வடக்கு புகையிரத நிலையங்கள் அனைத்தும் சூரிய சக்தியில் இயங்கும்

வடக்கு புகையிரத பாதையிலுள்ள புகையிரத நிலையங்கள் அனைத்தும் இந்த வாரத்திலிருந்து சூரிய சக்தியில் இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலாந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக வடபகுதி புகையிரத நிலைய கூரைகளில் இலங்கை மின்சார சபையின் மூலம் சூரிய மின்சக்திக்கான தகடுகள் பொருத்தப்படும். அத்துடன் குறித்த நிலையங்களின் மின்சார கட்டணத்தை இலங்கை மின்சார சபை எட்டு வருடங்களுக்கு செலுத்தும் என்றும் முகாமையாளர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டிலுள்ள ஏனைய புகையிரத மார்க்கங்களையும் சூரிய மின்சக்தியில் இயங்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்கள முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.