Home Blog Page 27

இலங்கை வந்தார் இத்தாலி அமைச்சர்!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi),இன்று  இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயமாக இது கருதப்படுகின்றது.

பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi) எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இலங்கையின் பல உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

செம்மணி–சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் புதன்கிழமை (3) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 213 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 42 வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பூர் மனித புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை சம்பூர் மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி அகழ்வுக்கான பாதீட்டுக்குரிய அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த வழக்கை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மூதூர் நீதிவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பூரில் மனித புதைகுழி காணப்படுவதாக கூறப்படும் பகுதியில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான பாதீடு, பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி, தொல் பொருள் திணைக்களத்தின் பிரதிநிதி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி ஆகியோரின் கையொப்பத்துடன் குறித்த பாதீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார். சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கரையோர பகுதியில் கடந்த ஜுலை மாதம் 20ஆம் திகதி மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைக்கு நிலையான செயற்பாட்டை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான விரிவான அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் குறிப்பிடத்தக்க சவால்கள் தொடர்பில் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், நீதி அமைச்சர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு 16 அம்ச பரிந்துரைகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் முன்வைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் பணியின் போது, புதைகுழி தளம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவத் துறை மற்றும் காணாமல் போனோர் அலுவலகம், நீதிபதி, தடயவியல் நிபுணர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்புகள் இடம்பெற்றமை தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையிடும் காலப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டதுடன், முதற்கட்ட விசாரணைகளில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட சடலங்கள் நீதிக்கு புறம்பான கொலைகளைக் குறிக்கும் வகையில் புதைக்கப்பட்டிருந்தன என்பதைக் எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளதென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான தடயவியல், மானுடவியல் மற்றும் தொல்பொருள் நிபுணர்கள் இல்லாமை, மேம்படுத்தப்பட்ட கார்பன்-டேட்டிங் முறைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் மரபணு பகுப்பாய்வில் உள்ள சவால்கள் உள்ளிட்ட நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய இடைவெளிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாகவும், தனது அறிக்கையில் கூறியுள்ளது.

நிதியுதவியில் தாமதங்கள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் ஏற்படும் மிரட்டல்கள், பொறுப்புக்கூறல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, குறித்த அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளது.

அதன்படி, மனித புதைகுழி விசாரணைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்குதல், மேம்பட்ட தடயவியல் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரபணு வங்கியை நிறுவுதல், அரச அதிகாரிகளால் இழைக்கப்பட்ட கடுமையான குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கான ஒரு சுயாதீன அலுவலகத்தை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சாட்சிகள் அல்லது ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்தப்படுவது தவிர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
விசாரணையை திறம்பட நிறைவு செய்யவும், புதைக்கப்பட்டு என்புக்கூடுகளாக மீட்கப்பட்டவர்களில் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசரத் தேவையையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான ஐ.நா அறிக்கை

எதிர்வரும் 08ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம், புதிய அரசாங்கத்திற்கு இது வரலாற்று சந்தர்ப்பமாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தக் காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் அதில் சுட்டிக்காடப்பட்டுள்ளது. இந்தநிலையில், மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு தேவையான இறுக்கமான பொறிமுறைகள் அவசியம் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறைகளை உறுதிப்படுத்துவதுடன், நீதிமன்ற கட்டமைப்பினூடாக பாதுகாப்பு துறைக்கான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையை குறித்த அறிக்கையூடாக வரவேற்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்து பணியாற்றும் நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம்: அமெரிக்கத் தூதர் ஜூலி சங் கருத்து

அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் இன்றைய பங்காண்மையானது கடல்சார் மரபினைத் தொடர்கிறது. எமது நாடுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றும் நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம் என அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவித்தார்.

மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவுடன் இணைந்து (MAU), அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோர் கொடவாய கப்பற் சிதைவு தொடர்பான கண்காட்சியினை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில்(  BMICH ) ஆரம்பித்து  வைத்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கடல்சார் மரபுரிமையென்பது தொடர்புகள் பற்றிய ஒரு கதையாகும். அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் இன்றைய பங்காண்மையானது அந்த மரபினைத் தொடர்கிறது.

துறைமுகங்கள் முதல் மக்கள் வரை, பாதுகாப்பினைப் பேணுவதற்காகவும், திறந்த வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், எமது நாடுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றும் நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம். பல நூற்றாண்டுகளாக பாதுகாப்பான கடற் பாதைகள் செழிப்பின் உந்துசக்தியாக இருந்துள்ளன என்பதையும், அவை அமெரிக்காவினதும் இலங்கையினதும் நலன்களுக்கு இன்றியமையாதவையாக விளங்குகின்றன என்பதையும் கொடவாய கப்பற் சிதைவு நினைவூட்டுகிறது.” எனக் குறிப்பிட்டார்.

உலகின் முக்கிய தலைவர்கள் முன் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றிய சீனா!

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு விழா தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகி நடைபெற்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த இராணுவ அணிவகுப்பை சீன அதிபர் ஜின்பிங்குடன், ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர்.

சீனா ராணுவ அணிவகுப்பு, சீனா, பெய்ஜிங், தியானன்மென், ஜின்பிங்

இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி டிரோன்கள் உள்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன.

 

அமெரிக்கா உருவாக்கப்போகும் விடுதலை இயக்கம் :வேல்ஸில் இருந்து  அருஸ்

மீண்டும் கிறீன்லாந்து பிரச்சினை சூடு பிடித்துள்ளது.அதாவது கிறீன்லாந்தை கைப் பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்பின் நோக்கம் செயல்வடிவம் பெறுவதற்கான நடை வடிக்கைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த நோக்கத்திற்காக இரண்டு திரைமறைவு நடை வடிக்கைகளை அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினர்  மேற்கொண்டுள்ளனர். ஒன்று கிறீன் லாந்தை தன்வசம் வைத்துள்ள டென்மார்க் மீது அபகீர்த்தியை ஏற்படுத்துதல். அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
அதன் வெளிப்பாடாகவே. கிரீன்லாந்தில் வாழும் பழங்குடி மக்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டாயப்படுத்தப் பட்ட கருத்தடை  திட்டத்தில் ஆயிரக்கணக்கான இளம் கிரீன்லாந்து பெண்கள் மற்றும் சிறுமி களுக்கு அவர்களின் ஒப்புதல் இல்லாமல் கருப் பையக சாதனங்கள் (IUDs) பொருத்தப் பட்டுள் ளன என்ற செய்திகள் தற்போது முதன்மை பெற்றுள்ளன. இது தொடர்பில் டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மன்னிப்பு கோரியுள்ளார்.“நடந்ததைநாம்மாற்றமுடியாது. ஆனால் நாம் பொறுப்பேற்க முடியும். எனவே,டென்மார்க் சார்பாக, நான் மன்னிப்பு கோரவிரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை 1960கள் மற்றும் 1970களில் இடம்பெற்றிருந்தது, 2022 வரை இது தொடர்பில் பெரும்பாலும் அறியப்படவில்லை. அந்த ஆண்டு, டேனிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பாட் காஸ் ட்ஸ்பைரல் காம்பாக்னென்  (திஸ் பைரல் பிரச் சாரம்) 4,500 பெண்கள் மற்றும் சிறுமிகள் வரை ஒப்புதல் இல்லாமல் கருத்தடை சாதனங்கள் உடலில் பொருத்தப்பட்ட பதிவுகளை வெளிக்கொண்டு வந்திருந்தது.
சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு அவர்களுக்கு தெரியாமல் சாதனங்கள் பொருத் தப்பட்டன,  மற்ற சந்தர்ப்பங்களில் மொழித்தடை அவர்கள் கருத்தடை நடைமுறையைப் புரிந்து கொள்ளவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் பொது மக்களின் சீற்றத்தை அதிகரித்துள்ளன, மேலும் பொறுப்புக் கூறலுக்கான புதிய கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
ஆனால் இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பின் வடிவம் என்பதை நாம் மறுக்க முடி யாது. இலங்கையிலும் போர் நிறைவு பெற்ற பின்னர் 2010 ஆம் ஆண்டுகளில் கிளிநொச்சியில் பல பெண்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் கருத்தடைகள் செய்யப்பட்டன என்ற குற்றச் சாட்டுக்கள் எழுந்திருந்தன.தற்போது டென்மார்க் மீது இனஅழிப்பு குற்றம் சுமத்தப் பட்டாலும் அதனை மறுக்க முடியாது.
அதே சமயம், டென்மார்க்கின் மட்டுப் படுத் தப்பட்ட தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தில் அமெரிக்காவின் தலையீட்டை அதிகரிப்பதற்கான புலனாய்வு நடவடிக்கைகள் இரகசியமாக ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக  வெளிவந்த தகவல்கள் தொடர்பாக, டென்மார்க் நாட்டின் உயர்மட்ட அமெரிக்க தூதரை டென்மார்க் அரசு வரவழைத்து இந்த வாரம் பேசியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பு டன் தொடர்புடைய மூன்று அமெரிக்கர்கள் கிரீன் லாந்தில் நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக டென்மார்க்கின் தேசிய ஊடகங்கள் தெரி வித்துள்ளன. அவர்களின் கருத்துப்படி பாது காப்பு அதிகாரிகள் உட்பட எட்டு உள்ளூர் அதி காரிகளும் இந்த நடைவடிக்கையில் ட்றம் பின் அதிகாரிகளுடன் இணைந்துள்ளனர்.  அவர் களுக்கு கொடுக்கப்பட்ட பணிகள் என்பது  கிரீன் லாந்துக்கும் டென்மார்க்கிற்கும் இடையி லான உறவுகளை பலவீனப்படுத்துவது, பிரி வினை வாத இயக்கத்திற்கு ஆட்களை ஆட் சேர்ப்பது என்ற நோக்கங்களைக் கொண்டது. கோபன்ஹேகனில் இருந்து பிரிந்து செல்வதை ஆதரிக்கும் கிரீன்லாந்துவாசிகளின் பட்டியல்களை ஒரு செயல்பாட்டாளர் சேரித்து வருவதாக தெரிவிக் கப்படுகின்றது.
கிறீன்லாந்தில் உள்ள மக்களுடன் உறவு களை ஏற்படுத்தி அவர்களை டென்மார்க்கிற்கு எதிராக திரும்பும் பணிகள் அங்கு இரகசியமாக இடம்பெற்றுவருவதாக டென்மார்க்கின் PET என்ற உளவுத்துறை தெரிவித்துள்ளதுடன், அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக தமது புலனாய்வு நடைவடிக்கைகளை கிரீன்லாந்தில் வலுப்படுத்தி யுள்ளதாக PET தெரிவித்துள்ளது.
டென்மார்க்கின் உள் விவகாரங்களில் எந்தவொரு தலையீடும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் வலியுறுத்தியுள்ளார், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர விரும்புவதாக டிரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார், அந்த தீவை ஒரு மூலோபாய ரீதியாக முக்கியமான சொத்து என்று அவர் அழைக்கிறார். அந்த இலக்கை அடைய இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதை கூட அவர் நிராகரிக்கவில்லை, ஆர்க்டிக்கில் அதன் கனிம வளத்தையும் அதன் தேவையையும் அவர் வலியுறுத்தி வருவதுடன்,அது ஒரு அழகான பனிக்கட்டி என்பதால் அல்ல, ஆர்க்டிக் பிராந்தியத் தின் பாதுகாப்பு, ஏவுகணை எச்சரிக்கை தளங்கள் மற்றும் இராணுவ மேன்மைக்கு பூமியில் மிகவும் மூலோபாயமான  இடம் என்பதால் அது தமக்கு தேவை என தெரிவித்துள்ளார்.
ஆர்க்டிக்கை கைப்பற்றுவதில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் பரந்த போட்டியின் மத்தியில் கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சிப் பதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த பிராந்தியத்தை வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான “மகத்தான ஆற்றல்” கொண்ட ஒரு மண்டலம் என்று விவரித்துள்ளார். அதாவது  அமெரிக்கா வடக்கில் ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.
எனவே கிறீலாந்துவிவகாரம் மிகப்பெரும் பிரச்சினையாக மாறப்போகிறது. மூலோபாய ஆதிக்கம் தேவைப்படும் பெரிய சக்திகளுக்கு சிறிய நாடுகள் தடையாக நிற்கும்போது என்ன நடக்கும் என்பதை வரலாறு எமக்கு கற்றுத்தந்துள்ளது. உலகில் நடக்கும் மற்றும் நடந்த பல போர்களின் பின்னணியும் அதுவே. பல நாடுகள் சுதந்திரம் பெற்று தனிநாடு ஆகியதற்கும், பல இனங்கள் ஆதிக்க சக்திகளிடம் அகப்பட்டு தொடர்ந்து அடிமையாக வாழ்வதற்கும் அதுவே காரணம்.
கிறீன்லாந்து மிகப் பெரியது, அதன் மக்கள் தொகை மிகச் சிறியது,அதாவது சுமார் 5 மில்லியன் மட்டுமே. தீவைத் தாங்களே திறம்படக் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு மிகக் குறைவு. தீவின் குறிப்பிடத்தக்க பகுதிகள் முற்றிலும் மக்கள் வசிக்காதவை. அனைத்து மக்களும் சில சிறிய நகரங்களில் குவிந்துள்ளனர். ஆனால் அவர்களின் தலைவிதியை அமெரிக்கா மற்றும் டென்மார்க் தீர்மானிக்கக்கூடாது என்ற கருத்துக்களும் உண்டு. எனினும், முழு தீவின் மீதும் அவர்களுக்கு அதிகார மில்லை என்றும் கூறப்படுகின்றது. மக்கள் வசிக் காத பகுதிகள் அமெரிக்கா, நோர்வே, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வற்றிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்க ளும் உள்ளன.
தீவை திறம்படக் கட்டுப்படுத்தவும், பாது காக்கவும், பயன்படுத்தவும் டென்மார்க்கிடம் எந்த வளங்களும் இல்லை. டென்மார்க் ஒரு மிகச் சிறிய நாடு, ஏற்கனவே அமெரிக்கர்கள் தங்கள் இரண்டு இராணுவத் தளங்களுடன் தீவில் பாதுகாப்பை வழங்குகிறார்கள். இருப்பினும், தீவு உண்மையில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும், ரஷ்யா, சீனா அல்லது நாடற்ற தேசத்து மக்கள் இந்த கட்டுப்பாடற்ற நிலத்தைப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா முற்பட்டு நிற்பதுடன், காலநிலைமாற்றத்தால் உருகிவரும் பனிப்பாறைகளும் ஆர்க்டிக் பிராந்தியத்தின் கனிம வளங்களை வெளிக்கொண்டுவருவதும் பிரதான காரணம்.
பூமியின் துருவங்கள் நகர்கின்றன – கிரீன் லாந்து மற்றும் அண்டார்டிகா மிக வேக மாக உருகி வருகின்றன, அவை கிரகத்தின் கட்டமைப்பை மாற்றுகின்றன – மேலும் பூமியின் துருவங்களை நகர்த்துகின்றன. 1900 முதல் 2018 வரையிலான தரவுகளை பகுப்பாய்வு செய்த விஞ்ஞானிகள், காலநிலை மாற்றம் ஏற்கனவே பூமியின் அச்சை மாற்றியமைத்து,GPS, செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி பயணங்களை கூட சீர்குலைத்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர். தற்போதைய விகிதத்தில் பனிப்பாறைகள் மறைந்து கொண்டே போனால்,2100 ஆம் ஆண்டுக்குள் துருவங்கள் 90 அடி வரை நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.
அதாவது பாதுகாப்புக்கு அப்பால் தற் போது மனிதர்கள் செல்லக்கூடிய பகுதிகளாக மாறிவரும் கிறீன்லாந்தின் அடியில் உள்ள கனிம வளம் தான் தற்போது அமெரிக்காவின் கவனத்திற்கான காரணம். டென்மார்க்கிடம் கனிமவளங்களை தாங்களாகவே பிரித்தெடுக்கும் தொழில்நுட்பமோ வளங்களோ இல்லை. அமெரிக்காவிடம் அந்த வளங்கள் இருந்தபோதும்  அவர்கள் அதை டென்மார்க்கின் நலனுக்காக செய்ய விரும்பவில்லை. இந்த முடக்கம் யாருக்கும் பயனளிக்காது என்பதே அமெரிக்காவின் வாதம். ஆனாலும் அதனை தனது நேட்டோ கூட்டாளிக ளுடன் பகிர்ந்துகொள்ளவும் அமெரிக்கா விரும்ப வில்லை.
அதாவது உக்ரைனை தொடர்ந்து நேட்டோ கூட்டணி மோதும் மற்றுமொரு களமாக கிறீன்லாந்து இருக்கப்போகின்றது. ஆனால் அதனை நேரடியாகச் செய்யாமல் மறைமுகமாகச் செய்வதற்காக அமெரிக்கா ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கப்போகின்றது. அதன் முதற்கட்டமே புலனாய்வு அதிகாரிகளின் தரையிறக்கம்.

கச்சத்தீவை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் – அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு!

கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதனை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்  பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தென்னிந்திய அரசியல்வாதிகள் அரசியல் இலாபத்திற்காக ஒரு சில கருத்துக்களை வெளியிடமுடியும். அதில் ஒன்றுதான் கச்சத்தீவு தொடர்பான கருத்துக்கள்.

கச்சத்தீவு இலங்கைக்குரியது. அதனை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டு வாக்காளர்களை உற்சாகப்படுத்த  அவர்கள் கூறும் கதைகளுக்கு நாம் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா கூட்டத் தொடர், தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கம்

ஜெனிவா மனித உரிமை சபை எதிரவரும் 8 ஆம் திகதி கூடவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தூதுவர்களை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் விளக்கமளித்து வருகிறார். மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் தமிழர்கள் விவகாரம் தொடர்பான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிமை சில உரையாடல்கள் இடம்பெற்றதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக இந்த உரையாடல்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னர் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் அதிகளவு மக்கள் பிரதநிதிகளை தமது அரசாங்கத்துக்காக தெரிவு செய்துள்ளதாகவும் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகின்றது.

ஆணையாளர் அனுப்பிய முன்னோடி கடிதம் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை  ஏற்க முடியாது எனவும் தூவர்களிடம் சுட்டிக்காட்டியதாக அறிய முடிகிறது.

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் உத்தரவுக்கு அமைவாக, ஆணையாளரின் கடிதம் குறித்து துறைசார்ந்த சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும, புதிய அரசாங்கத்துக்கு ஜெனீவா மனித உரிமைச் சபை சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை வெளியுறவு அமைச்சர் விஜத ஹேரத்தும் உறுப்பு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கவுள்ளார்.

ஜேவிபியை மையப்படுததிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கைத்தீவில் மீள் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்ற நிலைப்பாடு அரசாங்கத்திடம் உண்டு. இதனை ஜெனிவாவுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விஜித ஹேரத் தலைமையில் குழு ஒன்றும் ஜெனிவாவுக்கு பயணம் செய்யவுள்ளது. 2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தீர்மானத்தை நிராகரித்தது.

இலங்கை முப்படைகள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் எவரையும் காட்டிக் கொடுக்கும் நோக்கம் இல்லை என ஜேவிபி ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.