Home Blog Page 2447

அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

“நாம் அழிந்து போவோம் என்று அவுஸ்திரேலியா எண்ணியது”. நாம் இன்றைய நாளில் (ஜனவரி 26) மறுமலர்ச்சி பெறும் பூர்வகுடிகள்.  

அல்ஜசீரா ஊடகத்தின் தொகுப்பாளர்களில் ஒருவரான ஸ்ரான் கிரான்ட் (Stand Grant) குடும்பத்தினர் பூர்வகுடிகளின் மொழி கலாச்சார மறுமலர்ச்சியில் முன்னணியில் நிற்பவர்கள். இங்கு அவர் தனது கதையை சொல்கிறார்.

வேற்று மொழி ஒன்றை பேசியே நான் வளர்ந்தேன்.

200 ஆண்டுகளுக்கு முன் குற்றவாளிகளை கொண்டுவந்த கப்பல்களில் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்ட மொழி அது. எனது முன்னோர்கள் அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட போது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மொழி.

1830 இல்,  மேல்மத்திய நியூசவுத் வேல்சின் விராஜூவரி (Wiradjuri) பகுதியை சேர்ந்த எனது மக்கள் மேல் இராணுவ சட்டம் போடப்பட்டது. எனது மக்களை கண்டதும் சுடும் சட்டம் இது. பிரித்தானிய வந்தேறிகள் கூட்டமாக வேட்டைக்கு சென்று விராஜூவரி மக்களை சுற்றி வளைப்பார்கள். download அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

இந்த வேட்டையில் இருந்து தப்பியவர்களை இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களிலோ அல்லது கிறிஸ்தவ மிசனரிகளிடமோ தள்ளி விட்டார்கள். அவர்கள் தங்கள் மொழியை பேசுவதோ, தங்கள் கலாச்சாரத்தை பின்பற்றுவதோ, தங்கள் சடங்குகளை நடத்துவதோ தடை செய்யப்பட்டது.

எனது மக்களும் அவர்கள் பேசிய மொழியை போலவே அழிந்தொழிந்து போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

“பூர்வகுடிகள்” அழிந்துகொண்டிருக்கும் ஒரு இனமாகவே கருதப்பட்டது. அழிந்து கொண்டிருக்கும் இனத்தின் அடையாளங்களை அழித்துவிடுவது பற்றி வந்தேறிகள் பேசினார்கள்.

1901 இல் அவுஸ்திரேலிய ஒரு நாடாகியபோது, அதை நிறுவியவர்களுள் ஒருவரான அல்பிரட் டீக்கின் “நூறு ஆண்டுகளுக்குள் அவுஸ்திரேலியா வெள்ளையர் மட்டுமே உள்ள நாடாகிவிடும். கறுப்பு தோலுள்ளவர்கள் இங்கு இல்லாமல் போய்விடுவார்கள். தெற்கில் பூர்வகுடி இனம் அழிந்துவிட்டது. ஏனைய இடங்களிலும் அழிந்து கொண்டு வருகிறது.” என்று எதிர்வு கூறினார்.

பூர்குடி பாதுகாப்பு குழு ஒன்று நிறுவப்பட்டது. பூர்வகுடிகள் வாழ்க்கையில் இதன் அதிகாரம் பயங்கரமானது. எனது குடும்பம் எங்கு வாழ வேண்டும்,யாரை திருமணம் செய்ய வேண்டும், எங்கள் குழந்தைகளை நாமே வளர்த்தெடுக்கலாமா போன்ற விடயங்களை தீர்மானிக்கும் அதிகாரம் இக்குழுவுக்கு இருந்தது.

வெள்ளையராக சிந்தி, வெள்ளையராக நட, வெள்ளையரன இரு

20ம் நூற்றாண்டுகள் முழுவதும் ஒரு இனவாத விஞ்ஞானம் பூர்வகுடி மக்கள் மேல் திணிக்கப்பட்டது.தன்வயமாக்கல் (assimilation) என்றவொரு கொள்கை பூர்வகுடி மக்களை இல்லாதொழிக்கும் முயற்சியாக நடைமுறைபடுத்தப்பட்டது. “கமன்வெல்த் உடன் தனவயமாக்கப்படல்” என்ற கொள்கையாக இது பிரகடனப்படுத்தப்பட்டது.

இக்கொள்கையை எடுத்துக்காட்டும் போஸ்டரில் ஒரு கருப்பு தோலுள்ள தாயின் மகள் பழுப்புநிற தோலுள்ளவராகவும் அவருடைய பேரன் நீலநிற கண்ணுடனும் பொன்னிற மயிருடனும் காட்டப்படுகிறார். மூன்று சந்ததிகளில் கருப்பிலிருந்து வெள்ளையாக.

கலப்பின பழுப்புநிற பிள்ளைகள், அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் குடும்ப உறவுகளை வெட்டும் நோக்குடன், அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து பறிக்கப்பட்டன. எனக்கு தெரிந்த ஒவ்வொரு பூர்வகுடியினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையே ‘திருடப்பட்ட சந்ததி’ (stolen generation) என்று இன்று நாம் அழைக்கிறோம்.

aboriginal children அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

எனது அம்மம்மாவின் சகோதரி அவருடைய பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு பூர்வகுடி சிறுமிகளுக்கான ஒரு ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு வெள்ளையர் குடும்பங்களில் வீட்டு வேலைகள் செய்வதற்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. இச்சிறுமிகள் வெள்ளையர்களை திருமணம் செய்து வெள்ளை தோல் பிள்ளைகளை பெற்றெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.அவர் தூங்கிய இடத்திற்கு மேலாக “வெள்ளையராக சிந்தி, வெள்ளையராக செயற்படு, வெள்ளைரன இரு” என்று எழுதப்பட்டிருந்தது.

இத்துணை அழிவுகளுக்கு பின்னரும் நாங்கள் அழிந்து போகவில்லை. நகரங்களின் எல்லைகளில் பூர்வகுடிகள் ஒன்று கூடினார்கள். அங்கு முடிவில்லா ஏழ்மையிலும் புறக்கணிப்பு மத்தியிலும் வாழ்ந்தார்கள்.

நாங்கள் அழிந்து போகவில்லை. ஆனால் எங்கள் மொழி அழிந்து போனது. 1963இல் நான் பிறந்தபோது நாங்கள் ஆங்கிலம் பேசினோம். இடையிடையே பழைய மொழியின் சில சொற்களை மட்டும் சேர்த்துக்கொண்டோம்.

பிரித்தானியா அவுஸ்திரேலியா மேல் படையெடுத்த போது இங்கு 250 தனித்துவமான மொழிகள் பேசப்பட்டன. 800க்கு அதிகமான பேச்சுவழக்குகள் இருந்தன. அவற்றில் அதிகமானவை அமைதியாகிவிட்டன. மிஞ்சி இருப்பவற்றில் 90 வீதமானவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

மொழியின் இளம் துளிர்கள்

பூர்வகுடிகள் அவ்வளவு இலகுவாக சரணடைய மாட்டார்கள். இன்று அவுஸ்திரேலியா என்று அழைக்கப்படும் இந்த நிலத்தில், ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர், எனது முன்னோர்கள் 65,000 ஆண்டுகள் செழிப்பாக வாழ்ந்தார்கள்.

42,000 ஆண்டுகள் பழமையான ஒரு மனித எலும்புக்கூடு இங்கு இறந்தவர்களை சடங்குடன் அடக்கம் செய்ததற்கான மிகப்பழைய ஆதரமாக கருதப்படுகிறது.

உலகத்திலேயே தொடர்ச்சியாக பண்பாட்டுடன் வாழ்ந்த மிகவும் பழமையான மக்களாக நாம் உள்ளோம்.

மொழியின் இளம் துளிர்கள் எட்டிப்பார்க்கின்றன. கலாச்சார ஆன்மிக மறுமலர்ச்சியின் ஒரு அங்கமே இது. இந்நிலத்தின் முதல் மக்களின் சந்ததியினர் அவர்களுடைய பழமையான மொழியை மீண்டும் பேசுகிறார்கள்.685723207 அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

இம்மறுமலர்ச்சியின் முன்னணியில் எனது தந்தையும் இருந்தார்.

அவர் சிறுவனாக இருந்தபோது அவருடைய பாட்டன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதை அவர் கண்டார். எனது தந்தையின் பாட்டன் எனது தந்தையுடன் எனது ஊரின் தெருவில் விராஜூவரி மொழியில் பேசியதற்காகவே சிறையிலடைத்தார்கள்.

50 ஆண்டுகளின் பின் எனது தந்தை அவரது மொழியை பாதுகாத்ததற்காக அவுஸ்திரேலிய அரசால் கௌரவிக்கப்பட்டார். எத்துணை அதிசயமான ஒரு பயணம்.

என் வாழ்க்கையில் மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுவது

எனது தந்தை கடினமான வாழ்க்கையை வாழ்ந்தார். கருப்பு தோலுடன் இருப்பதே குற்றமாக கருதக் கூடிய நாட்டில் ஒரு கருப்பு தோல் மனிதராக. அவருக்கு முழுமையான கல்வி மறுக்கப்பட்டது. என்னையும் எனது பல சகோதர சகோதரிகளையும் தனது கைகளின் பலத்தைக்கொண்டே வளர்த்தார்.

ஏராளமான பூர்வகுடி ஆண்களைப் போலவே அவரும் காவல்துறையால் கொடுமையாக நடத்தப்பட்டார்.

இருந்தும் அவர் ஒருபோதும் தான் யார் என்பதை மறக்கவில்லை. அவருக்கிருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. அவருடைய பாட்டனின் நினைவுகளையும் அவரின் அன்பையும் எனது தந்தை இழந்துவிடவில்லை.

அவுஸ்திரேலியாவின் விளிம்பில் வாழ்ந்த இந்த மனிதரை, அவர் வயது 50களில் இருந்தபோது, ஜான் ரடர் என்னும் ஒரு வெள்ளையர், ஒரு மொழியியலாளர், தேடி வந்தார். விராஜூவரி மொழியை காப்பாற்றுவதில் ஜான் ரடருக்கு(John Rudder)ஆர்வமிருந்தது.

250px John Rudder அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி தொடர்ந்த 20 ஆண்டுகளில் இந்த இரு மனிதர்களும் விராஜூவரி மொழியின் முதன்முதலாவது அகராதியை தொகுத்தார்கள். அந்த மொழியை கற்பிப்பதற்கான மையங்களை விராஜூவரி நிலமெங்கும் திறந்தார்கள். சார்ல்ஸ் ஸ்ருவர்ட் பல்கலைக்கழகத்தில் விராஜூவரி ஆய்வுகளுக்காக ஒரு முதுகலை படிப்பையும் நிறுவினார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் எனது தந்தைக்கு இதே பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது .

எனது தந்தையின் பெயர் Stan Grant. அவருடைய பெயர் எனக்கு சூட்டப்பட்டதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன்.

நாங்கள் அழியவில்லை இன்றும் இருக்கிறோம்

அவரும் எனது தாயாருமே இன்று நான் நானாக இருப்பதற்கு காரணம். இருவரும் எம்மை தைரியமானவர்களாகவும் தன்மானமுள்ளவர்களாகவும் வளர்த்தர்கள். எங்கள் குடும்பத்தை ஒன்றாக வைத்து பாதுகாத்தார்கள். எங்கள் கதைகளை உயிரோட்டத்தோடு பாதுகாத்தார்கள். நான் யாரென்று எனக்கு கற்பித்தார்கள்.

இன்றைய அவுஸ்திரேலியா நாளில், படையெடுப்பு நாளில் நான் அவர்களை நினைக்கிறேன். எனது குடும்பத்தவர்கள் எல்லேரையும் நினைக்கிறேன். நாங்கள் இன்றும் அழியாமல் உயிரோடு இருப்பதை நினைக்கிறேன்.

அவுஸ்திரேலியா என்ற மாபெரும் பொய்யை வெளிப்படுத்தும் உண்மை நாங்கள். இந்த நிலம் ஆளில்லா நிலமென்று சொல்லி பிரித்தானியா இதை தனது என்று சொந்தம் கொண்டாடியது.இங்கு வாழ்ந்துகொண்டிருந்த மானிடத்தை அவர்கள் காணவில்லை.

நாங்கள் அழிந்து விடுவோம் என்று அவுஸ்திரேலியா நினைத்தது. நாங்கள் கரைந்தொழிந்து போவோம் என்று நினைத்தது.australia day 3 1 அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

பிரித்தானிய கடலோடியான ஜேம்ஸ் குக் தனது கொடியை இங்கு நாட்டி எமது நிலத்தை தனதென்று கையகப்படுத்தி 250 ஆண்டுகளுக்கு பின்னர் நாங்கள் திரும்ப அவர்களுடன் பேசுகிறோம். எமது சொந்த மொழியில்.

Stan Grant – ஊடகவியலாளர், நூலாசிரியர், பட இயக்குனர் – அவுஸ்திரேலியாவின் ஆதி தேசிய மக்களான  விராஜூவரி (Wiradjuri), கமில்றோய் (Kamilaroi) மற்றும் டறவல் (Dharawal) இனங்களை சார்ந்தவர்.

நன்றி அல்ஜசீரா

 

பெப்ரவரி 04 ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட கரிநாள்.

சிறீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச அதிபராக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரத்தில் பதவியேற்ற நிலையில் சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினம் இன்னும் சில தினங்களில் சிங்களப் பேரினவாதம் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைத்துக் கொண்டாடத் தயாராகின்றது. ஈழத்தமிழ் மக்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை, ஏனெனில் இந்நாள் வடக்குக் கிழக்கு வாழ் ஈழத்தமிழருக்கு உரிய நாள் அல்ல.

ஏற்கனவே 146679 உறவுகளைத் தொலைத்துவிட்டு ஆறாத்துயரில் இருக்கும் தமிழருக்கு சிங்களத்தின் சனாதிபதி தன் வாயாலேயே 20000 காணாமல் ஆக்கப்பட்டோரை தாம் கொன்றுவிட்டோம் என்று மறைமுகமாகக் கூறியுள்ளார். 20000ற்கு மேற்பட்ட உறவுகளை நேரடியாகவே இராணுவத்திடம் ஒப்படைத்ததற்கான சாட்சியங்கள் உள்ள நிலையில் சர்வதேசமும் மனித உரிமை அமைப்புக்களும் ஏன் கைகட்டி வாய் பொத்தி மௌனமாக உள்ளன?

சிறிலங்கா அரச அதிபரால் 17.01.2020 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் இறந்துவிட்டனர், காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டோர், முறையான விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கான மரணச் சான்றிதழ் வழங்கப்படும், அவர்களுக்கான உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்ட விடயங்கள் ஈழத்தமிழ் மக்களைக் கொதிப்படைய வைத்தள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வேண்டுகின்றோம்.

தமிழர்கள் ஒற்றையாட்சிக்குள் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாது என்பதைக் காலத்துக்குக் காலம் சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் செயல்களின் மூலம் புலப்படுத்தி வருகின்றனர். தமிழ்த் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து செல்வது தான் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பையும், இனப்பிரச்சினைக்கு உயரிய தீர்வையும் தரும் என்பதை சர்வதேசத்திற்கு தமிழர் தொடர்ச்சியாக இடித்துரைக்க வேண்டும்.

தமிழர்கள் தங்களுக்கே உரித்தானதும் தனித்துவமானதும் ஆன மொழி, கலை கலாசாரங்கள், பாரம்பரிய உணவுமுறை, உடைப் பாரம்பரியம், வழிபாட்டு முறைகள், பண்பான பழக்க வழக்கங்கள், அன்பான வாழ்க்கை முறைகள், பூர்வீக நிலங்கள், வர்த்தகங்கள், மரபுரிமைகள் என்று பலவற்றையும் கொண்ட இனமாகையால் அவர்கள் இலங்கைத்தீவின் 2500 வருடங்களுக்கு மேலான பழங்குடி மக்கள் ஆவர். எமது உரிமைகளை என்றுமே விட்டுக்கொடுக்க முடியாது. பாலஸ்தீனிய மண் யூதர்களிடம் கரைந்து போனதுபோல எமது மண்ணை சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்த விடாமல் எதிர் நின்று பாதுகாக்க வேண்டும்.

இன்றை சூழலில் இந்தோ – பசுவிக் பிராந்தியம் வல்லரசுகளின் புவியியல் மற்றும் பொருளாதாரப் போட்டிக்குள் அகப்பட்டு அல்லாடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் ஆதிக்க அதிகாரப் போட்டிக்குள் பழத்தமிழராகிய எமது விடுதலையும் பகடைக்காயக்கப்பட்டும் சூழல் அதிகரித்துக்கொண்டே போகின்றது. நாம் பட்ட வலிகள் இலகுவில் மறந்து போவதற்கு ஒன்றும் கற்பனைகள் அல்ல. அன்னியனின் முதலீட்டுக்கு நிலம் கொடுக்கும் சிங்களம் பூர்வீகக் குடிகளான எம்மை ஆயுதமுனையில் அடக்கியொடுக்குகிறது. ஆகவே ஒவ்வொரு உலகத்தமிழரும் எமது சுயநிர்ணய உரிமைக்காக உரத்துக்குரல் கொடுக்க வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அழைப்பு விடுக்கின்றது. சிறிலங்காவின் 72வது சுதந்திர தினத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஈழத்தமிழ் மக்கள் தங்கள் நிரந்தர அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு பெருமெடுப்பில் தயாராக வேண்டும் என புலத்திலும் தாயகத்திலும் உள்ள தமிழ் அமைப்புக்களுக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

மட்க்களப்பு வேட்பாளர்களாக கோவிந்தம் கருணாகரம்,நவரெட்ணராஜா கமல்தாஸ்

மக்களின் விடிவுக்காக உள்ளத்தூய்மையுடன் செயற்படும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.வெறுமனே ஆசனத்திற்காக செயற்படமுடியாது என தெரிவித்துள்ள அவர்,தாங்கள் விட்டுக்கொடுப்புக்கு தயாராகயிருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எமது கட்சியின் மட்க்களப்பு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் மற்றும் எமது கட்சியின் மட்டக்களப்பு இளைஞர் குழுவின் தலைவர் சட்டத்தரணி நவரெட்ணராஜா கமல்தாஸ் ஆகியோரை நியமிப்பதென மாவட்டப் பொதுச்சபை கூடி ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்.

தமிழீழ விடுதலை இயக்கம் என்பது இன்றைக்கும் அரசியற் களத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசியல் ரீதியில் எமது கடமைகளை மேற்கொண்டோம். ஒற்றுமையின் நிமித்தமும்,ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் அதனைப் பலவீனப்படுத்தக் கூடாது என்ற இரு காரணங்களுக்காகவுமே எமது செயற்பாடு அவ்வாறு இருந்தது.

எனவே ஒற்றுமை தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கம் பெரும் வரலாற்றைக் கொண்டது. இதில் யார் இருக்கின்றார்களோ இல்லையோ தமிழீழ விடுதலை இயக்கம் அதன் பயணத்தைத் தொடரும். எம்மில் இருந்து விலகிச் சென்றவர்களால் நாம் பலவீனமாகிவிட்டோம் என்ற எண்ணம் எங்களைப் பொருத்தமட்டில் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைமை பற்றி அண்மையில் பலரும் பலவாறு சொல்லிக் கொண்டு வருகின்றார்கள். அது அவரவர்களின் தனிப்பட்ட கருத்துக்களேயன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைத் தெரிவு செய்வதில் மூன்று கட்சிகளுக்கும் பங்கு இருக்கின்றது. எனவே எமது மூன்று கட்சிகளும் இணைந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைத் தெரிவு செய்கின்ற பொறுப்புடன் இருக்கின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி ஒரு இனவாத அடிப்படையில் சிங்கள மக்களின் அனுமதியுடன் தான் எந்த முடிவுகளையும் எடுக்க முடியும் என்பதைத் தெளிவாக நாடாளுமன்றில் கூறியிருக்கின்றார். இந்த அரசாங்கமும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற ரீதியில் தமிழ், முஸ்லீம்,மலையக மக்களின் சிந்தனைகளை அல்லது அவர்கள் சிங்கள மக்களைப் போன்று அத்தனை உரித்துக்களும் கொண்ட இனம் என்பதை கருத்திற்கொள்ளாத வகையில் செயற்படுகின்றது.

தற்போது கூடுதலாக சோதனைச் சாவடிகள் முளைத்திருக்கின்றது. அரச பணிகளில் கூடுதலாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் செய்து வருகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பெரும்பான்மை இன வேட்பாளருக்கு வாக்களித்து எமது மக்கள் தாம் இனவாதிகள் இல்லை என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

இதன்போது எமது வடக்கு கிழக்கு மக்கள் ஓரணியில் நின்று காட்டியிருக்கின்றார்கள். இதனை ஜனாதிபதி அவர்களும் விளங்கிக் கொளள வேண்டும். இந்த நாட்டில் சகல உரித்துக்களும் கொண்ட தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகளை அவர் கையாள வேண்டும். வெறுமனே சிங்கள மக்களின் வாக்குகளை மாத்திரம் மையமாக வைத்து அவர்கள் எதனையும் சாதித்துவிட முடியாது. தமிழ் மக்கள் ஐக்கியமான இந்த நாட்டுக்குள்ளே எமது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

தமிழிலே தேசிய கீதம் பாடப்படக் கூடாது என்கின்ற விடயம் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை வேறு நாட்டுப் பிரஜைகள் போல் கருதுவதாகவே தெரிகின்றது. எங்களுக்கும் தமிழிலே தேசிய கீதம் இருக்கின்றது. அதனைப் பாடுவதற்கு தூண்டுவதாகவே இது அமைகின்றது. தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும். சிங்கள மொழிக்கு இருக்கின்ற அத்தனை உரித்துக்களும் தமிழ் மொழிக்கும் இருக்கின்றது. அந்தவகையில் தேசிய கீதத்தைச் சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் என்று திணிப்பது மனித உரிமை மீறலாகும். இதன்மூலம் மீண்டும் ஒரு சர்ச்சையை உண்டாக்குவதற்கான உருவாக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டாம்.

முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதென்பது வரவேற்கக்கூடிய விடயம் அவ்வாறு இணையும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் 22 ஆசனங்களை சுலபமாகப் பெற முடியும். ஏனெனில் மக்கள் ஒற்றுமையை மிகவும் விரும்புகின்றார்கள். உள்ளே வந்து நாட்டாமைத் தனம் அல்லது மற்றவர்களை அனுசரிக்காத தன்மையை உண்டுபண்ணிவிடக் கூடாது. அந்த வகையிலே எல்லாரையும் அனுசரித்தச் செல்லக் கூடிய ஒரு நிலையினை மனதில் மக்களின் விடிவு என்ற ஒன்றை எண்ணி இருப்பவர்கள் ஏற்படுத்த வேண்டும். வெறுமனே ஆசனத்திற்காக நாங்கள் செயற்பட முடியாது என்று தெரிவித்தார்.

துப்பாக்கிசூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்

தமிழர் தாயகப்பகுதி ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் தமிழர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஒமனியாமடு பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம் பிரசாந்தன் ( வயது 38 ) என்பரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மட்டக்களப்பு புனானை ஒமனியாமடு காட்டுப்பகுதியிலிருந்தே இவர் கடந்த வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த 25 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஒமனியாமடு காட்டுப்பகுதியில் தன்னைத்தானே சொட்கண் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன் சொட்கண் துப்பாக்கி ஒன்றையும் சடலத்துக்கு அருகில் இருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழசை்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பித்த சக்கரநாற்காலி பயணம் வவுனியாவை வந்தடைந்தது.

நேற்று (01.02) காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்த சற்கர நாற்காலி பயணமானது இன்றையதினம் (02.02) வவுனியாவை வந்தடைந்தது.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலி அவர்களுடன் இணைந்து ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிறேமசந்ர ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் பூத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும், மும்மதங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை முழுதுமான சுற்றுபயணம் சுதந்திரதினம் அன்று கொழும்பை சென்றடையவுள்ளது.

DSC 0029 பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பித்த சக்கரநாற்காலி பயணம் வவுனியாவை வந்தடைந்தது.

DSC 0079 பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பித்த சக்கரநாற்காலி பயணம் வவுனியாவை வந்தடைந்தது.

வவுனியாவை வந்தடைந்த மூவரையும் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , வர்த்தக பிரதிநிதிகள் , பொதுமக்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தார்கள். அவர்களின் செலவுக்காக தமிழ் விருட்சம் அமைப்பினர் 10,000 ரூபாவையும், வவுனியா வர்த்தக சங்கத்தினர் ரூபா 10,000 வழங்கி இருந்தனர்.

இவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர் மாற்றுத்திறனாளிகளான நாம் சமூக நல்லிணக்கம் வேண்டியும் எம்மைப்போன்ற நாடு முழுவதிலுமுள்ள மாற்றுத்திறனுடையோரின் சிறப்பான எதிர்கால வாழ்வு கருதியும் சக்கர நாற்காலியில் இலங்கையைச்சுற்றி வலம் வருகிறோம். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் பின்வரும் கோரிக்கைகளை நாம் இந்த சமூகத்திற்கு முன் வைக்கிறோம்.

இன ரீதியான நல்லிணக்கத்தை இந்த நாட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஏனையோர் அனுபவிக்கும் சகல உரிமைகள் சலுகைகளையும் அனுபவிக்க வழிசமைக்க வேண்டும். நாட்டிலுள்ள சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு 5000 ரூபாவை வழங்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக சமய கலாச்சார விளையாட்டு கல்வி பொருளாதார விடயங்களில் சமவாய்ப்பு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும். அனைவருக்கும் அணுகு வசதிகளை பொது நிறுவனங்கள், அரங்கு மேடைகள், பொதுமலசலகூடங்கள், பொதுப்போக்குவரத்துகள், பொதுக்கட்டிடங்கள், அலுவலகங்கள், வைத்தியசாலைகள், சேவை மையங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள் என சகலதுறைகளிலும் அணுகுவசதி ஏற்படுத்தப்பட வேண்டும். வங்கிகள் வைத்தியசாலைகள் போன்ற சேவை பெறும் மையங்களில் எமக்கு முன்னுரிமை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த எமது உரிமைகள் சலுகைகள் என்பவற்றைப்பெற்றுத்தரும் நல்ல நோக்கம் கொண்ட எமது நாட்டு அதி உத்தம ஜனாதிபதியாகிய தாங்கள் பல வகைககளில் எமக்கு பக்கப்பலமாக உறுதுணையாக இருக்கிறீர்கள். உங்கள் சிந்தனையில் இவற்றையும் கருத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டுமென அந்த மரதனோடத்தில் பங்குபற்றும் மூவராலும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலி மாற்றுத்திறனாளிகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூகங்களிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நாடளாவிய ரீதியில் சக்கரநாற்காலி பயணத்தை கடந்த வருடம் பெப்ரவரி 1ம் திகதி ஆரம்பித்து முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் விசேட கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு, மதுபான உற்பத்தி, மரம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என்பவற்றைத் தடுத்தும் நிறுத்தும் முகமாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கூட்டம், நாளை (03) முற்பகல் 10 மணிக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான மு.சந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, கரைச்சி பிரதேச செயலாளர்கள், பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப் படை உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய திணைக்களங்களின் உயரதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் பேரணிகள்

சிறிலங்காவின் சுதந்திர தினம் அது தமிழர்களின் கரி நாளாக பிரகடனப்படுத்தி வலிந்து,காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில்
வடக்கிலும்,கிழக்கிலும் மாபெரும் சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்படவுள்ளன. இப் பேரணிகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேரணிக்கான பேருந்து போக்கு வரத்து சேவைகளும் அதற்கான ஒழுங்கமைப்பாளர்கள் விபரங்களும் கீழ்தரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து காலை 10.00 மணிக்கு மாபெரும் பேரணி ஆரம்பமாகி பழைய பேருந்து வீதியை சென்றடையும்.
யாழ்மாவட்ட போக்குவரத்து சேவைக்கான தொடர்பாளர் திருமதி.சுகந்தினி தொ.இ. 077821 8775

வடமராட்சி கிழக்கிற்கான தொடர்பாளர் திருமதி.அருள்மதி தொ இ 076652 4715.
பூநகரி, வலைப்பாடு ,கிராஞ்சி ,நாச்சிக்குடா போக்கு வரத்து ஒழுக்கமைப்பாளர் திருமதி.கமலா -தொ.இ. 0760436388.

கிளிநொச்சி மாவட்டம்
மாவட்ட ஒழுங்கமைப்பாளர் திருமதி.கருணாவதி -தொ.இ.0774279987.

கிளிநொச்சி மாவட்ட போக்கு வரத்து சேவைகள் .கிருஸ்ணபுரம் ,உதயநகர்மேற்கு,உதயநகர்கிழக்கு,செல்வாநகர் ஊடாக கனகபுரம் தெரு வழியாக டிப்போ சந்தி போய் பழைய கச்சேரியடி வழியாக கந்தசாமி கோவிலைச் சென்றடையும்ஒருங்கினைப்பாளர் R,இராமசாமி தொ இ 0773749618.

ஜெயந்தி நகர் கனகபுரம் ,கணேசபுரம்,திருநகர் ஊடாக புதிய கச்சேரியடி வழியாக ஏ 9வீதி ஊடாக கந்தசுவாமி கோயில் வரையான பேருந்து சேவை ஒழுங்கமைப்பாளர் திருமதிஅ,நாகேஸ்வரி -தொ.இ 0762189192 .

வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்ட ஒழுங்கமைப்பாளர் திருமதி அமுதா தொ இ 076 807 8615.

மன்னார் மாவட்டம்
மன்னார் மாவட்ட ஒழுங்கமைப்பாளர் திருமதி .றஞ்சினி தொ இ 0772638399.

முல்லைத்தீவு மாவட்டம்

புதுக்குடியிருப்பு சிவன் கோவிலில் இருந்து புறப்படும் பேருந்து சேவைக்கான தொடர்பாளர் திருமதி.மதி -தொ.இ. 077212 3604.

வள்ளிபுனம் ,கைவேலி ,தேவிபுரம் பகுதி ஒழுங்கமைப்பாளர் திருமதி.பிருந்தா-தொ.இ. 0767355206.

கொக்குளாய் ,வலைஞர்மடம் ,மாத்தளன்,மையில் குஞ்சன் குடியிருப்பு பேருந்து சேவைக்கான ஒழுங்கமைப்பாளர் திருமதி.உதயராணி -தொ.இ 077860 4511.

புதிய குடியிருப்பு முல்லைத்தீவு ,முள்ளிவாக்கால் பேருந்து சேவைக்கான தொடர்பாளர் தயாழினி -தொ இ 077921 9368

கிழக்குமாகாணம்

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எழுச்சி பேரணி காலை 10.00 மணிக்கு மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூக்காவை சென்றடையும் .
இவ் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கான போக்கு வரத்து சேவைகள் பின்வருமாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.இப் பேரணியை மாவட்ட மேலாளர் திருமதி. மதனா தலமையில் ஏற்பாடாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்

வாழைச்சேனை ,கல்லடி ,திருகோணமலை வீதி ஒழுங்கமைப்பாளர் திருமதி.தமையந்தி தொ.இ.0774647296.

மாவடி வேம்பு ,கல்லடி திருகோணமலை வீதி பேருந்து ஒழுங்கமைப்பாளர் திருமதி.லோஜினி-தொ.இ.0766048447

நாவல்க்குடா ,கல்முனை வீதி. பேருந்து சேவை ஒழுங்கமைப்பளர் திருமதி. வேவி தொ.இ.0774132484.

அம்பாறை மாவட்டம்
அக்கரைப்பற்று ஒழுங்கமைப்பாளர் திருமதி.தங்கநேசம்-தொ. இல 077703 2267.

கோலாவில் ஒழுங்கமைப்பாளர் திருமதி.ராஜ்குமாரி -தொ.இ. 0754144408.

பாண்டிருப்பு ,கல்முனை ஒழுங்கமைப்பாளர் திருமதி.இந்திரா – தொ.இ.0779906344.

திருகோணமலை மாவட்டம்

சாம்பல்தீவு,அலஸ்தோட்டம், சோலையடி, செல்வநாயகபுரம் லிங்கநகர் ஊடாக
கப்பல்துரை,கிண்ணியா ஊடாக சென்று மூதூர் பகுதி ஊடா மட்டக்களப்பிற்கான பேருந்து சேவை திருமதி.கைரலி -தொ.இ 0774146861.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இப் பேரணிகளில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு ,மேற்படி இலவச பேருந்து சேவைகள் ஒழுங்கமைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு வருகை தருமாறு வேண்டி நிற்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப்புலிகளின் ஆவணங்களுடன் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் இருபத்தொன்பது ஆவணங்கள், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஐந்து ரப்பர் முத்திரைகள் , ஒரு மெமரிக் காட், ஒரு பென் ரைவ் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி விவேகானந்த நகர் கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்தே, மேற்கண்ட சான்றுப் பொருள்களுடன் அதே பகுதியை சேர்ந்த 37 வயதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் பாலஸ்தீன தீர்வுத்திட்டம்;இந்த நூற்றாண்டின் பாரிய திருட்டு

இன்றைய உலகின் ஆதிக்க சக்திகள் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கான ஒரு உதாரணமே இப்போது ஐ-அமெரிக்காவும் இஸ்ரேயிலும் இணைந்து முன்வைத்துள்ள பாலஸ்தீன்-இஸ்ரேயில் பிரச்சனைக்கான தீர்வு திட்டம். இத்தீர்வு திட்டத்தில் பாலஸ்தீனத்தின் எவ்வித பங்களிப்பும் இல்லை. இதுபற்றி இப்பிரச்சனையை தொடர்ந்து அவதானித்து வந்த சிலரின் கருத்துக்கள் கீழே. குளேபல் ரிசேச் என்ற கனேடிய அரசியல் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

“இத்திட்டம் இஸ்ரேயில் ஆதிக்கம் செலுத்தும் பாலஸ்தீனப் பகுதிகளை அங்கீகரிக்கிறது. இவற்றில் பாலஸ்தீன பகுதிகளில் உள்ள இஸ்ரேயில் குடியேற்றங்கள், இஸ்ரேயில் இராணுவதளங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா இடங்கள், யூதர்களுக்கு மட்டுமான வீதிகள், சோதனை சாவடிகள் போன்றவை எல்லாம் அடங்கும்.”

000 1OM09A e1580561484166 அமெரிக்காவின் பாலஸ்தீன தீர்வுத்திட்டம்;இந்த நூற்றாண்டின் பாரிய திருட்டு

“இந்நூற்றாண்டின் திட்டம் என்று விபரிக்கப்படும் இத்திட்டம் இஸ்ரேயில் திருடிய நிலங்களை அங்கீகரிக்கிறது. நிலத்தின் ஆதிகுடிகளை நிலமற்றவர்கள ஆக்குகிறது.”

“புலம்பெயர் பாலஸ்தீனர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்புவதை இத்திட்டம் தடுக்கிறது.”

“பாலஸ்தீன் நாடு என்று கருத்தற்ற ஒன்றை உருவாக்கி அதன் தலைவர்கள் எப்போதும் இஸ்ரேயில் சொல்வதை கேட்க செய்கிறது.”

“1917இல் பிரித்தானியாவின் “பல்ஃவோர்” (Balfour) பிரகடன் போல இதுவும் தங்களுக்கு சொந்தமில்லாதை ஐ-அமெரிக்க அதற்கு உரிமையில்லாதவர்களுக்கு கொடுக்கிறது.”

இது போல உலகில் பலரும் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். நாடுகளும் இதை எதிர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இருந்தும் ஆதிக்க சக்திகள் இக்கருத்துக்களை மதிக்குமா? ஒடுக்கப்படும் படும் மக்களின் ஒற்றுமை எத்துணை அவசியம் என்பதை இத்தீர்வு திட்டம் கோடிட்டு காட்டுகிறது.

யாழ் மாவட்டத்தில் 300 கிலோ கேரளத்து கஞ்சா கைப்பற்றப்பட்டது

இன்று (02) காலை யாழ் மாவட்டத்தின் புங்குடுதீவு பகுதியில் 300 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகு ஒன்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதே இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் படகில் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ மேலும் இருவர் சங்குப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.