நல்லூர் மந்திரிமனை காணியை உரிமை கோரும் சிங்கள இனத்தவர்

மன்னராட்சிக் காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மந்திரிமனை அமைந்துள்ள காணி தனக்குச் சொந்தமானது என பெரும்பானமை இனத்தவர் ஒருவர் உரிமை கோருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் டச்சுக் காலத்தல் உரிமைப் பத்திரமாகப் பயன்படுத்தப்பட்ட ஓலைச் சுவடியை ஆதாரமாக வைத்து அந்தக் காணியை உரிமை கோரியுள்ளார். அதனை யாழ். மாவட்ட அலுவலகத்தில் குறித்த ஓலைச் சுவடியைக் காட்டி உரிமை கோரியுள்ளார்.

பண்டாரகமவைச் சேர்ந்த நபர் தனக்குச் சொந்தமான காணியில் மந்திரிமனை அமைந்துள்ளது எனத் தெரிவித்து காணி அமைச்சின் கடிதத்துடன் குறித்த ஆவணத்தையும் இணைத்து உரிமை கோருவதற்கான கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளார்.

ஓலைச் சுவடி ஏற்றுக் கொள்ள முடியாத ஆவணம் என்றும், பிரிட்டிஸ் ஆட்சியின் பின்னர் இலங்கைச் சட்டப்படி காணி உறுதியையே ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், இவருக்கான பதிலை வழங்குவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.