Home Blog Page 9

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும்  அவர் கூறினார்.

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் வுட்லர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது நேற்று(19) காலை மன்னார் நகர பகுதியை வந்தடைந்துள்ளது.

தியாக தீபம் தீலீபனிம் உருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் மன்னார் மக்களில் அஞ்சலிக்காக நேற்றையதினம் வருகை தந்திருந்தது.

இதன்போது பொது மக்கள், அருட்தந்தையர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் நகர் பிரதான சுற்றுவட்ட பகுதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன் அதனை தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

ஜப்பானில் AI-யை தலைவராக்கும் அரசியல் கட்சி!

ஜப்பானை சேர்ந்த ஒரு அரசியல் கட்சி AI-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறியுள்ளார்.

இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.

The Path to Rebirthஇன் கட்சி கடந்த ஜனவரியில் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறு நகரின் முன்னாள் மேயர் ஷிஞ்ஜி இஷிமாரு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. 2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான நிகழ்நிலை பிரசாரத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது, இஷிமாரு ஆரம்பத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தார்.

இருப்பினும், இந்த ஆண்டு மேல்சபை தேர்தலில் அவரின் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காத நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து கட்சி ஏAI-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளது.

Ilakku Weekly ePaper 357 | இலக்கு-இதழ்-357 | சனி, 20 செப்டம்பர் 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 357 | இலக்கு-இதழ்-357 | சனி, 20 செப்டம்பர் 2025

Ilakku Weekly ePaper 357

Ilakku Weekly ePaper 357 | இலக்கு-இதழ்-357 | சனி, 20 செப்டம்பர் 2025

Ilakku Weekly ePaper 357 | இலக்கு-இதழ்-357 | சனி, 20 செப்டம்பர் 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • பிரித்தானியாவின் மொந்தவீடியோ மரபு மீறல் ஈழத்தமிழர் இறைமையும் தன்னாட்சியும் அனைத்துலக அங்கீகாரம் பெறுதலை இலகுவாக்கியுள்ளது| ஆசிரியர் தலையங்கம்
  • ஈகம் சிலிர்த்திட – உயிர் யாகம் வளர்த்தவன் | கவிதை | அரியாத்தை
  • ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி | விதுரன்
  • தமிழரின் தாகத்துக்கு உரம் சேர்த்த திலீபனின் தியாகம் ! 38ம், ஆண்டு நினைவு.! | பா. அரியநேத்திரன்
  • கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை (காணாமலாக்கப்பட்டனர்) | தாமோதரம் பிரதீவன்
  • தமிழ்த் தேசியத்துக்கு ‘சிவப்பு சமிக்ஞை’ | விதுரன்
  • தமிழ்க் கட்சிகளின் தெருச் சண்டைக்குள் காணாமல் ஆக்கப்படும் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை | திரு. ஸ்ரீஞானேஸ்
  • விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? | மு. திருநாவுக்கரசு
  • காணியுரிமை இல்லாத வீடமைப்பு | மருதன் ராம்
  • “உலகில் எங்களுக்கு வேறு நண்பர்களும் உள்ளனர்” | வேல்ஸில் இருந்து அருஸ்
  • இஸ்ரேல், டோஹாவில் தாக்குதலை முன்னெடுத்திருக்கும் பின்புலத்தில், நடுவராகப் பணிபுரிய ரஷ்யா முன்வருமா? | பகுதி 2 (இறுதிப்பகுதி) | தமிழில்: ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

 

மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19)  தனது 86 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்.

மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த  இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார்.

இவர்  2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என அரசியல் வட்டாரங்கள் அவரை நினைவுகூர்கின்றன.

இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சருடன் – ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்…

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமனை வெள்ளிக்கிழமை (19) சந்தித்து கலந்துரையாடினார்.

மரியாதை நிமித்தமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, எமது சகோதர நாடான இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளுக்கும் உறுதியான ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் பன்முக ஆதரவுகள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துக்கொண்டார்.

முல்லைத்தீவில் எல்லைக்கிராம தமிழ் மக்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறு : ரவிகரன் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும்போது வனவளத் திணைக்களம் மற்றும்  காவல்துறை  விசேட அதிரடிப்படையினர் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த எல்லைக்கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டால் தடைகளை உடைத்தெறிந்து விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்  என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த எல்லைக்கிராமத் தமிழ் மக்களின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த ரவிகரன், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ்மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறாக குறித்த எல்லைக்கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்களை அவர்களுடைய பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, உடனடியாக அப்பகுதித் தமிழ் மக்கள் பயன்படுத்திவந்த நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் குறித்த குளங்களின் கீழான விவசாய நிலங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் இவ்வாறு வெளியேற்றப்பட்ட குறித்த ஆறு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த எல்லைக்கிராம மக்கள் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு கடந்த 2011ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது பூர்வீக வாழிடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட பிறகு அந்த மக்கள் தாம் பூர்வீகமாக நெற்செய்கையில் ஈடுபட்டுவந்த முந்திரிகைக்குளம், ஆமையன்குளம், சாம்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டபோது தாம் நெற்செய்கைக்குப் பயன்படுத்திவந்த குளங்கள் மற்றும் அக்குளங்களின் கீழான வயல்நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டிருந்த தமது பூர்வீக விவசாயக் குளங்களையும், அவற்றின் கீழான வயல்நிலங்களையும் விடுவிக்குமாறு கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி தமிழ் மக்கள் மற்றும் ரவிகரன் ஆகியோரால் தொடர்ந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதும் குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை.

குறித்த நீர்ப்பாசனக் குளங்களின் கீழான வயல்நிலங்கள் பலவற்றுக்கு தமிழ் மக்களிடம் ஆவணங்களும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் குறித்த நீர்ப்பாசன வயல்காணிகளை ஆக்கிரமித்துள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டுகாலப்பகுதியில் அப்போதைய அரசால் மகாவலி அதிகார சபையின் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக தமது பூர்வீக நீர்ப்பாசனக் குளங்களையும், அவற்றின் கீழான நீர்ப்பாசன வயல் நிலங்களையும் இழந்துள்ள குறித்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணிப் பகுதி எல்லைக்கிராமத் தமிழ் மக்கள் மானாவாரி நிலங்களிலேயே தற்போது தமது நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் குறித்த மானாவாரி விவசாய நிலங்களில் தமிழ் மக்கள் நெற்செய்கை மேற்கொள்ளும்போது வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகார சபை என்பன தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்திவருகின்றன.

தமிழ் மக்களுக்குரிய குறித்த மானாவாரி விவசாயக் காணிகளை பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமிக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இத்தகைய பல்வேறு இடயூறுகளுக்கு மத்தியிலேயே கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் தமது மானவாரி விவசாய நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாரியாமுனை, கன்னாட்டி, எரிஞ்சகாடு, மேல்காட்டுவெளி, கீழ்காட்டுவெளி, பாலங்காடு, நாயடிச்சமுறிப்பு, சூரியனாறு, பூமடுகண்டல், சிவந்தாமுறிப்பு, வெள்ளைக்கல்லடி உள்ளிட்ட தமது பூர்வீக மானாவரி விவசாய நிலங்களில் தமிழ்மக்கள் இம்முறையும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறு பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடுவதற்கான தயார்ப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை வனவளத் திணைக்களத்தினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தடுத்துவருவதாக அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக கடந்த 29.08.2025 அன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் அவர்களுடைய விவசாய நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு வனவளத் திணைக்களம் உள்ளிட்ட எவரும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது எனவும் அக்கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இருப்பினும் தொடர்ந்தும் வனவளத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் தமக்கு நெற்செய்கை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல் வேலைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முறையீடு செய்துமிருந்தனர்.

இந்நிலையில் குறித்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய எல்லைக்கிராம மக்களின் முறைப்பாட்டையடுத்து துரைராசா ரவிகரன் இன்று கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையத்திற்குச் சென்று, கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தருடன் கலந்துரையாடியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், பிரச்சினைகள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்மக்களின் நீர்ப்பாசனக் குளங்களும் அவற்றின்கீழான நீர்ப்பாசன விவசாய நிலங்களும் ஏற்கனவே பெரும்பான்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த எல்லைக்கிராமங்களைச்சேர்ந்த எமது தமிழ் மக்கள் மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கையை மாத்திரமே மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் எமது மக்கள் மானாவரி விவசாய நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கும் வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட தரப்பினரால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர்.

இதுதொடர்பில் கடந்தமாதம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது. எமது மக்களின் நெற்செய்கை நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாதெனவும் தீர்மானமும் எட்டப்பட்டது.

இவ்வாறிருக்கு தொடர்ந்தும் எமது மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறகேளை ஏற்படுத்துவது பொருத்தமான விடயமில்லை.

இவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தினால் இந்தமக்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே எமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் செயற்படும் திணைக்களங்களின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது.

தொடர்ந்தும் எமது மக்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டால் அந்த தடைகளை உடைத்து எமது மக்கள் நெற்செய்கை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மக்களின் சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது:

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில இருந்து தப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி நீதித்துறை செயற்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும்  தடை விதித்துள்ளனர். இந்நிலையில்  அங்கு பெண் உரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள புதிய கல்விச்சட்டத்தின்படி தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என 680 புத்தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷரியா சட்டத்துடன் முரண்படுவதாகக்கூறி ஆப்கானிஸ்தான் பல்கலை. பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சுமார் 6 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தலிபான் அரசு சமீபத்தில் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் காற்றாலை விவகாரம்: ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராட்டம்!

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்று வருகிறது. “நமது நாடு, நமது மன்னார், நமது போராட்டத்தின் கோரிக்கைகள்” என்ற பதாகையில், மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு இடத்திலும் கனிம மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது, அமைக்கப்பட்ட ( தம்பபன்னி, நறுவிலிக்குளம் ) ஆகிய 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தை மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.