Home Blog Page 2693

அமெரிக்கா மீது சீனா வரி விதிப்பு – பதிலடி அமெரிக்க நிறுவனங்களை வெளியேறுமாறு ட்ரம்ப் உத்தரவு

சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா பீன், நிலக்கடலை, கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை சீனா நேற்று அதிரடியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனா பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக சீனா நேற்று அதிரடி காட்டியது.

இந்த தகவல் வெளியானதும் ஆவேசம் அடைந்த ட்ரம்ப் சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டுள்ளார். எனினும், தனியார் நிறுவனங்களை வெளியேற அதிபர் ட்ரம்ப் எந்த அதிகாரத்தின் கீழ் உத்தரவிடமுடியும் என்பது தெளிவாக இல்லை

அமெரிக்க சீனா இடையே வர்த்தக போர் உச்சகட்டத்தை எட்டி இருப்பதால் சீனாவை விட்டு வெளியேற அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆத்திரத்தை கொட்டி தீர்த்திருக்கும் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு சீனா தேவையில்லை என்றும், வெளிப்படையாக கூறினால் சீன பொருள் இல்லாமல் அமெரிக்கா இதைவிட நன்றாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிடம் கடந்த பல ஆண்டுகளாக பல லட்சம் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை அமெரிக்கா இழந்திருப்பதாக கூறியுள்ள ட்ரம்ப், சீனாவை முட்டாள் தனமாக நம்பி அமெரிக்கர்கள் இழப்பையே சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கர்களின் நூற்றுக்கணக்கான, லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள அறிவு சார் சொத்துரிமையை சீனா திருடி விட்டதாகவும், அதை தொடர சீனர்கள் விரும்புவதாகவும் ட்ரம்ப் ஆத்திரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீனாவின் எண்ணம் ஈடேற விடமாட்டேன் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி மாற்று இடத்தை தேட வேண்டும் என்று கூறியுள்ள ட்ரம்ப், அமெரிக்காவுக்கு திரும்பி வந்ததும் பொருட்களை பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மரணித்துவிட்டது

இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மரணித்துவிட்டது என்பதை உறுதி செய்கிறது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இனப்படுகொலையாளி சவேந்திரா சில்வா நியமிக்கபட்டமைக்கு சர்வதேசமே கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள் நிலையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையும் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு இந்த நியமனத்தை முன்னிட்டு ஆச்சரியப்படவில்லை, ஏனெனில் சிங்கள இனவாத அரசின் படுமோசமான தமிழர்களுக்கு எதிரான இப்படியான நகர்வுகள் சிறிலங்காவில் நடைபெறுவது இது ஒன்றும் முதல்தடைவ அல்ல.

இலங்கையின் வடக்கு கிழக்கினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் களின் தாய்மார்களும் உறவினர்களும் மைத்திரிபால சிறிசேனாவின் இக்கொடுரச் செயலுக்கு தமது கடும் எதிர்ப்பினையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடையும் போது சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணியிடமே உறவுகளை கையளித்தோம் என பல தமிழத் தாய்மார்கள் கண்ணீருடன் கூறுகின்றனர்.

 

ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை ஆணையாளர், ஐநா பொதுச்செயலாளர், மற்றும் பல சர்வதேச நாடுகள் சவேந்திர சில்வாவின் இராணுவப்பிரதானி நியமனத்தையொட்டி தமது பலத்த கண்டனத்தை சிறிலங்கா அரசிற்குத் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 42வது அமர்வு நடைபெற உள்ள இந்த நேரத்தில் சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது இலங்கைத் தீவில் மனித உரிமையும் சனனாயகமும் மருணித்துவிட்டது என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

 

சிறிலங்கா இராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வா கோட்டபாயவின் கட்டளைகளுக்கு இணங்க 2009ம் ஆண்டு தமிழினப் படுகொலையில் ஈடுபட்டதுடன் 146679 பேரை காணாமல் ஆக்கியும் 90000 தமிழப் பெண்களை விதவையளாக்கியும் உள்ளார். தேசியத்தலைவரின் அருமை மகன் பாலச்சந்திரனின் படுகொலையிலும் விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் படுகொலையிலும் சம்பந்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூற்றாண்டில் நடைபெற்ற கொடூரமான இனப்படு கொலைகளில், 2009ல் இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் இனப்படு கொலை தான் மிகக் கொடூரமானதாகும்.

அமெரிக்கப் பிரசா உரிமைகொண்ட கோட்டபாய இலங்கையின் இறையாண் மையை மீறி பாதுகாப்புச்செயலாளராக நியமிக்கப்பட்ட போது சர்வதேசம் வாய்பொத்தி மௌனமாகத் தான் இருந்தது. 2009ல் தமிழின அழிப்பின் முக்கிய பங்குதாரிகளான கோட்டாபாய மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக் கெதிராக இன்றுவரை எந்த நடவடிக்கைளும் எடுக்காமல் இழுத்தடிப்புச் செய்யும் சர்வதேசம் இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றது. சர்வதேசத்தின் புவியியல் பொருளாதார நலன் சார்ந்த தந்திரோபாயமாகவே இதை நாம் கணிக்கவேண்டி உள்ளது.

 

கடந்த கால ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பான் கி மூன் அமைத்த தாருஸ்மன் தலைமையிலான மூவர் கொண்ட ஆய்வுக்குழுவில் கடமை யாற்றி யவரும் சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான செயற்திட்டம் என்ற அமைப்பின் நிர்வாகியுமான ஜஸ்மின் சூக்கா அம்மையாரின் கூற்றுப்படி சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை வாய்ந்ததும் பாரதூரமானதுமாகும்.

சிறிலங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் சவேந்திர சில்வா விற்குக் கொடுக்கப்பட்ட தலைமை இராணுவத் தளபதி பதவி உயர்வானது ஒரு இனப்படு கொலையாளியை மேலும் பாதுகாக்கும் செயலாகவே கருதப்படு கின்றது. இச்செயலானது இலங்கையில் நீதிக்கும் பொறுப்புக் கூறலுக்கும் எந்த இடமும் இல்லை என்பதை பௌத்த பேரினவாதிகள் இன்னொரு முறை நிரூபித்துள்ளனர்.

 

சனாதிபதி எங்களை ஏமாற்றிவிட்டார் – தம்பிராசா செல்வராணி

யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஆட்சிக்கு வரும் அனைத்து சனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான தீர்வுகளை வழங்குவோம் என தெரிவத்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்து சிம்மாசனத்தில் ஏறியதும் வாக்குறுதிகளை மறந்து தங்களின் பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளின் ஈடுபட்டு வருவதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி குற்றம் சுமத்தியுள்ளார்.

அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்படி தெரிவித்து இருந்தார்.

அவர் மேலும் கூறுகையில்  

யுத்தம் முடிந்த நிலையில் எங்களின் கண் முன்னே இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்காக எமது உறவுகள் இன்னும் உயிருடன் தான் இருக்கின் றார்கள். இதனை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். இவ்வாறு உயிருடன் இருக்கின்ற எங்களின் உறவுகளை அரசு விடுதலை செய்ய வேண்டும் அவ்வாறு இல்லையேல் எமது போராட்டங்களும் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கும்.

சஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் எமது காணாமல் போன உறவுகள் தொடர்பாக நல்லதொரு தீர்வு வழங்குவதாக எமக்கு வாக்குறுதி கொடுத்து சனாதிபதியாக இருக்கின்றார் ஆனால் சனாதிபதி எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகின்றார்.

இன்று ஒருசில காணாமல் போனவர்களின் உறவினர்கள் புதிதாக ஒரு சங்கத்தை அம்பாறை தம்பிலுவில் பகுதியில் தோற்றுவித்து அரசுடன் சேர்ந்து கூலிக்கு வேலை செய்து கொண்டு எமது போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த சங்கம் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரின் துணையுடன் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வருவதுடன் காணாமல் போன உறவுகள் இனி திரும்பி வரப்போவதில்லை என்றும் அவர்களின் உறவுகளுக்கு நட்டஈடுகளை வழங்குமாறு ஊடகங்கள் வாயிலாக அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை வடக்கு, கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் மிக வன்மையாக கண்டிப்பதோடு காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லையென்று இவர்களுக்கு யார் தகவல் கொடுத்தது அப்படியானால் அரசு இவர்க ளுக்கு பணத்தைக் கொடுத்து இப்படி கூறச் செய்திருக்கின்றார்கள். எனவே இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் மேலும் தனது கருத்துக்களை ஊடக சந்திப்பின் போது தெரிவித்து இருந்தார்.

அவசரகலாச் சட்டம் நீக்கம்; ஆனால் கைதுகள்,தடுத்துவைத்தல் தொடர்பில் பாதிப்பில்லை – சிறி.காவல்துறை

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என சிறிலங்கா காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நாட்டில் தொடர்ந்தும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இது ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்டு விவாதம் நடாத்தப்பட்டு நீடிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரகலாச் சட்டம் நீக்கப் பட்ட இந்த அறிவிப்பானது சிறிலங்கா அரசின் ஒரு ஏமாற்று வித்தை என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

 

மக்களின் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்டது காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாதென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மாறாக திறக்கப்படுமாயின் அதற்காக போராட்டம் நடத்துவோமெனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று தமிழ் பிரதிநிதிகளும் இவ்விடயத்துக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்ற நிலையில், யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  பிராந்திய அலுவலகம்  இன்று திறக்கப்பட்டுள்ளது.

 

‘புரட்சி ஒன்றிற்கு தயாராகுங்கள்’ – மாத்தறையில் சஜித்

ஒக்டோபர் புரட்சிக்கு அனைவரும் தயாராகுங்கள். உறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். எவரும் அச்சம் கொள்ள வேண்டாமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சாதாரண மக்களை மன்னர்களாக்கும் வகையில் எமது சமூக, அரசியல், பொருளாதார கொள்கைகளும், செயற்பாடுகளும் அமையும். ‘இலங்கைக்கு முன்னுரிமை’ என்பதை மையப்படுத்தியே எமது பயணம் அமையும். மக்களுடன் பயணிக்கும் தருணத்தில் மக்களுக்காக நடுவீதியில் உயிர்துறக்கவும் நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்ைகயில்,

இன்னும் சில மாதங்களில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. எவரும் அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியாக தேர்தலில்

போட்டியிடுவேன். நாட்டை பலப்படுத்தும், அபிவிருத்தி செய்யும், தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே எமது பயணம் அமையும்.

பெரும் தலைமைத்துவத்தை நான் நாட்டுக்காக பெற்றுக்கொடுக்க பார்க்கின்றேன். இலங்கைக்கு பெரும் தலைமைத்துவத்தை வழங்கி உலகை வெற்றிக்கொள்வோம். தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், நாட்டை ஒற்றுமைப்படுத்தும். நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்வைக்கப்போம்.

அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்கும் நிலையை உருவாக்குவோம். சகவாழ்வு, சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டின் மனிதவுரிமைகளை பாதுகாப்போம். அனைவருக்கும் பேசும், அரசியல் செய்யும் உரிமையை ஏற்படுத்தியுள்ளோம். இன்று எழுந்துள்ள காலமென்பது நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் காலமாகும். வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்வுப்படுத்தும் உறுதிப்படுத்தும் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களின் வருமானத்தை அதிகரிப்போம்.

இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்வரும் டிசம்பர் மாதம் மக்கள் அந்த தீர்மானத்தை எடுக்கும் போது நான் இரவு, பகல் பாராது பணிகளை முன்னெடுத்து பலமான நாட்டை உருவாக்குவேன்.

இலங்கைக்கு அனைத்திலும் முன்னுரிமை என்ற அடிப்படையில் பயணிப்போம். அனைவருக்கும் பிரதிபலனைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.

மாடமாளிகையில் இருக்காது பாதைக்கு இறங்கி வீடு வீடாக சென்று எமது பணிகளை முன்னெடுப்போம். இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தகுதியுடைய இளைஞர் சமூகத்திற்கு தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நவீனமயப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தை விரைவாக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். நாம் நாட்டுக்காக சாதாரண மக்களாக வாழ தயார். ஊழலுக்கு இடமளிக்க முடியாது. ஊழல்களால் தான் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைகிறது என்றார்.

கோவை தீவிரவாதிகள் ஊடுருவல்; 5 பேர் இலங்கை முஸ்லீம்கள், ஒருவர் பாக்கிஸ்தானியர்

லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

லஷ்கர்-இ-தைபாவின் ஆறு உறுப்பினர்கள் குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் கோவையில் குடியேறியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கோவைக்கு நேற்று நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தனை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்றவர்கள் இலங்கை இஸ்லாமியர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கோவையில் இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்க கூடும் என்ற அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை , மற்றும் இருசக்கர , நான்கு சக்கர வாகனங்கள் பேட்ரோல், மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர்
சீருடையிலும்,சிவில் உடையிலும் கண்காணிப்பு போன்ற பணிகளில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாநகரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி மோப்ப நாய் பிரிவு, வெடி குண்டு மீட்பு பிரிவு, காவல் விரைவு தகவல் பிரிவு மற்றும் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதே போல மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போதிய பாதிகாப்பு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவ, சந்தேகிக்கும் வகையில் யாராவது தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தருவதாக சொல்லவில்லை – சிறிலங்கா ஜனாதிபதி

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தர சிறிலங்கா அரசு சம்மதித்து விட்டதாக, சிறிலங்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அதிபர் மறுத்துள்ளார்.

அண்மையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ இரத்துச் செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்க தி.மு.க காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, இதர கட்சிகள் அனைத்தும் வரவேற்பு தெரிவித்ததோடு, அது தொடர்பான மசோதாவிற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை யில் ஆதரவும் தெரிவித்திருந்தன. இதனால் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, அமுல்ப்படுத்தப்பட்டது.

இம்மசோதா அமுல்ப்படுத்தப்பட்டதன் மூலம் காஷ்மீர், மாநில அந்தஸ்தை இழந்துள்ளது. அதேநேரம் சட்டப் பேரவை பிரதிநிதிகள் கொண்ட யூனியன் பிரதேசமாக காஷ்மீரும், பிரதிநிதிகள் யாருமின்றி, அதிகாரிகளின்கீழ் நிர்வாகம் கொண்ட பகுதியாக லடாக்கும் பிரிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கனவே அமெரிக்காவின் ஆதரவைக் கோரி பாகிஸ்தான் கடுமையாக போராடி, அது தோல்வியில் முடிந்தது. ஐ.நாவில் இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், அங்கும் பாகிஸ்தான் அரசால் வெற்றிபெற இயலவில்லை.

இத்தகைய சூழலில் சிறிலங்கா அரசு பாகிஸ்தான் விவகாரத்தில் தங்கள் நாட்டிற்கு ஆதரவாக இருப்பதாக உத்திரவாதம் அளித்துள்ளது என்று சிறிலங்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் தரப்பில் கடந்த 20ஆம் திகதி அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த அறிவிப்பின் மூலம் நீதியை நிலைநாட்ட சிறிலங்கா தங்களுக்கு உதவியிருப்பதாக பாகிஸ்தான் அதிபரும் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வெற்றியும்கூட நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

சிறிலங்கா அதிபர் தரப்பில் 21ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பாகிஸ்தான் தூதுவர் சாஹித் அகமத் கடந்த 20ஆம் திகதி சந்தித்து, இந்திய ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பற்றி பேசினார். அப்போது சட்டவிரோதமாக காஷ்மீரை சொந்தம் கொண்டாட சட்டப்பிரிவு 370 நீக்கத்தை இந்திய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த 5ஆம் திகதி முதல் காஷ்மீர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்க்பட்டுள்ளதாகவும், இது மனித உரிமை பறிப்புக்கு வழிவகுப்பதாகவும் எடுத்துரைத்த அவர், இது தொடர்பாக ஐ.நாவிலும் முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது காஷ்மீர் மக்களின் விருப்பப்படி, ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றி இது தொடர்பான முடிவுகளை பாகிஸ்தானும், இந்தியாவும் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தினார். அத்தோடு காஷ்மீரில் தற்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அமைதியை ஏற்படுத்த கட்டாயம் எடுக்கப்பட வேண்டிய ஒன்று தான் என்றும், இவ்விவகாரத்தில் இரு நாடுகளும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதே சிறந்தது என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு தருவதாக சிறிலங்கா அதிபர் எங்கும் கூறவில்லை. பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்கு முறையாக மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்கம் விகாரை தமிழருக்கு சொந்தமானதே

கன்னியா வெல்கம் விகாரைக்குச் சொந்தமானது என பிக்குகள் கூறுகின்றார்கள். ஆனால் வெல்கம் விகாரையே அவர்களுக்கு சொந்தமானது அல்ல.

இலங்கை தமிழ் பௌத்தர்களின் ஒரேயொரு அடையாளச் சின்னம் வெல்கம் விகாரை என்னும் இராஜராஜப் பெரும்பள்ளி.

இங்கு மொத்தமாக 16 தமிழ் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தமிழருக்குரிய இந்த பௌத்தப் பள்ளி பற்றி பேராசிரியர் பரணவிதான 1954மற்றும் 1960ஆம் ஆண்டு தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

திருகோணமலைக்கு அண்மையில் உள்ளதும் இந்நாளில் நாதனார் கோயில் என அழைக்கப்படுவதுமான புராதனமான வெல்கம் விகாரையின் அடித்தளப் படைகள் திராவிடக் கலைப்பாணியில் அமைந்தவை. இடிந்துள்ள நிலையில் இதுவரை கிடைத்துள்ள ஒரேயொரு தமிழ் பௌத்தப் பள்ளி என்ற காரணத்தினால் அங்குள்ள தொல்பொருள் சின்னங்கள் அனைவரினதும் கவனத்திற்குரியவை.

welcome 2 வெல்கம் விகாரை தமிழருக்கு சொந்தமானதேஇந்த தமிழ் விகாரையின் அடித்தளப் படைகளின் வேலைப்பாடுகள் பொலநறுவையில் சோழர்கள் அமைத்த இந்துக் கோயில்களில் உள்ளவற்றைப் போன்றவையாகும். இவ்வாறு பரணவிதான குறிப்பிட்டுள்ளார்.

எனவே கன்னியா மட்டுமல்ல வெல்கம் விகாரையும் தமிழர்களுக்குச் சொந்தமானவை தான்.

welcom 3 வெல்கம் விகாரை தமிழருக்கு சொந்தமானதே

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் சந்தித்துக் கொண்டனர்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையே மிகவும் தீர்க்கமான சந்திப்பு ஒன்று 21.08 அன்றிரவு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக அறிய முடிகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் எதிர்காலம் மற்றும் அரசியல் உபாயங்கள் குறித்து இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவிற்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற நிலையில் அது வெற்றிகரமாக இடம்பெறாதிருக்கின்ற சூழ்நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதியை சந்தித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, மகிந்த- கோட்டா அணிக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், 2015ஆம் ஆண்டில் தைரியமாக எடுத்த துணிச்சல் மிகு தீர்மானங்களை மீண்டும் எடுக்கும்படி வலியுறுத்தியிருப்பதாக அறிய முடிகின்றது.