கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், கல்முனை வாழ் தமிழர்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. எனினும், இதன்போது விசேட தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –
“கருணாவும் இந்தப் பிரதேச செயலகம் தொடர்பான எந்த அடிப்படை அறிவும் அற்றவராகத்தான் இருக்கின்றார். ஹரிஷ் இந்த பிரதேச செயலகம் நிலத்தொடர்பற்ற ஒரு பிரதேச செயலகம் என வெளியுலகத்துக்கு காட்டியிருந்தார். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகிய நாம் நாடாளுமன்றத்தில் வரைபடத்தின் மூலம் இந்தப் பிரதேச செயலகம் நிலத்தொடர்புடைய ஒரு பிரதேச செயலகம் எனச் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அதன் பின்னர் அனைத்துச் சிங்கள் அரசியல்வாதிகளும் அதனை ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு நிலத் தொடர்புடைய பிரதேச செயலகத்தை தரமுயர்த்திக் கொடுப்பது நியாயமானது” என்றார்.
சிறீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
அதற்கமைய அவரை எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே அவர் அழைக் கப்பட்டுள்ளார்.
அதேபோல் கடற்படை கொமாண்டர் ஆர்.பி.எஸ்.ரணசிங்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் எச்.எம்.பி.சி யஹட்டியராச்சி ஆகியோரும் அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் கைச்சாத்திடவுள்ளன எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் கைச்சாத்திடும் உத்தியோக பூர்வ நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றனர் எனவும், இதுவரை எதுவித முடிவுகளும் எட்டப்படவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
அரசியல் பழிவாங்கலுக்கு இலக்கான அரச அதிகாரிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அரச நிறுவன அதிகாரிகள், அரச கூட்டுத்தாபன ஊழியர்கள், ஆயுதமேந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரால் குறித்த முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி நிறைவடைவுள்ளது.
அதன்படி, 2015 ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் இந்த ஆணைக்குழுவினால் பொறுப்பேட்கப்படவுள்ள நிலையில், முறைப்பாடுகளை பொறுப்பேட்கும் இறுதி தினத்திற்கு முன்னர் அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் நீண்டகாலமாக கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணியில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோறன்ஸ் லியோ தலைமையில் நடைபெற்ற குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிரதம வருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை கலந்துகொண்டார்.
மேலும் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார், கறிற்றாஸ் செடே தேசிய நிலையத்தின் இயக்குநர் அருட்தந்தை மகேந்திர குணதிலக்க, மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதைய இயக்குநர் அருட்தந்தை எஸ். அன்டன் அடிகளார், மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.குணபாலன், முசலி பிரதேசச் செயலாளர் வசந்தகுமார், என பலரும் கலந்து கொண்டனர்.
முள்ளிக்குளம் கிராமத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 11 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. குறித்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதி வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன்போது பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்ததுடன் குறிப்பிட்ட வீட்டில் இருந்து மூன்று கிலோ வெடிமருந்தை மீட்டதுடன் ஐயத்திற்கிடமான இருவரைக் கைது செய்துள்ளனர்.
குறிப்பிட்ட வீட்டில் உள்ளவர்கள் போரின் எச்சங்களாகவுள்ள வெடிபொருட்களை எடுத்து அவற்றிலிருந்து வெடிமருந்தை பிரித்தெடுத்து விற்பனை செய்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு ஒரு காரணமாக அமையும். என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களிற்கும், அதன் உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு ஆற்றிய மகத்தான சேவையினை கௌரவிக்கும் வகையிலும், தரம் 5 புலமைப்பரிசில் சித்தி பெற்ற, பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மன்னார் பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தில் இடம் பெற்றது.
இதன் போது இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தந்தை செல்வநாயகம் அவர்களினால் பிரதமர்களிடையே தமிழ் மக்களின் சுயாட்சி உரிமை சம்மந்தமாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு ஒப்பந்தங்கள் எழுதப்பட்டு அவை கிழித்து எறியப்பட்டது.
அதன் பிற்பாடு தந்தை செல்வநாயகம் அவர்கள் 1973 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தமிழீழ கொள்கையை பிரகடனம் செய்தார். தமிழீழம் தான் தமிழர்களுக்கு ஒரே தீர்வாக அமையும் என்று பிரகடனம் செய்தார்.
அதன் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் அவர்களினால் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழர்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராட்டம் இடம் பெற்றது.
அந்த போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனித்ததன் பிற்பாடு தமிழர்களின் நிலமை, தமிழர்களின் தனித்துவம், தமிழர்களின் இன்றைய சூழ்நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில் இதற்கு முற்பாடு 2001 ஆம் ஆண்டு தமிழர்களின் நலன் சார்ந்த முடிவை எடுப்பதற்கும்,தமிழர்களின் அரசியல் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கும் தமிழ் தேசியக்கூட்மைப்பு உருவாக்கப்பட்டது.
உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.இருந்தாலும் தற்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிச் சென்ற ஒரு சில கட்சிகள் தாங்கள் தனித்துவமாக தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாதகத்திற்கு அப்பால் அது தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
தமிழர்களினுடைய தனித்துவத்தை தேசியக்கட்சிகள் உடைக்க நினைக்கின்ற இந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிறிந்து சென்ற ஒரு சில கட்சிகள் வன்னி மாவட்டத்தில் மக்களுடைய வாக்குகளை பிறிக்க நினைப்பது அது சிங்கள முஸ்ஸீம் மக்களினுடைய பிரதி நிதித்துவத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரையும் வெளியேற்றவில்லை.
அவர்கள் தாங்களாகவே வெளியேறிச் சென்றனர். அவர்கள் வெளியேறிச் செல்கின்ற போது அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு காரணம் தங்களுடைய இருப்பு சம்மந்தமாகவே அமைந்தது.
நாடாளுமன்ற தொகுதிக்கான ஆசன பங்கீடு தொடர்பான பிரச்சினை,தேசிய பட்டியலில் தங்களுக்கான ஆசனம் வழங்கப்படவில்லை என்கின்ற கோரிக்கைகளுக்கு அமைவாக அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறிச் சென்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்
நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று(08) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து உரையாடினார்.
இந்தியா சென்றுள்ள சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, இன்று இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராஜபக்ஸ பின்னர் அங்கிருந்து ஹைதரபாத் இல்லத்திற்கு சென்று அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி, “இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள். மற்றும் நெருங்கிய நண்பர்கள். நாம் பொதுவான பல பிணைப்புகளை பகிர்ந்து கொள்கிறோம். நமது பிராந்தியத்தில் பயங்கரவாதம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு இரு நாடுகளுமே தகுந்த பதிலடியை கொடுத்துள்ளோம். இனியும் பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்போம்.
இன்றைய பேச்சுவார்த்தையில் இலங்கை உடனான கூட்டு பொருளாதார திட்டங்கள் குறித்தும், வர்த்தக முதலீட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தோம். இருநாட்டு மக்களுக்கும் இடையேயான நேரடி தொடர்புகளை அதிகரிக்கவும், சுற்றுலாவை ஊக்குவிக்கவும் நாங்கள் விவாதித்தோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழர்களுக்கு சமஉரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்யுமாறு இந்தியா வந்துள்ள ராஜபக்ஸவை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மூளை பற்றிய ஆய்வுகள் அண்மைய தாசாப்தங்களில் மிகப்பெரிய முன்னேற்றங்களை கண்டுள்ளது.மூளையை ஆய்வு செய்பவர்களில் ஒருவரான பேராசியர் ரோபேர்ட் சப்லோஸ்கி மூளை பற்றிய புதிய கண்டுபிடிப்புக்களை பொதுமக்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதில் பிரபலமானவர்.
பொதுமக்களுக்காக அதிக நூல்களும் எழுதியிருக்கிறார்.2010இல் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இவர் கொடுத்த 25 விரிவுரைகள் இணையத்தில் உள்ளன. இவையும் பிரபலமானவை. 60 வயதான பேராசிரியர் அண்மையில் எழுதிய நூல் Behave. இதுபற்றி அவர் கொடுத்த ஒரு உரையிலிருந்து எடுத்த விடயங்களை தொகுத்து தருகிறது இக்கட்டுரை.அதாவது வாய்மொழியில் இருந்து உரைநடையாக்கமும் மொழியாக்கமும் செய்யப்பட்டது.
பேராசியர் தன்னுடைய உரையில் ஒரு உதாரணத்தை வைத்து பல விடயங்களை விளக்குகிறார்.இதோ அவர் கையாளும் உதாரணம்.நீங்கள் வன்முறை வெடித்துள்ள ஒரு பெரிய கூட்டத்தை பார்க்கிறீர்கள். உங்கள் கையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது. கூட்டத்திலிருந்து ஒருவர் உங்களை நோக்கி ஓடிவருகிறார். அவருடைய கையில் எதையோ வைத்திருக்கிறார். உங்களுக்கு அவருடைய முகபாவனை தெரியவில்லை. அவர் கையில் வைத்திருப்பது துப்பாக்கி என்று நீங்கள் முடிவு செய்கிறீர்கள். நீங்கள் அவரை சுடுகிறீர்கள். அவர் கையில் இருந்தது துப்பாக்கி அல்ல என்றும் அது ஒரு கைப்பேசி என்றும் பின்னர் தெரிகிறது. உங்களுடைய நடத்தையை எவ்வாறு விளக்கலாம்?
மனிதநடத்தையை மூளை சார்ந்த விஞ்ஞான முறையில் புரிந்துகொள்வது மிகவும் சிக்கலானது. ஒரு நடத்தையை விளக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட விளக்கம் கிடையாது. ஒரு செகண்டிலும், ஒரு சில நிமிடங்களிலும், ஒரு சில மணித்தியாலங்களிலும், சில ஆண்டுகளுக்கு முன்னரும், பல மில்லியன் ஆண்டுகளின் முன்னரும் நடந்தவை எல்லாம் ஒருவரின் நடத்தையை தீர்மானிக்கிறது.
உங்களை சுடப்பண்ணுவதற்கு ஒரு செகண்டுக்கு முன்னர் உங்கள் மூளையில் நடந்தது என்ன? மனிதர்களுக்கு வன்முறை பற்றிய ஒரு குழப்பம் உண்டு. நாம் வன்முறையை விரும்பவில்லை. ஆனாலும் விரும்புகிறோம். ”சரியான” வன்முறை என்று நாங்கள் கணிப்பவற்றை விரும்புகிறோம், அதற்கு கைதட்டுகிறோம். சரியான வன்முறை என்று நாம் கருதுவதற்கு உதாரணமாக, வன்முறைகள் உள்ள வீடியோ காட்சிகளையும், வீரர்களின் வன்முறையையும் சொல்லலாம்.
அமிக்டலா எனப்படும் மூளையின் ஒரு பகுதியே வன்முறைக்கான பகுதி என்பது பொதுவாக அறிப்பட்டது. அமிக்டலா உண்மையில் பயத்திற்கான பகுதி என்று மூளை ஆய்வு செய்பவர்களுக்கு தெரியும். வன்முறையின் போது மூளையில் நடப்பவற்றை தெரிந்து கொள்வதன் முன்னர், பயத்தின் போது மூளையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆக அமிக்டலா பயத்திற்கான பகுதி. மூளையின் வேறெந்த பகுதிகள் அமிக்டலாவுடன் பேசுகின்னறன? இன்சூலர்–கோட்டேக்ஸ் என்னும் ஒரு பகுதியும் அமிக்டலாவுடன் பேசுகிறது.
கெட்டுப்போன உணவை வாயில் போட்டவுடன் வயிற்றை குமட்டி ஓங்காளிக்க செய்யும் மூளையின் பகுதி தான் இந்த இன்சூலர்-கோட்டக்ஸ். ஏனைய மிருகங்களிடமும் இது உண்டு. எது நஞ்சான உணவு என்று அறிவதற்கு இது உதவுகிறது. ஏனைய மிருகங்களிடம் அதைவிட இன்சூலர்-கோட்டக்ஸ் வேறெந்த வேலையும் செய்வதில்லை.
மனிதர்களை பொறுத்த மட்டில் விரும்பத்தகாத உணவை நினைக்கும் போதும் குமட்டும் உணர்வை இந்த இன்சூலர்-கோட்டக்ஸ் வரச்செய்யும். அதுமட்டுமல்ல. மனித இனத்தின் பரிணாமத்தின் போது மூளை வேறோரு உணர்வையும் சேர்த்துக்கொண்டது. அதுதான் ”தர்மீக வெறுப்பு” (moral disgust). இதற்கும் மூளையில் ஒரு பகுதியை உருவாக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படி செய்யாமல், இதற்கான பகுதியாகவும் இன்சூலர்-கோட்டக்ஸை மூளை உபயோகித்தது.
ஆக மனிதர்களின் இன்சசூலர்-கோட்டக்ஸ் உணவு சார்ந்த குமட்டலுக்கும் தர்மீக குமட்டல் என்ற உணர்வுக்குமான இடமாக இருக்கிறது. இதனால் மனிதர்களிடம் இந்த இரண்டு உணர்வுகளையும், உணவு குமட்டல், தர்மீக குமட்டல் ஆகிய இரண்டையும், சேர்த்து குழம்பும் ஒரு தன்மை உள்ளது. இந்த இன்சூலர்-கோட்டக்ஸ்அமிக்டலாவுடன் பேசிவிட்டால் பயமும் தர்மீக குமட்டலும் சேர்ந்தே வரும்.
ஒருவர் எது சரி எது பிழை என்று தீர்மானிப்பதற்கும் தர்மீக குமட்டல் துணை போகும். பிரச்சனை என்னவென்றால், தர்மீக குமட்டல் ஒருவருக்கொருவர் மாறுபடும். இன்சூலர்-கோட்டக்ஸ் தர்மீக குமட்டல் மாறக்கூடியது என்று பிரித்து அறியாது. வேறோரு மக்கள் கூட்டத்தை அருவருக்கத்தக்க பூச்சிகளாக மாற்றி, அவர்கள் மீது தர்மீக குமட்டல் உண்டானதாலேயே எத்தனையோ இனவழிப்புகள் நடந்திருக்கின்றன.
மூளையின் இன்னுமொரு பகுதி, முன்-கோட்டக்ஸ் எனப்படும். இது அண்மையில் பரிணாமம் அடைந்த ஒரு பகுதி. மனிதர்களிடம் ஏனைய மிருகங்களைவிட இது பெரிதாக உள்ளது. சரியானதை ஆனால் கடினமானதை செய்ய முன்-கோட்டக்ஸ் தேவை. இதுவே அமிக்டலாவுக்கு எச்சரிக்கை கொடுக்கும். ஓடிவருபவரின் கையில் உள்ளது துப்பாக்கிதானா என்று உறுதி செய்யும்படி தூண்டும். முன்-கோட்டக்ஸ் தான் ஒருவரை பொறுமையான இருந்து படிக்கவும் இன்னுமொருவருக்கு உதவுவதற்காக ஆபத்தான செயலை செய்யவும் தூண்டும்.
ஒரு செகண்டுக்கு முன், சுடுவது என்று முடிவு செய்யும் முன், இதுதான் நடந்திருக்கும். இப்போ ஒரு சில நிமிடங்கள் பின்தள்ளி பார்க்கலாம். ஒருசில நிமிடங்களின் முன்னர் சூழலில் நடந்தவை முக்கியமானவையே. இவற்றையும்விட துரிதமாக மூளையில் வேறும் சில விடயங்கள் இடம்பெறும். உங்களை நோக்கி ஓடிவருபவர் ஆணா, உருவத்தில் பெரியவரா, உங்களைவிட வேறு இனத்தை சேர்ந்தவரா என்பன போன்ற முடிவுகள் எடுக்கப்படும்.
நீங்கள் பொறுமையில்லாமல் முடிவு எடுப்பதற்கு இவையும் காரணமாக இருக்கும். இந்த தரவை உங்கள் மூளை ஒரு செகண்டுக்கும் மிகவும் குறைந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளும். கண் வழியாக இத்தரவு போய் மூளையில் பதிவதற்கு முன்னரே வேறு ஒரு குறுக்கு வழியாக இது அமிக்டலாவை சேர்ந்துவிடும்.
ஓடிவருபவரின் கையிலிருப்பது துப்பாக்கிதான் என்ற உணர்ச்சியான தரவை உங்கள் வழமையான பார்வையை தவிர்த்து அமிக்டலா அறிந்து கொள்கிறது. உங்கள் அந்நேர மனநிலையும் அமிக்டலா அத்தரவை பெறுவதில் தாக்கம் செலுத்தும். நீங்கள் களைப்புற்று இருந்தால் அல்லது பசியாக இருந்தால் இவை தாக்கம் செலுத்தும்.
இப்போ இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போகலாம். சில மணித்தியாலங்கள் பின்னோக்கி போகலாம். இப்போ சுரப்பிநீர்களின் தாக்கங்களை பார்க்க வேண்டும். ரெஸ்ரோஸ்ரறோன் (testosterone). அதிகமானோர் இச்சுரப்பிநீர் எல்லா கலாச்சாரங்களிலும் ஆண்களை வன்முறைக்கு தூண்டுகிறது என்று நினைக்கிறார்கள். இது பிழை. ஒரு நிலைமை பயமுறுத்தலானதா இல்லயைா என்ற தெளிவற்ற நிலையில் அதை பயமுறுத்தலாக புரிந்து கொள்வதற்கு ரெஸ்ரோஸ்ரறோன் ஒருவரை தூண்டுகிறது.
அதாவது ரெஸ்ரோஸ்ரறோன் நிலைமையை பெரிதாக்கி காட்டுகிறது. ஆனால் வன்முறையை தூண்டவில்லை. உண்மையில் ரெஸ்ரோஸ்ரறோன் இனது வேலை, எது ஒருவரின் சமூக அந்தஸ்தை உயர்த்துகிறதோ அதை செய்ய தூண்டுவதே. ஒரு சமூகத்தில் அன்பு காட்டுவதே ஒருவரின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் என இருந்தால், அச்சமூகத்தில் ரெஸ்ரோஸ்ரறோன் ஒருவரை மேலும் மேலும் அன்பாக நடக்க தூண்டும். இன்று பல சமூகங்களில் வன்முறை சமூக அந்தஸ்தை உயர்த்துவதாலேயே ரெஸ்ரோஸ்ரறோன் வன்முறையை தூண்டுவது போல தோற்றமளிக்கிறது. அதுதான் பிரச்சனை. (தமிழ் சினிமாக்களில் எது ஒருவரின் அந்தஸ்தை உயர்த்துகிறது என்று பார்த்தால் அது தெளிவாகவே புரியும்.)
இன்னுமொரு சுரப்பிநீரைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஒக்சிரோசின். தாயையும் குழந்தையையும் பிணைப்பதும், ஒற்றை துணையுடன் இருக்கும் இருவரை பிணைப்பதும் ஒக்சிரோசின் சுரப்பிநீர். இது சமூச்சார்பான நடத்தையை ஊக்குவிக்கும்.
ஆனால் இவ்வாறு இது ஊக்குவிக்கும் சமூகசார்பு நடத்தை நம்மவர் என்று ஒருவர் கருதுபவர்களுக்கு மட்டுமே. மற்றவர் என்று கருதப்படுபவர் மேல் இதே ஒக்சிரோசின் எதிரான நடத்தையை, வன்முறையை, ஊக்குவிக்கும். அதாவது ஒக்சிரோசின் அதிகமாக இருந்தால் அது அந்நியர் மேல் வெறுப்பை வளர்க்கும். நம்மவர்-மற்றவர் என்ற பிரிவை பெரிது படுத்தும்.
இப்போ, இன்னும் கொஞ்சம் பின்தள்ளி போகலாம். சில மாதங்கள் பின் தள்ளி போகலாம். உங்களது அனுபவங்களும் நீங்கள் சுடுவீர்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும். இப்போ சில வருடங்கள் பின்னுக்கு போகலாம். நீங்கள் பதின்பருவத்தில் இருக்கிறீர்கள். இதுவும் ஒருவரின் வளர்ச்சியின் முக்கியமான காலம். முன்-கோட்டேக்ஸ் இனது வளர்ச்சி 25 வயதிலேயே முழுமையடைகிறது. ஆகையால் முன்-கோட்டேக்ஸ் வளர்ச்சி ஒருவரின் மரபணுவை விட அவருடைய சூழலிலும் அனுபவங்களிலுமே தங்கியிருக்கிறது.
இன்னும் கொஞ்சம் பின்னுக்கு போகலாம். குழந்தைப்பருவம். தாயின் வயிற்றில் இருக்கும் போது தாய்க்கு வரும் அழுத்தங்கள் அதற்கான சுரப்பிநீரை இரத்தத்தில் சுரக்கிறது. இது குழந்தையின் மரபணுவையே நிரந்தரமாக மாற்றும். சமூகசார்பு இல்லாத நடத்தையை ஊக்குவிக்கும் ஒரு மரபணு இருக்கிறது. ஆனால் ஒருவர் சிறுபிராயத்தில் துஸ்பிரயோகம் செய்யப்ட்டிருந்தால் மட்டுமே அது சமூகசார்பு இல்லாத நடத்தையை தூண்டும். அதாவது மரபணுவும் சூழலும் சேர்ந்தே இதை தீர்மானிக்கிறது. ஒரே மரபணு வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு விதமாக இயக்குகிறது.
இன்னும் பின்னோக்கி போகலாம். எமது மூதாதையர் என்ன செய்தார்கள். திறந்த வெளிகளில் கால்நடைகளை மேய்த்து வாழ்ந்தவர்களிடம் மானம் என்ற கருத்தும் போர்க்குணமும் அதிகம் இருக்கும். கால்நடைகளை கவருவதும் மீண்டும் போய் தாக்குவதும் இவர்களின் பழைய கலாச்சாரத்தில் இருக்கும். அக்கலாசாரத்தின் தாக்கம் இச்சமூகத்தில் பிள்ளை வளர்ப்பிலும் தாக்கம் செலுத்தும். கலாச்சார வித்தியாசங்கள் எவ்வாறு உருவானது.
சூழலே கலாச்சாரங்கள் வெவ்வேறு விதமாக உருவானதற்கு காரணம். இதற்கு சிறந்த உதாரணமாக சமயங்களை சொல்லலாம். பாலைவனங்களிலும் திறந்த வெளிகளிலும் வாழ்ந்தவர்களின் சமயங்கள் ஒரு கடவுள் சமயமாக இருந்துள்ளன. மாழைக்காடுகளில் வாழ்ந்தவர்கள் பல கடவுளரைக் கொண்ட சமயங்களை உருவாக்கினார்கள்.
நெற்பயிர் செய்கை கூட்டாக செய்யபட வேண்டுமாதாலால் கிழக்காசியாவில் நெற்பயிர் செய்தவர்கள் கூட்டு-வாழ்க்கையை பெரிதாக கருதினர். மலைப்பகுதிகளில் கோதுமை பயிர் செய்தவர்கள் குடும்பமாக செய்தார்கள். அதனால் தனியார் உரிமைகளை பெரிதுபடுத்தினார்கள்.
இப்போது பல மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி போகலாம். மரபணுக்களின் பரிணாமத்தை பார்க்கலாம். பரிணாமம் வெவ்வேறு குரங்கின வகைகளுக்கு வெவ்வேறு அளவான வன்முறை குணத்தை கொடுத்திருக்கிறது. சில குரங்கினங்கள் வன்முறையே இல்லாமல் இருக்கின்றன. சில மிக அதிகமான வன்முறை குணத்தை கொண்டிருக்கின்றன. மனிதரின் வன்முறைக் குணம் நடுவில் இருக்கிறது. மனிதர்களிடம் அதீதமான இரக்க குணமும் இருக்கிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
இப்போ நீங்கள் ஏன் ஓடிவருபவரை சுட்டீர்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு, ஒரு செகண்டுக்கு முன்னர் என்ன நடந்தது என்பதிலிருந்து பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது என்பது வரை கணக்கிலெடுக்க வேண்டும். மனிதநடத்தையை பற்றி முடிவுகள் எடுப்பதில் மிகவும் கவனம் அவசியம். முக்கியமாக ஒரு நடத்தைக்கு மோசமான கருத்தை கொடுப்பதற்கு கூடிய கவனம் தேவை. நடத்தைக்கு தவறான கருத்தை கொடுத்ததால் நினைக்கவே பயங்கரமான பல செய்கைகளை மனிதர்கள் செய்திருக்கிறார்கள்.
யாவுமே மாறக் கூடியவை என்பதையும் மறந்து விடலாகாது. சூழல் மாறும். இன்று பாலைவனமாக இருக்கும் சகாரா ஒரு காலத்தில் வளமாக பிரதேசமாக இருந்தது. கலாச்சாரங்கள் மாறும். 17ம் நூற்றாண்டில் வைக்கிங் என்று அறியப்பட்ட சுவீடன் நாட்டினர் ஐரோப்பா முழுவதும் அழிவுகள் செய்தார்கள். கடந்த 200 ஆண்டுகளாக இவர்கள் எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை. அவர்களின் கலாச்சாரம் மாறிவிட்டது. இவைற்றைவிட முக்கியமாக மூளை மாற்றமடையும். மனிதர்கள் மாறுவார்கள்.
காட்டுத்தீ என்பது புவியில் தோன்றிய ஒரு புதிய செய்தியாக அல்லது சவாலாக சொல்லமுடியாது. ஆதி முதல் தீ பூமியினை பாகம் பாகமாக உண்டுதான் வந்திருக்கின்றதுஅது மட்டுமல்ல அதன் சுவாலை மூலம் அனலை உமிழந்துதான் உள்ளது.
பூமியின் காடுசூழ்பகுதிகள் மட்டுமல்ல புவியின் எந்த ஒரு பகுதியிலும் தீ உருவாகும் நிலை உண்டு.இவ்வாறுஉருவாகும் தீ வேகமாக பரவுவது மட்டுமல்ல தன்னை சூழவுள்ள அனைத்தையும் எரித்துஅழிப்பது என்பதும் வழமையான ஒன்று. ஆனால் காடுகளில் தீ உருவாகும் போது
கட்டுப்படுத்துவது கடினம்.அது மட்டுமல்ல இது ஈரவலயம் உலர்வலயம் ஆகிய இரண்டிலுமேதீ உருவாதல் பரவுதல் இரண்டுமே நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் இன்றைய மாற்றங்களுக்குஎன்ன காரணம் அதனை கொஞ்சம் ஆராய்வோம்.
நாம் வாழும் கோள் புவி.இது ஐம்பூதங்களின் கலவை அதாவது இந்த உலகமானது நிலம்இ நீர்இவளிஇ நெருப்புஇ ஆகாயம் இந்த ஐந்தும் கலந்து உருவாகி உள்ள ஒன்று என்று தொல்காப்பியம்கூறுகின்றது.
அதுவும் ஒரே அளவில் அல்லஇ வேறுபட்ட அளவில் கலந்துள்ளது.அந்தஅளவுமாறினால் புவியின் சமநிலை குழம்பும் என்பது தமிழன் விதி. நாட்டிலே காட்டுத்தீ இவன் பேசுவதோ வேதாந்தம் என்ற எண்ணம் இப்போது உங்களுக்கு எழும். காரணம் உலகில்இருவகையினரை வேறுபடுத்தலாம்இ அவர்கள் சிந்தாந்திகளும் வேதாந்திகளும் எனக்கூறலாம்.
சித்தாந்தி உடன் நடப்பதை மட்டும் சிந்திப்பான்.வேதாந்தி ஏறதாழ உலக இயக்கதை முற்றாகபுரிந்துகொள்பவன். அதனால் தான் வேதாந்தமென்பது எமக்கு புரியாதது என்ற கருத்தினைதருகின்றது. நான் வேதாந்தி அல்ல. ஆனால் விஞ்ஞானம் வேதாந்தம் என்றுதானேசொல்லவேண்டும். ஏனென்றால் உலகம் ஆரோக்கியமாக வாழ உழைப்பது வீண்காணம்என்றுதானே நாம் நம்புகின்றோம். அந்த வினஞானம் உலகம் வலய உழைக்கிறாத என்ற கேள்வி எழும் அல்லவா.
புவி தோன்றியகாலம் முதல் மாற்றங்கள் நிகழ்ந்தே வந்ததாக வரலாறுகள் காட்டுகின்றன.அந்த வகையில் இன்றைய காலம் தொடர்பாடல் ஊடகங்கள் செலுத்தும் காலம்.வகைதொகையின்றி தொடர்பாடல் ஊடகங்கள் பெருகிவிட்டன. கட்டுப்பாடற்று அவைபரம்பலுற்றுள்ளன. ஒவ்வொருநாளும் புதிதுபுதிதாக தொடர்பாடல் உபகரணங்கள்உருவாக்கப்படுகின்றன.
அநேகமான மனிதர்கள் தங்களை இனங்காட்ட இந்த ஊடகங்களை பயன்படுத்த விரும்புகின்றனர். தொலைக்காட்சிகள்இ இணையதளங்கள் மட்டுமல்ல ஒவ்வொருவரதும் கைபேசிகள் கூட தொடர்பாடல் ஊடகங்களாக தொழிற்படும் நிலைக்குவந்துவிட்டன. எல்லோருமே செய்தியாளர்கள் ஆகிவிட்டனர். எனவே செய்தி மட்டுமே தேவைப்படுகின்றது. சரி எது பிழை எதுஇ உண்மை எது பொய் எது நன்மை என்ன தீமைஎன்ன என்ற பேச்சுக்கே இடமில்லை.
முதலில் செய்தி போடவேண்டும்.இப்படி ஒருவர்செய்திகளை போடுவதும்,அடுத்தவர் எதிராக செய்தி தெரிவிப்பதும்இ ஒருவருக்கொருவர் மறுப்புகள் பரிமாறுவதும் தேவையற்ற செய்திகளை பரப்புவதும், மிகைப்படுத்திய செய்திகளை அறிவிப்பதும் மொத்தமாக மக்களை குழப்பத்தில் தள்ளிவிடுகின்றன.
இதன் விளைவு எந்த ஒரு செய்தியையும் மக்கள் பெரிதாக எடுப்பதில்லை. அதேவேளை உண்மையான சமுதாய அக்கறையுள்ள செய்தியாளர்கள் இன்று எம்மத்தியில் உள்ளார்களா என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய செய்தி. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கேள்விப்பட்டியலுக்கு அமைவாக வினாக்கள் வினவப்படுகின்றன.
எல்லோரும் ஏதோ ஒரு ஊடகத்தின் வாயிலாக தங்களுக்கு கிடைத்தசெய்திகளை தங்கள் நண்பர்களுக்கு பரப்புகிறார்கள். அது தொடர்கிறது.எனவே மக்களுக்குஅது செய்தியாக அல்ல பொழுதுபோக்காக அமைகிறது. ஒரு செய்தி கிடைத்து அதுவாசிக்கப்பட முன்பு அடுத்த செய்தி வருகின்றது. எனவே வாசித்தது பற்றி யோசிக்க நேரம் கிடைப்பதில்லை.
அதனால் எல்லோரும் செய்திபோட நினைக்கிறார்களே தவிரஇ தன்பங்குஎன்ன என்று நினைப்பதில்லை ஒருவருக்கும் பிறரின் துன்பம் புரியவில்லை.செய்திபோட்டால் போதும் என்று மட்டும் நினைக்கிறார்கள்.
இந்த நிலையின் வளர்ச்சிதான் இன்று காட்டுத்தீ மட்டுமல்ல, ஒருவரின் அல்லது ஒருசாராரின் எந்த ஒரு துன்பநிலையும்பிறமக்களால் கணக்கெடுக்கப் படுவதேயில்லை. இன்னும் காட்டுத்தீயை பேசவில்லை.காட்டுத்தீ என்பது தனித்து அவுத்திரேலியாவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல.காடுள்ளநாடெங்கும் நடக்கின்றது.
செய்தி பரப்புபவர்கள் ஒரு புறம் செய்தி பரப்பஇ மறுபுறம் வியாபாரிகள் ஊக்கமடைகின்றனர். பணம் தேடலுக்கு இதனை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல,உதவி செய்யும் அமைப்புகள் உருவாகின்றன. இந்த நேரத்தை பயன்படுத்தி தங்களை விளம்பரப்படுத்தி விடுகின்றன. ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களும் நிலைமையினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.
முழுவதுமாக பார்த்தால் வெந்து கருகி நொந்தவர்கள் போக அதிக பயன் அடைபவர்கள் யார் என்று சிந்திக்கும் கட்டாயம்உண்டு.
எனவே காட்டுத்தீ பரவுகின்றது என கதறுவோர் உண்மையில் நாட்டுக்கு நன்மைதரும் விதத்தில் சிந்தித்தாலே பலன் உண்டு. இல்லையேல் அது சுயவிளம்பரேமே தவிரவேறில்லை என்று சொல்லமுடியும்.