சட்டவிரோதா மீன்பிடி-மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பூநகரி மீனவர்கள் முறைப்பாடு

137 Views

சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சி சிவபுர மீனவர்கள் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதவி செய்துள்ளனர்.

இந்த சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடி கரையோர தொழிலாளர்கள் தமது தொழிலை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது இருப்பதாக தெரிவித்து கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தமது தொழிலுக்கு இடையூறாக கடல் கரையோரம் முழுவதும் சட்டவிரோதமாக பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றினை அரச அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு போராடி வந்த மீனவர்கள், உரிய தீர்வை பெற்றுத்தர முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என தெரிவித்து யாழ் மாவட்ட பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply