இலங்கை-பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்டத் துறை பாதிப்பு- WHO தெரிவிப்பு

கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மிக அதிக அளவில் பெருந்தோட்டத் துறையில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் செப்டெம்பர் 2022க்கான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இது பெண் தலைமைத்துவ குடும்பங்கள், கல்வியறிவு இல்லாத குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி திட்ட பயனாளிகள் மத்தியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள், உணவு, விவசாய உள்ளீடுகள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் கடுமையான தட்டுப்பாடு மற்றும் ஏற்றம் ஏற்பட்டது, விவசாய உற்பத்தியில் பெரும் இடையூறுகளுடன் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, வாழ்வாதார இடையூறுகள், உள்ளிட்ட பல காரணிகளின் விளைவாக, கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது என்றும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.