Home Blog Page 2428

சட்டவிரோத கட்டுத்துவக்கினால் முல்லைத்தீவில் ஏற்பட்ட சோகம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட தேராவில் பகுதியில் நேற்று மாலை காட்டுப்பகுதிக்கு மாடு பார்க்க சென்ற இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தேரவில் பகுதியில் வசிக்கும் செல்வக்குமார் தமிழின்பன் என்ற 20 வயதுடைய இளைஞன் மாடுகளைத் தேடி காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது அங்கு மிருகங்களை வேட்டையாடுவதற்காக கட்டப்பட்ட சட்டவிரோ கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து, அவரை மீட்கச் சென்ற அண்ணனான 23 வயதுடைய செல்வக்குமார் தமிழ்வேந்தன் மற்றுமொரு சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக தர்மபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சகோதரர்கள் இருவரினதும் முழங்கால் பகுதிகளில் குண்டுபட்டு சிதறிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேராவில் கிராமத்தில் சட்டவிரோத கட்டுத்துப்பாக்கி பயன்பாட்டாளர்களால் கால்நடை வளர்ப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இவ்வாறான நடவடிக்கையினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். குறித்த பகுதியில் கால்நடைகளை மேய்த்து வரும் மக்களின் கால்நடைகள் தொடர்ச்சியாக இவ்வாறான சட்டவிரோ செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களினால் இறச்சிக்காக திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சட்டவிரோத துப்பாக்கி கட்டுபவர்களை பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளதை தொடர்ந்து நேற்று இரவு குறித்த வீட்டிற்கு சென்ற பொலிசார் சந்தேக நபரை கைதுசெய்ய முற்பட்ட போது சந்தேக நபர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஏழு தமிழர் விடுதலைக்கு ஒரு ஈழத் தமிழர் அமைப்புகூட குரல் கொடுக்கவில்லையே?

ஏழு தமிழர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கவும்,

அரசமைப்பு சட்டத்தின் 161 ஆவது பிரிவு மாநில அரசுக்கு வழங்கிய இறையாண்மை உரிமையை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தியும்,

வரும் 17.2.2020 திங்களன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கீழ்வரும் 38 அமைப்புகள் முற்றுகை செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

1. நாம் தமிழர் கட்சி
2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3. மார்க்சிய பொதுவுடமைக் கட்சி
4. இந்திய பொதுவுடமைக் கட்சி
5. தமிழ்ப்புலிகள் கட்சி
6. புரட்சிப் புலிகள் கட்சி
7. தமிழ்த் தேசிய பேரியக்கம்
8. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
9. தமிழ்த் தேச மக்கள் முன்னணி
10. உயர் நீதிமன்றத்தில் தமிழ் போராட்டக் குழு
11. சம நீதி வழக்கறிஞர்கள் சங்கம்
12. ஆதித்தமிழர் கட்சி
13. புரட்சிகர இளைஞர் முன்னணி
14. மே 17 இயக்கம்
14. பெரியார் திராவிடர் கழகம்
15. திராவிடர் விடுதலை கழகம்
16. மக்கள் சட்ட உரிமை இயக்கம்
17. இஸ்லாமிய சேவைச் சங்கம்
18. குடியுரிமை பாதுகாப்பு நடுவம் (சிபிசிஎல்)
19. வீரத் தமிழர் முன்னேற்றக் கழகம்
20. ஆதித் தமிழர் பேரவை
21. அம்பேத்கர் தேசிய இயக்கம்
22. இக்வான் முஸ்லீம் தவ்கீத் ஜமாத்
23. சட்டக் கல்லூரி மாணவர்கள்
24. தமிழக வாழ்வுரிமை கட்சி
25. தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு கட்சி
26. வனவேங்கைகள் கட்சி
27. இந்திய தேசிய லீக் கட்சி
28. தைப் புரட்சி இயக்கம்
29. திருவள்ளுவர் பேரவை
30. தமிழக மக்கள் சனநாயக கட்சி
31. புரட்சிக்கவிஞர் பேரவை
32. தமிழ் தமிழர் இயக்கம்
32 ஒத்துழையாமை இயக்கம்
33. சமூகநீதி பண்பாட்டு மையம்
34. நாணல் நண்பர்கள்
35. 7தமிழர் விடுதலைக்கட்சி
36. திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை
37. மருது மக்கள் இயக்கம்
38. மக்கள் அதிகாரம்

இந்த ஏழு தமிழரில் 4 பேர் ஈழத் தமிழர்கள். ஆனால் இவர்களின் விடுதலைக்காக இதுவரை ஒரு ஈழத் தமிழர் அமைப்புகூட குரல் கொடுக்கவில்லை.

இந்த ஏழு தமிழர் விடுதலையில் உண்மையில் ஈழத் தமிழ் அமைப்புகளுக்கு அக்கறை இல்லையா? அல்லது குரல் கொடுத்தால் இந்திய அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சுகின்றனவா?

அடிக்கடி லண்டனுக்கு வந்து தன் மகளை பார்த்துச் செல்லும் சுமந்திரன்கூட அதே லண்டனில் இருக்கும் முருகன் நளினியின் மகள் தன் பெற்றோரை பார்க்க முடியாத நிலையில் இருப்பதையிட்டு குரல் கொடுக்க கூடாதா?

நன்றி- தோழர் பாலன்

86406943 10221875046726576 2475410534262898688 n ஏழு தமிழர் விடுதலைக்கு ஒரு ஈழத் தமிழர் அமைப்புகூட குரல் கொடுக்கவில்லையே?

 

போர்க் களமான தொழில்நுட்பக் கல்லூரி: மாணவர் மோதலில் உதவிக்கு வந்த ரவுடிக் குழு

கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான மோதல் நிலை வன்முறையாக மாறியதால் விரிவுரையாளர்கள் மூவர் தலைக் கவசத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவாகள் இருவருக்கிடையில் தார்க்கம் உருவாகியுள்ளது. இதனையடுத்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டிடனர்.

இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட மாணவாகளில் ஒருவா வெளியில் இருந்து ரவுடிக்கும்பல் ஒன்றை உள்ளே அழைத்தார். அவர்கள் தொழிநுட்பக் கல்லூரிச் சுவர் ஏறி பாய்ந்து உள்ளே நுழைந்து மோதலில் ஈடுபட்டனர்.

இதனை அவதானித்த ஆசிரியர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 ஆசிரி- யர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இதனையடுத்து வெளியிலிருந்து தாக்குதல் நடத்த உள்ளே நுழைந்த ரவுடிகளில் ஒருவனை ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து மடக்கிப்பிடித்தனர். அதனை தொடர்ந்து சுமார் 15 தொடக்கம் 20 ரவுடிகள் வாள்களுடன் தொழிநுட்பக் கல்லூரிக்குள் பிடித்து வைக்கப்பட்டிருந்த ரவுடியை மீட்பதற்கு முயற்சித்துள்ளனர்.

இதற்குள் பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு வந்ததால் ரவுடிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னா மடக்கி பிடிக்கப்பட்ட ரவுடியையும், மோதலில் ஈடுபட்டிருந்த மாணவன் ஒருவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி சம்பவத்தையடுத்து தொழிநுட்பக் கல்லூரிச் சுற்றாடலில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பதற்ற நிலைகாணப்பட்டது.

குற்றவாளிகளை தண்டிக்க இடமளிக்க வேண்டும்: அமெ தடை குறித்து சுமந்திரன்

“யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் பயணத் தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுமந்திரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆக்கியவற்றிக்கான ஆதாரங்களின் அடிப்படையில் 58வது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வா பொறுப்பு கூறவேண்டியவராகின்றார்.

ஷவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட வேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரது நியமனத்தினை கண்டித்திருந்தது.

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இத்தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி நிற்கின்றது.”

ஈ.பீ.ஆர்.எல்.எவ் இல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டேன்;கூட்டமைப்பில் இணைய விரும்புகிறேன்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஊடான தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சியின் காரியாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “கட்சியின் பெயரை மாற்றம் செய்து புதுத் தலைமையை வடக்கில் உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியவன் என்ற அடிப்படையில் கிழக்கில் வாக்குகள் பிரிபடக்கூடாது என்பதற்காக கடந்த காலத்தில் மாகாணசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்பட்டேன்.

எனவே, இவ்விடயத்தில் எதிர்காலத்திலும் நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சித் தேர்தல்களிலும் ஏனைய பொதுவான விடயங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பங்கு தாரர்களாக என்னையும் ஒரு குழுவாக இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளேன்.

இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து செயற்பட விரும்பியுள்ளதோடு இம்முடிவிற்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இம்முடிவுகளும் எனது தனிப்பட்ட முடிவுகளே.

35 வருடங்களுக்கும் மேலாக எல்லோருடனும் பொதுவாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் நன்றாகப் பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கும் கட்சியில் உள்ளோருக்கும் எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லை என்பதோடு அனைவரும் சிறப்பானவர்கள். எனது தனிப்பட்ட உறவு அனைவருடனும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா இராணுவத் தளபதிக்கு பயணத்தடை விதித்தது அமெரிக்கா

சிறீலங்காவின் இராணுவத்தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்லா மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால் அவருக்கு பயணத்தடை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரில் 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சில்வா அதிகளவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றவாளியான சவீந்திர சில்வாவை சிறீலங்கா அரசு இராணுவத்தளபதியாக நியமித்தது தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் தமது கண்டனங்களை தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

முழுமையான அறிக்கை வருமாறு:

ஊடக அறிக்கை
மைக்கல் ஆர் பொம்பியோ – அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்
பெப்ரவரி 14, 2020

2009 ஆம் ஆண்டின் இறுதி யுத்தத்தின் போது கட்டளைப் பொறுப்பிற்கு ஊடாக இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படையணியினால் மேற்கொள்ளப்பட்ட நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவருடைய தொடர்பு பற்றிய நம்பத்தகுந்த தகவல்களின் காரணமாக அமெரிக்க அரசானது இலங்கையின் தற்போதைய இராணுவத்தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் உப பிரதானியாகவும் உள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவினை வெளிநாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர்புபட்ட ஒதுக்கீட்டு நிகழ்ச்சிதிட்டங்களின் சட்டத்தின் அரச திணைக்களத்தின் 7031(ஊ) பிரிவின் கீழ் கண்டித்துள்ளது.

வெளிநாட்டு அதிகாரிகள் பாரிய மனித உரிமைகள் மீறல்கள் அல்லது பாரிய மோசடிகளில் தொடர்புபட்டதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் நம்பத்தகுந்த தகவல்களைக் கொண்டிருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர்புபட்ட நிதியமைப்பு நிகழ்ச்சிதிட்டங்களின் சட்டத்தின் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 7031(ஊ) கீழ் குறித்த நபர்கள் மற்றும் அவர்களது நேரடிக் குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்க நாட்டுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

ஐக்கிய நாடுகளாலும் வேறு அமைப்புக்களாலும் ஆவணப்படுத்தப்பட்ட சவேந்திர சில்வாவிற்கு எதிரான பாரிய மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை மற்றும் நம்கத்தகுந்தவை. இவர் மீதான கண்டன நடவடிக்கையானது இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் நாம் மனித உரிமைகள் மீது கொண்டுள்ள முக்கியத்துவத்தையும் மனித உரிமை மீறல்கள், துஸ்பிரயோகங்களுக்கு தண்டனையில் இருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுதல் மீதுள்ள எமது கரிசனையையும் அத்துடன் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான எமது ஆதரவினையும் கோடிட்டுக்காட்டுகின்றது.

மனித உரிமைகளை மேம்படுத்துமாறும் , போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுக்குப் பொறுப்பான நபர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துமாறும் பாதுகாப்பு துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் நீதி மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அதன் உறுதிப்பாட்டையும் கொண்டிருக்குமாறும் நாங்கள் இலங்கையினைக் கேட்டுக் கொள்கின்றோம்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்துடனான எமது பங்குரிமையையும் இலங்கை மக்களுடன் நாம் பகிர்ந்துகொள்ளும் நீண்டகால ஜனநாயகப் பாரம்பரியத்தையும் ஆழமான மதிக்கின்றோம். அமெரிக்க அரசானது இலங்கையுடன் இருதரப்பு நல்லுறவினை தொடர்ந்தும் பேணிக் கொள்ளவும், தற்போதுள்ள மற்றும் வெளிவரும் அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கு பாதுகாப்புபடைகள் மீளமைப்புச் செய்து உதவுவதற்கும் உறுதியுடன் இருக்கின்றது. மனித உரிமைகளுக்கான மதிப்பினை வலியுறுத்தும் அதேவேளையில் அடிப்படைக்கூறுகளான பயிற்சி, உதவி மற்றும் ஈடுபாடுகள் என்ற வகையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடரும்.

எப்போது நடைபெற்றது அல்லது யார் அதனைச் செய்தார்கள் என்றில்லாமல் உலகில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களை இல்லாது செய்ய அமரிக்காவானது தனது எல்லா வழிமுறைகளையும் அதிகாரத்தையும் தொடர்ந்தும் பயன்படுத்தும். இன்றைய நடவடிக்கைகள் மனித உரிமைகளுக்கு அதரவுவழங்கும் எமது ஈடுபாட்டை கோடிட்டுக்காட்டுவதுடன் குற்றச் செயல்களைப் புரிந்தவர்களை பொறுப்புக்கூறலுக்கும் உட்படுத்துவதை ஊக்குவிப்பதையும் அமைதியான மற்றும் நிலையான வளமான இலங்கைக்கு ஆதரவான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதையும் கோடிட்டுக்காட்டுகினறது.

சர்வதேச நாடுகளுடன் போட்டியிட்டு சாதனை படைத்த வடமாகாண மாணவர்கள்

சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கண்டி – நாவலப்பிட்டியில் ஜயதிலக விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டரங்கில் கடந்த பெப்ரவரி 08 – 10 வரை மூன்று நாட்கள் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன.

பிரான்ஸ், சிங்கப்பூர்,கனடா, இந்தியா, பாக்கிஸ்தான், பெல்ஜியம், ஆப்கானிஸ்தான், பல்கேரியா, எகிப்து மற்றும் இலங்கை உட்பட பத்து நாடுகள் இக்குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றியிருந்தன.

வடக்கு மாகாண மாணவர்கள் 17 தங்கப்பதக்கங்களையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்று இலங்கையை முன்னணி நிலைக்கு இட்டுச் சென்றதுடன் வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ். சஞ்சயன் எனும் மாணவன் சிறந்த குத்துச்சண்டை வீரனுக்கான சிறப்பு விருதினையும் பெற்றுக்கொண்டிருந்தார்.

இலங்கை சவாட் (savate) கிக்பொக்சிங் அமைப்பின் தலைவரும், சர்வதேச கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான சி.பூ. பிரசாத் விக்ரமசிங்க தலைமையில் இலங்கை சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செல்வராணி புலனாய்வுத்துறை ஊடாக எம்மை மிரட்டுகிறார்

இலங்கையின் காணாமல்போனவர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டுமானால் இலங்கையினை சர்வதேச நீதிமன்றம் ஊடாக சர்வதேச சமூகம் விசாரணைசெய்வதன் மூலமே தீர்வினை வழங்கமுடியும் என வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் திருமலை மாவட்ட தலைவி திருமதி செ.கைரெலி தெரிவித்தார்.

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

உள்ளக விசாரணைகள் மூலம் காணாமல்போனவர்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை.இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.இந்த நிலையில் மீண்டும் காலநீடிப்பு வழங்கப்படுவதனால் எந்தவித செயற்படுகளும் முன்னெடுக்கப்படாது.

காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட அலுவலகம் வெறும் கண்துடைப்பாகும். காணாமல்போனவர்களுக்கு நீதிகிடைப்பதாக இருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவோ அல்லது குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஊடாகவோ இலங்கை தொடர்பில் விசாரணைசெய்யப்படவேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா. முனித உரிமைகள் கூட்டத்தொரில் பங்குகொள்ளும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய உறுப்பு நாடுகளின் மனசாட்சியை தட்டும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் வடகிழக்கு தழுவிய ரீதியில் வடக்கில் யாழ்பாணத்திலும் கிழக்கில் அம்பாறையிலும் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியை நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பிற்கு அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பொற்றின் உறுப்பினர் ஒருவரால் தமது அமைப்பின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருவதாக வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் தலைவி திருமதி வதனா வாலகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த செல்வராணி என்பவர் புலனாய்வுத்துறை ஊடாக தமது உறுப்பினர்களை மிரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்கும் ஒரு தலைவியாக அவர் செயற்படும் அவர் எவ்வாறு ஒரு அரச புலனாய்வுத்துறையினரைக்கொண்டு மக்களை மிரட்டமுடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இவர்களா மக்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்கபோகின்றார்கள்.இவர் இவ்வாறான செயற்பதடுகளை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.அவர்களது அமைப்புக்கும் எங்களது அமைப்புக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை.

அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கின்றனர்ääநாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கின்றோம்.அவ்வாறான நிலையில் இவர்கள் நடந்துகொள்ளும்விதம் எங்களுக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- செல்வராணி

எமது இந்த அம்பாறை மாவட்டத்தில் 10 வருடங்களாக நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் இந்த போராட்டத்துடன் எந்தவித தொடர்பும் அற்ற ஒரு சிலரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நியமித்திருக்கிறார்கள் அவர்களது பின்னணியை பார்த்திருந்தால் அவர்கள் யாருமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அல்ல என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

இன்று (14) வெள்ளிக்கிழமை அம்பாறை தம்பிலுவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இங்கு கருத்து கூறிய  செல்வராணி,

தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகள் தயவுசெய்து எங்களது போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள் உங்களது தந்தையை நீங்கள் மதிப்பவர் என்றால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என்று போராட்டத்தில் ஈடுபடும் போலியான நபர்களை கொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுக்காதீர்கள்.

எமது இந்த அம்பாறை மாவட்டத்தில் 10 வருடங்களாக நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் இந்த போராட்டத்துடன் எந்தவித தொடர்பும் அற்ற ஒரு சிலரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நியமித்திருக்கிறார்கள் அவர்களது பின்னணியை பார்த்திருந்தால் அவர்கள் யாருமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அல்ல.

போராட்ட காலத்தில் கணவனை இழந்த அல்லது உறவுகளை இழந்த இறந்தவர்கள் தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் கணவனை வீட்டைவிட்டு விரட்டியவர்களை கொண்டு போராட்டத்தை முன்னெடுப்பது உகந்ததல்ல இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கருத்தை அவரது செயல்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.5 கிலோ அரிசிக்கும்
மாவிக்கும் பின் நிற்பவர்கள் அல்ல நாங்கள் எம்மோடு போராட்டத்தை நடத்துபவர்கள் தங்களது பிள்ளைகள் தங்களது உறவுகள் தங்களோடு வந்து வரவேண்டுமென்று போராடுபவர்கள் என சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தல் தொடர்பான குற்றவாளிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு

கொழும்பில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தல் தொடர்பான குற்றவாளிகளுக்கு எதிராக வழங்கப்கொழும்பில் கடந்த 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் இருவரையும் விடுதலை செய்ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி மாணவர்களை வெள்ளை வானில் கடத்தி தடுத்து வைத்திருந்து காணாமல் ஆக்கிய வழக்கில் பிரதான சந்தேக நபரான கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் இருக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி, பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியான ரவீந்திர விஜயகுணரத்ன ஆகிய இருவரையும் விடுதலை செய்ய முடியாது என்றும் இவர்களின் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருப்பதாகவும் நீதிவான் ரங்க திசநாயக்க சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கு நேற்று(13) கோட்டை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது பிணையில் உள்ள சந்தேக நபர்களான லக்சிறி அமரசிங்க என்னும் தென்னந்தோப்பு உரிமையாளரும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் முன்னிலையாகியிருந்தனர்.

லக்சிறி அமரசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிசும், ரவீந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் முன்னிலையாகியிருந்தனர். சி.ஐ.டி சார்பாக அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர முன்னிலையாகியிருந்தார்.

இந்த இரண்டு குற்றவாளிகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை தொடர்பாக விசாரித்த பின்னரே தீர்மானம் எடுக்க முடியும். எனவே இந்த வழக்கை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.