Home Blog Page 2705

காஸ்மீரில் இந்தியாவின் அத்துமீறல் குறித்து பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் விளக்கம்

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல்  கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ் மத் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து  ஜம்மு மற்றும் காஷ் மீரில் இடம்பெற்றுவரும் அசா தாரண நிலைமை குறித்து  விளக்க மளித்தார்.

இச்சந்திப்பின் பொழுது உயர்ஸ்தானிகர் சர்வதேச ரீதியாக பிரச்சினைக்குரிய பிரதேசமாக அறியப்பட்ட ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு மாநில அந்தஸ்தினை மாற்றுவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின்  தீர்மானங்களுக்கு எதிரானதாகும் எனவும்  சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள் தொகையினை மாற்றியமைக்க இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சர்வதேச சட்டத்தினை மீறுவதாகும் எனவும் விளக்கமளித்தார்.

ஏழு தசாப்தங்கள் பழைமையான இப்பிரச்சினைக்கு அமைதியான முறையிலும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கேற்பவும் தீர்வினை மேற்கொள்ளுமாறு இந்திய அரசாங்கத்தினை பலதடவைகள் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாத எதிர்ப்புக்கென ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் வழங்குகிறது.

தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், சமாதானத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கென ஒதுக்கீடு செய்திருக்கிறது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் தொடர்பில் கிரமமாக ஒதுக்கப்படும் நிதியிலேயே இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோ, அதாவது சுமார் 1.7 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டிற்குள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதன் ஊடாக அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் இந்நிதியுதவியின் மூலம் பங்களிப்பு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணைக்குழுவின் உபதலைவருமான பெடெரிகா மொகெரினி பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும், ஒழிப்பதற்கும் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவை வழங்கும் என்று குறிப்பிட்டிருந்த நிலையிலேயே தற்போது இந் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…

கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும்  லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற் கண்டவாறு கூறியுள்ளார் இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது.

ஆனால் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

Kilinoch 2 கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…இதேபோன்று பருத்திதுறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம். மேலும் பூநகரி  பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மடு திருவிழா இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடினர்

மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத பெருந்திருவிழா 15.08 அன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், பதுளை  மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குரிய வின்சன் பெர்னான்டோ ஆண்டகை பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை தலைமையில்  அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி, குருநாகல் மறைமாவட்ட ஆயர் பெரல்ட் அன்ரனி பெரேரா ஆகியோர் இணைந்து திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சொருப பவனியும், ஆசியும் இடம்பெற்றது. இதில் நூற்றுக் கணக்கான குருமுதல்வர்கள் கலந்து கொண்டனர்.

இத்திருவிழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 

சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்குள் நுழைந்த அழையா விருந்தாளி

கொழும்பு  டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சந்திப்பொன்று நிகழ்ந்த போது திடீரென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு பிரவேசித்தார். இதனால் கட்சி அங்கத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மைத்திரி ஆச்சரியத்திற்குள்ளானார்.

அண்மைக்காலமாக மகிந்தவுடன் நல்லுறவை பேணி வரும் சந்திரிகாவுடன் மைத்திரி சற்று விலகியிருந்தார். ஆனால் மகிந்த கோத்தபயாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததையடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, கோத்தபயாவை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தும் வந்திருந்தார்.

வடக்கு புகையிரத நிலையங்கள் அனைத்தும் சூரிய சக்தியில் இயங்கும்

வடக்கு புகையிரத பாதையிலுள்ள புகையிரத நிலையங்கள் அனைத்தும் இந்த வாரத்திலிருந்து சூரிய சக்தியில் இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலாந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக வடபகுதி புகையிரத நிலைய கூரைகளில் இலங்கை மின்சார சபையின் மூலம் சூரிய மின்சக்திக்கான தகடுகள் பொருத்தப்படும். அத்துடன் குறித்த நிலையங்களின் மின்சார கட்டணத்தை இலங்கை மின்சார சபை எட்டு வருடங்களுக்கு செலுத்தும் என்றும் முகாமையாளர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டிலுள்ள ஏனைய புகையிரத மார்க்கங்களையும் சூரிய மின்சக்தியில் இயங்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்கள முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

ஈரானிய எண்ணெய்க் கப்பலை விடுவித்தது பிரித்தானிய நீதிமன்றம்

பிரித்தானியப்படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈரானிய எண்ணெய்க் கப்பலை தொடர்ந்து பயணிக்க பிரித்தானிய ஜிப்ரால்டரின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கப்பலை தொடர்ந்து தடுத்துவைக்க அமெரிக்கா கடைசி நிமிடத்தில் விண்ணப்பம் செய்த சில மணி நேரங்களிலேயே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை மீறி ஈரானிய மசகு எண்ணெயை சிரியாவிற்கு கொண்டு செல்வதாக சந்தேகத்தின் பேரில் கிரேஸ் 1 கப்பலை பிரிட்டிஷ் ராயல் மரைன்கள் ஜிப்ரால்டர் கடற்கரையில் ஜூலை 4 அன்று கைப்பற்றினர்.

ஈரான் இந்த குற்றச்சாட்டை மறுத்து, கைப்பற்றலை “கடற் கொள்ளை ” என்று கூறியது.

நாளை ஐ.நா வில் காஸ்மீர் விவகாரம் சீனா,ரசியா பாகிஸ்தானுக்கு ஆதரவு

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக  ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஐ.நாவின் உதவியை பாகிஸ்தான் நாடி இருந்தது.ஐ.நாவின் உதவியை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டும்படி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடிதம் எழுதி இருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று நாளை இந்த கூட்டம் கூட உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா காஷ்மீரில் நிலவும் மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளும் விவாதிக்கப்பட உள்ளன. இது அரசு நடவடிக்கைகளில் பாகிஸ்தானுக்கு முதல்கட்டமாக கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு ரஷியாவும் சீனாவும் ஆதரவு தெரிவிக்கின்றன. நாளை நடக்கும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைவர் ஜோனா தலைமை இயக்க உள்ளார். இதனிடையே இந்தியாவின் பொறுப்பற்ற செயலால் கட்டுப்படுத்த இயலாத விளைவுகளை இந்தியா சந்திக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.

சோளம் வயலில் விமானத்தை இறக்கி 226 பயணிகள் உயிர்காத்த ரசிய விமானிகள்

ரஷ்யா தலைகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் என்ஜீன்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள காட்டில் தரையிறக்கி 226 உயிர்களை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு 226 பயணிகளுடன் யுரல் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 321 விமானம் புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை மோதியது.

இதனால் இரண்டு என்ஜீன்களும் பழுதானது. அத்துடன் லேண்டிங் கியரும் வேலை செய்யவில்லை. இதனால், விமானத்தை உடனடியாக, மாஸ்கோ புறநகரில் உள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் விமானி தரையிறக்கினார். இதில், 23 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 226 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில்; விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தில் இருந்த விளக்குகள் அணைந்து அணைந்து எரிய துவங்கின. கருகும் வாசனை வந்தது. விமானம் தரையிறங்கிய உடன் அனைவரும் ஓடிவந்துவிட்டனர் என கூறியுள்ளனர்.

கூட்டமைப்பு பேரம் பேசாமல் ஆதரிக்கக் கூடாது! சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த பேரமும் பேசாமல், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினால், நிச்சயமாக பொதுத்தேர்தலில் தமிழர்கள் கூட்டமைப்பை நிராகரிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அமைச்சர் சஜித் பிரேமதாசவோதான் கள மிறங்கவுள்ளனர். இவர்களைத்தான் கூட்டமைப்பினர் ஆதரிக்க போகி ன்றனர். ஏற்கனவே அவர்களுக்கு ஆதரவு வழங்கி மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். எனவே, கடந்த தேர்தலைப் போன்று தனிப்பட்ட நலனுக்காக கூட்டமைப்பினர் பேரம் பேசினால், நிச்சயமாக பொதுத் தேர்தலில் தமிழர்கள் கூட்டமைப்பை நிராகரிப்பார்கள்.

எனவே ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை கூட்டமைப் பினர் ஆதரிப்பார்களாகவிருந்தால், தமிழ் மக்களின் நிரந்தரமான அரசியல் தீர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளரிடம் மட்டுமன்றி சர்வதேச இராஜதந்திரிகளிடமும் உறுதி மொழியைப் பெற்றே ஆதரவளிக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.