Home Blog Page 2759

நாங்கள் செத்தாலும் ஜ.சி.ஆர்.சி தான் காரணம்-ம.ஈஸ்வரி

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டுவரும் அதேவேளை அரசின் காணாமல்ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நிகழ்சி நிரலினை நடைமுறைப்படுத்தி வருவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் 20.06.19 அன்று 837 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற வேளையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி   ஊடக சந்திப்பொன்றினை நடத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசின் காணாமல் போனோருக்கான அலுவலகம் என்னத்திற்கு நாங்கள் வேண்டாம் என்று சொன்னதையும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று போராட்டங்களை மேற்கொண்டு வெளிப்படுத்திவரும் இந்த சூழலில் நாங்கள் போரின்போது நம்பி இருந்த சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினை நம்பித்தான் இறுதி போரின்போது வெள்ளைக்கொடியுடன் சென்ற வேளையிலும், அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளார்கள் அதற்கு முன்னர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் எங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை நம்பித்தான் இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடியுடன் சென்று பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் தான் கொடுத்தோம் யாருக்கும் விபரங்கள் செல்லக்கூடாது சர்வதேசத்தின் நம்பிக்கையில் நல்ல தீர்வு வேண்டும் என்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு  இன்றுவரைக்கும் அந்த விபரம் அவர்களிடம் இருக்கின்றது.

தற்போது உள்ள காலகட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தீவிரமாக வேலைசெய்துகொண்டு இருக்கின்றார்கள்.அதாவது அரசின் காணாமல் போனவர்கள் அலுவலகத்திற்கு ஆதரவாக அவர்கள் வேலைசெய்வது எங்கள் மனதிற்கு வேதனையாக இருக்கின்றது.

அரசின் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு யாரும் வேலைசெய்யக்கூடாது என்று நாங்கள் வெளிப்படையாக அறிவித்தோம். பாதிக்ப்பட்ட நாங்கள்தான் இதனை அறிவித்தோம்.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் இரகசிய முறையில் கிராமம் கிராமமாக மக்களை அழைத்து மாவட்டரீதியில் மக்களை அழைத்து சந்திப்பினை ஏற்படுத்தியது

வட்டுவாகல் தொடக்கம் ஓமந்தை,வவுனியாவரைக்கும் கிழக்கு மாகாணத்தில் வெள்ளைவான்களால் கடத்தப்பட்டது என்று பலதரப்பட்டவகையில் எங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது.

இவற்றை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தேடி தரமுடியாது என்றால் எங்கள் மக்களுக்கு அவர்களால் ஏன் வாழ்வாதாரம் கொடுக்கவெண்டும்.

எங்களுக்கு கஸ்ரம்தான் நாளாந்த நிலமை கஸ்ரமாக இருக்கின்றது பத்து ஆண்டுகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் காணாமல் போனவர்களுக்காக வேலைசெய்தார்கள் அந்த பத்து ஆண்டுகளாக மக்களிடம் இல்லாத அக்கறை தற்போது அரசின் காணாமல் போனோர் அலுவலகம் வந்தபின்னர் ஏன் இந்த அக்களை என்பது எங்களுக்கு கேள்விக்குறியாக இருக்கின்றது  அரசின் காணாமல் போனோர் அலுவலத்தில் பதிவு செய்யவேண்டும் என்பதும்,அவர்களின் பணம் வாங்கவேண்டும் என்பதையும் நாங்கள் பிளையாக கருதுகின்றோம்.

இன்று நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றால் வேறுயாரின்தூண்டுதலிலோ சம்பளத்திற்கோ இல்லை என்னுடைய கணவர் எனக்கு கிடைக்கவேண்டும் என்று எல்லா அதிகாரிகளிடமும் போனேன் எவராலும் எந்த பதிலும் கிடைக்காத சூழலில் இது எனக்கு சந்தர்ப்பமாக கிடைத்தது எனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பதிவு இருக்கின்றது எனது கணவரை காணவில்லை என்று  எனது கணவர் இருக்கின்றார் என்று புலனாய்வாளர்கள் என்றுசொல்லி வங்கியில் பணம் கட்ட சொல்லி 75 ஆயிரம் பணம் கட்டி அது தொடர்பிலும் நீதிமன்றில் வழக்கு இருக்கின்றது இவ்வாறு பல்வேறு ஆதாரங்களுடன் நான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

இவ்வாறான நிலையில் சர்வதேச செஞ்சிலுவைசங்கம் மக்களை பிளவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. எங்கள் உயிர்போனாலும் பறவாய்இல்லை என்று துணிச்சலாக எங்கள் உறவுகளை தேடி போராடிவருகின்றோம்.

இந்த சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினால் முடிந்தால் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டுமட்டும் சொன்னால் காணும் மற்றும் படி மக்கள் போரில் சாகும்போது விட்டுவிட்டு ஓடும்போது என்ன யோசித்து ஓடினார்கள் அரசாங்கம் போகச்சொல்லும்போது போவார்கள் வரச்சொல்லும்போது வருவார்கள் காணாமல் போனோர் விபரங்கள் அனைத்தும் எடுத்து அரசிற்கு கொடுப்பார்கள் பிறகு போவார்கள் அதன்பின்னர் நாங்கள் படும் வேதனைகளை யாரிடம் சொல்லி அழுவது.

ஜ.சி.ஆர்.சி என்ற ஒரு வசனத்தினை நம்பித்தான் நாங்கள் இறுதிமட்டும் முள்ளிவாய்க்கால் வரையில் இருந்தோம் என்ன நடந்தது இறுதியில்.

எனது காணவரை தேடித்தான் நான் போராட்டத்தில் ஈடுபடுகின்றேன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் அழுத்தத்தின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றேன் கடும் அழுத்தம் நானும் பிள்ளைகளும் தற்கொலை செய்வதுதான் இன்றைய நிலையில் முடிவாகா காணப்படுகின்றது.

எனது கணவரை தேடவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்னை இவர்கள் வீணாக மனஸ்தாப படுத்தி நாங்கள் சம்பளத்திற்கு வேலைசெய்வதாக மக்களுக்கு கூறி எங்களை மக்களிடம் இருந்து திசை திருப்புகின்றார்கள் இவ்வாறான பொய்யா வசனங்களை கூறுகின்றார்கள் இதனால் என்னால் வாழமுடியவில்லை  இந்த ஜ.சி.ஆர்.சியோ அல்லது வேறு நிறுவனங்களோ சரி பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும்.

எங்கள் வீட்டில் பிள்ளைகள் பட்டிணி நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் எனக்கு வாழ்வாதாரத்திற்கோ அல்லது உதவிக்கோ ஜ.சி.ஆர்.சி எங்களை அழைக்கவில்லை காணாமல் போனவர்களை நாங்கள் தேடுகின்றோம் என்பதால் எங்களை ஒதுக்கு கின்றார்கள்.

எங்கள் காணாமல் போன உறவினர்களை ஜ.சி.ஆர்.சி அரசிற்கு விலை போய் கொண்டு பிரித்து பிரித்து கையாள்கின்றார்கள் நாங்கள் எங்கள் உறவுகளை அரசிடம் தான் கையளித்தோம் எங்களுக்கு உண்மையான நீதிவேண்டும் உண்மையில் நான் பதிக்கப்பட்டுள்ளேன் என்னால் முடியவில்லை நான் செத்தாலும் பொறுப்பு இந்த ஜ.சி.ஆர்சிதான் என்று தனது மனக்குமுறலை கண்ணீர் மல்ல தெரிவித்துள்ளார்.

 

கல்முனைப் போராட்ட இடத்திற்கு சென்ற சுமந்திரன் மீது செருப்பு வீச்சு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சுமந்திரன், உள்ளிட்ட பிரமுகர்களிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அங்கு ஏற்பட்ட முரண்பாடு தள்ளுமுள்ளுவரை சென்றது.

கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திப்பதற்கு இன்று மாலை மேற்படி பிரமுகர்கள் சென்றனர். கல்முனையை மூன்று மாதத்தில் தரமுயர்த்தும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவிப்பை பிரமுகர்கள் வெளியிட்டனர். மூன்று மாத கால அவகாசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பொதுமக்களும், போராட்டக்காரர்களும் கருத்து தெரிவித்தனர்.

மூன்று மாத அவகாசமென்பது தம்மை ஏமாற்றும் நடவடிக்கையென பொதுமக்கள் கொந்தளித்தனர்.இதேவேளை இதற்கு முன்னதாக, அமைச்சர் தயா கமகே இந்த பிரதேசத்திற்கு வந்து, தமிழர்களிற்கு எதிராக போராட்டம் நடத்தும் முஸ்லிம்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இது கல்முனை தமிழ்மக்களை கொதிப்படைய வைத்திருந்தது.

நியாயமான கோரிக்கையுடன் போராட்டம் நடத்தும் தம்மை வந்து சந்திக்காமல் எதற்கு, நியாயமற்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்துபவர்களை சந்திக்கிறீர்கள் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பிரமுகர்கள் வெளியேறி முற்பட்டபோது, பொதுமக்கள் பிரமுகர்களை சுற்றிவளைத்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு வலுவடைந்து தள்ளுமுள்ளுவரை சென்றது. பிரமுகர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்ததால், அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலைமையேற்ப்பட்டது.

எம்.ஏ.சுமந்திரன் மீது அங்கிருந்தவர்கள் தாக்க முற்பட்டனர். அவரது உதவியாளர்கள் அவரை சூழ்ந்து பாதுகாப்பளித்தனர். சுமந்திரன் மீதான தாக்குதல்கள் அவரது உதவியாளர்கள் தாங்கிக்கொண்டனர்.

பிரமுகர்கள் மீது கையில் கிடைத்தவற்றை குழுவினர் எறிந்தனர். செருப்புக்களும் வீசப்பட்டன.

அந்த பகுதியே பெரும் அல்லோலகல்லோப்பட்டது. இறுதியில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் தலையிட்டு, பிரமுகர்களை பாதுகாப்பாக மக்களிடமிருந்து மீட்டெடுத்தனர்.

பிரமுகர்கள் வெளியேறும்போதும் மீண்டும் பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டு, எல்லைமீறி நடக்க முற்பட்டனர். எனினும், பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவினர் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

 

வீரமுனை ஒரு முழு அழிப்பு வடிவம் – 1945 இல் முஸ்லீம் குண்டர்கள் மூட்டிய தீ

வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.

1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர்.

1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிடவேண்டுமென்ற திடமானமுடிவுடன் செயற்பட்டனர். 1990 ம் ஆண்டு ஆனி மாதமும் ஆடி மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. ஆனிமாதம் 20ம் திகதி வீரமுனைஇ வளத்தாப்பிட்டிய வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. கொண்ட வெட்டுவான் இராணுவமுகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்துவந்த முஸ்லீம் காடையர்களும் மக்களெல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர்.

ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர். ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். மரணக் குழிநோக்கி அவர்கள் தள்ளி கொல்லப்பட்டாரகள்;. கட்டிய மனைவிமாரும்இ பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்து கும்பிட்டார்கள். தாலிப்பிச்சைக் கேட்டு காலடியில் விழுந்தார்கள். கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும் வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது.

சம்மாநதுறை மலைக்காட்டிற்குள் தீ பற்றி எரிந்தது. முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினை சுற்றிநின்ற முஸ்லீம் காடையர் கைதட்டி மகிழ்ந்தார்கள். எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்களுறவுகளுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. காலையில் கைதுசெய்து சென்றவர்களை சுட்டுப்பொசுக்கியபோதும் இராணுவத்தினரின் கொலைப்பசி மாறவில்லை. ஒரு வாரம் கூட மறையவில்லை. 29ம் திகதி மீண்டும் கைது. எச்சஞ்சொச்சமாயிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறுபேரை துப்பாக்கிமுனையில் தள்ளிச்சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவி;ற்குத் தப்பியோடினார்கள். காரைத் தீவுப் பாடசாலை அகதிமுகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதியாக்கப்பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பறவாயில்லை. அகதிமுகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள்.

தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக்கூடமாக்கப்பட்டது. ஆட்டுப்பண்ணைகளில் இறச்சிக்குத் தெரிவகிய கிடாப்போல அகதிமுகாமில் வைத்துக் கொலை செய்வதற்குரிய ஆண்களை தெரிந்தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசையினைக் காட்டினார்கள். ஒரு மாதங்கூட மறையவில்லை ஆடிமாதம் 4ம் திகதி காரைதீவு அகதிமுகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல்த் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிருநாள் கழி;த்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. “உங்கட ஆக்கள நாங்க கொண்டு வரல்ல ஆக்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க”.

பாடசாலையிலிருந்த அகதிமுகாமுக்குள் மீண்டும் 10ம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவி;ட்டு எரித்தார்கள். வீரமுனைக்கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக்கொன்றொழித்து விடுவதென்று சிங்களப்படையினர் முடிவெடுத்து விட்டனர்.

1990ம் ஆண்டு ஆடிமாதம் கணவன்மாரைப் பறி கொடுத்த துயரோடு காரைதீவு அகதிமுகாமிலிருந்து தமது கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப்பறிகொடுக்கக் கூடாதென்று காரைதீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைதீவில் பறிகொடுத்துவிட்டதால் இனிமேல் எது நடந்தால் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள். வரும் வழியில் மல்வத்தை இராணுவ முகாமிலிருந்த இ.ராணுவத்தினர் தமது கொலைப்பசியையும் தீர்க்க விரும்பினர். நடந்துவந்தவர்களில் எட்டுப்பேரைப் பிடித்திழுத்துச் சென்றனர். பசிதீரும் வரை மாறி மாறி குதறினார்கள். கடைசி மூச்சு அடங்கும் வரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். பிணமாகிப்போனதும் கிண்டிப் புதைத்தார்கள்.

26ம் திகதி கொண்ட வெட்டுவான் படை முகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை வீரமுனை கலைதிபுரம் புதுநகர் கிராமங்களிலிருந்து எட்டுப்பேரை கைது செய்து சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதையில்லை மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர் கிராமசேவகர்களுக்கு அனுமதி வழங்கிய போதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது.

ஆனி மாதம் ஆரம்பித்த இன அழிப்பு ஆடி மாதமும் தொடர்ந்து. ஆவணிமாதத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆவணி மாதம் 8ம் திகதி சிங்களப் படையினருடன் இனைந்து வந்த சிங்கள ஊர்காவட்படையினரும் முஸ்லீம் ஊர்காவட்படையினரும எங்களாளும் தமிழர்களை கொள்ள முடியுமென்பதை காட்டினார்கள். ஓடி ஒழிந்து வாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள். வீரமுனையிலோ வளத்தாப்பிட்டியிலோ அல்லது மல்வத்தையிலோ இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள் மண்டூருக்குச் சென்று வாழவிரும்பி கையில்த்தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள். 11ம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக்கொன்றார்கள். தப்பி ஓடிய மக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர். சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் தாங்களும் சலைத்தவர்களல்ல என்பதைக் காட்டினார்கள்.

புதைகுழிகளைத் தோண்டட்டும். அதற்கு பின்னர் சிறு வயதில் நாங்கள் ஆயுதம் தூக்க வேண்டிவந்ததற்கான தீர்ப்பை சட்டப் புத்தகத்தில் தேடட்டும். என அந்த போராளி நீதிக்கான போரின் பக்கமொன்றை புரட்டி வைத்தான்.

அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையிiர் விட்டு வைக்கவில்லை 12ம் திகதியே இக்கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லீம் காடையர்களும் துணைக்கு வந்தனர். வீடுகள் தீயிடபட்டன. சொத்துக்கள் சுறையாடப்டன எரியும் நெருப்பில் உயிருடனேயே எமது உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் துப்பாக்கிசுட்டுக்;கு இலக்காகினர். இருபத்தைந்துபேர் இக் கொடிய கொலைவலைக்குள் சிக்கி மடிந்தனர்.

காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முப்பதுபேரைக் கூட இராணுவத்தினர் விடவில்லை. வைத்தியசாலையை 12ம் திகதி சுற்றிவலைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர். நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்துமுடிந்த வீரமுனைக் கிராமமக்களின் துயரக்கதைக்கு நீதி யார் தருவரு? ஓடி ஓடி தப்பிகொண்ட பதினைந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் தர்மயுத்தத்திற்காய் களம்புகுந்தனர். களத்தில் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவப்போராளி கிருஸ்ணபிள்ளை நித்தியானந்தன் தன் மனதில் உறைந்துகிடந்த பிறந்த மண்ணின் கறைபடிந்த நாட்களை பகிர்ந்து கொண்டார். “இளம் வயதில் நாங்கள் ஏன் துப்பாக்கி ஏந்தினோம் என்பது மனித உரிமை அமைப்புகளுக்கு விளங்காது. விளக்கவும் முடியாது. அவர்களுக்கு தெரிவது சிங்களவர் உயிரே ஒழிய தமிழர் உயிர்களல்ல. இவர்கள் முதலில் இந்தக் கொலைகளை ஆராயட்டும் பதினொரு ஆண்டுகளாய் போர்க்களம் கண்டு நிற்கும் அந்த இளைஞனிடம் தனது கிராமத்தை மீற்கமுடியுமென்ற நம்பிக்கை பிரகாசமாய்த் தெரிந்தது.

நன்றி – மணலாறு

இந்திய வதைமுகாமில் ஈழத்தமிழர் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டம்.

இந்தியாவின் தமிழ்நாடு திருச்சியில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ‘சிறப்பு அகதிகள் முகாமில்’ தடுத்துவைக்கப்பட்டுள்ள மூன்று ஈழத்தமிழர்கள் தங்கள் விடுதலையினை வலியுறுத்தி தொடரான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த குறிப்பிட்ட ஈழத்தமிழ் இளைஞர்கள் எதுவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தமிழக பொலீசார் மற்றும் கியூபிரிவு பொலீசாரல் கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதுவும் இதுவரை எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் இவர்கள் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுட்டுள்ளார்கள். 19.06.19 அன்று மூன்றாவது நாளாகவும் இவர்களின் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

ஆனால் எந்த அதிகாரிகளும் இவர்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ள வில்லை என்பது போராட்டகாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த வழக்கும், விசாரணையும் இல்லாமல் அடைத்துவைத்துள்ள தங்களை விடுவிக்க வேண்டும் அல்லது கருணைக்கொலை செய்ய வேண்டுமென,
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, இலங்கை தமிழர் பாஸ்கரன், திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

இந்தியா செல்ல முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கூட்டமைப்பினர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புதுடில்லி செல்வதற்கு முன்னதாக இனப்பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றில் விவாதம் நடத்தக் கோருவதற்குத் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றில் நேற்று கூட இருந்த பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானத்தை முன்வைக்க இருப்பதாகவும் திரு சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டுவதற்கு விடுதலைப் புலிகள் தடையாக உள்ளதாக அரச தரப்பினர் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று விடுதலைப் புலிகள் இல்லாது போய் பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இன்னமும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.

இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போதும் இது பற்றி கலந்துரையாடவுள்ளோம் என்றும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

கூட்டத்தில் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம், க.கோடீஸ்வரன் தவிர்ந்த ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சமுகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே தற்போது அரசாங்கத்துக்கு நாம் ஆதரவளித்து வருகின்றோம் – சீ.யோகேஸ்வரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்தப்படாவிட்டால் தமிழ்தேசியகூட்டமைப்பு அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்வோம்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே தற்போது அரசாங்கத்துக்கு நாம் ஆதரவளித்து வருகின்றோம். எமது மக்களை இனியும் நாம் சமாதானப்படுத்த முடியாது. எனவேதான் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவிடக்கூடாதென்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் எம்.பி.யான ஹரிஷுமே மிகத்தீவிரமாகவுள்ளனர். இவர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை அரசு உதாசீனம் செய்கின்றது. இந்த அரசையும் ஜனாதிபதியையும் பிரதமரையும் கொண்டு வந்தவர்கள் நாங்கள். அந்த நன்றிக்கடன் உங்களுக்கு இருக்கின்றதா எனக்கேட்க விரும்பு கின்றோம்.
இந்நிலைமை ஏற்படக்கூடாதெனில் அங்கு தற்போது நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த நிகழ்வு

அக்கினிப் பறவைகள் – புதிய தலைமுறை எனும் அமைப்பினரால் வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வரும் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த இவ்வாண்டிற்கான நிகழ்வின் உறுதிப்படுத்தப்பட்ட அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது.

எமக்காக உருவாக்கப்பட்டிருக்கும் உறுதியான பாதையில் நிலையாக நிற்கும் எம்முடன் கைகோர்த்து இணைந்து நிற்க வாரீர்.

வெல்வது உறுதி.

இங்ஙனம்,
அக்கினிப் பறவைகள் அமைப்பு

”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions Since World War II)

இந்நூல் 470 பக்கங்களையும் 56 அத்தியாயங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாட்டில் ஐ-அமெரிக்க இராணுவமும் சிஐஏயும் செய்த தலையீடுகளை விபரிக்கின்றது. இவ்விடயத்தைப்பற்றிய மிகச்சிறந்த நூல் இதுவென்று நோம் சொம்ஸ்கி சொல்லியிருக்கிறார்.

ஆசிரியர் இந்நூலில் சொல்பவற்றிற்கான ஆதாரங்களையும் உசாத்துணையாக சேர்த்திருக்கிறார். 2003இல் வெளியிடப்பட்ட இந்நூலில் 1994 வரையான சம்பவங்கள் விபரிக்கப்படுகிறது. அக்காலத்திற்குப் பின்னர் ஆப்பானிஸ்தானிலும் இராக்கிலும் லிபியாவிலும் இடம்பெற்றவைகளையும் இன்னும் பலவற்றையும் இதில் நிச்சயமாக சேர்க்கலாம். இந்நூலிலுள்ள சில அத்தியாயங்களின் சுருக்கம் ஐந்து பகுதிகளாக தொடரும்.

பூகோளத்தை, அதாவது இன்றைய பூகோள அரசியலை, அறிவதற்கு இரு பிரிவினர் பற்றி நாம் தெரிந்திருக்க வேணும். ஒன்று உலகெங்கும் போராடும் மக்கள் பற்றியது. மற்றையது வல்லாதிக்க சக்திகளின் நடவடிக்கைகள் பற்றியது. இவையிரண்டுமே நாம் வழமையாக தகவல்கள் தேடும் இடங்களில், ஊடகங்களானாலும் சரி கல்வி நிறுவனங்களானாலும் சரி, கிடைப்பதில்லை. கிடைத்தாலும் திரிபு செய்யப்பட்டே கிடைக்கின்றன.

காரணம் இத்தகவல்கள் கிடைக்கும் இடங்கள் வல்லாதிக்க சக்திகளின் ஆளுமையிலேயே இயங்குகின்றன. ஒரு தேடலினூடாவே உண்மையை அறிய வேணடியுள்ளது. மேலும், அருமையாக கிடைக்கும் இவ்வாறான உண்மை தகவல்கள் தமிழ் மொழியில் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. தேடலினூடாகவும் கூட இவற்றை தமிழ் மொழியில் பெற்றுக் கொள்வது சிரமம். தமிழருக்கு முக்கியமாக தெரிய வேண்டிய வல்லாதிக்க சக்திகள் என்றால் அவை ஐ-அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, இவற்றின் சக்திக்கு இன்று கீழ்படியும் ஐநாவும்.ff ”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” - தமிழில் ந. மாலதி

ஐ-அமெரிக்கா தனது பேரசை தக்க வைக்க மற்றைய நாடுகளின் விவாகாரங்களில் பல வகையான மோசமான தலையீடுகள் செய்வதை ஐ-அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாட்டு மக்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஐ-அமெரிக்காவின் நடவடிக்கைகளின் மோசடியை இம்மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்காளா என்பது கேள்விக்குறியே. இம்மக்கள் இதை முழுமையாக உள்வாங்கி அதனடிப்படையில் தமது அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதிலிருந்து இதை ஊகிக்கலாம்.

ஐ-அமெரிக்காவின் மோசடியை முழுமையாக அறியாமல் இருப்பது மட்டும் தான் இதற்கு காரணமல்ல. ஐ-அமெரிக்காவின் நடவடிக்கைகளை வெளிக்கொணருவது தனிப்பட்டரீதியில் ஒருவருக்கு தீமை தரும் என்ற பயமும் அதில் உண்மை இருப்பதுவும் இன்னுமொரு காரணம்.

ஐ-அமெரிக்க தலையீடுகளின் நீண்ட வரலாறு – பாகம்-1

சீனா 1945-1960: மாவோ உளக்கோளாறு உடையவரா?

இவ்வத்தியாயம், மாவோவின் தலைமையிலான சீனப் கம்யூனிசப் புரட்சிக் காலத்தில் ஐ-அமெரிக்காவின் இராணுவ தலையீடுகளை விபரிக்கிறது”மாவோ உளக்கோளாறு உள்ளவர் என்று தொடர் பரப்புரை செய்த ஐ-அமெரிக்கா அவருடைய புரட்சியை அழிப்பதற்காக சியங்-காய்-சேக் என்பவரை தனது அடியாளாக வைத்திருந்தது.

 கம்யூனிஸ்டுகளுடன் போரிடுவதற்கு இவருக்கும் இவரது ஆட்களுக்கும் ஐ-அமெரிக்கா பெரும்தொகையான உதவிகளைச் செய்தது.”. ஏழைச் சீன மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் ஆதரவு வழங்கினார்கள். தமது தரப்புக்கு தோல்வி வருவதை அறிந்து கொண்ட ஐ-அமெரிக்கா சியாங்கையும் அவனது ஆட்களையும் தாய்வானுக்கு விமானத்தில் ஏற்றி இறக்கினார்கள். இதற்கு முதல் தாய்வானை இதற்காக ஆயத்தம் செய்வதற்கு அங்கிருந்த 28,000 மக்களை கொலை செய்தார்கள். பிற்காலத்தில் கொரியா போரின் போது ஐ-அமெரிக்கா சீனாவின் மேல் கிருமிகளை பரப்பினார்கள். ஆசிரியரின் ஒரு பந்தி,

”1952 ஜளவரியிலிருந்து மார்ச் வரை சீனாவின் வட-கிழக்கு பகுதியிலும் கொரியா மேலும் ஐ-அமெரிக்கா கிருமிகளையும் கிருமிகள் காவிய பூச்சிகளையும் பெரும் தொகையாக விமானத்திலிருந்து போட்டார்கள் என்ற செய்தியை சீனா பெருமுயற்சி எடுத்து பரப்பியது. இதற்கான சாட்சியாக அவ்விமானங்களை ஓட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட 38 கைப்பற்றப்பட்ட விமானிகளின் வாக்குமூலங்களை காட்டியது.

இவ்விமானிகள் இந்நடவடிக்கை பற்றி மிக ஆழமான தொகையான விபரங்களை சொன்னார்கள். அதாவது எம்மாதியான குண்டுகள், பூச்சிகள், கிருமிகள் போடப்பட்டன என்றெல்லாம் சொன்னார்கள். அதே நேரத்தில் இக்கிருமிக் குண்டுகளினதும் அதிலிருந்த பூச்சிகளதும் படங்களும் வெளியிடப்பட்டன. ஆகஸ்ட் மாதத்தில், சுவீடன், பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி, பிரேசில், சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் கொண்ட ஒரு சர்வதேச விஞ்ஞான குழுஅமர்த்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாக சீனாவில் ஆய்வுகள் நடத்திய பின்னர் இக்குழு பல படங்களுடன் 600 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அவர்களின் முடிவு: 

 கொரியா, சீனா நாட்டு மக்கள் ஒரு கிருமி போராயுதத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.  இவை ஐ-அமெரிக்காவின் படைகளால் செய்யப்பட்டன. இதற்கு பல விதமான முறைகள் கையாளப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில ஜப்பானியர்கள் இரண்டாம் உலக போரின் போது உருவாக்கியவை போலத் தெரிகிறது.Americans using biowarfare newspaper headline ”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” - தமிழில் ந. மாலதி

மேலே இறுதியாக சொல்லப்படுவது ஜப்பானியர்கள் சீனாவின் மேல் 1940 இலிருந்து 1942 வரை தொடுத்த கிருமிப்போரை குறிப்பிடுகிறது. இதற்கு பொறுப்பாக இருந்த ஜப்பானிய விஞ்ஞானிகளை ஐ-அமெரிக்கா 1945 இல் கைது செய்தது. இவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிப்பட்டு பதிலுக்கு கிருமிபோர் பற்றிய தொழில்நுட்பத்தை ஐ-அமெரிக்கப் படைதுறை ஆய்வு மையத்திலுள்ள விஞ்ஞானிகளிடம் கொடுக்கும்படி கேட்கப்பட்டது. சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வுக்காலத்தில் இது சீனாவுக்கு தெரிந்திருந்தது.

வாக்குமூலம் கொடுத்த ஐ-அமெரிக்க விமானிகள் சீனாவால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் பிளம் குறிப்பிடுகிறார். அத்துடன் பிடல் கஸ்ரவின் கியூபா உட்பட வேறுபல இடங்களில் ஐ-அமெரிக்கா இராசாயன போர் தொடுத்தது பற்றியும் இங்கே பிளம் குறிப்பிடுகிறார்.

பாகம் 2 தொடரும் …

 

மகாவலி திட்டத்தால் கிழக்கில் சிங்களவர் தொகை 41 மடங்கால் அதிகரிப்பு – விக்கி

மகாவலி திட்டத்தால் வடக்கும் கிழக்கும் மிக விரைவில் துண்டாடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களின் வாராந்த கேள்விக்கு பதிலளித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மகாவலி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்ற நடவடிக்கைகள், வடக்கில் தமிழ் மக்களின் குடிசன பரம்பலில் செயற்கையான மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனால் மிக விரைவில் வடக்கும் கிழக்கும் துண்டாடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பிரதான கட்சிகளுமே தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் செயற்பாடுகளில் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு வந்திருக்கின்றமை வரலாறு என சி.வி.விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றில் ஒரு கட்சி மலைப்பாம்பு என்றால் மற்றைய கட்சி விஷப்பாம்பு என்பதே யதார்த்தம் எனவும், ஒன்று விழுங்கும் மற்றையது நின்று கொல்லும் எனவும் எடுத்துக்காட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களில் மகாவலி திட்டம் மூலம் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஏனைய பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் நில அபகரிப்பும், சிங்கள குடியேற்றத் திட்டங்களும் முனைப்படைந்து வந்திருப்பதாக சி.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

அத்துடன், வன இலாகா திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் நில அபகரிப்புகளுக்கும் துணைபோகும் வகையில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருவதோடு, பொதுமக்களின் காணிகளை அபகரித்து அவற்றில் இராணுவம் வியாபாரம் மற்றும் விவசாயத்தில் ஈடுபடுவது தொடர்ந்தும் நடைபெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடல் பிரதேசங்களில் கடற்படையினரின் ஆக்கிரமிப்புகள் இடம்பெறுவதால், உள்ளூர் மீனவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒரு பௌத்தர் கூட நிரந்தரமாக வாழாத வட்டுவாகலில் பழம்பெரும் ஆலயமான சப்த கன்னிமார் ஆலய வளாகத்தை இராணுவம் இன்று அபகரித்து பௌத்த விகாரை ஒன்றை அமைத்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய தமிழ் மாவட்டங்களை நில ரீதியாக இணைக்கும் மணலாறு மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்ற திட்டங்கள் மூலம் மிக விரைவில் வடக்கு கிழக்கு தாயகக் கோட்பாடு உடைத்தெறியப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாவலி திட்டத்தின் ஊடாக, வடக்கு கிழக்கிற்கு நீர் தரப்போவதாக ஆசைகாட்டி ஒரு சொட்டு மகாவலி நீரையும் இதுவரை தராமலே காணிகள் கபளீகரம் செய்யப்படுவதாக சி.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

மறைந்த பொருளியலாளர் வரதராஜன் மேற்கொண்ட ஆய்வின்படி, 1901 – 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான கிழக்கு மாகாண சனத்தொகை மதிப்பீட்டை ஆய்வு செய்கின்ற போது, அதன் மொத்த சனத்தொகை 6 மடங்காக அதிகரித்துள்ளது என்றும், ஒப்பீட்டளவில் சிங்கள மக்களின் சனத்தொகை 41 மடங்கினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1901 ஆம் ஆண்டு 55. 8 வீதமாக இருந்த தமிழ் மக்களின் சனத்தொகை 2012 ஆம் ஆண்டு 39.7 வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தலைவிரித்தாடும் மண்பறிப்பு நடவடிக்கைகள்- நாடாளுமன்றில் சாந்தி

யுத்த காலத்தில் கள்ளத்தனமாக ,கபடத்தனமாக வெளியிடப்படட வர்த்தமானிகள் மூலம் எங்கள் மக்களுக்குச் சொந்தமான 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடக்கு, கிழக்கில் தலைவிரித்தாடும் காணிகள் கையகப்படுத்தலினால், தமிழ் மக்களின் படுக்கை அறைகளில்கூட எமது நிலம் என எல்லைக்கல்லை வைக்குமளவுக்கு நிலை உள்ளது என்றார்.

தூங்கும் நிலைக்குச் சென்றுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும்.  கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு இனம்,மதம் கடந்து உண்ணாவிரத போராட்டம் நடக்கின்றது. இந்நிலையில், மக்களிடையே வக்கிரத்தன்மையையும் மோதல்களையும் ஏற்படுத்துகின்ற வகையில் செயல்படுவதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காணி மீட்டல் என்பது யாரிடமிருந்து யார் காணியை மீட்பது என்ற கேள்வியை வடக்கு, கிழக்கு பகுதியை மையமாகக்கொண்டு கேட்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்த அவர், அங்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பல்வேறு விதமான அதிகார சபைகளால், திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காணிகளை மீட்டல் தொடர்பான ஒரு விவாதத்தை இங்கு முன்வைக்கவேண்டியுள்ளது என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு காணி மீட்டல். இது சர்வதேச புகழ் பெற்ற ஒரு போராட்டமாக பரிணமித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக, அந்தக்காணிகளுக்கு உரிய ஆவணங்களை மக்கள் வைத்துக்கொண்டு இராணுவத்திடம் இருந்துதமது காணிகளை மீட்க போராடி வருகின்றனர். இந்தக்காணி மீட்டல் இதற்கு பொறுப்பானதாக அமைய வேண்டும். இது தொடர்பில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்​கொண்டார்.

“மகாவலி ‘எல்’ வலய அபிவிருத்தி என்ற போர்வையில் யுத்த காலத்தில் கள்ளத்தனமாக ,கபடத்தனமாக வெளியிடப்படட வர்த்தமானிகள் மூலம் எங்கள் மக்களுக்கு சொந்தமான 1000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிககள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காணிகளை ,விளைநிலங்களை,மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை கையகப்படுத்தி மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகளை மீட்டெடுக்க வேண்டிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது” என்றார்.

வடக்கில், குளங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஆனால் அந்தக் குளங்களுக்கு கீழ் நீர் பாசனம் செய்ய வேண்டிய காணிகள் வனவளத்திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் எமது மக்கள் எவ்வாறு விவசாயத்தில் முன்னேறுவது? என கேள்வியெழுப்பிய அவர், கால் நடை வளர்ப்பு என்பது இந்த யுத்தத்தின் பின்னர் அங்கு சிறந்த வருமானம் தரும் தொழிலாக இருந்தாலும் அந்தக்கால்நடைகளை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு மேச்சல் தரைகளை ஒதுக்குமாறு நாம் கேட்கின்றபோது அந்த மேச்சல் தரைகள் கூட கையகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தனையும் மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஆக்கிரமிப்புகளிலிருந்து தமது காணிகளை மீட்டெடுக்க வேண்டிய நிலையிலேயே வடக்கு,கிழக்கு மக்கள் இன்றுள்ளனர் என்றார்.

முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் பெண்ணொருவர், 10 பெண்களை வைத்து ஒரு தையல் கடையை நடத்தி வருகின்றார். அவர், நாலடி நிலத்தை தன்னுடைய தையல் தொழிலகத்தை கொஞ்சம் பெரிதாக அமைப்பதற்காக ஒரு கொட்டகையை அமைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்கவில்லை. ஆனால் 1000 ஏக்கர்களுக்கு மேல் எவ்வாறு இந்த மக்களுக்கு சொந்தமான காணிகள் கையகப்படுத்தப்பட்டது என்பது கேள்விக்குரிய விடயம் என்றார்.    “முல்லைத்தீவு செம்மலை நீராவிப்பிள்ளையார் கோவில் பிணக்கு. பல அமைச்சர்கள் வருகின்றீர்கள். பல ராஜதந்திரிகள் அங்கு வருகின்றீர்கள் இந்தக் கோவில் பரம்பரையாக தமிழ் மக்களாலேயே வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வரும் பிள்ளையார் கோவில். இந்தக்கோவிலில் அந்த மக்களை அபிவிருத்தி வேலைகளை செய்ய விடாது இந்தக்கோவிலின் அருகாமையில் ஒரு பௌத்த சிங்களக் குடும்பம் கூட இல்லாத நிலையில் அங்கு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது .இந்த புத்தர் சிலை அமைக்கப்படும்போதே நாங்கள் எத்தனையோ தடவைகள் ஜனாதிபதி,பிரதமர் மட்டங்களில் கூட இது ஒரு பொருத்தமற்ற வேலை, இது இன,மத முரண்பாட்டை தோற்றுவிக்குமென நாம் முறைப்பாடு செய்திருந்தோம். ாவற்றையும் மீறி அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது” என்றார்.