுவான இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைத்து  அனைத்து பொது மக்களும் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறித்த கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply