Home Blog Page 62

மன்னார் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம் – ரவிகரன் எம்.பி

unnamed 1 மன்னார் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம் - ரவிகரன் எம்.பி

மன்னார் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதியோமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மக்களின் அனுமதியின்றி, மக்களின் விருப்பிற்கெதிராக மன்னாரில் அமுல்படுத்தப்படுவதற்கு முயற்சிக்கப்படுகின்ற காற்றாலைத் திட்டத்திற்கெதிராக மக்களோடு இணைந்து செயற்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகரில் 04.08.2025இன்று இடம்பெற்ற காற்றாலைத் திட்டத்திற்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தக் காற்றாலைத்திட்டம், கனியமணல் திட்டமென எமது மக்களுக்கு மிகமோசமான செயற்பாடுகளை முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்டுவந்தன.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கமானது மக்களின் நன்மைகருதி இத்தகைய காற்றாலை மற்றும் கனியமணல் திட்டங்களுக்கு எதிராக செயற்படுவார்களென்று மக்கள் எதிர்பாத்திருக்கையில், இந்த அரசாங்கமும் இத்தகைய மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய திட்டங்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

குறிப்பாக மக்களின் அனுமதியின்றி, விருப்பின்றி இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் அமுல்படுத்தப்படாதென மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் உட்பட பலசந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் தற்போது மக்கள் அனுமதிக்காத, மங்கள் விரும்பாத இந்தக் காற்றாலைத் திட்டத்தை இங்கு மன்னாரில் அமுல்படுத்துவதற்கு முனைகின்றனர்.

இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேவேளை இவ்வாறு மக்களின் அனுமதியின்றி அத்துமீறி மன்னாரில் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த முயற்சிப்பதற்கு எதிராக பாராளுமன்றில் எனது கருத்துக்களைப் பதிவுசெய்வேன்.

குறிப்பாக இத்தகைய திட்டங்களின்மூலம் எமது வளங்கள் சூறையாடப்படுவதுடன், எமது இடங்களை அழிக்கின்ற செயற்பாடாகவும் இது அமைகின்றது.

இதேபோலதான் மக்களின் எதிர்ப்பையும்மீறி முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு கனியமணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கடலரிப்பு ஏற்பட்டு கடல்நீர் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வந்த அவலநிலையே ஏற்பட்டிருந்து.

அத்தோடு கூட்டங்களிலே மக்கள் அனுமதிக்காத திட்டங்களை அமுல்படுத்தமாட்டோம் எனக் கூறிவிட்டு எந்த அடிப்படையில் இவ்வாறான திட்டங்களை இங்கு அமுல்படுத்த முனைகின்றனர்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் மக்கள் அனுமதிக்காத, விரும்பாத திட்டங்கள் எவையும் அனுமதிக்கப்படுவதில்லை. மக்களின் அனுமதி மற்றும் விருப்பிற்கு மாறான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அனைவரும் பயப்படுவார்கள். விடுதலைப்புலிகளின் மேல் அனைவரும் மிகுந்தபயம் இருந்தது.

ஆனால் தற்போது மக்கள் அனுமதிக்காத திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு எமது இடங்களிலுள்ள வளங்களைச் சூறையாடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய காற்றாலைத் திட்டங்களை எமது பகுதிகளில் ஏற்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. எனவே இத்தகைய திட்டங்களுக்கெதிராக நாம் மக்களோடு இணைந்து செயற்படுவோம். இவ்வாறான அத்துமீறிய அராஜகவேலைகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோமென மிகத் தெளிவாகச் சொல்லிவைக்கவிரும்புகின்றோம் – என்றார்.

செம்மணி மனித புதைகுழியில் ஆரம்பமான ஸ்கான் பரிசோதனை!

யாழ். அரியாலை செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி பகுதியில் இன்று  ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

செம்மணி புதைகுழிகளில் நேற்று வரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 120 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதைகுழிகளின் அருகே வேறு மனித புதைகுழிகள் இருக்கின்றனவா? என்று ஆராய ஸ்கான் பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மூதூர்: தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை- நீதி கிடைக்காது 19 வருடங்கள் நிறைவு

0be8eb22 0b1e 47d6 9d25 2d9cd416ab32 மூதூர்: தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை- நீதி கிடைக்காது 19 வருடங்கள் நிறைவு

2006 ஆம் ஆண்டு திருகோணமயை மாத்திரமல்ல முழு உலகையும் உலுக்கிய படுகொலை.

மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த பிரான்ஸ் தொண்டு நிறுவனமான (ஏ.சி.எப்.)   அக்ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக்கொண்­டி­ருந்த 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்காரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து,  2006 ஆகஸ்ட் 4ம் திகதி சுட்டு படுகொலை செய்தனர்.

இந்த சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டு, 19 வருடங்களாகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:

1. ரிச்சட் அருள்ராஜ் (வயது – 24) 2. முத்துலிங்கம் நர்மதன் (வயது – 23) 3. சக்திவேல் கோணேஸ்வரன் (வயது – 24) 4. துரைராஜா பிரதீபன் (வயது – 27) 5. சிவப்பிரகாசம் ரொமிலா (வயது – 25) 6. கணேஷ் கவிதா (வயது – 27) 7. எம். ரிஷிகேசன் (வயது – 24) 8. அம்பிகாவதி ஜெசீலன் (வயது – 27) 9. கனகரத்தினம் கோவர்த்தனி (வயது – 27) 10. வயிரமுத்து கோகிலவதனி (வயது – 29) 11. ஏ.எல்.மொகமட் ஜௌபர் (வயது – 31) 12. யோகராஜா கோடீஸ்வரன் (வயது – 30) 13. சிங்கராஜா பிறீமஸ் ஆனந்தராஜா (வயது – 32) 14. ஐ. முரளிதரன் (வயது – 33) 15. கணேஷ் ஸ்ரீதரன் (வயது – 36) 16. முத்துவிங்கம் கேதீஸ்வரன் (வயது – 36) 17. செல்லையா கணேஷ் (வயது – 54)

இதே ஆண்டு ஜனவரியில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்

ஊடகவியலாளர் கல்முனை சுகிர்தராஜனும் உட்துறைமுக வீதி எனும் பாதுகாப்பு வலயத்தில் வைத்து இதே ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு இதே ஆண்டில் இலங்கை அரசால் திட்டமிட்ட பல படுகொலைகள் திருகோணமலையில் நடந்தன. ஆனால் அவற்றிற்கு அல்லது வடக்கு கிழக்கில் நடந்த எந்தவொரு படுகொலைகளுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

செம்மணிக்கு மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் விஜயம்

செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் நேரில் பார்வையிட்டனர் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பிலான  சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு தயார் என்று தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை ஆணைக்குழுவின் கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோர் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் உட்பட குழுவினர் சமீபத்தில் செம்மணி பகுதியில் அகழ்வு பணிகளை ஆய்வு செய்தனர்.

புதைகுழிகளை நேரில் பார்வையிட்டு ஊடகவியலர்களிடம் கருத்து தெரிவித்த ஆணையாளர்கள், அகழ்வு பணிகள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்பிலும் தகவல் பெற்றுள்ளோம் என்று கூறினர்.

கிருஷாந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராஜபக்சே செம்மணி புதைகுழிகள் தொடர்பான சாட்சியங்களை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, சிறையில் அவனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மனித உரிமை ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என உறுதி தெரிவித்தனர்.

மேலும், 1996-97 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விசாரணைகள் குறித்து 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மனித உரிமை ஆணைக்குழு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

154 பேருடன் சென்ற அகதிகள் படகு விபத்து : 68 பேர் உயிரிழப்பு

ஏமன் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 12 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு, 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

74 பேர் கடலில் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆபிரிக்காவின் எத்தியோப்பியாவில் இருந்து 154 பேர் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

மத்திய தரைக்கடலில் ஏமன் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட் டார். இதன்படி சராசரியாக தினமும் 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதற்கு முன்பு ஜோ பைடன் அதிபராக இருந்தபோது ஜனவரி 2020 – டிசம்பர் 2024) சராசரியாக தினமும் 3 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வரையி​லான காலத்​தில் மொத்​தம் 7,244 இந்​தி​யர்​கள் பல்​வேறு காரணங்​களுக்​காக நாடு​கடத்​தப்​பட்​டுள்​ளனர். இந்த எண்​ணிக்​கை​யில் சுமார் 25% பேர் (1,703) ட்ரம்ப் அதிப​ரான 6 மாத காலத்​தில் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளனர்.

இந்த நடவடிக்​கை​யின்​போது மனித உரிமை​களை மீறும் வகை​யில் சிலர் நடத்​தப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இதையடுத்​து, மனித உரிமை​களை மீறும் வகை​யில் நடந்​து​கொள்​ளக் கூடாது என்று அமெரிக்க அரசை மத்​திய அரசு வலி​யுறுத்​தி​யது.

இந்த ஆண்​டில் அமெரிக்​கா​விலிருந்து நாடு கடத்​தப்​பட்ட 1,703 பேரில் அதி​கபட்​ச​மாக பஞ்​சாபைச் சேர்ந்​த 620 பேர் உள்ளனர். இதற்கு அடுத்​த​படி​யாக ஹரி​யானா (604), குஜ​ராத் (245), உத்தர பிரதேசம் (38) மற்​றும் கோவா (26), மகா​ராஷ்டிரா (20), டெல்லி (20), தெலங்​கானா (19), தமிழ்​நாடு (17), ஆந்​திரா (12), உத்​த​ராகண்ட் (12), கர்​நாடகா (5) ஆகிய மாநிலங்​களைச்​ சேர்ந்​தவர்​கள்​ இடம்​பெற்​றனர்​.

இலங்கையின் சட்டத்தை இந்திய தேவைக்கேற்ப திருத்த முடியுமா? – விமல் வீரவன்ச கேள்வி

இலங்கைக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்கும் கருத்திட்டத்துக்கு தரவு பாதுகாப்பு சட்டம் தடையாக இருப்பதாக இந்திய நிறுவனம் குறிப்பிட்டதை தொடர்ந்து அந்த சட்டத்தை திருத்தம் செய்யும் யோசனையை இன்றும் ஒருமாத காலத்துக்கு கொண்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இந்திய நிறுவனத்துக்கு வாக்குறுதியளித்துள்ளது.

இந்தியாவின் தேவைக்கமைய நாட்டின் சட்டத்தை எவ்வாறு திருத்தம் செய்ய முடியும். இந்த திருத்த யோசனைக்கு எத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் டிஜிட்டல் ஆளடையாள அட்டை விநியோகிக்கும் கருத்திட்டத்தை அரசாங்கம் இந்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. டிஜிட்டல் அடையாள அட்டை கருத்திட்டத்துக்கான சகல பணிகளையும் தேசிய ஆளடையாள அட்டை திணைக்களம் முன்னெடுத்து அப்பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ள நிலையில் தான் அரசாங்கம் இந்தியாவுக்கு இத்திட்டத்தை வழங்கியுள்ளது.

இந்த கருத்திட்டத்துக்கான விலைமனுகோரலை இந்தியாவின் என்.ஐ.எஸ்.ஜி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இந்த கருத்திட்டத்துக்கு இந்திய நிறுவனம் மாத்திரமே விலைமனுகோரல் செய்ய முடியும்.இந்தியாவின் தரவு கட்டமைப்பின் வன்பொருள் மற்றும் மென்பொருள் கட்டமைப்பை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கருத்திட்டம் தொடர்பில் இலங்கை தரப்பினருக்கும்,இந்திய நிறுவன தரப்பினருக்கும் இடையிலான நிகழ்நிலை முறைமை ஊடாக சந்திப்பு கடந்த மாதம் 25 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.இலங்கை சார்பில் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியான சஞ்சன கருணாரத்ன,டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகரான ஹான்ஸ் விஜேசூரிய ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால அமைச்சின் செயலாளர் காரியாலயத்தில் இருந்து நிகழ்நிலை முறைமை ஊடாக சந்திப்பில் கலந்துக் கொள்ளாமல் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு சென்று அங்கிருந்தவாறு குறித்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்குவதில் உள்ள பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தரவு பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் டிஜிட்டல் ஆளடையாள அட்டை உருவாக்கத்துக்கான பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்நிலை காணப்படுவதாக இந்திய நிறுவன பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால இன்றும் ஒன்றரை மாத காலத்துக்குள் தரவு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்யும் யோசனை முன்வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். .இந்தியாவின் தேவைக்கமைய நாட்டின் சட்டத்தை எவ்வாறு திருத்தம் செய்ய முடியும்.இந்த திருத்த யோசனைக்கு எத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நாட்டு மக்கள் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

செம்மணியில் மேலும் சில என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து இன்று மேலும் 4 மனித என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.

சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அமர்வின் 14ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று (03) முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, முன்னதாக வெளிப்பட்ட 3 என்புக்கூட்டுத் தொகுதிகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இதுவரை மொத்தமாக 130 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், செம்மணி, சித்துப்பாத்தி பகுதியில் தற்போதுள்ள 2 மனித புதைகுழிகளை விட அருகில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா? என்பதனை ஆராயும் நோக்கில்,  இன்று தினம் (04) ஸ்கேன் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாளை  (05) மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காணும் வகையில் அவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை கருத்தில் எடுக்கப்போவதில்லை – ட்ரம்ப்

மாஸ்கோவும் புது தில்லி யும் “அவர்களின் இழந்த பொருளாதாரங்களை ஒன்றாக வீழ்த்த முடியும்” என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது 25% வரிகளை அறிவித்துள்ளதுடன், மேலும் ரஷ்யாவுடனான தெற் காசிய நாட்டின் பொருளாதார உறவுகளுக்கு அபராதமும் விதித் துள்ளார்.
இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. அவர்கள் தங்கள் இறந்த பொருளாதாரங்களை ஒன்றாகக் குறைக்க முடியும். எனக்கு கவலையில்லை. நாங்கள் இந்தியா
வுடன் மிகக் குறைந்த வணிகத் தையே செய்துவருகின்றோம், அவர்களின் கட்டணங்கள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. ரஸ்யாவுடன் நாம் வர்த்தகம் செய்வதில்லை என ட்ரம்ப் தனது சமூகவலைத்தளத்தில் கடந்த புதன் கிழமை (30) தெரிவித்துள்ளார்.
ஆனால் சர்வதேச வர்த்தகம் குறித்த ஐக்கிய நாடுகளின் தரவுகளின் படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் ஏற்றுமதி $3.27 பில்லியனாக இருந்துள்ளது. 2024-25 நிதியாண்டில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற் கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் $131.8 பில்லியனை எட்டியிருந்தது.
இதனிடையே ட்றம்பின் வரி விதிப்புக்கள் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதாரத்தில் 2 றில்லியன் டொலர்கள் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என த புளூம்பெர்க் ஊடகம் இந்த வாரம் தெரிவித்துள்ளது.

மீண்டும் புதிய அரசியலமைப்பு ‘மர்மமான நகர்வுகளுக்குள் மறைந்துள்ள பேராபத்துக்கள்’ – விதுரன்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலை மையிலான ‘தேசிய மக்கள் சக்தி’ என்று முலாமிடப்பட்ட ஜே.வி.பி.அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10மாதங்கள் முழுதாய் நிறைவுக்கு வந்து விட்டன.
இந்நிலையில் கடந்தவாரம் நடை பெற்றிருந்த  பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக அரசாங்கம் முன் னெடுக்கின்ற, முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக கேள்விகளை தொடுத்திருந்தார்.
அந்தக்கேள்விகளுக்கு பிரதமர் கலாநிதி.ஹரிணி அமரசூரிய பதிலளித்திருந்தார். அவர், புதிய அரசியலமைப்புக்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தமது ஆட்சி நிறைவுக்கு வருவதற்குள் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் உறுதி யாக கூறியிருந்தார்.
இதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அநுர அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை நிச்சயமாக கொண்டுவரும், அதுவொரு ஒற்றையாட்சி அரசியலமைப்பாக இருக்கும் என்றும் தொடர்ச்சியாகவும் திட்ட வட்டமாகவும் கூறிக்கொண்டிருக்கின்றார்.
அதுமட்டுமன்றி, ஏற்கனவே மைத்திரி-ரணில் கூட்டாட்சியில் உருவாக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசியலமைப்புக்காக இடைக்கால அறிக்கையை அடியொற்றியதாகவே புதிய அரசியலமைப்பு பணிகள் இருக்கப்போவதாக அநுரகுமார ஆட்சி ப்பீடத்தில் அமர முன்னதாகவே தெரிவித்துள்ள கருத்துக்களையும் அவர்சுட்டிக் காட்டுகின்றார்.
அந்தவகையில், மூன்றிலிரண்டு பெரும் பான்மையைக் கொண்டிருக்கின்ற அநுர அரசாங் கம் எந்த நேரத்திலும் புதியஅரசியலமைப்பு விடயத்தினை முன்வைக்கலாம், அவ்வாறு முன்வைக்கின்றபோது, இலங்கைத் தமிழரசுக்கட்சி அதற்கு முழுமையான ஆதரவினை வழங்கும். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்துகின்றார்.
சிங்களத்தில் ‘ஏக்கிய ராஜ்ய’, தமிழில் ஒருமித்த நாடு என்று வார்த்தைகளைப் பயன் படுத்தி இடைக்கால அறிக்கையில் நாட்டின் தன்மை குறித்த விடயத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்துக்கு தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் பொதுச்செயலாளராக இருக்கின்ற சுமந்திர னின் வகிபாகம் மிக முக்கியமானது.
அதே சுமந்திரன் பின்னரான நாட்களில் வழங்கிய செவ்வியொன்றில், புதிய அரசியல மைப்பு பணிகளில் தன்னுடன் பணியாற்றிய சகாவான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி.ஜயம்பதி விக்கிரமரட்ன தனது எண்பது வயதான தாயார் புதிய அரசியலமைப்பில் நாட்டின் தன்மையானது ஒற்றையாட்சி வடிவமாக இருக்க வேண்டும். அதனை சிங்கள மொழியில் மாற்றுவதற்கு என்று கேட்டுக்கொண்டதாகவும் அதனால் ஜயம்பதி அப்பதத்தினை மாற்றுவதற்கு இணங்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில், ஏலவே தயாரிக்கப்பட்டு ள்ள புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது ஒற்றையாட்சி அடிப்படையி லானது என்பது சுமந்திரனே ஏற்றுக்கொண்ட விடயம். இந்த விடத்தில் கஜேந்திரகுமார் வெளிப்படையாக கூறும் விடயம் அரசியலுக்கு அப்பால் யதார்த்தமானது.
இவ்வாறான பின்னணியில் தான் தற்போது, புதிய அரசியலமைப்புக்கான பேச்சுக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தயாரிக்கப்பட்டுள்ள ஒற்றை யாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்பதில் உடும்புப்பிடியாக உள்ளார்.
ஆனால், சுமந்திரனையும், அவரது அணியினரையும் பொறுத்தவரையில் அநுர அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வரப்போவதில்லை என்பதிலும் ஆகவே அதுபற்றி உரையாட வேண்டிய அவசியமே இல்லையென் பதிலும்  உறுதியாக இருக்கின்றார் கள்.
இத்தகைய நிலையில் அநுர அரசாங்கம் நிச்சயமாக அரசியலமைப்பு மறுசீரமைப்பையோ அல்லது புதிய அரசியலமைப்பொன்றையோ நிச்சயமாக கொண்டுவரப்போகின்றது என்பது தற்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்ட விடயமா கின்றது.
அதற்கான பணிகள் சத்தமின்றி ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஜே.வி.பிக்கு மிக நெருக்க மான சட்டத்தரணிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட வர்களை ஒன்றிணைத்து வரைவு தயாரிக்கின்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
அநுர அரசாங்கத்தினைப் பொறுத்தவரை யில் புதிய அரசியலமைப்பையோ அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றையோ கொண்டுவர வேண்டிய தேவை உள்ளதென்பது அவர்களால் உணரப்பட்டுள்ளது.
குறிப்பாக, அண்மைக்காலமாக அரசாங்கத் துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள ‘எதிரான மனோநிலை’ நிச்சயமாக எதிர்வரும் காலத்தில் அலையாக உருவாகும். அவ்விதமான சூழலை சமாளிப்பதென்றால் வெறுமனே ‘அநுர’ என்ற ‘தேர்தல் அரசியல் முத்திரையை’ பயன் படுத்தி சமாளிக்க முடியாது.
‘அநுர’ என்ற தேர்தல் அரசியல் முத்திரைக்கு இன்னமும் நாடாளவிய ரீதியில் வரவேற்பு இருந்தாலும் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி முரண்பாடுகளும் செயற்பாடுகளும் கடுமையான சலிப்பை ஏற்படுத்தியுள்ளன.
அவ்விதமான சூழலில் மீண்டும் ‘அநுர’வை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலொன்றுக்குச் செல்வதாக இருந்தால் அது மிகப்பெரும் சவாலான விடயமாகும். ஜனாதிபதி தேர்தலில் சறுக்கினாலும் அடுத்துவருகின்ற தேர்தல்களின் முடிவுகள் பற்றி கூறவேண்டியதில்லை.
ஆகவே, தான் தென்னிலங்கையில் ஏற்படவுள்ள வாக்குவங்கிச் சரிவை வடக்கு, கிழக்கைப் பயன்படுத்தி ஈடுசெய்வதற்காக அரசியலமைப்பு மறுசீரமைப்பு அல்லது புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை அரசாங் கம் முன்னெடுக்கவுள்ளது.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை சமாளித்துக்கொள்வதற்கான ஒரு உபாயமாகவும், இராஜதந்திர மட்டத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முனையும் தரப்புக்களை புறநோக்குவதற்கான உபாயமாகவும் இந்தச் செயற்பாட்டை அநுர அரசு மேற்கொள்ளவிருக்கின்றது.
எவ்வாறாயினும், இச்செயற்பாடு அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் வருட இறுதியில் அல்லது மூன்றாம் வருட நடுப்பகதியில் தான் வெளிப்படுத்தப்படவுள்ளது.இந்த தகவலை, நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, தனது பால்ய நண்பரான தமிழ் அரசியல் தலைவர் ஒருவருக்கு நம்பிக்கையு டன் பகிர்ந்திருக்கின்றார். அத்துடன் தமிழ்த் தரப்பிலிருந்தும் புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
எவ்வாறாயினும், கடந்த காலத்தில் ஆட்சிப் பீடங்களில் இருந்த அரசியல் தரப்புக்கள் போன்றே,  புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவா அல்லது, அரசியலமைப்பு மறு சீரமைப்புக்களைச் செய்வதா என்பதை தெளிவாக வெளிப்படுத்துவதற்கு அநுரவும் அவரது சகோதரர்களும் தயாராக இல்லை.
ஏனென்றால், அவர்களுக்கு இச்செயற் பாட்டை மையப்படுத்திய அரசியல் தந்திரம் உள்ளது. குறிப்பாக இரண்டாவது தடவையும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு இருக்கின்ற ஒரேயொரு ‘பிடி’ அரசியல மைப்பு விடயம் தான்.
அந்த அரசியலமைப்பு விடயத்தினை எவ் வாறு தமது இருப்பை நிலைநிறுத்துவதற்காக அதிகாரங்களுடன் கூடியவாறாக எவ்வாறு தகவமைப்பது என்பது அவர்களினது முக்கியமான நோக்கமாகவுள்ளது.
தற்போது கிடைக்கின்ற உள்வீட்டுத் தகவல்களின் பிரகாரம், ஜனாதிபதி அநுரவும், அவரது தாய்வீடான பெலவத்த ஜே.வி.பி.தலை மையகமும் தற்போதிருக்கின்ற அரசியலமைப்பில் மறுசீரமைப்பினைச் செய்வதற்கே தீர்மானித் துள்ளன.
குறிப்பாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்ற பிரதமர் முறைமையை அறிமுகப்படுத்துவது அவர்களின் முதலாவது நோக்கமாக உள்ளது. அடுத்தபடியாக, உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட சுயாதீன ஆணைக்குழுக்கள், கணக்காய் வாளர் நாயகம் உள்ளிட்ட உயர் பதவிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆகியவற்றுக்கான நியமனங்களை அங்கீகரிக்கம் அதிகாரத்தினை அரசியலமைப்பு பேரவை கொண்டிருக்கின்றது.
இது அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக தலையிடியாக இருந்துவருகின்ற நிலையில் ‘அரசியலமைப்பு பேரவையின்’ அதிகாரங்களை வலுவிழக்கச் செய்தலும் இரண்டாவது நோக்கமாக உள்ளது.
இதனை விடவும், ‘சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம், உண்மை, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட விடயங் களையும் அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாக  கண்துடைப்புச் செய்வதற்கும் நோக்கங்கள் உள்ளன.
மறுபக்கத்தில் புதிய அரசியலமைப் பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் தேசிய மக்கள் சக்தியால் தொடர்ச் சியாக ஜே.வி.பிக்கு கூறப்படுகின்ற விடயமாக இருக்கின்றது.
விசேடமாக, ஜனாதிபதி முறைமை, தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்ட விடயங்களை அது மையப்படுத்திய இருக்க வேண்டும் என்ற வாதங்களும் காணப்படுகின்றன.
அதுமட்டுமன்றி, மாகாண சபை முறைமைகளை நீக்க வேண்டும் என்ற நோக்கமும் ஜே.வி.பிக்குள் உள்ள கடும்போக்காளர்களுக்குள் காணப்படுகின்றது. இதனைவிடவும், ஜே.வி.பியின் கட்சிக் கொள்கைகளை தேசிய கொள்கைகளுக்குள் புகுத்தி அதனை மையப்படுத்தியமாக நாட்டின் அடிப்படையச்சட்டமான அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கு நிலைகளும் தாராளமாகவே உள்ளன.
இவ்வாறு தான் ஜே.வி.பி.தலைமையிலான அநுர அரசாங்கமும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை அல்லது, அரசியல் மறுசீரமைப்ப பணிகளை தமது அடுத்த ஆட்சிக்கால நீட்சிக்காகவே பயன்படுத்தப்போகின்றது.
மாறாக, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் முகமாக, வட,கிழக்கு தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வுடன் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படப்போவதில்லை. அவ்விதமான நிலையில், அநுர அரசாங்கத் தின் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளையோ அல்லது அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கை களையோ கையாள்வதற்கு தமிழ்த் தரப்பில் தற்போதே முனைப்பே ஆகக்குறைந்த வியூகமாக இருக்கும்.