சென்னை கிழக்குக் கடற்கரை (ECR) சாலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன பிரதமர் ஷி ஜின்-பிங் இடையிலான முறைசாரா உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 13ஆம் திகதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மத்திய மாநில அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த உச்சி மாநாட்டின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரத்திலுள்ள பல்வேறு இடங்களைப் பார்வையிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருநாட்டு தலைவர்களுக்கிடையேயான முதல் முறைசாரா உச்சி மாநாடு சென்ற ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்த போது ஹூபே மாகாண அருங்காட்சியகத்தை இருவரும் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் என்பது தமிழகத்தின் பெருமை மிக்க மிகப் பழமையான சுற்றுலா மையமாக திகழ்கின்றது. இங்கு இயற்கை வளங்கள் மிகுந்து காணப்படும். கற்சிலைகள், கண்காட்சி மையங்கள் என பலவகையான சிறப்பு பொருந்திய சுற்றுலா மையமாக இது அமைந்துள்ளது.
அமெரிக்காவில் கோத்தபயா ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை நிராகரிக்குமாறு கோரி கோத்தபயா ராஜபக்ஷவின் சட்டத்தரணி அசோக டி சில்வா, தாக்கல் செய்த வழக்கு, எதிர்வரும் 16ஆம் திகதி கலிபோர்னியா நீதிபதி மெனுவெல் ரியல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
வழக்கு தாக்கல் செய்த பெண் வெளிநாடு ஒன்றில் வாழ்கின்றார். இந்நிலையில் அமெரிக்கா இந்த வழக்குடன் ஒருபோதும் தொடர்புபடவில்லை. இதனால் அமெரிக்க நீதிமன்றத்திற்கு அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க அதிகாரம் இல்லை என கோத்தபயாவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லசந்தவின் கொலை கோத்தபயா ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய போது நடந்ததாகவும், இருப்பினும் அதற்கும் கோத்தபயாவிற்கும் தொடர்பு இல்லை எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பை தடைப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டம் மூலமாகவே பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பல இழக்கப்பட்டு புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பம் இல்லாது போனது.
தேர்தல் காலங்களில் மாத்திரம் பிரதான கட்சிகளின் தேர்தல் வெற்றிக்காக தமிழ் மக்களை நாடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.
அரசியல் அமைப்பு தடைகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கில் முன்வைத்த கருத்துக்கள் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்கள் இன்று மாலை தோண்டியெடுக்கப்பட்டன.
ஏப்ரல் 21 மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது காத்தான்குடியை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியான முகமட் ஆஸாத் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 75க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் குண்டுத்தாக்குதலை நடாத்திய சூத்திரதாரிய் உடற்பாகங்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன் விசாரணைகளை தொடர்ந்து குறித்த உடற்பாகங்களை புதைப்பதற்கு நீதிமன்றம் கட்டளை அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் குறித்த உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த 26ஆம் திகதி புதைக்கப்பட்டதை தொடர்ந்து 27ஆம் திகதி அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் குறித்த உடற்பாகங்களை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் ஆகியோர் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பில் அரசசட்டத்தரணி யாதவன் ஊடாக மனுத்தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த சடலத்தினை அங்கிருந்து அகற்றுவதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கு அமைய இன்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் குறித்த உடற்பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டன.பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த உடற்பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டன.
குறித்த உடற்பாகங்கள் தோண்டியெடுக்கும் பகுதிக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்ääபிரதி முதல்வர் க.சத்தியசீலன்ääமண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் கே.வாசுதேவன்ääபிரதேச கிராம சேவையாளர் உட்பட உயர் பொலிஸ் உயர் அதிகாரிகளும் ஆஜராகியிருந்தனர்.
குறித்த உடற்பாகங்களை புதைப்பற்கு பொருத்தமான இடமொன்றை தெரிவுசெய்யும் வரையில் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்க பணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உடற்பாகங்களை மீட்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மயானத்திற்கு வெளிப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்ääமுன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம்ääமாநகரசபை உறுப்பினர்கள்ääபொதுமக்கள் என ஏராளமானோர் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனது தந்தையரின் வழியில் சென்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதுடன், மாகாணசபைகளுக்கு அதிகமான அதிகாரங்களையும் வழங்குவேன் என ஐ.தே.கவின் அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
நேற்று (31) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவிலில் மாதிரிக் கிராமம் ஒன்றை திறந்துவைத்து பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் வேட்பாளரை ஐ.தே.க இன்னும் தெரிவுசெய்யாத போதும் சஜித் பிரேமதாசா அதற்காக போட்டியிட்டு வருகின்றார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
13 ஆவது திருத்தச்சட்டம் மிகவும் குறைவான அதிகாரங்களையே கொண்டுள்ளது. அதற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணமுடியும்.
தேர்தலின் போது எல்லோரும் இதனை பேசுவதுண்டு ஆனால் யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கும் அதிகமான தீர்வு என வெளிநாடுகளில் பேசும் அரசியல்வாதிகள் உள்நாட்டில் அதற்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொள்கின்றனர்.
ஆனால் அதனை நான் செய்யமாட்டேன், எனது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவேன். நாட்டை பிரிக்காது அதிகாரங்களை பகிர்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் பற்றி நாம் எல்லோரும் அறிந்திருக்கின்றோம். ஆனால் யாரும் அறியாத “மால்டா பெருஞ்சுவர்“ பற்றி இப்போது பார்ப்போம்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் மால்டா (தீவு நாடு), மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் ஒன்று. அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு 6,700 பேர் வாழும் நாடாக இது மாறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.,
மத்தியதரைக் கடல் பகுதி தீவு நாட்டை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வரும் நிலையில், “மால்டா பெருஞ்சுவர்“ பற்றி பல ஆண்டுகள் தெரியாமலேயே இருந்தது.
மால்டா தீவின் வடக்குப் பகுதி முழுவதும் பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட நிலையில் ஓர் அற்புதமான எல்லை இருந்துள்ளதை நம்ப முடியவில்லை. அப்படிப்பட்ட “மால்டா பெருஞ்சுவர்“ பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கு தருகின்றோம்.
12 கிலோமீற்றர் நீளத்தில் பல கோட்டை அரண்களின் வலையமைப்போடு மால்டா தீவின் வடக்குப் பகுதி முழுவதும் இந்த “மால்டா பெருஞ்சுவர்“ அமைந்துள்ளது. ஆனால், பல தசாப்தங்களாக இது பற்றி பலருக்கும் தெரியாமலே இருந்து வந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகின்றது.
விக்டோரியா லைன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த “மால்டா பெருஞ்சுவர்“ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக, மேற்கில் ஃபோம் இர்-ரிக் (Fomm ir-Rih) தொடங்கி கிழக்கில் மெட்லீனா (Medliena) வரை சுமார் 12 கிலோமீற்றர் மால்டாவின் பாதுகாப்பு சுவர் தொடராக இது விரிகின்றது. ஆனால், வாலெட்டாவின் கிராண்ட் துறைமுகம் அல்லது இடைக்கால நகரமான மெதீனாவைப் போலல்லாமல் விக்டோரியா லைன்ஸ் பற்றி சிலரே கேள்விப்பட்டிருக்கின்றார்கள்.
சீனப் பெருஞ்சுவருக்கு மால்டாவின் பதிலடியாக 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பிரிட்டன் படையால் கட்டப்பட்டது தான் விக்டோரியா லைன்ஸ் இந்த வலையமைப்பில் கோட்டைகள் பீரங்கித் தொகுதிகள், நுழைவாயில்கள், உயரத்தில் இருந்து ஷெல் தாக்குதல் நடத்தும் நிலைகள் மற்றும் இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் தொடர்ச்சியான காலாட்படை தங்குமிடங்கள் ஆகியவை உள்ளன.
1800களில் றோயல் பொறியியலாளர்களால் கட்டப்படத் தொடங்கிய விக்டோரியா லைன்ஸ், மகாராணி விக்டோரியாவின் பொன்விழா ஆண்டான 1987இல் திறக்கப்பட்டது. தனித்தனியாக கட்டப்பட்ட கோட்டை அரண்களை இணைத்து பிரிட்டன் இராணுவம் ரோந்து செல்வதற்கு தொடர் பாதையை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் அப்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தாலி ஆகிய பிற நாடுகள், பிரிட்டனின் முக்கிய தளங்களை முற்றுகையிடலாம் என்பதால் பிரிட்டன் அப்போது மிகவும் எச்சரிக்கையோடு செயற்பட்டு வந்தது.
ஆபிரிக்காவை சுற்றி செல்லாமல் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்த இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்ல ஐரோப்பிய நாடுகளை அனுமதிக்கும் சூயஸ் கால்வாயை 1869ஆம் ஆண்டு பிரிட்டன் திறந்தது. இதுதான், விக்டோரியா லைன்ஸை கட்டுவதற்குப் பின்னால் இருந்த முக்கிய காரணமாகும். அதிக கப்பல்கள் மத்தியதரைக் கடலில் பயணம் மேற்கொள்வது, மால்டாவின் மீது பிரிட்டனின் வலிமை அதிகரிக்க முக்கியமாக அமைந்தது.
மேற்கில் இயற்கையான பாறைகளும், தெற்கில் கோட்டை அரண்களும் தீவின் பிற பகுதிகளைப் பாதுகாத்தன. ஆனால், கிழக்கிலுள்ள வாலெட்டா கிராண்ட் துறைமுகத்தின் பின்னால் இருந்து தொடுக்கப்படும் தரை தாக்குதல்களும், கடற்படை நிலைகளும், பிரிட்டன் கடற்படைக்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்தது. மால்டாவின் வடக்கு பகுதியோரம் மட்டுமே தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து நிறைந்த பகுதியாக இருந்தது.
பிரிட்டன் அச்சம் கொண்டிருந்தாலும், விக்டோரியா லைன்ஸ் வழியாக எதிரிகள் யாரும் நுழைய முற்படவில்லை. 1907ஆம் ஆண்டு இது கைவிடப்பட்டதோடு, அங்கிருந்த படை துருப்புகள் தீவின் கடலோர பகுதிகளுக்கு மாற்றப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகள் ஆக்கிரமிப்பின் போது, விக்டோரியா லைன்ஸ் புதுப்பிக்கப்பட்டது. இரண்டாவது பாதுகாப்புக் கோடாக புதிய பாதுகாப்பு நிலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்தப் போரிலிருந்தும் இந்தக் கோட்டை அரண்கள் தப்பின.
பெரிதாக வெளியே தெரியாமல் இருந்த விக்டோரியா லைன்ஸின் நிலைமை இனிமேல் மாறப்போகின்றது. இது பற்றி வெளியே தெரியவந்து மாபெரும் பிரபலம் ஏற்படத் தொடங்கிய பின்னர்தான், தங்கள் நாட்டில் மகத்தான, கண்டுகொள்ளப்படாத பொக்கிஷம் உள்ளது என மால்டா விழிப்படையத் தொடங்கியுள்ளது.. இந்த ஆண்டு இறுதியில் இந்த இடத்தை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகம் செய்ய மால்டா சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
மாலைதீவில் எதிர்வரும் செப்டெம்பர் 3, 4ஆம் திகதிகளில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டின் இந்திய பெருங்கடல் மாநாட்டில் மாலைதீவு அதிபர், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ள இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து தப்பி புகலிடத்தஞ்சம்கோரிய ஈழத்தமிழ் குடும்பம் ஒன்றை அவுஸ்திரேலியா அரசு பலவந்தமாக நாடுகடத்தியதற்கும், அவர்களை தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைத்திருப்பதற்கும் எதிராக இன்று (01) அவுஸ்திரேலியாவின் நகரங்களில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரேதமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
4 மற்றும் 2 வயதுகளை உடைய இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பத்தை அவுஸ்திரேலியா அரசு கடந்த வெள்ளிக்கிமை பலவந்தமாக நாடுகடத்த முற்பட்டிருந்தது. ஆனால் இறுதிநேரத்தில் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டைத் தொடர்ந்து அவர்களுடன் சென்ற விமானம் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பியிருந்தது.
ஆனால் அவர்களை அவர்களின் வதிவிடமான குயின்ஸ்லாந்தில் வசிக்கவிடாது இன்று (01) கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு சென்றுள்ளது அவுஸ்திரேலியா அரசு.
அவர்கள் சிறீலங்காவுக்கு அனுப்பப்பட்டால் சிறீலங்கா அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என கிறீன் கட்சியின் தலைவர் றிச்சாட் டி நற்றலி தெரிவித்துள்ளார். அவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக வசித்த குயின்ஸ்லாந்து என்ற இடத்தில் வாழும் மக்களிடம் அவர்களுக்கு அதிக ஆதாவு உள்ளது எனவும், அரசின் நடவடிக்கை மிகவும் கொடுமையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் படகில் வந்த அவர்களின் புகலிடத் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் உள்விவகார அமைச்சர் பிற்றர் டற்றன் தெரிவித்துள்ளார்.
புpரியா, நடேசலிங்கம் ஆகியவர்களுடன் கோபிகா (4) மற்றும் தருணிகா (2) ஆகிய சிறுமிகளுமே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த தீவில் தாங்கள் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா வானொலிக்கு கருத்து தெரிவிக்கும்போது பிரியா தெரிவித்துள்ளார். குழந்தைகள் தொடர்ந்து அழுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் துணையுடன் புனரமைக்கப்பட்ட பலாலி விமான நிலையம் அடுத்த மாத நடுப்பகுதியில் சேவையைத் தொடர இருக்கிறது.
இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போது இந்தியாவின் நுழைவு, அரசியல் ரீதியாக எமக்கு அதிருப்தியை உண்டாக்கினாலும் தமிழர் பொருண்மியம் கருதி ஒரு சிறு ஆறுதலாக இருந்தது.
ஏனெனில் புலத்திலிருந்து நேரடியாக கொழும்பு செல்லாமல் சென்னை-திருச்சி வழியாக யாழ் செல்வதென்பது தமிழர் பொருண்மியத்திற்கு பலம் சேர்க்கும் ஒன்று.
அத்துடன் தமிழீழத்திலிருந்து கொழும்பு செல்லாமல் தமிழகம் சென்று திரும்புவது நேரத்தையும்/ செலவையும் மட்டுப்படுத்துவது மட்டுமல்ல இரு நிலத்திற்குமிடையிலான ஒரு புதிய வியாபாரப் பாதையையும் உருவாக்க வல்லது.
பண்டைய காலம் தொடக்கம் போர் உச்சத்தை அடைந்து சிங்களக் கடற்படை கெடுபிடி அதிகரிக்கும் வரை இந்த வணிகப் பதையினூடாக தமிழ் வணிகம் செழிப்புற்று ஓரளவு தன்னிறைவடையும் நிலை இருந்தது.
இப் புதிய விமான சேவையினூடாக புலம், தமிழகம், தாயகம் சார்ந்து ஒரு புதிய தமிழ் வர்த்தக வலயம் உருவாகும் வாய்ப்பு இருந்தது.
பெரும் பொருண்மிய சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் எமது மக்களுக்கு இது தேவையாகவும் இருந்தது.
ஆனால் தற்போது கிடைத்திருக்கும் செய்தி எமக்குப் பேரிடையாக இருக்கிறது.
தமிழக விமான நிலையங்களைத் தவிர்த்து விட்டு கொச்சி, பெங்களூர், ஐதராபாத் உட்பட வேறு மாநில விமான நிலையங்களுக்கிடையில்தான் இச் சேவை நடைபெற உள்ளது.
இது இரு தமிழர் நிலங்களையும் என்றுமே ஒட்ட முடியாதவாறு பிரித்து வைத்துக் கையாளும் சிங்கள-இந்தியக் கூட்டுச் சதி.
இது இரு தமிழர் பொருண்மியத்தின் மீதான கூட்டுத் தாக்குதலும் கூட.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.
தமிழீழ நடைமுறை அரசு வெளி உதவி எதுவுமில்லாமல் வெற்றிகரமாக இயங்கியதென்றால் அதன் பின் புலத்தில் கண்ணுக்குத் தெரியாத தமிழ் பொருண்மிய வலையமைப்பு ஒன்று இயங்கியதுதான் காரணம்.
அதை விரிவாக விளக்க இங்கு இடம் காணாது.
புலத்திற்கும் தாயகத்திற்கும் இடையில் நிகழ்ந்த பணப்புழங்கலை மட்டும் சுருக்கமாக இங்கு விளக்க முயல்கிறேன்.
நாம் ஏறத்தாழ 25 வருடங்களாக “தமிழீழம்” என்ற ஒரு நிழல் அரசின் குடிமக்களாக இருந்தோம். இந்த நிழல் அரசின் ஆட்சியாளர்களான விடுதலைப் புலிகளை எதிர்த்தவர்கள் கூட விரும்பியோ விரும்பாமலோ இந்த அரசின் பங்காளிகளாகவே இருந்தார்கள்.
ஒரு அரசிற்குரிய (நிதி, நீதி, நிர்வாகம், காவல்துறை, இராணுவம் இன்ன பிற..) அனைத்து கட்டமைப்புக்களும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை செயற்பட்டுக் கொண்டேயிருந்தன. இந்த நிழல் அரசின் அடிப்படையில் தான் புலத்தில் கூட தமிழர்களின் வாழ்வும் கட்டமைக்கப்பட்டிருந்தது.
இங்கு புலத்தில் புலிகளை எதிர்த்தவர்கள் கூட ஏதோ ஒரு வகையில் விரும்பியோ விரும்பாமலோ இந்த கட்டமைப்புக்குள் சிக்கியவர்களாகவே இருந்தார்கள்.
எனவே எமது பொருளாதாரம் சார்ந்த வாழ்வும் உழைப்பும் நிதி சேகரிப்பும் பங்கீடும் கடந்த மூன்று தசாப்தங்களாக சிறீலங்கா என்ற அரசாங்கத்தை மையப்படுத்தி இருக்கவில்லை. அதிலிருந்து விலத்தியே இதுவரை காலமும் இருந்து வந்தது. புலிகளே இதன் மையமாக இருந்தார்கள்.
அங்கீகரிக்கப்படாத ஒரு தேசம் என்ற வகையில் உலக சட்ட ஒழுங்குகளுக்குள் – வரையறைக்குள் உட்பட்டும் உட்படாமலும் இந்த பிணைப்பும் தொடர்பும் இருந்தது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் மூலம் ஒரு நாட்டிற்குரிய கட்டமைப்பு நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு அங்கீகாரத்துடன் இயங்கவில்லை என்பதைத் தவிர மற்றபடி அது ஒரு தனித் தேசம். நாம் அந்த தேசத்தை அடையாளப்படுத்தும் குடிமக்கள்.
எனவே எமது வாழ்வு அந்த தேச வரையறைக்குள் தான் கட்டமைக்கப்பட்டிருந்ததேயொழிய சிறீலங்கா என்ற தேசத்திற்குரிய எந்த வரையறையையும் கொண்டிருக்கவில்லை – குறிப்பாக பொருண்மியம்.
பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீடு என்பது பொருளாதாரத்தின் மிக முக்கியமான அம்சம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு பிறகு இச் சுழற்சி ஈழத்தமிழர்களிறகிடையே தடைப்பட்டிருக்கிறது.
இதை வெளியாக உணரமுடியாது.
புலிகள் – புலிகளின் நிழல் அரசு – தாயக மக்கள் – புலம் பெயர் மக்கள் என்ற இந்த வலைப் பின்னல் போராட்ட ஆதரவு சார்ந்தும் குடும்ப உறவுகள் சார்ந்தும் ஒரு பொருளாதார – பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீட்டை கொண்டிருந்தது. தற்போது அது தகர்ந்திருக்கிறது.
எமது மக்கள் இன்று வரை சந்திக்கும் நெருக்கடிக்கு இதுதான் காரணம்.
போதாதற்கு புலத்து உழைப்பு முழுவதும் சிங்கள அரசிற்கு பெரும் அந்நிய செலாவணி வருமானத்தை ஈட்டிக் கொடுத்து வருகிறது. எவ்வளவு பெரிய துயரம் இது.
(இது குறித்த மேலதிக விபரம் அறிய விரும்புவோர் கீழுள்ள இணைப்பில் தமிழீழ நடைமுறை அரசு / புலம் சார்ந்த பொருண்மியம் குறித்த எனது நேர்காணல் ஒன்று உள்ளது . பார்க்கவும்: http://www.eelamenews.com/?p=117485)
இந்த விமான பாதையினூடாக ஓரளவு தமிழர்களுக்குள் மட்டும் சுழற்சி ஏற்படும் தமிழர் பொருண்மிய வலயம் உருவாகும் என்ற நம் சிந்தனையின் மீது மண்ணள்ளிப் போட்டுள்ளது இன அழிப்பு அரச கூட்டணி.
நீண்ட காலமாக தலை மன்னாருக்கும்-இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பற் சேவையை இழுத்தடிப்பதற்குக் காரணமும் இதுதான்.
இரு நிலத்திற்கும் இடையிலான அரசியல்-பண்பாட்டு-பொருண்மிய உறவுகள் இன்னும் வலுப்பெற்று விடும் என்ற அச்சம்தான் இரு அரசுகளும் அதை இழுத்தடிக்கின்றன.
தற்போது விமானங்களை பாதை மாற்றுவதற்கும் இதுதான் காரணம்.
எம்மை அழித்தொழிக்க எத்தகைய நுட்பமான சிந்தனைகளை அவர்கள் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.
நாமோ ஒரு பக்கம் இணக்க அரசியலும் மறு பக்கம் தமிழ் தேச சிந்தனைகளை கேலியும் – கிண்டலுமாகக் கடந்து கொண்டிருக்கிறோம்.