Home Blog Page 73

சர்வதேச நீதிப் பொறி முறையை வலியுறுத்தி திருமலையில் போராட்டம்!

0 2 சர்வதேச நீதிப் பொறி முறையை வலியுறுத்தி திருமலையில் போராட்டம்!
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில்  மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள்  தொடர்பாக எதிர்வரும்  செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை  தொடர்பான தீர்மானம் வலுப்பெறும்  வகையில்  குறித்த கவனயீர்ப்பு இடம் பெற்றுள்ளது.
unnamed e1753515285746 சர்வதேச நீதிப் பொறி முறையை வலியுறுத்தி திருமலையில் போராட்டம்!
வடக்கு கிழக்கு பகுதியில் எட்டு மாவட்டங்களில் குறித்த போராட்டம் இடம் பெற்றதுடன் திருகோணமலையில் இடம் பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறும் இதில் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும்,சர்வதேச பொறி முறை தேவை என பல வாசகங்களை ஏந்தியிருந்தனர்.

Ilakku Weekly ePaper 349 | இலக்கு-இதழ்-349-யூலை 26, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 349 | இலக்கு-இதழ்-349-யூலை 26, 2025

Ilakku Weekly ePaper 349

Ilakku Weekly ePaper 349 | இலக்கு-இதழ்-349-யூலை 26, 2025

Ilakku Weekly ePaper 349 | இலக்கு-இதழ்-349-யூலை 26, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • பிரான்சின் பலஸ்தீனிய அங்கீகாரம் ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரமாக வளர்க்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்
  • ஈழத்தமிழர் பிரான்சியர் கத்தோலிக்கர் 178 ஆண்டு உறவு யூலை 26-27 இல் நெவர்ஸில் புத்துயிர் பெறுகின்றது – சூ.யோ. பற்றிமாகரன்
  • செம்மணியைத் தொடர்ந்து சம்பூர்தாமோதரம் பிரதீவன்
  • குருக்கள்மடம் புதைகுழியில் புதைந்துள்ள அரசியல்! – பா. அரியநேத்திரன்
  • தொல்லியல் எனும் பெயரில் இடம்பெறும் தமிழர் தேச வரலாற்றிட ஆக்கிரமிப்புகள் – தாமோதரம் பிரதீவன்
  • நட்டக் கணக்குடன் லாபம் ஈட்டும் தோட்ட கம்பனிகள் – மருதன் ராம்
  • தென்கிழக்கு ஆசியாவில் திறக்கப்பட்ட மற்றுமொரு களமுனை – வேல்ஸில் இருந்து அருஸ்
  • 40 வருடங்களாகப் போராடிய ஒரு குழு, இன்று தனது ஆயுதங்களைக் கையளிக்கிறது – தமிழில்: ஜெயந்திரன்
  • அமெரிக்க கனடிய உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் வரிகள் – பொன்னையா விவேகானந்தன்

 

“இலங்கை அரசே இது நாடா அல்லது இடுகாடா?”: மன்னாரில் போராட்டம்!

102 “இலங்கை அரசே இது நாடா அல்லது இடுகாடா?”: மன்னாரில் போராட்டம்!

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள நிலையில், இலங்கையில் காணப்படும் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச தரத்திற்கு அமைய அகழ்வாய்வு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“’எங்கே எங்கள் உறவுகள் எங்கே?,” “இலங்கை அரசே இது நாடா அல்லது இடுகாடா?”, “வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்,” “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா”, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு மன்னார், அடம்பன் சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வரை பேரணியாக சென்ற மன்னார் மக்கள், மனித புதைகுழிகள் குறித்த அகழ்வாய்வுகளை வெளிப்படையான முறையில் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியாக மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி தற்போது மாறியுள்ளது. அங்கு 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

கறுப்பு ஜூலையின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை (24) இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டமும், பேரணியும் திருக்கேதீஸ்வரம் புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி நிறைவு செய்யப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

இனப்படுகொலைக்கு சாட்சியாக இருக்கும் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிக்கான நீதி தாமதமாகியுள்ளதாக போராட்டத்திற்கு தலைமைத் தாங்கிய மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மனித புதைகுழிகள் முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல் வெறும் கண்துடைப்புக்கு விசாரணைகளை நடத்தி காலம் கடத்துவதற்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது. நாம் நிற்கின்ற திருக்கேதீஸ்வரம் புதைகுழிகூட இன அழிப்பு, இனப்படுகொலையின் சாட்சியாக இருக்கின்றபோதிலும் அது அகழ்வின் பின்னர் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு முழுவதும் இந்த நிலைமை தொடர்கிறது.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட செம்மணியில் அகழ்வு இடம்பெறுகின்றபோதிலும் அது சர்வதேச தரத்திற்கு அமைய இடம்பெறவில்லை. எனவே இந்த நாட்டில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகள் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதில் ஒரு வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும்.”

மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், ஜனாதிபதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கு அனுப்பி வைப்பதற்காக, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மார்கஸிடம் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் அனைத்து புதைகுழிகளிலும் புதைக்கப்பட்டுள்ள தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீதியை உறுதி செய்ய சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மார்கஸ் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“இந்த இடத்திலே (திருக்கேதீஸ்வரம்) புதைக்கப்பட்டவர்கள் யார் என்பது இனங்காணப்பட வேண்டுமென்றும், வடக்கு கிழக்கிலே இருக்கின்ற புதைகுழிகளை இனங்கண்டு, அந்த புதைகுழிகளுக்குள் இருக்கும் எங்கள் உறவுகளை புதைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உறவுகளை இழந்து தவிக்கின்றவர்களுக்கு நீதியை வழங்க சர்வதேச சமூகத்துடன் இலங்கை அரசு இணைந்து செயற்பட வேண்டுமென எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று கோருகின்றேன்.” என்றார்.

கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாடசாலைகளை மூட முயற்சிக்க வேண்டாம்!

கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

10 மாதங்களில் எவ்வாறு கல்வி மறுசீரமைப்பினை முன்னெடுப்பார்கள்? 20 ஆண்டுகளாக கல்வி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பினை வெளியிட்ட இவர்கள், எமது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே தற்போது நடைமுறைப்படுத்துகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது இவர்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைகழக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்த சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அவற்றுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் கடந்த காலங்களில் நாட்டுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியவர்களாவர்.

ஆனால் இன்று அவர்கள் எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

பாடசாலைகளை மூடுவது தொடர்பிலும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். எமது ஆட்சி காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை.

எனவே இந்த அரசாங்கமும் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என வலியுறுத்துகின்றோம். என்றார்.

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி, வடக்கு கிழக்கில் போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரிய நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இரண்டாவது நாளாக நேற்றும் இடம்பெற்றுள்ளது.

நீண்டகாலமாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

செம்மணி மனித புதை குழியில் மேலும் இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் இன்றைய தினம் (25) இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்றைய தினம் 5 என்புக்கூடுகள் புதைக்குழியிலிருந்து அகழ்தெடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார்.

இனப்படுகொலையின் சாட்சியமாக கூறப்பட்டு, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைக்குழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 20 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய, இதுவரையில் 90 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் 81 என்புக்கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.இதேவேளை இன்றைய அகழ்வு பணிகளின் போது சித்துப்பாத்தி பகுதியில் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக காணியை துப்புரவு செய்யும் பணியும் இடம்பெற்றது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவிப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதமர் ஹரிணி  இன்று (25) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் நாளை (26) போராட்டம்

நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் நாளை (26) முற்பகல் 10 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் நடைபெறவுள்ளது.

உண்மைக்கும் நீதிக்குமான இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை சர்வதேச விசாரணை பொறிமுறையை’ கோரி நாளை இலங்கையின் வடக்கு – கிழக்கு எங்கும் இடம்பெறவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக ‘மான்புமிகு மலையக மக்கள் சிவில் கூட்டிணைவு’ கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்னால் நாளை முற்பகல் 10 மணிக்கு போhராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

சிறிதரனுக்கு எதிராக குற்றப் புலனாய்வு துறையில் முறைப்பாடு!

தமக்கு எதிராக நேற்று (24) குற்றப்புலனாய்வுத்துறையின் நிதிக்குற்றப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தாம் வரவேற்பதாக, யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடத்தப்படும் விசாரணைகளில் உண்மைகள் வெளிவரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக தெரிவித்துள்ள, சிவில் செயற்பாட்டாளர் ஒருவர், நேற்று குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

அதில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களின் சொத்துக்களை பராமரித்து வருவதாக முறைப்பாட்டாளர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்று, அவர் கோரியிருந்தார்.

இந்தநிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஊடங்களுக்கு தமது தரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முறைப்பாட்டை வரவேற்பதாகவும், விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற நிலையில், தமக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணைகள் நடத்தப்படும்போது அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன அழிப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக, மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வெளிநடப்பு

கறுப்பு ஜூலை வாரத்தில் இன அழிப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக, மானிப்பாய் பிரதேச சபையில் இருந்து உறுப்பினர் ஒருவர் வெளிநடப்பு செய்துள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இன்று (25) ஆரம்பமானது.

இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் லோகப்பிரகாசம் ரமணன் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து சபையின் உப தவிசாளரும் வெளிநடப்பு செய்தார்.

தமது இனமானது அழிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜூலை கலவரமாகும். அதன் பின்னர் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை கையில் ஏந்தினர்.
இந்தநிலையில் செம்மணி புதைகுழியில் பிஞ்சு குழந்தைகள் உட்பட இளைஞர்கள் யுவதிகள் என பலர் புதைக்கப்பட்டமைக்கு அடிப்படை காரணமே இந்த ஜூலை கலவரமாகும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ஜூலை கலவரத்திற்கு தீர்வு இதுவரை வழங்கப்படாமையை கண்டித்தே தாம்; சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி அவர் சபையில் இருந்து வெளியேறினார்.