Home Blog Page 2702

அவுஸ்ரேலியாவில் அக்கினிப் பறவைகளின் செஞ்சோலை நினைவு நிகழ்வு ; அணிதிரண்ட இளைய தலைமுறை

செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளினை ஒட்டி 17.08.19   அன்று அவுஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் மாநகரில் அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் மெல்பேர்ன் வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் பெருமுயற்சியுடன் நிகழ்வொன்று சிறப்புடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வு ஈகச்சுடர்கள் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. Cholai Children’s Welfare Association எனும் கட்டமைப்பில் பணியாற்றிய திருமதி சுகந்தி பிரபாகரன் அவர்கள் செஞ்சோலை மாணவிகளினது நினைவாக ஈகச்சுடரினை ஏற்றிவைக்க, தொடர்ந்து எமது மாவீரர்களுக்கான ஈகச்சுடரினைத் தமிழ்த்தேசிய ஆர்வலர் திருமதி மலர்விழி அவர்கள் ஏற்றிவைத்தார்.w அவுஸ்ரேலியாவில் அக்கினிப் பறவைகளின் செஞ்சோலை நினைவு நிகழ்வு ; அணிதிரண்ட இளைய தலைமுறை

செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலைகளின் பல ஆவணக்கோர்வைகள் இந்நிகழ்வில் அவ்வமைப்பினரிடமிருந்து பெறப்பட்டு,காட்சிப்படுத்தப்பட்டன. அது மட்டுமின்றி,செஞ்சோலைச் சிறார்களால் தயாரிக்கப்பட்டு,வெளியிடப்பட்ட “இளங்கதிர்” சஞ்சிகையின் பிரதிகள்,செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் திருவுருவப்படத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதனைத் தொடர்ந்து, மெல்பேர்ன் வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் சார்பாக ஒரு வரவேற்புரை செல்வன் யதுவால் நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையானது செஞ்சோலை நினைவு நாளின் நினைவாக இந்நூல் மெல்பேர்ன் மாநிலத்தில் வெளியடப்டுகின்றமைக்கான காரணத்தினையும்,இந்நூலின் சிறப்புகளையும் விளக்கியதோடு,தமிழீழ மக்களை எமது அடுத்தகட்டப் போராட்டத்தின் காலப்பகுதிக்குள் வரவேற்குமுகமாகவும் அமைந்தது.f அவுஸ்ரேலியாவில் அக்கினிப் பறவைகளின் செஞ்சோலை நினைவு நிகழ்வு ; அணிதிரண்ட இளைய தலைமுறை

Australian Medical Aid Foundationல் பணிபுரிந்து வருபவராகிய வைத்தியக் கலாநிதி சதீஸ் நடராஜா அவர்கள், செஞ்சோலை மீது இடம்பெற்ற தாக்குதல் பற்றியும், செஞ்சோலை போன்ற தமிழீழக் கட்டமைப்புக்களைப் பற்றியும் ஓர் சிற்றுரையினை ஆற்றினார். தற்பொழுது தாய் தந்தையரை இழந்து நிற்கும் சிறுவர்கள், அவர்களது நலன் கருதி நிறுவப்படும் இல்லங்களில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை நிலவரங்களையும் அம்பலப்படுத்தினார்.kk அவுஸ்ரேலியாவில் அக்கினிப் பறவைகளின் செஞ்சோலை நினைவு நிகழ்வு ; அணிதிரண்ட இளைய தலைமுறை

குறைந்த வளங்களைக்கொண்டு மிகவும் உயரிய நல்லதோர் உளவியற் சூழலையும் தமிழீழ நடைமுறை அரசால் இவ்வில்லங்கள் போன்ற கட்டமைப்புக்களில் நிறுவக்கூடியதாக இருக்கும் பொழுது, கொடூரமான மனித உரிமைத் துன்புறுத்தல்களுக்கு இன்றும் ஆளாக்கப்படும் சிறவர்களுக்கு அவ்வாறான ஒரு பாதுகாப்பினை எந்தவொரு தரப்பாலும் ஏன் வழங்கமுடியவில்லை எனும் கேள்வியினையும் முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருமதி சுகந்தி அவர்கள், „Cholai Children’s Welfare Association“ல் பணியாற்றியதனூடாக அவர் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்தார். அத்துடன் நடைமுறை அரசு இயங்கிய காலப்பகுதியில் செஞ்சோலை இயங்கியதைப்பற்றியும், 2009ம் ஆண்டு அவ்வரசின் அழிவிற்குப் பின்னர் அண்மைபில் மீண்டும் திறக்கப்பட்ட செஞ்சோலையின் இயக்கத்தைப்பற்றியும் தனது அனுபவங்களின் அடிப்படையில் அவ்வுரையில் அவர் எடுத்து விளக்கினார்.

அடுத்து அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட எழுச்சிப் பாடல்களின் „கோர்வைக்கு நடனாலயா நடனப்பள்ளியின்“ சார்பாக செல்வி ருக்‌ஷிகா அவர்கள் ஒர் எழுச்சியான நடனத்தினை வழங்கி இளைஞர்களின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

மேலும், நூல் வெளியீட்டு நிகழ்வின் பிரதானப் பேச்சாளர்களான; சோசலியக் கவுன்சிலர், „Sue Bolton“ மற்றும்  திரு „உமேஷ் பேரின்பநாயகம்“ ஆகியோர் இந்நூலின் பலதரப்பட்ட அரசியற் செய்திகளைப் பகிர்ந்தனர்.

ஆயுதப்போராட்டத்தின் வீரியங்களைக் கடந்து விடுதலை எனும் கொள்கையைப் பலப்படுத்துமுகமாக அமைக்கப்பட்ட ஓர் அரசின் ஆவணமாக அமையும் இந்நூலின் முக்கியத்துவத்தையும் அதன் அம்சங்களையும் சுற்றிக்காட்டிய Sue Bolton, இவ்வரசும் இந்நூலும் வேறு பல ஒடுக்குமுறைக்குட்பட்ட சமூகங்களுக்கு ஓர் முன்னுதாரணமாக அமைகின்றது என்றும் குறிப்பிட்டார். இக்கருத்து நந்திக்கடல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. r அவுஸ்ரேலியாவில் அக்கினிப் பறவைகளின் செஞ்சோலை நினைவு நிகழ்வு ; அணிதிரண்ட இளைய தலைமுறை

நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் தனது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் Ben Hillier அவர்கள் காணொளியினூடாகத் தெரிவித்திருந்தார். இந்நூலின் முக்கியத்துவத்தை விளக்கிய இவர், இவ்வாறான விடுதலை வரலாறுகளின் முடக்கல்களின் சர்வதேசக் கூட்டுச்சார் பின்புலத்தையும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மெல்பேர்ன் வாழ் இளம் ஈழத்தமிழ் செயற்பாட்டாளராகிய திரு உமேஷ் அவர்கள், நூல் விமர்சனம் ஒன்றினை வழங்கினார். இந்நூலிலிருந்து சில கட்டமைப்புக்களை எடுத்துக்காட்டி விளக்கியதோடு, பதிவுக்குட்படுத்தப்பட்ட ஆவணங்கள் பற்றியும்அவர் விளக்கியிருந்தார். அத்துடன், அவுஸ்திரேலிய அரசின் இலங்கை அரசுடனான Indo Pacific ஒப்பந்தங்களால் பலப்படுத்தப்படும் இராணுவ உறவுகளாலும், புகலிடம் கோருவோருக்கெதிரான கொள்கைகளாலும், இவ்வாறான ஆவண முயற்சிகளுக்கு பெரும் தடைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இவற்றைக் களைவதனூடாக, அவுஸ்திரேலிய இளைஞர்களும் அக்கினிப் பறவைகள் அமைப்பின் இவ்வரலாற்று ஆவண முயற்சியில் இணைந்துகொள்வதற்கான ஓர் பாதையினை அமைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நூலின் முதலாவது பிரதி மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு இளைஞர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சமர்ப்பணம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து,மெல்பேர்ன் வாழ் இளைஞர்களின் சார்பாகவும், அக்கினிப் பறவைகளின் சார்பாகவும், மெல்பேர்ன்வாழ் அங்கத்தவர்களுக்குச் சிறப்புப் பிரதிகள் திரு உமேஷ் அவர்களால் வழங்கப்பட்டன. இதில் கல்வி, வர்த்தக மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு நூல்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

அடுத்து, புரட்சி Mediaவின் ஒருங்கிணைப்பாளராகிய திரு. நிதர்சன் அவர்கள், அமைப்பின் சார்பாக ஏற்புரையினை காணொளியினூடாக வழங்கினார். அடுத்தகட்டப் போராட்டத்தினைப்பற்றி அவர் எடுத்துரைத்த அரசியற்கருத்துகளை வரவேற்ற மக்கள் இவ்வாறான செயற்பாடுகள் அவுஸ்திரேலியாவில் மேலும் முன்னெடுக்கப்படவேண்டும் எனும் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அக்கினிப் பறவைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், செல்வன் யதுராம் அவர்கள் வழங்கிய நன்றியுரையினைத் தொடர்ந்து உறுதிமொழியுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது. மாவீரர் இட்ட பாதையிலும், தலைவர் காட்டும் வழியிலும் உறுதியாகப் பயணிக்கும் அக்கினிப் பறவைகள் அமைப்பினரினைப் போன்றும், அவர்களுடன் இணைந்து நிற்கும் சக சிட்னி வாழ் இளைஞர்களைப் போன்றும் தம்மால் முடிந்தவரை செயற்பட முனைவதாக மெல்பேர்ன் வாழ் மக்களின் சார்பாக இளைஞர்கள் உறுதி எடுத்துக்கொண்டார்கள்.

“2009ம் ஆண்டில் அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தினது துணையுடன் அரங்கேற்றப்பட்ட தமிழினவழிப்பு, இன்றுவரை கட்டமைக்கப்பட்ட முறையில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. தமிழீழ மக்களாகிய நாம், அவ்விளைநிலத்தில் பிறந்த நந்திக்கடல் கோட்பாட்டினை அடிப்படையாக வைத்து, அனைத்து இடையூறுகளையும் கடந்து, தமிழிறைமையை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து உறுதியுடன் பயணிப்போம். தமிழர் எனும் எமது அடிபணியா அடையாளத்தை எமது சிந்தனை, செயல் அனைத்திலும் முன்னிறுத்தி, எம் தேசத்தின் விடியல் வரை எமது அடிப்படைக்கொள்கைகளை விட்டுக்கொடுக்காது தெளிவாகச் செல்வோம். 

ஈழத்தமிழ் இளைஞர்களாகிய நாம், எமது போராட்டத்தின் முன்னிலையில் நின்று, தமிழிறைமையினை என்றும், எதிலும், எப்படியும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று உறுதியெடுத்துக்கொள்கிறோம். வெல்வது உறுதி” என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் செல்வி மது அவர்கள் அங்கு கூடிய மக்களின் சார்பாகப் பிரமாண மெடுத்துக் கொண்டதோடு, மக்களின் “தமிழரின் தாகம்,தமிழீழத் தாயகம்”  எனும் ஒருங்கிணைந்து முழக்கத்துடன் மிகவும் உணர்வுபூர்வமாக இந்நிகழ்வு நிறைவுபெற்றது.

 

பலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேலிய நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலி

வடக்கு காசாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.’ஞாயிற்றுக்கிழமை காலை காசா பகுதியில் உள்ள அல்-அண்டலுசி மருத்துவமனைக்கு மூன்று சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் ஒருவர் பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என பாலஸ்தீன சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா குறிப்பிட்டார்.

“ஆயுதமேந்திய சந்தேக நபர்கள்” மீது தாக்குதல் ஹெலிகாப்டர் மற்றும் தொட்டி வீசியதாக இஸ்ரேல் கூறியது.

பாட்டியைப் பார்ப்பதற்காக எனது கொள்கையைக் கைவிடமுடியாது: அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ரஷிடா ட்லைப்பும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும் அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு விசா அளிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக மேற்கு கரை பகுதியில் வசித்து வருகிற தனது பாட்டியை பார்க்க விரும்பிய ரஷிடா ட்லைப்புக்கு விசா மறுக்கப்பட்டது சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இஸ்ரேல் அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு, ரஷிடா ட்லைப் மேற்கு கரை பகுதிக்கு வந்து தனது பாட்டியை பார்த்து செல்ல அனுமதி தருவதாக கூறியது. ஆனால் இந்த அனுமதியை ஏற்க அவர் மறுத்து விட்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “என் வாயை மூட வேண்டும், என்னை கிரிமினல் போல நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் அதை விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் நான் இஸ்ரேல் போய் என் பாட்டியை பார்த்தால், அது நான் இனவெறி, ஒடுக்குமுறை, அநீதிக்கு எதிராக கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு எதிராக அமைந்து விடும்” என குறிப்பிட்டார்.

 

 

ஏமன் கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் தாக்குதல் சவுதி எண்ணெய் வயலில் தீப்பிடித்தது

ஏமன் கிளர்ச்சியாளர்களால் இயக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் நேற்று சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெய்பாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் காயங்களோ அல்லது உற்பத்திக்கு எந்த பாதிப்போ ஏற்படவில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு நாளைக்கு சுமார் 1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் ஷெய்பா எண்ணெய் நிறுவனம் ஹவுத்திகளின் கட்டுபாட்டிற்கு கீழ் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளது. ஹவுத்திகளின் கட்டுபாட்டிற்கு கீழ் உள்ள பகுதிகளில் நடந்துள்ள இந்த தாக்குதலுக்கு ஏமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்று கொண்டனர். இந்த தாக்குதல் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்டதாக ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இது குறித்து சவூதி எரிசக்தி மந்திரி காலித் அல்-ஃபாலிஹ் கூறியதாவது :-

“இந்த தாக்குதல்கள், சர்வதேச எண்ணெய் விநியோகத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் இது சவுதி அரேபியாவை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் ” என்று கூறினார்.

இதே போல், கடந்த மே- மாதம், சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான ஆரம்கோ எண்ணெய் உற்பத்தி மற்றும் வினியோக நிறுவனத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -2) – ந.மாலதி

நோம் சொம்ஸ்கி ஒரு அறிமுகம் (பாகம் – 02)

இன்று உலகில் பொதுமக்களுடன் தொடர்சியாக அமெரிக்க அரசியலைப் பற்றி பேசும் அதிகமாக அறியப்பட்ட புத்திஜீவி அமெரிக்காவில் வாழும் 80 வயதை தாண்டிய நோம் சொம்ஸ்கி. இவர் எம்ஐரி பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராக இருந்தவர். மொழியியல் பற்றிய இவரின் ஆய்வுகளால் இவர் மொழியியலின் ஐன்ஸடீன் என்று விபரிக்கப்படுபவர்.  பல தசாப்தங்களாக இவர் மக்களுடனான அரசியல் உரையாடலைத் தொடர்ந்து வருகிறார். 1967ம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக வருடத்திற்கு குறைந்தது ஒரு நூல் அமெரிக்காவின் பயங்கரவாதத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். எட்வேட் ஹேமன் என்பவரும் இவரும் சேர்ந்து விபரித்த ‘பரப்புரை மாடல்’ இன்று உலகப் பொது அறிவில் ஒரு முக்கிய பொருளாக இருக்கிறது. 41l1dSgZNL தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -2) – ந.மாலதி

அமெரிக்க ஊடகங்களில் செய்திகளைச் தெரிவு செய்யும் போது ஐந்து வடிகட்டிகளூடாக அவை வடிகட்டப்பட்டு வருவதால் அவை வெளியிடும் செய்திகள் உண்மையை பிரதிபலிப்பதில்லை என்பதை அவர்களின் பரப்புரை மாடல் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் குறிப்பிட்ட வடிகட்டிகளில் முதன்மையானதாக உள்ளவை: ஊடக உரிமை, செய்தியின் மூலம், மற்றும் விளம்பரம் போடுபவர்கள் என்ற மூன்று வடிகட்டிகள்.

ஊடகங்கள் ஒரு சில பெரும் முதலாளிகளின் கையிலேயே உள்ளன. இம்முதலாளிகள் ஊடகத்தைவிட இன்னும் பல தொழிற்சாலைகளின் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அதனால் இவ்வூடகங்களில் வரும் செய்திகளும் இவர்களின் நலனைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும்.

விளம்பரதாரர்கள் தம் பொருட்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்தி விற்பனையை அதிகரிக்கிறார்கள் என்பதே பொதுமக்களின் கருத்து. ஆனால் இதையே இவர்களின் மாடல் ‘ஊடகங்கள் வாசகர்களை விளம்பரதாரர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்’ என்று பார்க்கிறது. இந்த விளம்பரதாரர்களுக்கு உகந்த, அவர்களின் பொருட்களை வாங்கக் கூடிய  வாசகர்களையே ஊடகங்கள் பெருக்க விளையும் என்பது இவர்களின் மாடலின் ஒரு கருத்து. இதுவும் செய்திகளின் ஒரு வடிகட்டியாக இருக்கும்.

ஊடகங்கள் செய்திகளை எங்கிருந்து பெற்றுக்கொள்கின்றன என்பதை விளக்குகிறது மூன்றாவது வடிகட்டி. பணத்தாலும் அதிகாரத்தாலும் வலிமையான இடங்களுடன் ஊடகங்கள் ஒருவருக்கொருவர் நன்மை கொடுக்கக் கூடிய உறவை வளர்த்து செய்திகளை அங்கிருந்தே பெற்றுக்கொள்கின்றன. இது மூன்றாவது வடிகட்டி.

யாராவது ஒரு ஊடகவியலாளர் ஊடகத்தின் நலனுக்கு எதிரான உண்மையான செய்தியை எப்போவாவது போடும்போது அவருக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது. அதனாலும் இம்மாதிரியான செய்திகள் வடிகட்டப்படுகின்றன. இறுதியாக பயத்தை வளர்த்து உண்மையற்ற செய்திகளை வெளியிட வழி செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் கொம்யூனிசப் பயத்தை வளர்த்தார்கள். பின்னர் பயங்கரவாதிகள் என்ற பயத்தை வளர்க்கிறார்கள். இத்துடன் சிலரை கொடூரமானவர்களாக சித்தரித்தும் பயத்தை வளர்க்கிறார்கள். உதாரணமாக சதாம் ஹூசேன், கடாபி போன்றவர்கள் மேல் இவர்கள் போட்ட போர்வை.

இந்த பரப்பரை மாடலைப் பற்றி ஆழமாக விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் படிக்கலாம். அந்த மாடல் ஏனைய நாட்டு ஊடகங்களுக்கும் பொருந்தும் என்பதும் இவர்கள் முன்வைக்கும் ஒரு கருத்து. சொம்ஸ்கி-ஹேமன் ஊடகங்களைப்பற்றி விபரித்ததை சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் கூட ஓரளவு பொருத்திப்பார்க்கலாம். எவ்வாறு ஊடகங்கள் வலிமை மிக்க முதலாளிகளின், நாடுகளின் நலனைச் சார்ந்து இயங்குகின்றவோ அவ்வாறே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் அதிகமாக செயற்படுகின்றன. இவ்வரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி எங்கிருந்து வருகின்றது என்று ஆராய்ந்தால் அவர்களின் சார்புத் தன்மை தெளிவாக புலப்படும்.

அதிகார வர்க்கங்கள் அரசியலைப் பற்றி பேசும் போது அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைப் பிரயோகங்களைப்பற்றி சொம்ஸ்கி பேசிய ஒரு உரையில் சொன்னவை.

“இவர்கள் அரசியலைப் பற்றி பேசும் போது உபயோகிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இரண்டு கருத்துக்கள் உண்டு. சில உதாரணங்கள். சனநாயகம் என்பதற்கு பொதுமக்கள் தமது சொந்த விவகாரங்களை தாமே நடத்துவதற்கான வழிமுறைகள் என்று பொருள். மற்றைய கருத்து, பெரும் முதாலாளி வர்க்கம் நடத்துவதே சனநாயகம் என்பது. இக்கருத்திலேயே அதிகார வர்க்கம் சனநாயகம் என்ற சொல்லை இன்று உபயோகிக்கிறது.”

“சமாதான பேச்சு வார்த்தை என்பதும் அப்படியே. ஒரு கருத்தில் பேச்சு வார்த்தையினூடாக ஒரு முடிவை எட்டுதல் என்று பொருள். இன்னுமொரு கருத்து எதை அமெரிக்கா எட்ட விரும்புகிறதோ அதுவே பேச்சு வார்த்தை என்பது. இந்த இரண்டாவது கருத்துப்படி அமெரிக்கா ஒருபோதும் பேச்சு வார்த்தைக்கு எதிராக இருக்க முடியாது. இக்கருத்தை பரிசோதிக்கும் நோக்குடன் பத்து வருடங்களுக்கான ஒரு அமெரிக்க ஊடக வெளியீடுகளில் ‘பேச்சு வார்த்தை’ என்ற சொற்பதத்தை தேடிய போது ஆயிரம் இடங்களில் இச்சொற்பதம் கையாளப்பட்டிருக்கிறது.

அவற்றில் ஒன்றில் கூட அமெரிக்கா ‘பேச்சு வார்த்தைக்கு’ எதிராக செயற்படுகிறது என்று வரவில்லை. ஆனால் இக்காலத்தில் அமெரிக்கா மத்திய கிழக்கிலும் மத்திய அமெரிக்காவிலும் பல இடங்களில் பேச்சு வார்த்தைகளைத் தடுத்துக்கொண்டிருந்தது.” வேறும் பல இடங்களிலும் அமெரிக்கா எவ்வாறு சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது என்ற செய்திகளை ஆழமாக புரிந்தால் இம்முயற்சிகளின் பின்னால் உள்ள உண்மை புலப்படும்.

“மத்திய அமெரிக்காவில் ‘மனிதாபிமான உதவிகள்’ என்ற போர்வையில் அமெரிக்கா இயக்கிய ஆயதக்குழுக்களுக்கு அமெரிக்கா உதவிகள் கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் வந்தன. இந்த உதவிகளை கொடுத்தது ‘யுஎஸ்எயிட்’ என்றழைக்கப்பட் அமெரிக்காவின் ஒரு நிறுவனமே.”images 1 தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -2) – ந.மாலதி

“இது போலவே பயங்கரவாதம் என்ற சொற்பதமும். இது பற்றிய ஒரு கருத்து: அரசியல் மற்றும் கொள்கைரீதியான காரணங்களுக்காக பொதுமக்களைப் பயமுறுத்துவதற்கு செய்யப்படும் வன்முறைகள். அமெரிக்க சட்டத்திலும் இதுவே பயங்கரவாதத்தின் பொருளாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கருத்தின் பிரகாரம் உலகில் முதன்மையான பயங்கரவாதிகள் அமெரிக்காவும், பிரித்தானியாவும் அதற்கடுத்ததாக பிரன்சும் தான். அதனால் இக்கருத்தை தள்ளிவிட்டு வேறொரு கருத்து இதற்கு கொடுக்க வேண்டிய தேவை ஊடகங்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உள்ளது. இவர்களும் பயங்கரவாதத்திற்கு இதே வரைறறையைத்தான் உபயோகிக்கிறார்கள். ஆனால் இன்னுமொரு நிபந்தiயையுடன். பயங்கரவாதம் என்பது மற்றவர்கள் எமக்கு செய்வது மட்டுமே என்பதுதான் இந்த மேலதிக நிபந்தனை.”

இஸ்ரேயில்-பலஸ்தீனைப் பற்றி சொம்ஸ்கி சொல்லுவது அமெரிக்காவினதும் மேற்குலகினதும் பூகோள நடத்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக பார்க்க முடியும்.

“இஸ்ரேயில்-பலஸ்தீன் பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனே நிபந்தனைகள் போடுவதாக சொல்லப்படுகிறது. பல தசாப்தங்களாக இரு நாட்டுத் தீர்வு என்பது அமெரிக்கா இஸ்ரேயிலைத் தவிர்ந்த ஏனைய உலக நாடுகள் முழுவதும் 60களிலிருந்து ஏற்றுக்கொண்டிருக்கிறன. இருந்தாலும் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவே நடுவராக இருக்க வேண்டும் என்று அமெரிக்காவும் இஸ்ரேயிலும் நிபந்தனைகள் போடுகிறது. உலக நாடுகளின் நிலைப்பாட்டை எடுத்துப் பார்த்தால் பேச்சுவார்த்தைகள் அமெரிக்க-இஸ்ரேயில் கூட்டுக்கும் ஏனைய உலகத்துக்கும் இடையே தான் இருக்க வேண்டும். இதையும் விட இஸ்ரேயில் தனது சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத்திட்டங்களை தொடர அனுமதி வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்திருக்கிறது. இந்தக் குடியேற்றங்கள், அதாவது வேறு மக்களை ஆக்கிரமித்த இடங்களில் குடியேற்றம் செய்வது ஒரு போர்க்குற்றம் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் உட்பட பல அமைப்புக்கள் அங்கீகரித்துள்ளன. இருந்தாலும் அமெரிக்கா ஆதரித்தால் இஸ்ரேயில் இப்போர்க்குற்றத்தையும் செய்யலாம். இது தொடர்ந்தால் இறுதியில் இருநாட்டு தீர்வு என்பது கருத்தில்லாத ஒன்றாகிவிடும்.”CNN israeli soldier arrests palestinian boy super tease தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -2) – ந.மாலதி

“இஸ்ரேயில் இவ்வாறு குடியேற்றம் செய்த இடங்களில் இஸ்ரேலியர்களுக்கு பல வசதிகளைச் செய்து கொடுக்கிறது. அதே நேரத்தில் பலஸ்தீனிய மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். இது உலகில் எங்கே எல்லாம் நவீனகாலனித்துவம் வளருகின்றதோ அங்கே எல்லாம் காணலாம். உலகிலேயே வறுமையான ஆபிரக்காவின் சகார பகுதிகளிலும் கூட மேற்குலகத்தில் இருப்பது போன்ற ஒரு வாழ்க்கை வாழக்ககூடிய சில செல்வந்தர்கள் இருப்பார்கள்.”

பூமிக்கும் மானிட இனத்திற்கும் இரண்டு மிகப்பெரும் ஆபத்துக்களாக இருப்பவை ஆணு ஆயுதங்களும் சூழல் பேரழிவும் என்று சொம்ஸ்கியும் வேறும் பலரும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். இவற்றை கருத்திலெடுக்காமல் பூமியை அழிவை நோக்கி எடுத்துச் செல்லும் இரண்டு அயோக்கிய நாடுகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் சொம்ஸ்கி குறிப்பிடுவார்.

இன்று உலகில் செய்யப்படும் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்களை அமெரிக்காவே பகிரங்கமாக அதனுடைய ட்ரோன் தாக்குதல்களால் செய்து வருகிறது. யாரெல்லாம் அமெரிக்காவுக்கு எதிராக செயற்படக் கூடும் என்று அமெரிக்கா சந்தேகிக்கிறதோ அவர்களை எல்லாம் இவ்வாறு கொன்று வருகிறது என்கிறார் சொம்ஸ்கி.

சொம்ஸ்கி சொல்லிவரும் இன்னுமொரு கருத்து. பல இடங்களில் அமெரிக்கா தனது பயங்கரவாத செயல்களை முன்னெடுத்ததற்கு காரணம் இவ்விடங்களை உலகின் ஏனைய இடங்களும் பின்பற்றாமல் தடுப்பதற்காகவே. ‘வைரஸ் போல இவை பராவாமல் இருப்பதை தடுப்பது’ என்றும் ‘ஒரு நல்லுதாரணமாக இருப்பதை தடுப்பது’ என்றும் அவர் விபரிப்பார். இதற்கு உதாரணமாக, 60களில் வடக்கு வியட்நாம் மேல் படையெடுத்ததையும், கியூபா நாட்டிற்கு பல அச்சுறுத்தல்கள் கொடுத்ததையும், 70களில் சிலி நாட்டு சல்வடோர் அலண்டே அரசைக் கவிழ்த்ததும், அண்மையில் வெனிசுவேலா நாட்டின் மேல் விமர்சனங்கள் வைப்பதையும் இன்னும் பலவற்றையும் உதாரணமாக காட்டுவார்.

அமெரிக்காரவப் பற்றி பேசும் சொம்ஸ்கி துரதிஸ்டவசமாக இலங்கைத்தீவில் அமெரிக்காவின் நடத்தைகளைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. 2009க்குப் பின்னர் மட்டும் நடந்ததை ஒரு பெரிய பேரழிவு என்று விபரித்தார். அவரைக் கேட்ட போது தனக்கு அதிகம் தெரியாதவற்றைப் பற்றி தான் பேசுவதில்லை என்று மட்டும் சொல்வார். அது நியாயமாதும் கூட. இதைப்பற்றி முழுமையாக பேசியவர்கள் 2013இல் பிரேமன்-ஜெர்மனியில் நடந்த மக்கள் தீர்பாயத்தின் நீதிபதிகள்தான். இவர்கள் நடந்த இனவழிப்புக்கு அமெரிக்காவும் துணைபோனது என்று தீர்ப்பழித்துள்ளார்கள். அதற்கான ஆதாரத்தையும் கொடுத்துள்ளார்கள்.

தொடரும் …..

முதலாவது பகுதியை வாசிக்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) – ந.மாலதி

புனித ஞாயிறு தாக்குதலாளிகளுக்கு இந்தியாவே பயிற்சி வழங்கியது- சிறீலங்கா இரணுவம், ஆனால் அமைச்சர் மறுக்கிறார்

சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை இந்தியாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளே மேற்கொண்டதாகவும், இந்த தாக்குதலை இந்தியாவே மேற்கொண்டதாகவும் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா தெரிவித்திருந்தார்.

ஆனால் அதனை தற்போது சிறீலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கா மறுத்துள்ளார். சிறீலங்காவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தியா சென்றுள்ள அமைச்சர் அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே கடந்த வெள்ளிக்கிழமை (16) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் தாக்குதலாளிகளில் பலர் இந்தியாவின் கஸ்மீர், கேரளா மற்றும் பெங்களுர் பகுதிகளில் பயிற்சிகளை பெற்றிருந்ததாகவும் இந்த தாக்குதலில் இந்தியாவின் மறைமுகமான தொடர்புகள் இருந்துள்ளது எனவும் சிறீலங்கா இராணுவத்தளபதி முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் சிறீலங்காவின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யவும், இந்தியாவின் உதவியை அதற்கு பெறுவதற்காகவும் சென்ற அமைச்சர் அதனை மறுத்துள்ளதோடு தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் சிறீலங்காவிலேய இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் பின்னர் மிகவும் பாதிப்படைந்த சிறீலங்காவின் சுற்றுலாத்துறை தற்போது முன்னைய நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பறிபோனது மற்றுமொரு தமிழர் அடையாளம் ; தரவைக் கோவில் வீதி கடற்கரைப் பள்ளி வீதி என்றாகியது

கல்முனை தரவைக் கோவில் வீதி எனும் பெயரை கடற்கரைப் பள்ளி வீதி எனும் பெயராக மாற்றும் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பதால், பழைய பெயர் செல்லுபடியற்றதாகி விட்டது என்று, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று முன்தினம் (15) மாலை மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மேற்படி சர்ச்சைக்குரிய வீதியின் பெயர் தொடர்பில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போதே மேயர் றகீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கல்முனை நகரில் 500 வருடங்கள் மிகப் பழைமை வாய்ந்த கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இந்த வீதி இவ்வாறு முஸ்லிமல்லாளால் பெயர்மாற்றப் பட்டுள்ளது அப்பகுதி தமிழ் மக்களுக்கு பெருத்த வேதனையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச தீயில் 15 000 குடியிருப்புகள் அழிவு

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாயின.

இதன் காரணமாக 50 ஆயிரம் பேர் வீடிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பின்னிரவில் சாலண்டிகா குடிசை பகுதியில் இந்தத் தீ விபத்து நடந்தது.

அங்கு வசிக்கும் பெரும்பாலோனர் குறைவான வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள். பல வீடுகளில் பிளாஸ்டிக் கூரைகள் இருந்ததால் தீ வேகமாக பரவியது.

உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால், பலர் படுகாயம் அடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

வீடிழந்து தவிக்கும் பல்லாயிரம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானின் குண்டுத்தாக்குதல் 63 பேர் பலி 183 காயம் திருமணவீட்டில் சம்பவம்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 183 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் சம்பவ இடத்திலேயே பலர் கொல்லப்பட்டனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் திருமண விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 63 பேர் உயிரிழந்த நிலையில், 183 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாமென செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்-தமிழ் மக்களின் குடிப்பரம்பலை சிதைக்கும் முயற்சி

காணிகளற்ற நிலையிலுள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை யாழ்ப்பாணத்தில் நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

16.08 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

சில முஸ்லிம் வர்த்தகர்கள் 7.5 ஏக்கர் காணியை வழங்கியுள்ளனர். அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்த முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

தெற்கிலிருந்து பெருமளவு மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றனர். அதுபோல யாழ்ப்பாண மக்களும் தென்பகுதிக்கு செல்கின்றனர். யாழில் குடிநீர் பிரச்சினை, காணிகளை விடுவித்தல் போன்றன பிரதான பிரச்சினைகளாக உள்ளன.

மேல் மாகாணம் நவீனமயப்படுத்தப்பட்டு பெருநகரமாக மாற்றப்படுவது போல, யாழ்ப்பாணமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அடுத்து வரும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கான புதிய பொருளாதார நிலையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

இதனிடையே தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்கி அவர்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்துவதை திட்டமிட்டு தடுத்துவரும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசு தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.