Home Blog Page 3141

பிறேசிலில் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் பலி

நேற்று (19) பிறேசிலின் வட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நிகழ்த்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறேசிலில் உள்ள பெலெம் நகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், ஆனால் தாக்குதலின் நோக்கம் தெரியவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாக்குதலாளிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும், ஒருவர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜி1 இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஆறு பெண்கள், ஐந்து ஆண்கள் அடங்குவதாகவும், உந்துருளி மற்றும் மூன்று வாகனங்களில் வந்த ஏழு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிக்கு மீளவும் பணி வழங்கப்பட்டது எவ்வாறு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை வழிநடாத்தியவராகக் கருதப்படும் மேஜர் புலவத்த,சிறிலங்கா இராணுவத்தபதியின் நேரடி உத்தரவுக்கமைய மீளவும் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார்.major prabath bulathwatte crop கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிக்கு மீளவும் பணி வழங்கப்பட்டது எவ்வாறு

குறித்த அதிகாரியின்கீழ் இயங்கிய குழவினர் தி நேசன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நொயரை தாக்கியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது தெரிவிக்கப்படுகிறது.

கீத் நொயா கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த மேஜர் புலவத்தகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.keith noyar கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிக்கு மீளவும் பணி வழங்கப்பட்டது எவ்வாறு

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபர் ஒருவருக்கு எவ்வாறு மீளவும் பணி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மனிதவுரிமை பற்றி உரத்துக் கூவுவோரும், ஊடகத்துறை சார்ந்தவர்களும் இவ்விடையத்தில் மௌனம் சாதிப்பது வியப்பளிப்பதாக உள்ளது.

முஸ்லிம்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டவையே

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னர் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் தமிழர்களே பாதிக்கப்பட்ட போதும், சிங்கள பௌத்த குழுக்கள் இதனை சாட்டாக வைத்து திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதன்மூலம், இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்று ஏனையவர்களுக்கு காட்ட முனைகின்றனரா என எண்ணத் தோன்றுகின்றது என தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டுமே. கிறிஸ்தவ தமிழ் மக்கள் அல்லது கிறிஸ்தவ சிங்கள மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இந்த சம்பவத்தில் பௌத்த சிங்கள மக்கள் இறந்ததாக நான் அறியவில்லை.

இந்நிலையில் வடமேல் மாகாண தாக்குதல் சம்பவங்களை அவதானிக்கும் போது, முஸ்லிம் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்காக அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பௌத்த சிங்களவர்களே தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். மேலும் அவர்களை துன்புறுத்தியுள்ளனர்.

ஆகவே இந்த வன்முறை நிகழ்வை வைத்துப் பார்த்தால், தாக்குதலை மேற்கொண்ட பௌத்த சிங்களவர்கள், இந்த நாடு ஒரு பௌத்த சிங்கள நாடென காட்டுவதாக நினைக்கத் தோன்றுகிறது என்றார். அத்துடன் இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டதாகவும் நினைக்கத் தோன்றுகின்றது.

ஏனெனில் 1983 களில் நடைபெற்ற ஓர் சம்பவத்திற்காக திட்டமிட்ட வகையில் பொரளையில் இருந்து அங்கிருந்த தமிழர்கள் விபரங்களை பெற்று, அவர்களை தாக்கினார்கள். வெள்ளவத்தையில் கூட தமிழர்கள் பெயரை கூறி அவர்களை தாக்கினார்கள்.இதே போலவே தற்போதும் எந்த பாதிப்பினையும் சந்திக்காத சிங்கள பௌத்தர்கள் இதனை ஓர் காரணமாக வைத்து முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.

இதன் ஊடாக இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என காட்டிக்கொள்ள முனைகின்றனர். அதற்காக நாம் முஸ்லிம் தீவிரவாதிகளை ஒன்றும் செய்யக் கூடாது என கூறவில்லை.ஆனால் அவர்களை ஓர் காரணியாக வைத்து சாதாரண முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.

 

 

 

ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை சிறீலங்கா பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 17 ஆம் நாள் வெளியிடப்பட்ட அந்த ஒழுங்கு பத்திரத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரனையாக குறித்த நம்பிக்கையில்லா பிரேரனை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கையொப்பம் இட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளதுடன் அமைச்சர் மீதான 10 குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.

21 ஆம் திகதி முற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டும் சபாநாயகர் , மேற்படி நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் கலந்துரையாடி விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிப்பார்.

 

பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு -மன்னார் தமிழரசு கட்சி

கடந்த வாராம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழராசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு வழங்குவத இல்லையா என்பது தொடர்பாகவும் அமைச்சர் ரிசாட் பதிவுதீன் மீதுகொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையிலா பிரேரனை தொடர்பாகவும் எவ்வாறு பாராளுமன்றத்தில் தீர்மானம் மேற்கொள்வது தொடர்பாக மன்னார் மாவட்ட தமிழ் அரசு கட்சி உயர்மட்ட குழுவின் கலந்துரையாடல் நேற்றைய தினம் (18) மாலை 4 மணியளவில்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது தற்போது அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அவசர்காலச்சட்டத்தினால் தமிழ் மக்கள் திட்டம் இட்டு பழிவாங்கப்படுவதனாலும் பல்கலைகழக மாணவர்கள் முன்னால் மாகாணசபை உறுப்பினர்கள் மீது திட்டம் இட்டு குற்ற நடவடிக்கைகள் எடுப்பதனால் நிச்சயமாக அவசரகால சட்டத்தை நிச்சயாமக எதிர்க்கவேண்டும் என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்ப்பட்டது

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன்

அவசரகால சட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் நிச்சயம் வெற்றி பெரும் ஆனலும் இவ் அவசர கால நிலமையினை பயன்படுத்தி எமது மக்கள் பலிவாங்கப்படுகின்றனர்
எனவே நம்பிக்கையில்லா பிரேரனையின் காலப்பகுதி ஒருவ்மாதம் ஆகும் அவ் காலப்பகுதி நிறைவடைந்த பின்னர் மீண்டும் பாராளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அதற்காக ஆதரவை வழங்கப்போவது இல்லை என எமது மன்னார் மாவட்ட உயர் மட்ட குழு தீர்மானிதுள்ளோம்

அதே நேரத்தில் குண்டு வெடிப்பில் சம்மந்த பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக அமைச்சர் ரிசாட் பதிவுதீன் மூன்றுதடவை இராணுவதளபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும்

அவர் மூலமாக மன்னார் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாகவும் அதே நேரத்தில் அன்மையில் தாராபுரபகுதியில் அமைச்சருக்கு சொந்தமான விடுதியில் சந்தேத்திற்கு இடமான இலக்கத்தகடு கண்டுபிடிக்கப்பட்டது ஆனலும் குறித்த இலக்க தகடானது இலங்கை மோட்டார் வாகன அமைப்புனால் (RMP) வினியோகிக்கப்படவில்லை எனவும் எதோ ஒரு வகையில் தவறான நடவடிக்கைகாகவே குறித்த இலகக்க தகடு பயன் பட்டிருக்கலாம் எனவும்
இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நடத்துவதற்காகவாவது அவர் மீதி கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையிள்ளா பிரேரனையை ஆதரித்து அவருக்கு இந்த தற்கொலை குண்டுதாக்குதலுக்கும் தொடர்பு உள்ளத இல்லையா என்பது தொடர்பாகவும் குறுகிய காலத்தில் அவர் எவ்வாறு செல்லவ்ந்தராக வந்தார் என்பது தொடர்பாகவும் விசாரிக்கவேண்டும் என தெரிவித்தார்

அத்துடன் ஒட்டு மொத்த மன்னார் தமிழ் அரசு கட்சி உயர்மட்ட குழுவினராலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவாக வாக்களிக வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்கின்றது முஸ்லீம் சமூகம் – பரணி கிருஸ்ணரஜனி

முஸ்லிம்கள் தம்மை ஒரு கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது.

இறை நம்பிக்கையையும் / மத அடையாளத்தையும் மட்டும் முன்னிறுத்தி தம்மை ஒரு தனித்துவ இனமாகக் கருதியே தமிழர் தாயகக் கோட்பாட்டிற்கு எதிராக நின்றார்கள் தீவின் முஸ்லிம்கள்.

ஆனால் அவர்கள் பெரிதும் நம்பும் ரமழான் நோன்பு நாட்களில் அதையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு சிங்கள பவுத்த கோட்பாட்டிற்குள் ஐக்கியமாக தயாராகிவிட்டார்கள்.

இது ஒரு வகையில் சுய இன அழிப்பும் கூட.

இத்துடன் இவர்களின் தனித்துவ அடையாளம் அரசியல்ரீதியாகப் பெறுமதி இழக்கிறது.

இன அழிப்பை நினைவு கூரும் இந்தப் பத்தாவது ஆண்டில் முஸ்லிம்கள் தாம் தமிழர் என்பதை மறந்து/ மறுத்து மத அடிப்படையிலான தனித்துவத்தை முன்னிறுத்தியதால் எழுந்த தமிழர் தாயகக் கோட்பாட்டிற்கான சிக்கல் – அந்த அடையாளத்தை துறப்பதற்கு அவர்கள் துணிந்திருக்கும் இந்த முடிவினூடாக – நீர்த்துப் போயிருப்பது மிக முக்கியமானதாகிறது.

ஆனால் மறு வளமாக இது ஒரு கவலை தரும் நிலையும் கூட.

ஒரு குழுமத்தின் அடையாளத்தைச் சிதைத்து விட்டு / அதன் வழி அதை அரசியல் நீக்கம் செய்து விட்டு ஒரு தாயகக் கோட்பாடு கட்டியெழுப்பப்படுவதை நந்திக்கடல் முற்றாக நிராகரிக்கிறது.

முஸ்லிம்களை அவர்களின் தனித்துவத்துடனேயே தமிழர் தாயகத்தில் வாழும் உரிமையை அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறது நந்திக்கடல் – இப்படி அடையாள அழிப்புச் செய்து அல்ல.

இன அழிப்பு அரசுடன் ஒத்தோடும் இந்த யுக்தி அடிப்படையில் முஸ்லிம்களின் தனித்துவத்தை கேள்விக்குட்படுத்தும் தூரநோக்கற்ற செயலாகவே கருத வேண்டியுள்ளது.

கால நீரோட்டத்தில் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து தனித் தேசமாகும் போது சிங்களம் / தமிழ் என்று தேசங்கள் உடையும் போது முஸ்லிம்களின் இத்தகைய போக்கால் இரு தரப்பாலும் தனித் தீவாக அவர்கள் நட்டாற்றில் விடப்படுவார்கள் என்கிறது ‘நந்திக்கடல்’.

முஸ்லிம்களுக்கான ‘நந்திக்கடலின்’ அக்கறையுடன் கூடிய எச்சரிக்கை இது.

vesak 2019 கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்கின்றது முஸ்லீம் சமூகம் - பரணி கிருஸ்ணரஜனிஏனென்றால் ‘நந்திக்கடல்’ தமிழர்கள் விடுதலை குறித்து மட்டும் அக்கறை கொளள்வில்லை. அது உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து இனக் குழுமங்கள் குறித்தும் கரிசனை கொள்கிறது.

கடந்த ஈஸ்டர் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற விவாதத்திற்கு அப்பால் தாக்குதல்தாரிகளின் இலக்கு தமிழர்கள்.

ஆனால் அது கிறிஸ்தவர்கள் என்ற புது வியாக்கியானம் வைக்கப்பட்டு அதுவும் சிங்கள ஆயரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள் முஸ்லிம்கள்.

ஆனால் அதையே ஒரு சாக்காக வைத்து முஸ்லிம்களை கடந்த சில நாட்களாக அடித்துத் துவைத்துக் காயப்போட்டது இன அழிப்பு அரசு.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முஸ்லிம்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அப்படி கேட்பதென்றால் தமிழர்களிடம்தான் கேட்க வேண்டும். இதுதான் அடிப்படைச் சிக்கல்.

அடுத்து சக தமிழர்களாக முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளில் கலந்து கொள்ளாத முஸ்லிம்கள் தமிழர்கள் அழிக்கப்பட்டதை கொண்டாடும் வெற்றி நாளிலும் / சிங்களப் பண்டிகையிலும் கலந்து கொண்டு தமது அறத்தையும் , அடையாளத்தையும் இழந்தது மட்டுமல்ல தங்களுக்கான அரசியலையும் இழந்து நிற்கிறார்கள்.

இது ஒரு வகையில் துயரம்தான்..

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் 40இற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கஞ்சியை உணவாக உட்கொண்டதை நினைவு கூரும் வகையிலேயே இவ்வாறு கஞ்சி வழங்கும் நிகழ்வு வழங்கப்பட்டது. கிளிநொச்சி, மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது 

இலக்கு – 26 (19-05-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு – 26 (19-05-2019)

சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும்

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்த ஒரு தசாப்தமாகிய போதும், சர்வதேச சமூகம் குறிப்பாக ஐக்கிய நாடுகள் யுத்தத்தம் முடிவிற்கு வரும் சமயத்தில் தமிழ் பொது மக்களை படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு உண்மையான முயற்சியை மேற்கொண்டது மட்டுமல்லாது, இந்த முயற்சியில் தோல்வியை அடைந்தது.

இவர்களின் தோல்வியானது, சிறிலங்காவிற்கு சுதந்திரமான ஆட்சியை வழங்கியது. போரின் இறுதிக் காலத்தில் சர்வதேச அமைப்புகள், ஐ.நா. சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் போன்றவற்றை நாட்டை விட்டு வெளியேற்றியது. இதன் மூலம் தனது பொய்யான பிரசாரத்தை மறுப்பதற்கு எவரும் இல்லாததால், தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.

Mulli 2009 சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும்மனிதாபிமான அமைப்புகளின் உதவியினைக் குறைப்பதற்காக அரசாங்கம் உண்மையான எண்ணிக்கையை விட குறைவான பொது மக்கள் இருப்பதாகவே அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. இதன் மூலம் போதிய மருத்துவ பராமரிப்பு மற்றும் உணவு போன்ற வசதிகள் இல்லாமையால், ஆயிரக்கணக்கான பொது மக்கள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மனிதாபிமான உதவிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, சிவிலியன்கள் மீது இராணுவத்தினர் குண்டு வீசுவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கவில்லை. ஐந்து மாத காலத்திற்குள் குறைந்தபட்சம் 30 தடவைகள் மருத்துவமனைகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் பொது மக்கள் அந்தப் பிரதேசத்தை விட்டு தப்பி இராணுவ எல்லைக்குட்பட்ட பிரதேசத்திற்கு சென்றனர்.

2009 பெப்ரவரியில், தாக்குதல் பிரதேசத்திற்கு ஐ.நா. உறுப்பினர் ஒருவர் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரின் பெயர் விபரம் குறிப்பிடப்படவில்லை. அவர் தனது அறிக்கையில் அங்கு பொதுமக்களின் இழப்புகள் பெருமளவில் உள்ளதாகவும், இதனை கவனத்தில் கொள்ளாது விட்டால் நாங்களும் இந்த செயலிற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்ட போதும், இன்னும் துல்லியமான இறப்பு எண்ணிக்கை ஐ.நா.வால் மதிப்பிடப்படவில்லை. ஐ.நா. அமைப்பின் அறிவிப்பின்படி இறுதி யுத்தத்தின் போது, 40,000 மற்றும் 70,000 பேர் மரணித்ததாக கூறப்பட்ட போதிலும் உண்மையாக இந்தப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை 140,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து ஐந்து நாட்களிற்கு பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்.கீ.மூன் சிறிலங்காவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஒரு விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஐ.நா. மனித உரிமை தீர்மானங்களை தாம் மேற்கொள்வதாக ஐ.நா. சபைக்குத் தெரிவித்திருந்த போதும், இதில் சம்பந்தப்பட்ட படை வீரர்கள் சிலரை இராணுவ நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் உயர்மட்ட பதவிகளில் நியமனம் செய்தது

இன்று வரை இவர்கள் மீதான குற்றங்கள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் 2015ஆம் ஆண்டு அறிக்கையில், மனித உரிமை மீறல் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள், கண்காணிப்பு போன்றவை இன்றும் தொடர்வதால், இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று சிறிலங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் இறந்தவர்களின் நினைவு நிகழ்வுகளைக்கூட நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது.

சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும். சிறிலங்காவில் ஐ.நா. உயர் ஸ்தானிகரான நவி. பிள்ளையின் 2011 அறிக்கையில் குழப்பமான புதிய தகவல்கள் சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குட்படுத்தும் என்று கூறியிருந்தார்.

Talk about Pirapakaran