Home Blog Page 37

செம்மணியில் மீண்டும் அகழ்வுகள் ஆரம்பமாகின : புதிதாக 16 என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாவது அமர்வு நேற்று (25) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று (26) இரண்டாவது நாளாக அகழ்வுப் பணிகளின் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய, இன்றைய அகழ்வுப் பணிகளின் போது 16 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.
சிறுவர்களுடையது என சந்தேகிப்படும் என்புக்கூட்டு தொகுதிகளும், ஆடையை ஒத்த துணியும் வெளிப்பட்டுள்ளதாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே, முன்னதாக இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது 147 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 163ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக வெளிப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதிகளில் 133 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதிகளின் அரச வீடுகள் திரும்ப பெறப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

செப்டம்பரில் புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு இல்லங்களையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி,

சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். நீதித்துறை மீதான பொது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். நீதியானது செல்வந்தர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தாது என்பதை மாற்றியமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

சட்டம் அனைத்து குடிமக்கள் மீதும் சமமாக அமல்படுத்தப்படும். ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கு எதுவாக இருந்தாலும், கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்.

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, ​​முன்னாள் தலைவர்களுக்கு ஆடம்பர அரசு வீடுகளை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. 33ஆயிரம் சதுர அடியில் வீடு எதற்கு? கொவிட் தொற்றுக் காலத்தில் அந்த வீட்டை புனரமைக்க 40 கோடியை பெற்றுள்ளனர்.

தியாகங்களைச் செய்யும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, தேவையற்ற செலவுகளை மக்கள் மீது சுமத்த முடியாது. முதலிம் நாம் தியாகங்களை செய்ய வேண்டும். தராதரம் பாராது எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பட்டலந்த, மத்திய வங்கி குறித்தான குற்றச்சாட்டு எனில் எதிராக நாம் குரல் கொடுக்கப் போவதில்லை: மனோ கணேசன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விவகாரம் அல்லது மத்திய வங்கி மோசடி குறித்தான குற்றச்சாட்டு எனில் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவொரு அரசியல் பழிவாங்கலாகும். இங்கிலாந்தின் பல்கலைக்கழகத்திலிருந்து ரணிலுக்கு இலங்கை தூதுவர் ஊடாக பெறப்பட்ட அழைப்பிதழை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பழிவாங்குவது தவறு, ஜனாதிபதியானதன் பின்னர் அவர் செல்லும் பயணங்கள் அனைத்தும் உத்தியோகபூர்வமானவை, இப்பொழுது உள்ள ஜனாதிபதி அனுரவும் அவ்வாறே. அவருக்கும் அது பொருந்தும்.

இதன் காரணமாகவே நாம் இந்த விடயத்தில் முன்னிற்பதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதனை புரிந்துகொள்ள வேண்டும். தவறான புரிதலால் இந்த பிரச்சினை ஏற்ப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை இடம்பெறும் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள், ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை!

தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறவுள்ள  மாபெரும் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதியை கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து செம்மணி  வரையும் கிழக்கில் கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்காவரையும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் முல்லைதீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரது  ஆதரவையும் வேண்டி நிற்ப்பதாக தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்கள் தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்  முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் போராட்டங்களில் மதத் தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பொதுமக்களையும் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி சர்வதேச நீதியூடாக வழந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்க வழி சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பிணையில் விடுதலையானார் ரணில் !

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 22 ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நோய் நிலைமையை கருத்திலெடுத்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கியுள்ளது.

பொது சொத்து சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப் புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர்  ஆஜராகியிருந்தனர்.

இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகத நிலையில், சூம் காணொளி தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோய் நிலைமை அதிகரித்துள்ளதால் பாரிய உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த நிலையில், நீதிமன்றம் ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான நீதிமன்ற விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான நீதிமன்ற விசாரணை சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் ஆரம்பமானது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே சாரிபில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஆஜராகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாக,  தெற்காசியாவிலேயே மிக பெறுமதி வாய்ந்த பெரிய நூலகமாக கருதப்பட்ட யாழ்ப்பாணம் நூலகம் எரிப்பு, இலங்கையில் 1987 முதல் 1989ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களை தடுத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படும்    பட்டலந்தை சித்திரவதை முகாம், அதில் நடைபெற்ற சித்திரவதைகள்,இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தில் 11,450 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டவை உள்ளிட்ட பல  குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது.

இந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க உடல்நிலை முடியாமை காரணமாக தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று   (26) நடைபெறவுள்ளது. எனவே Zoom காணொளி அழைப்பு மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ரணில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஐ.தே.க. உறுப்பினர்கள் அஸ்கிரிய மகாநாயக்க தேரருடன் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியினர் செவ்வாய்கிழமை (26)   அஸ்கிரிய மகா விகாரைக்கு விஜயம் செய்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், பிரதம தேரர் மற்றும் சிரேஷ்ட பிக்குகள் அடங்கிய குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நிலைமை குறித்தும், நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியின் தற்போதைய உடல்நிலைக்காக அவர்கள் பிரதம தேரரிடம் ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டனர்.

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? – மு.திருநாவுக்கரசு

“உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது” என்று ஒரு பிரெஞ்சு பழமொழி உண்டு. உன்னை நோக்கிப் பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டுமேயாயினும், நீயே சத்தமிட வேண்டும். ஒரு பச்சைக் குழந்தை கூட தன்னருகே யாரும் துணையில்லை என்றால் அழுது, கத்தி யாரையும் தன்பால் ஈர்த்துவிடும்.
இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்கள், கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகப் போராடாதிருக்கும் நிலையில், உரியவனும் பாரான்; அடுத்தவனும் பாரான்; அண்டை நாடும் பாராது; வெளிநாடுகளும் பாராது. உனக்கு யாரும் கை கொடுக்க வேண்டுமாயின், நீயே கை தூக்க வேண்டும். ஆதலால், களத்தில் போராடுவதன் மூலம் மட்டுமே உள்ளும் புறமும் கவனத்தை ஈர்த்துப் போர்க் கொடியைச் சர்வதேசத் தளத்தில் நிறுத்த முடியும்.
“Only the fittest will survive” (“தக்கன மட்டுமே உயிர் வாழும்”) – அதாவது, இங்கு காணப்படும் சூழலுடன் தன்னையும் இணைத்துத் தனக்குப் பொருத்தமாகக் கையாளத் தெரிந்தவை மட்டுமே உயிர் வாழும் என்பதே இதன் முழுமுதற் பொருள்.
இந்த உயிரியல் டார்வினிசத்தைச் சமூக அல்லது அரசியல் டார்வினிசமாகக் கையாளும் போது, அதை அதிகம் தலைமைத்துவப் பண்புடன் கூடிய வகையில் கையாள வேண்டும். உயிரியல் டார்வினிசத்தில், அந்த உயிருக்குச் சுயநல உயிரியல் மரபணு (selfish gene) இயல்பாக இயற்கைத் தேர்வின் படி தத்துவத்தை வழங்குகிறது.
மனிதனும் உயிர் என்ற வகையில் சுயநல மரபணுவைக் கொண்டவனேயானாலும், ஒரு சமூகமாக இருந்தபோது, அங்கு மேலதிகமாகத் தலைமைத்துவ ஆளுமை தேவைப்படுகிறது. இந்த வகையில், உயிரியல் டார்வினிசத்திலிருந்து சமூகவியல் டார்வினிசம் குறிப்பிடத்தக்க அளவுக் குத் தெளிவான ஆளுமைப் பரிமாண வேறுபாட் டைக் கொண்டுள்ளது.
சமூகப் பரிமாணத்தைக் கட்டமைப்புச் செய்து முன்னெடுக்கும் விதத்தில் தவறுகள் இழைக்கப்பட்டால், அந்தச் சமூகம் தக்க தேர்வின்றித் தேய்ந்து போய் அல்லது அழிந்து போய்விடும். அதாவது, உயிரிகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட உயிர்களின் தலைமைத்துவத் திற்கப்பால், மனிதச் சமூகத்தில் நுண்ணறிவும் முன்னறிவும் கொண்ட அளவாற் பெரிய ஓரினம் (சிங்கள இனம்), அளவாற் சிறிய இனங்களின் மீது அதிக தலைமைத்துவ ஆதிக்கத்தைச் செலுத்துவதன் மூலம், சிறிய இனங்களின் தெரிவு சுருங்கும், பாதிப்புக்குள்ளாகும், சீரழிவுக்கு உள்ளாகும்.
இந்த வகையில், ஈழத் தமிழர்கள் அதிகம் தலைமைத்துவப் பண்புடனும் முனைப்புடனும் செயல்பட்டால் மட்டுமே, காணப்படும் சமூகச் சூழல் யதார்த்தத்தில் தம்மைத் தக்கவைக்க முடியும்.
மனிதனும் ஏனைய பிராணிகளைப் போல ஓர் உயிர் என்பதால், உயிரியல் டார்வி னிசத்திலுள்ள பொதுத்தன்மைகள் மனிதனுக்கும் உண்டேயானாலும், உயிரினங்களில் அதிக நுண்ணறிவு கொண்டு மனிதன் சமூகமாகத் தன்னைக் கட்டமைப்பதில் வேறுபட்ட ஆளுமை அளவுகளைப் பிரயோகிக்க முடிகிறது.
அரசுள்ள அளவாற் பெரிய சிங்கள சமூகத்தோடு, அரசற்ற அளவாற் சிறிய தமிழ்ச் சமூகம், தலைமைத்துவ ஆளுமையில் தக்க முனைப்பைக் காட்டத் தவறினால், அந்தச் சமூகம் தன் வாழ்நிலையை இழந்துபோக நேரும்.
இந்நிலையில், ஈழத் தமிழர்கள் தம்மைத் தமிழர் என்ற உட்சமூக ரீதியாகவும், இலங்கை என்ற உள்நாட்டு ரீதியாகவும், அண்டை நாடு, வெளிநாடுகள், சர்வதேச சமூகம், உலகளாவிய அரசியல் நிலை போன்ற காணப்படும் அனைத்துப் புறநிலை மாற்றங்களுக்கும் பொருத்தமாக, தமக்கான தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்.
அந்த வகையில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலான அரசியற் சூழலில், ஈழத் தமிழர் நிலையானது “கூழ்முட்டை” (Rotten egg) நிலை யையே கொண்டுள்ளது. மேற்படி நடப்புநிலை, உள்ளூர், உள்நாட்டு, வெளிநாட்டு, உலகளாவிய யதார்த்தத்தை உள்வாங்கி, இப்போது ஒரு புதிய வகையில் தமிழ்த் தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும் என்று இக்கட்டுரை வேண்டி நிற்கின்றது.
ஏறக்குறைய 1970களின் பிற்பகுதியளவில், ஒற்றை உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஆரம்பமான ஆயுதப் போராட்டம், தரைப்படை, கடற்படை, பீரங்கிப்படை, விமானப்படை, சர்வதேச சரக்குக் கப்பல் அணியென வளர்ந்த நிலையில், கோட்டை கொத்தளங்களெல்லாம் அழிந்தவாறு, குண்டூசிகூட இல்லாத நிலையை ஆயுதப் போராட் டம் அடைந்துள்ளது.
ஆனால், 1979 ஆண்டு 10 ஆயிரத்துக்குட்பட்ட படையினருடன் ஒரு பிரிகேடியரைத் தலைமைத் தளபதியாகக் கொண்டிருந்த இலங்கை இராணுவம், இன்று அதிநவீன ஆயுதங்களு டன் கூடிய வகையில் 3 லட்சத்து 46 ஆயிரம் படையினருடன் காணப்படுகிறது. நாடாளுமன்ற அரசியலில் 21 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று சிதைந்து, சுக்குநூறாகி, தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களையும், சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஒரு உறுப்பினரையும், இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஒரு உறுப்பினரையும் பாதிக்குமேல் சுருங்கிக் கிடக்கிறது. மேலும், சனநாயகப் பண்பற்றுச் சீரழிந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறது.
2001 ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதல், உலகெங்கும் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் முது கெலும்பை உடைக்க வழிவகுத்த போதிலும், அதுவே உலகெங்கும் மக்கள் போராட்ட அலைகள் எழும்புவதற்கு ஏதுவாகவும் அமைந்தது. எனவே, “மக்கள் போராட்ட அலை” எனும் ஓராயுதம் உலக அரங்கில் முதன்மை பெறத் தொடங்கியது. பறிக்கப்பட்ட வெடிகுண்டு, துப்பாக்கி ஆயுதத்துக்குப் பதிலாக, மக்கள் திரளெனும் ஓராயுதம், மக்கள் சனநாயகக் கிளர்ச்சியாய் வடிவம் பெற்றது.
முள்ளிவாய்க்காலில் இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்ததோடு முடிந்துவிடவில்லை. அங்கு, அரச இராணுவம் தனது இராணுவச் சூளையில், “இனப்படுகொலை” என்னும் மிகக் கூரியதோர் ஆயுதத்தை உற்பத்தி செய்தது. எனவே, முள்ளிவாய்க்காலில் பறிபோன துப்பாக்கி, வெடிகுண்டு ஆயுதங்களுக்குப் பதிலாக, மக்கள் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டதன் வாயிலாக, “இனப்படுகொலை” என்னும் ஆயுதம் தமிழ் மக்கள் கைக்குக் கிடைத்தது.
இந்த வகையில், “இனப்படுகொலை” என்ற ஆயுதத்தை முதலீடாகக் கொண்டு, தமிழ்மக்கள் தமது அரசியற் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று, 2016 ஆம் ஆண்டு இக்கட்டுரையாசிரியரால் எழுதப்பட்ட “டொனமூர் முதல் சிறிசேன வரையான உத்தேச அரசியல் யாப்பு” என்ற நூலில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அந்நூல் வெளியிட்டு விழா வில், தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் உட்பட, பல்வேறு அரசியற் தலைவர்களும், பல்கலைக்கழக அறிஞர்க ளும், ஊடகவியலாளர்களும் உரையாற்றினர் என்ப தும் குறிப்பிடத்தக்கது.
இப்போது, ஈழத் தமிழர்களின் குறைந்த பட்ச உரிமைக்கான போராட்டங்களைக் கூட இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியுள் ளது. முதலாவதாக, இலங்கையில் நடைமுறை யிலுள்ள நாடாளுமன்ற மரபு அரசியற் பாதை, இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதை வளர்க்கவே உதவியுள்ளது என்பதை, 1833 ஆண்டு நடைமுறைக்கு வந்த “கோல்புரூக் யாப்பு” நடைமுறையிலிருந்து, இன்றைய (2025) ஆட்சியாளர்களின் யாப்பு நடைமுறை வரை, வெள்ளிடை மலையெனத் தெரிகிறது.
தமிழ்த் தலைவர்கள், குறிப்பாக “சோல்பரி அரசியல் யாப்பு” ஒட்டிய காலத்தில், 14 மணி நேரம் மூச்சுவிடாமற் பேசியும் பயனில்லை. தற்போது நாடாளுமன்றத்தில், திரைப்படப் பாணியில் 14 நிமிடங்கள் அங்கிங்குமாய்க் காலை, கையை உயர்த்தி, முதுகை வளைத்து, கண்ணை உருட்டி, சொண்டைப் பிதுக்கிப் பேசியும் எந்தப் பயனுமில்லை.
நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தமக்கான மக்கள் ஆதரவை உள்ளும் புறமும் நிரூபிப்பது சரி. ஆனால், நாடாளுமன்றத்தில் பேச்சுப் போட்டி நடத்தி எதனையும் சாதிக்க முடியாது. மாறாக, நாடாளுமன்றத்தை உள்ளும் புறமும் போர்க்களமாக மாற்றவல்ல திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து, அதற்கூடாகப் போராட்டத்தை நாடாளுமன்றத்துக்குள்ளும், புறமும், உலக அரங்கிலும் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான வியூகங்கள் வகுக்கப் பல வழிகளுண்டு. இதற்கான வியூகங்களைப் பின்பொரு தனிக் கட்டுரையில் ஆராய்வோம்.
இப்போது, போராட்டத்துக்கான முதற் திட்டத்தை வரையறை செய்வோம்: 
ஆயுதப் போராட்டத்திலிருந்து மக்கள் போராட் டத்துக்கு:
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடு தலைப் புலிகள் அமைப்பு, உள்ளும் புறமும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை, இந் தியா தவிர, மேலும் 31 நாடுகளில் அந்தத் தடைப் பட்டியல் நீள்கிறது. ஆயுதப் போராட்டம் என்ற பேச்சுக்கே உள்ளும் புறமும் இடமில்லை. ஆனால், “இனப்படுகொலைக்கெதிரான குரலை” மனிதநேயத்தின் அடிப்படையில் உலகெங்கும் முன்னெடுக்க முடியும்.
அதனைத் தமிழகத்திலும் முன்னெடுக்கலாம்.
முழு இந்தியாவிலும் முன்னெடுக்கலாம்.
அமெரிக்காவிலும் முன்னெடுக்கலாம்.
ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் முன்னெடுக் கலாம்.
உலகின் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக் கலாம்.
இது எதிரிக்கும், தமிழர் உரிமைகளை எதிர்க் கவல்ல வேறு சக்திகளுக்கும் எதிரான ஒரு பலம் வாய்ந்த ஆயுதம். செம்மணிப் புதைகுழியும் இதற்கு அரணமாகிறது. குறிப்பாக, 1958 ஆம் ஆண்டிலிருந்து கறுப்பு யூலை வரையும், அதன் பின்பும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான அனைத்து மனிதப் படுகொலைகளும் தொடர்பான நீதி நிர்வாக நடவடிக்கைகளும் இவற்றுக்கு அணிசேர்க் கின்றன.
2. போராட்ட முன்னுரிமைகள்:
முதலாவதாக,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
இசைப்பிரியா மீதான பாலியல் வன்முறை, படுகொலை
சிறுவன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை
என்பனவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, அதற்கான போராட்டத்தை உள்நாட்டு அரங்கிலும், தமிழகத்திலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுக்க வேண்டும்.
3. பொது செயற்குழு அமைப்பு:
இதற்கு வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தளமாகக் கொண்டிருக்க வேண்டிய தில்லை. தமிழ்ச் சமூகம் ஒன்றுதிரண்டு, நடைபெற்ற அநீதிகளுக்கு நீதி கோரிப் போராடுவதற்கான ஒரு “பொது செயற்குழு”வை உருவாக்க வேண்டும்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கு வகிக்கலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பங்குவகிக்கலாம்.
சிவில் சமூக உறுப்பினர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஓய்வுபெற்ற அதிகாரி கள், மூத்த குடிமக்கள் உள்ளடக்கிய 30 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு “செயல் குழு”வை உருவாக்கி, பிரச்சினையைக் கையாளு வதற்கு அதற்கு அனைத்து அதிகாரங்களையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதுவே தமிழ் மக்களால் உள்ளும் புறமும் ஏற்றுக்கொள் ளப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.
அதுவே எம்மத்தியில் ஏற்பட்டுள்ள உள் உடைவுகளைச் சரிசெய்வதற்கும், புதிய செயல் பூர்வமான ஒரு பாதையை வடிவமைக்கவும் வழிகோலும். “An idle mind is the devil’s workshop” (“வெறும் மனம் பிசாசின் பட்டறை”) என்பதற்கிணங்க, போராடாது தேங்கி வரண்டு கிடக்கும் ஒரு சமூகத்தின் மனதில் பிசாசுகள் குடிகொண்டு, அதனைத் தங்கள் பட்டறையாக மாற்றிவிடும். இப்போது தமிழினத்தின் அரசியலும் அப்படித்தானுள்ளது. எனவே, “இனப்படுகொலை” என்ற ஆயுதத்தைக் கையிலேந்தி, அதற்காகப் போராட வல்ல ஒரு அமைப்பைச் சனநாயகப் பூர்வமாக வடிவமைத்து, வெற்றிடங்களை நிரப்பிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். சர்வதேச நாடுகளும் தமிழரின் தலையில் கொண்டையும் கட்டி, கொண்டையில் பூவும் கட்டி, அதற்கப்பால் தலையில் குருவி கூடும் கட்டிச் செல்லும்.
உலகெங்கும் சிதறி வாழும் ஈழத் தமிழர்களே!
ஈழத்தமிழ் மண், இந்து மாகடலின் மையத்தில் இந்தியாவின் வாசற்படியாக இருக்க வல்ல, அதன் கேந்திர அமைவிடத்தின் நிமித்தம், அது உலகப் பெரும் வல்லரசுகளையெல்லாம் ஈர்க்கவல்ல புள்ளியிலுள்ளது. சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய புள்ளியிலுள்ளதால், அதனை ஒரு முதலீடாகக் கொண்டு, அறிவாற்றலுடனும், ஆளு மைத் திறனுடனும் தமிழ்த் தலைவர்கள் செயல்பட வேண்டும்.

காஸாவில் மேலும் 5 பத்திரிகையாளர்கள் படுகொலை

தெற்கு காஸா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நாசர் மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் ஒரு அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர் ஆகியோர் அடங்குவர். மற்ற இரண்டு பத்திரிகையாளர்களும் அல் ஜசீரா மற்றும் என்பிசி நிறுவனங்களில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

முதல் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர், மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது நடந்த இரண்டாவது தாக்குதலில் மற்றவர்கள் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் தங்களின் ஒளிப்பதிவாளர் ஹுசாம் அல்-மஸ்ரியும் ஒருவர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சுயாதீன பத்திரிகையாளரான மரியம் டாகாவும் கொல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. 33 வயதான அந்த நபரின் மரணத்தால் “அதிர்ச்சியும் வருத்தமும்” அடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்றவர்கள் அல் ஜசீராவில் பணிபுரியும் முகமது சலாமே மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி சேனலான NBCயில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் முவாத் அபு தாஹா என்று கூறப்படுகிறது.

சிவில் பாதுகாப்புத் துறையின் உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடரும் சர்வதேச நீதி கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்!

unnamed 3 தொடரும் சர்வதேச நீதி கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்!

தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் தொடர்கிறது.

சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்றுமுன்தினம் (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இது இரண்டாவது நாள் 24.08.2025 நாவிதன்வெளி பிரதேசத்திலும் நேற்று (25.08.2025) மூன்றாவது நாள் காரைதீவிலும் முன்னெடுக்கப்பட்டது

இன்றைய கையெழுத்து சேகரிக்கும் பணியில் பலர் ஆர்வத்துடன் வந்து தமது ஆதரவுகளையும் வழங்கித் தமது கையொப்பங்களையும் இட்டதுடன் அங்கு கலந்து கொண்டிருந்த காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் பிரதேச சபை உறுப்பினருமான திரு.கி.ஜெயசிறில் தனது கருத்துகளையும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இன்றைய நிகழ்வில் இந்த நிகழ்வை ஒருங்கமைத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு பொதுமக்கள்,இளைஞர்கள், மாணவர்களிடமும் இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள்,பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.