Home Blog Page 2704

கோத்தாவுக்கு வாக்களிக்கக் கூடாது சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த ஒரு தமிழனும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு தெரிந்த வரையில், சுயமாக சிந்திக்கும் எந்த ஒரு தமிழனும் கோட்டாவிற்கு வாக்களிக்க மாட்டான். வாக்களிக்கக்கூடாது. தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களில் அவரும் ஒருவர். இறுதி நேரத்தில் ஆயுதங்கள் எல்லாவற்றையும் விட்டு வெள்ளைக்கொடியுடன் போகும்போது அவர்கள் எல்லோரையும் கொன்று குவிக்குமாறு ஆணை வழங்கப்பட்டது.

இந்த ஆணை வேறு எவராலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அதற்கு பொறுப்பாக இருந்தவர்தான் செய்திருக்க வேண்டும். இவ்வாறு மக்களை ஜீவகாருண்யமற்ற வகையில் கொன்று குவித்தவருக்கு வாக்களிக்க முடியாது. அதைவிட வெள்ளை வான். தமிழ் மக்கள் எந்தக் காலத்திலும் அவருக்கு வாக்களிக்கக்கூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் மந்திரிமனை காணியை உரிமை கோரும் சிங்கள இனத்தவர்

மன்னராட்சிக் காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மந்திரிமனை அமைந்துள்ள காணி தனக்குச் சொந்தமானது என பெரும்பானமை இனத்தவர் ஒருவர் உரிமை கோருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் டச்சுக் காலத்தல் உரிமைப் பத்திரமாகப் பயன்படுத்தப்பட்ட ஓலைச் சுவடியை ஆதாரமாக வைத்து அந்தக் காணியை உரிமை கோரியுள்ளார். அதனை யாழ். மாவட்ட அலுவலகத்தில் குறித்த ஓலைச் சுவடியைக் காட்டி உரிமை கோரியுள்ளார்.

பண்டாரகமவைச் சேர்ந்த நபர் தனக்குச் சொந்தமான காணியில் மந்திரிமனை அமைந்துள்ளது எனத் தெரிவித்து காணி அமைச்சின் கடிதத்துடன் குறித்த ஆவணத்தையும் இணைத்து உரிமை கோருவதற்கான கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளார்.

ஓலைச் சுவடி ஏற்றுக் கொள்ள முடியாத ஆவணம் என்றும், பிரிட்டிஸ் ஆட்சியின் பின்னர் இலங்கைச் சட்டப்படி காணி உறுதியையே ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், இவருக்கான பதிலை வழங்குவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

விடை பெற்றுச் செல்லும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இலங்கை மக்கள்  அதிருப்தி கொண்டிருப்பதாக இலங்கையிலிருந்து விடை பெற்றுச் செல்லும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்  தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சமாதானம், நல்லிணக்கம் போன்ற விடயங்களில் அரசாங்கம் சில முன்னேற்றமான நகர்வுகளைக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை சுட்டிக் காட்டினார்.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும், அந்தக் கட்டமைப்புகளை தமது நாட்டிற்குள் செயற்படக் கூடியவாறு புலனாய்வு முகவர்களை தனது நாட்டிற்குள் தயார்ப்படுத்தல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உரிய வேளையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது சரியானது என்றும், ஆனால் மாகாணசபை தேர்தலை பின்போடுவதில் தனது அதிருப்தியையும் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் ஐ.நா வில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தியாவிற்கு வெற்றி

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திமத்திய அரசு இரத்து செய்ததை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. காஷ்மீர் சர்வதேச அளவில் பிரச்சனைக்குறிய இடம் என்றும் இந்திய அரசு அதற்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்தது சர்வதேச சட்டத்துக்கு புறம்பானது என தெரிவித்தது.

இதையடுத்து, இந்தியா காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்ததை எதிர்த்து பாகிஸ்தான் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியது. மேலும்,  இது தொடர்பாக ஆலோசிக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், காஷ்மீர் தொடர்பான விவாதத்தை மேற்கொள்வது குறித்து ஐ.நா. சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் காஷ்மீர் குறித்து விவாதம் வேண்டும் என பாகிஸ் தானுக்கு ஆதரவாக சீனா வாக்களித்தது. ஆனால், ரஷியா போன்ற நாடுகள் காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் எனவும் இதை ஐ.நா. சபையில் விவாதிக்க அவசியமில்லை என வாக்களித்தது.

இறுதியில், இந்தியாவுக்கு அதிகமான நாடுகள் ஆதரவு அளித்தால் ஐ.நா. சபையில் காஷ்மீர் விவாதத்தை எழுப்ப முயற்சித்த பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஐ.நா.வுக்கான இந்திய பிரநிதி சையது அக்பருதீன் கூறியதாவது:

 காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு ரத்து செய்தது முற்றிலும் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டது. மேலும், அது முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம். ஆகையால் பிற நாடுகள் இந்த விவகாரத்தில் தலையீட எந்தவித உரிமையும் கிடையாது.

மேலும், காஷ்மீரில் வாழும் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்காகவும், சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காவே சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு அமைதியை நிலைநாட்டு வதற்கான அத்தனை முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். என்றும் அவர் தெருவித்தார்

 

ஓகஸ்ற் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளில் நீதிக்காய் அணிதிரள்வோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

ஓகஸ்ற் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நீதிகோரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. அமெரிக்கா,கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் என பல்வேறு புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் சிறிலங்கா இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியைத் வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஓகஸ்ற் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.
 காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் :  http://youarenotforgotten.org/

போராட்டத்தின் மத்தியில் செஞ்சோலை நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது

கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில் (14.08) சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் செஞ்சோலை பணியாளர்கள் நினைவாக தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்திற்கு செல்கின்ற வீதியின் ஆரம்ப இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி பல்வேறு தடைகளுக்கும் மத்தியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நினைவுத்தூபி வேலைகளை மேற்கொண்டு வந்தவர்களை புதுக்குடியிருப்பு பொலிசார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதோடு குறித்த தூபியில் கொல்லப்பட்டவர்களின் படங்களை பதிக்கவோ அவர்களின் பெயர்களை எழுதவோ தடை விதித்திருந்தது. நினைவுத்தூபியை மட்டும் கட்டுவதற்கு அனுமதித்திருந்தது.

இதனால் நினைவுத் தூபியில் மாணவர்களின் புகைப்படங்களை பதிக்க முடியாது விட்டாலும் செஞ்சோலை வளாக வீதி என எழுதப்பட்ட நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நினைவுத் தூபியினை உயிரிழந்தவர்களின் உறவுகள் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்து, நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

நல்லூர் திருவிழாவில் பொருத்தப்பட்ட ஸ்கானர்கள் அகற்றப்பட்டன

நல்லூர் கந்தசாமி கோவிலில் பாதுகாப்பு சோதனைகளுக்காக பொருத்தப்பட்ட புதிய ஸ்கானர் இயந்திரங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.

நல்லூர் உற்சவத்தின் போது இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இதுவே பக்தர்களுக்கு பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதால் இந்த விடயம் வடக்கு ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்கள்   பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக 14.08 அன்று புதிய ஸ்கானர் இயந்திரம் பொருத்தப்பட்டது. இதற்காக வாடகையாக சுமார் 3 இலட்ச ரூபாய் செலவிடப்பட்டது. இக்கருவிகள் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து பெறப்பட்டிருந்தது.

இது பக்தர்கள் செல்லும் போது, சிறிய உலோகப் பொருட்களுக்கும் அதாவது நகைகள், ஊசிகள் போன்ற பொருட்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. இதனால் இந்த ஸ்கானர் இயந்திரங்கள் இன்று காலை எடுத்துச் செல்லப்பட்டன.

வெள்ளை வானில் கடத்தியவர்கள் எங்கே? திருகோணமலையில் போராட்டம்..

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவினர்கள் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

பத்து வருட காலங்களாக போராடியும் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எதுவித பதிலும் வழங்காத நிலையில் சர்வதேசமாவது நியாயமான பதிலை கூற வேண்டும் எனக் கோரியே இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

திருகோணமலை – அம்பாறை மட்டக்களப்பு – மன்னார் – முல்லைத்தீவு – யாழ்ப்பாணம்- கிளிநொச்சி – மற்றும் வவுனியா- மாவட்டங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர் களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்திலர் கலந்து கொண்டனர்.

Trinco Aug 2019 2 வெள்ளை வானில் கடத்தியவர்கள் எங்கே? திருகோணமலையில் போராட்டம்..ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்கள், “காணாமல் போனோர் அலுவலகம் கண்துடைப்பா? வெள்ளை வேனில் கொண்டு சென்றவர்கள் எங்கே? பக்கச் சார்பற்ற நீதிவிசாரணை வேண்டும்! கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே! காணாமல்போன எமது உறவுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்! கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே! சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கின்றாய்! ” போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trinco Aug 2019 வெள்ளை வானில் கடத்தியவர்கள் எங்கே? திருகோணமலையில் போராட்டம்..

அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வதால் கூட்டமைப்பினர் மாத்­தி­ரமே பய­ன­டைந்­துள்­ளார்கள்- செஹான் சேம­சிங்க

அர­சியல் தீர்வு  என்ற விட­யத்தை குறிப்­பிட்டுக் கொண்டு  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்து ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது. ஆத­ரவு வழங்­கு­வதால் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே பெரிதும் பய­ன­டைந்­துள்­ளார்கள். ஆனால் எதிர்­பார்ப்­புடன்  அபி­வி­ருத்­திகள் ஏதும் பெற்றுக் கொள்­ளாத  வடக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளார்கள்.  இறு­தியில் அபி­வி­ருத்­தியும்   அர­சியல் தீர்வும்   வெறும் கானல் நீரா­கவே    காணப்­படும் என்று  எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  செஹான் சேம­சிங்க தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்   பெற்ற  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தமிழ்  மக்­களை  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­திகள் எவரும்    தமிழ் மக்­களின் அடிப்­படை   பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்­க­வில்லை. மாறாக  அர­சாங்­கத்தில் இருந்து  வரப்­பி­ர­சா­தங்­களை மாத்­தி­ரமே  பெற்றுக் கொண்­டுள்­ளார்கள் என்று  எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  செஹான் சேம­சிங்க தெரி­வித்தார்.

தமிழ் மக்­களின் ஆத­ர­வினை  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விற்கு பெற முடி­யாது என்ற தவ­றான  கருத்­தினை அர­சாங்கம் தற்­போது குறிப்­பிட்டு கொள்­கின்­றது. நிச்­சயம் வடக்கு கிழக்கு உட்­பட ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் ஆத­ர­வுடன்  ஆட்சி மாற்றம் ஏற்­படும்.  வடக்கு மக்கள் தற்­போது  எவர் தலை­மை­யி­லான ஆட்சி  சிறந்­தது என்­பதை தீர்­மா­னித்து விட்­டார்கள்.

தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்வா­திகள் எவரும் தமிழ் மக்­களின்  அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­க­வில்லை. மாறாக தேவையற்ற நிறை­வே­றாது என்று தெரிந்த ஒரு விட­யத்­திற்கு முக்­கி­யத்­துவம் வழங்கி  காலத்தை வீண­டித்து  தமிழ் மக்­களை தொடர்ந்து ஏமாற்றி வரு­கின்­றார்கள்.

மறு­புறம் மலை­யக மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும்  அர­சி­யல்­வா­திகள் பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு  எவ்­வித  நியா­ய­மான தீர்­வையும் பெற்றுக் கொடுக்­க­வில்லை. ஒவ்­வொரு வருட ஆரம்­பத்­திலும்  இறு­தி­யிலும் மலை­ய­கத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்­ப­டு­வது எதிர்­பார்க்கக் கூடி­ய­தொன்­றாக காணப்­ப­டு­கின்­றது. ஆனால் மலை­யக மக்­க­ளுக்கு  நியா­ய­மான  தீர்­வினை அர­சாங்கம் வழங்­க­வில்லை.  அர­சாங்­கத்­திற்கு  அழுத்தம் கொடுப்­ப­தாக மலை­யக அர­சி­யல்­வா­திகள்  வெறும் பேச்­ச­ளவில் மாத்­தி­ரமே  கருத்­து­ரைக்­கின்­றார்­களே தவிர  செய­ல­ளவில் எத­னையும்   வினைத்­தி­ற­னாக  செயற்­ப­டுத்­த­வில்லை.

தமிழ் மக்கள் தொடர்ந்து தம்மை ஏமாற்றி அதில் சொகு­சாக வாழும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு  ஆத­ரவு  வழங்­கு­வதால் எவ்வித பயனும் ஏற்படாது. கடந்த நான்கு வருட காலமாக  அரசாங்கத்தில்  தமிழ் மக்களின் அடிப்படை  பிரச்சினைகள் வெறும்  பேசுபொருளாகவே காணப்பட்டது. நிச்சயம் எமது  அரசாங்கத்தில்  பாதிப்பற்ற விதத்தில் வடக்கிற்கு தீர்வும் மலையக மக்களுக்கு பொருளாதார தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

மூன்று தசாப்த பிரச்சினையை 5 வருடத்தில் தீர்க்க முடியாது- விஜயகலா

முப்பது வருட பிரச்சினையை 5 வருடத்தில் தீர்க்க முடியாதென்றும் எதிர்வரும் 5 வருடங்களில் சிறந்த தீர்வைப் பெற, ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று வலி.வடக்கில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இங்கு உரையாற்றிய அவர்:

இன்று ஐக்கிய தேசிய அரசாங்கத்தின் ஊடாக மயிலிட்டி துறைமுகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.யுத்தம் காரணமாக கடந்த அரசாங்கம் 30வருடங்கள் இந்த இடங்களை பாதுகாப்பு வலயமாக  வைத்திருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், இந்தப் பிரதேசத்தில் இருந்த பாடசாலைகள் தேவாலயங்கள், கோவில்கள், தனியார் காணிகளில் இருந்த வீடுகளை இடித்துடைத்து தமக்குத் தேவையான வற்றை கடந்த அரசாங்கம் அமைத்தது.

கடந்தஅரசாங்கம் சட்டத்திற்கு முரணாக பல கட்டிடங்களை தம்வசம் வைத்திருந்தது. கடல் உணவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஒரு இடம் தான் இந்த மயிலிட்டி துறைமுகம். அவற்றை இழந்து வீதியில் நின்ற மக்களின் எதிர்காலத்தை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மாற்றிக் கொடுத்துள்ளது. யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த,கடந்த கால அரசாங்கம் தமிழ் மக்களை எந்த இடத்திலும் திரும்பிப் பார்க்கவில்லை. முன்னாள் போராளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அவலங்களை அந்த அரசு பொருட்படுத்தவில்லை. எமது அரசாங்கமே இவர்களுக்கு கை கொடுத்தது.

இன்று 5,000ஏக்கர் காணிகளை அரசாங்கம் மக்களிடம் கையளித்துள்ளது. பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

23,000 சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை உருவாக்க ஒத்துழைத்த, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.