யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு விரைவில் இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 300 மில்லியனை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்நிதியில் நீர் வழங்கல், கழிவுநீர் கட்டமைப்பு, திண்மக்கழிவு, வடிகால் அமைப்பு, பயணிகள் முனையம், வெளியேறும் பிரிவு உட்பட விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படும்.
தற்போது விமான நிலையத்தில் தற்காலிக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரமே உள்ளது. ஓடுபாதை விளக்கு அமைப்பை நிர்மாணிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வர்த்தக விமானங்கள் மற்றும் சர்வதேச பயணிகளைக் கையாள கூடுதல் வசதிகள் தேவைப்படும்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்படும். மேலும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு இந்திய அரசு வழங்கும் 300 மில்லியன் ரூபா மானியத்தைப் பயன்படுத்தவும் அதிகாரம் வழங்கப்படும்.
யாழ்ப்பாண விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றார்.
இன்று இலங்கைத் தீவினை மையமாக வைத்து ஒரு பூகோள அரசியல் போட்டி இடம்பெறுகின்றது. அந்தப் பூகோள அரசியலில் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர்,அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் சிங்கள தேசங்களின் இறைமைகளைக் கூட்டுச் சேர்த்த இருதேசங்கள் கொண்ட ஒரு நாடாக இலங்கை அரசு உருவாக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய தீர்வை அடைய முடியும்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகிய நாம்,இரு தேசங்களின் கூட்டான- ஒரு நாடு என்கின்ற கோட்பாட்டினை முன்வைத்து அக்கொள்கையை அடைந்துகொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இன்று இலங்கைத் தீவினை மையமாக வைத்து ஒரு பூகோள அரசியல் போட்டி இடம்பெறுகின்றது. அந்தப் பூகோள அரசியலில் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு. அப்போட்டியூடாக தமிழர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமானது தமிழர்களுக்கான நிகரற்ற பேரம்பேசும் சக்தியாகும்.
அதனை அடிப்படையாக வைத்து,தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி சர்வதேச அரசியலை கையாளுமிடத்து தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளலாம் என்பது எமது திண்ணமான நிலைப்பாடு.
தமிழ் மக்களின் நலன்கள், அவர்களது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை,என்பவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படுவதன் மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும். இதனை சிறீலங்கா என்கின்ற வலுவான இனவாத சிந்தனை வயப்பட்ட தற்போதுள்ள அரச கட்டமைப்பு முறைக்குள் அடைய முடியாது.
இங்கு அரசு மீளுருவாக்கம் (State Reformation) இடம்பெற்று,தேசங்களின் கூட்டாக, ஆகக் குறைந்தது தமிழ் சிங்கள தேசங்களின் இறைமைகளைக் கூட்டுச் சேர்த்த (Pooling of Sovereignty) இருதேசங்கள் கொண்ட ஒரு நாடாக இலங்கை அரசு உருவாக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய தீர்வை அடைய முடியும்.
தமிழ்த் தேசம் (Nation) எனும் அந்தஸ்த்து அங்கீகரிக்கப்படல் வேண்டுமென்பதிலும்ää அவ்வந்தஸ்து சமரசத்திற்கு அப்பாற்பட்டது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம். சர்வதேச சமூகமானது தமது பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழர்களது உரிமைப் போராட்டத்தை பயன்படுத்தும் என்று,நாம் எமது 2010 தேர்தல் அறிக்கையில் எதிர்வுகூறியது நடந்தேறியது.
இந்நிலையானது, பூகோள அரசியலின் விளைவால் வடிவ மாற்றத்தோடு தொடருவதற்கான வாய்ப்புகளுண்டு. இதன் காரணமாகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் தமது அடிப்டை கொள்கைகளான தாயகம்ää தேசியம்ää சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்,என்பவற்றை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவ்வாறு உறுதியாக இருந்தாலே சர்வதேச சமூகம் தமது நலன்களை அடைவதற்காக தமிழர்களது பிரச்சினையை கையில் எடுக்கும் பொழுது, தமிழ் மக்களும் தமது நலன்களை அடைவதற்கு அதனைப் பயன்படுத்த முடியும்.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மிக மோசமாக அமேசான் காடுகள் அழிக்கப்பட்டது. காட்டுத்தீ, வேளாண்மைக்கான காட்டு அழிப்பு, மரங்களுக்காகக் காடுகளை அழிப்பது என பல்வேறு காரணிகள் அமேசான் காடுகள் சுருங்குவதற்குக் காரணம்.
ஒரு பக்கம் பிரேசில் அரசின் கொள்கை முடிவுகளே அமேசான் காடுகள் அழிவதற்குக் காரணமாக இருக்கிறதென்றால், மற்றொரு பக்கம் காடுகளை காக்க முதல் வரிசையில் நிற்கிறார்கள் அமேசான் பழங்குடிகள். அதுவும் குறிப்பாக பெண்கள்.
மரிஸ்டெலா எனும் 14 வயது அரரோ கரோ இனக்குழுவைச் சேர்ந்த பெண், “இந்த காடுதான் எங்கள் தாய். அந்த தாய் எங்களைக் கவனித்துக் கொண்டாள். பசித்த போது உணவிட்டால். இப்போது அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை.” என்கிறார்.
சயிரூ பொல்சினாரூ தலைமையிலான பிரேசில் அரசு பழங்குடி மக்களுக்கான நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதில் முனைப்பாக இருக்கிறது.
மரிஸ்டெலா, “பொல்சினாரூ அரசு பழங்குடிகளை வெறுக்கிறது. ஆனால், நான் இந்த நிலத்தின் ஆதிக்குடி என்பதில் பெருமையாக உணர்கிறேன். அதுவும் ஒரு பெண்ணாக இந்த நிலத்தை காப்பது எங்கள் கடமை என நான் நம்புகிறேன்,” என்கிறார்.
ஒருபக்கம் அரசு அமேசான் காடுகளை கைப்பற்ற முனைய, இன்னொருபக்கம் பிரேசிலில் அமேசான் காடுகளைக் காக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ளது.
இதில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் 27 ஆம் திகதி வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார்.
இந்த முறை சிறிலங்கா அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான பிரதிநிதிகள் குழு பங்கேற்கவுள்ளது.
இந்த குழுவினர் நாளை (25) இலங்கையில் இருந்து ஜெனிவாவிற்கு பயணிக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில், எதிர்வரும் 26 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட 30 கீழ் ஒன்று மற்றும் 2017 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட 34 கீழ் ஒன்று தீர்மானங்களின்படி இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள், மனித உரிமைகள் மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்வதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
இதற்கமைய 30 கீழ் 1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என பிரித்தானியா தலைமையில் கடந்த 2009 ஆம் ஆண்டு 40 கீழ் 1 என்ற தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட இணை அனுசரனையை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்
இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவத்வாறு தெரிவித்துள்ளார்
கடந்த இரண்டு வருடங்களாக எமது கட்சி கிழக்கு மாகாணத்தின் களநிலவரங்ளை நன்கு ஆராய்ந்து எடுத்த முடிவே இது. இதே காலகட்டத்தில் இங்கு உருவான கிழக்கு தமிழர் ஒன்றியமும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தது.
அதற்கமைவாக நாமும் எமது ஒத்துழைப்பை நல்க முன்வந்தோம். அதன் அடிப்படையில் – சிரேஷட சட்டத்தரணி ரி. சிவநாதனை தலைவராக கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம், முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தி தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு மற்றும் தமிழர் விடுதைக் கூட்டணி அகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டு கலந்துரையாடி மேற்படி முன்னணி அமைக்கப்பட்டது.
நிலைமை இவ்வாறு இருக்க முன்னணி சம்மந்தமாக ஆச்சரியப்படத்தக்க தவறான கருத்துக்களை ஒரு சிலர் தெரிவித்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேற்படி முன்னணி உருவாக்குதல் சம்மந்தமாக கருணா அம்மானுடன் நாம் எந்தவிதமான கலந்துரையாடல்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புகள் மட்டுமே அதனை உருவாக்கியது என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
எம்முடன் இணைய விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புக்களால் உருவாக்கபட்ட தேர்தலுக்கான நடவடிக்கைக் குழுவை முறைப்படி அணுகி அவர்களின் சம்மதத்துடன் கருணா அம்மான் உட்பட எவரும் இணைந்து கொள்ளலாம்.
இந்த முன்னணியை ஆரம்பத்திலேயே அழித்துவிட எண்ணும் சில சக்திகளுக்கு துணை போகாமல் சிந்தித்து செயற்பட்டு முன்னணியின் வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் நினைவுப் பேருரைகளின் வரிசையில் முதலாவது நினைவுப் பேருரையானது இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
வடக்கு-கிழக்கு மாகாண சபையின் கல்வி,கலாசார, காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளரும், வடக்கு-கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான காலஞ்சென்ற அமரர் க.தியாகராஜா அவர்களின் “தியாகராஜா அரங்கு” ஞாபகார்த்த நினைவுப் பேருரையானது இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (23) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் இடம்பெறும் இந்த நினைவுப் பேருரை நிகழ்வில் அமரர்.க.தியாகராஜா அவர்களைப் பற்றிய அறிமுக உரையினை,கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜனாப்.எம்.கே.எம்.மன்சூர் அவர்களும் நினைவுப் பேருரையாளருக்கான அறிமுக உரையினை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் வே.தவராஜா அவர்கள் நிகழ்த்துவதுடன்ä அமரர்.க.தியாகராஜா அவர்களின் நினைவுப் பேருரையினை மூத்த பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் அமரர்.க.தியாகராஜா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தற்போதைய மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் அமரர்.க.தியாகராஜா அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தில் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலி பலியாகியதுடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பேரூந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வானும் தீயில் எழுந்துள்ளது. இதன்போது வான் சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வானுமே மோதியுள்ளது.
இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வானுக்குள் இருந்த சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தார்கள் அம்புலன்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நால்வர் பலியாகியதுடன் இருபதுபேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு வரும் நிலையில் ஓமந்தை பொலிஸார விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் இடம்பெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தில், ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
யாழ், வன்னி, மட்டக்களப்பு, திருமலை ஆகிய மாவட்டங்களில் தமிழரசுக் கட்சியின் ஊடாக இளம் புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைமை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான சம்பந்தன் தேர்தல் களத்தில் களமிறங்காது தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரசன்னமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மையநீரேட்ட ஊடகங்கள் சில நாடுகளையும் அதன் தலைமைகளையும் மோசமாக சித்தரித்து வந்ததும் வருவதும் கண்கூடு. மையநீரோட்ட ஊடகங்களை பற்றி புரிதல் இல்லாமல் இவற்றை தொடர்ச்சியாக வாசிப்பவர்களும் இவை பரப்புரை செய்யும் கருத்துக்களுக்கு அடிமையாகுவார்கள் என்பதும் கண்கூடு.
இம்மையநீரோட்ட ஊடகங்கள் பொய் தகவல்கள் பரப்பினார்கள் பரப்புவார்கள் என்பதும் இதை ஆழமாக வாசிப்பவர்களுக்கு தெளிவாக தெரியும். இராக்கில் சதாம் ஹூசேன் இராசயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்ற பரப்புரையையும், அவரை போர்குற்றவாளி என்று தூக்கிலிட்டதையும், இன்று இராக் நாட்டின் நிலைமையையும் நாம் மறக்கலாகாது. லிபியாவின் கடாபி பற்றி வந்த அவதூறுகளையும் அவர் படுமோசமாக கொலை செய்யப்பட்டதையும் இன்றைய லிபியாவின் நிலமையையும் நாம் மறக்கலாகாது.
இன்றும் இதே ஐ-அமெரிக்கா உலகெங்கும் இராணுவ தளங்கள் அமைப்பதில் கண்ணாக உள்ளது. எங்கெல்லாம் நல்ல அரசுகள் இல்லையோ, அவர்களை அணைத்து, அவர்களை “நமது கெட்டவர்களாக” கொண்டாடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் ஐ-அமெரிக்காவை எதிரியாக பார்த்த இந்தியாவும் இன்று ஐ-அமெரிக்காவின் இராணுவ கூட்டாளியாக மாறி வருகிறது. இந்தியாவின் தலைமையில் கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இதிலிருந்து நாம் படிக்க வேண்டியது.
இம்மையநீரோட்ட ஊடகங்கள் ஈழத்தமிழர்களின் ஆயுத போராட்ட காலத்தில் அவர்களைப் பற்றி தொடர்ச்சியாக மோசமாக சித்தரித்து வந்ததும் அதற்கு பல தமிழர்களும் தமிழர் அல்லாதவர்களும் அடிமையாகிதும் தெரிந்ததே. இறுதியில் என்ன நடந்தது இப்போது நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஈழத்தமிழர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இனியும் ஈழத்தமிழர் இந்த மையநீரோட்ட ஊடகங்கள் பரப்பும் கருத்துக்களுக்கு அடிமையாகாமல் இருப்பதுதான் இங்கு முக்கியமானது.
முக்கியமாக இலங்கை தீவில் உயிர்த்த ஞாயிறு தாக்குலும் அதன் அடியொற்றி தொடரும் ஐ-அரெிக்கா தலையீடுகளும் தரும் தெளிவை தமிழர் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகத்தான் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்த தலையீடுகள் தொடர்கின்றன. இதுதான் உண்மையாக இருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
இரண்டாம் உலக போருக்கு பின்னரான ஏனைய ஐ-அமெரிக்க தலையீடுகளை பற்றி வில்லியம் பிளம் என்பவர் எழுதிய “நம்பிக்ககை கொலை” என்ற நூலையொட்டி இப்பத்தியில் முன்னர் வந்த ஒரு தொடரும் இதற்கு ஆதாரம். நோம் சொம்ஸ்கியும் இதையேதான் “பரப்புரை மாடல்” என்ற நூலில் முதலில் விரிவாக விளக்கினார்.
இத்துணை ஆதாரங்கள் இருந்தும் உலகின் பெரும்பான்மை மக்கள் மையநீரோட்ட ஊடகங்களின் கருத்துக்களுக்கு அடிமையாக இருப்பதை எவ்வாறு புரிந்து கொள்ளலாம். இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். அதிகார மையங்களுக்கு மனிதர் இயற்கையாகவே ஈர்க்கப்படுவது இதில் முதன்மையான காரணம். இது இன்றைய மையநீரோட்ட ஊடகங்களுக்கு மட்டுமல்ல, காலம் காலமாக மனிதர்கள் வாழ்ந்த பலவிதமான வாழ்க்கை முறைகளிலும் இதுதான் நடந்தது.
மனிதர்களை ஆட்டுவது பொருளாதார சுயநலத்திற்கும் அப்பால் அதிகார ஆசையே என்று பல தசாப்தங்களுக்கு முன்னர் பெட்ரன்ட் ரஸ்சல் எழுதிவிட்டார். அதிகாரத்தை அடைய முடியாதவர்கள் அதிகாரம் உள்ளவர்களை அண்டி வாழ்வார்கள்.
இவ்விடயத்தில் மனிதகுரங்கின வகைகளை ஆய்வு செய்பவர்கள் சொல்வதையும் தெரிந்து வைத்திருப்பது பயனுள்ளது. மனித குரங்கின வகைகள் பற்றிய ஆய்வுகளை ஆங்கிலத்தில் primatology என்று குறிப்பிடுவார்கள். மனிதர், சிம்பன்சி, பொனொபோ, கொரில்லா மற்றும் ஒராங்குட்டான் என ஐந்து வகையான மனிதகுரங்கின வகைகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.
இவற்றின் பரிணாம வளர்ச்சியின் காலங்களையும் இவற்றின் மரபணுக்களையும் அவதானித்து மரபணுக்களில் மனிதருக்கு ஒரேயளவாகவும் நெருக்கமாகவும் இருப்பது சிம்பன்சியும் பொனோபோவும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். மனிதகுரங்கினங்கள் எல்லாம் மனிதரைப் போலவே சமூகமாக வாழ்பவை. சிம்பன்சி ஆணாதிக்க சமூகமாகவும் பொனொபோ பெண்ணாதிக்க சமூகமாகவும் வாழ்கின்றன. சிம்பன்சி பற்றி ஆய்வாளர்கள் பல காலமாக ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார்கள். சிம்பன்சி சமூக அரசியலில் ஆண்களுக்கு அதிகாரம் என்பது மிகவும் முக்கியமானது. அதற்காக கொலைகளும் இடம்பெறும்.
மனிதருக்கும் அவ்வாறே என்றுதான் பல காலமாக நம்பி வந்தார்கள். ஆனால் மனிதக்குரங்கினங்களில் மனிதர் போல ஏனையவை உலகளாவிய தொடர்புகளுடனும் தங்குநிலைகளிலும் வாழவில்லை. இன்றைய மனித இனத்தின் உலகளாவிய வாழ்க்கை முறை புதியது. இருந்தாலும் மனித ஆண்களுக்கு அதிகாரத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக பொனோபோக்கள் சமூகம் பெண்களின் கூட்டொருமையில் தங்கியிருக்கிறது. மனித இனம் பொனொபோக்கள் போலும் வாழமுடியும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
டேவிட் ஸ்லோன் வில்சன் (David Sloan Wilson) என்ற பரிணாம உயிரியல் (Evolutionary Biology) ஆய்வாளர் வேறொரு கோணத்தில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை மரபணுக்களின் பரிணாமத்துக்கு அப்பாலும் மேலும் விரிவக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.
மனிதர்கள் சிறு மானிட சமூகங்களாக மேலும் பரிணாமம் அடைந்திருக்கின்றன என்பது இவர் வைக்கும் கோட்பாடு.
இவற்றில் ஒத்துழைப்பு அதிகமுள்ள சமூகங்களே பாதுகாப்பாக இருந்ததால் ஒத்துழைப்பை போற்றும் சமூகங்களே பரிணாமாத்தில் வெற்றிபெற்றுள்ளன. இதுவே சமயங்கள் உருவாக காரணம். ஆரம்ப காலத்தில் சமயங்கள் ஒத்துழைப்பை வளர்த்தன. இதனால்தான் சமயங்கள் அன்று மானிட பரிணாமத்தின் இருந்துள்ளது. இது 10,000 ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயம் ஆரம்பிப்பதற்கு முன்னர், தோன்றிய பரிணாமம். அப்போது மனிதர்கள் சிறு சமூகங்களாகவே வாழ்ந்தார்கள். கடைசி 10,000 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உருவான மனித சமூக மாற்றங்கள் ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்ட சமூகத்தை புரட்டிப்போட்டுள்ளது.
இன்றைய உலகின் இனவழிப்புகளுக்கும், அருவருப்பான ஏற்றத்தாழ்வுகளுக்கும், சூழல் அழிவுக்கும் இந்த அண்மைய 10,000 ஆண்டு மாற்றங்களே அடிப்படை. மனித சமூகங்கள் சிறு குழுக்களாக ஒத்துழைத்து வாழும் ஒரு உலகளாவிய வாழ்க்கை முறை உருவாகினால்தான் இத்தீமைகளிலிருந்து மாற்றங்கள் கிடைக்கும். ஒருவழியில் பார்த்தால் விடுதலைப்புலிகள் உருவாக்கிய சமூகமும் இத்தகையதாகதான் இருந்தது.
மையநீரோட்ட ஊடகங்கள் பரப்பும் கருத்துக்களுக்கு மக்கள் ஏன் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை வேறொரு வழியிலும் புரிந்து கொள்ளலாம். சார்பு கோட்பாடு (Dependency Theory) உலக நாடுகளை நான்கு பிரிவுகளாகவும் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மக்களை அதிகார வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என இரண்டு பிரிவுகளாகவும் பார்க்கிறது. நான்கு பிரிவிலும் உள்ள அதிகார வர்க்கம் மையநீரோட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மேற்குலக உழைக்கும் மக்களும், புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உட்பட, மையநீரோட்ட பொய்களால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.
வளரும் நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் தான் உலகத்தில் மிகவும் பெரும்பான்மையானவர்கள். இவர்கள் தான் இக்கருத்துக்களால் அதிக தீமைக்கு உள்ளாகிறார்கள். இந்த மக்களும் மையநீரோட்ட பொய்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விடயம். ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைவிட முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் சரி. இது எப்படி என்று நாம் கேட்கலாம்.
வளரும் நாடுகளில் உள்ள மக்கள் தங்களுக்கு அண்மையில் உள்ள அதிகார வார்க்கத்தின் சுயநலத்தையும் கூட ஓரளவு தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் ஒட்டுமொத்த அதிகார வர்க்கங்களின் நலன்கள் சேர்ந்தே பாதுகாக்கப்படுகின்றன என்பதும் மேற்குலக அதிகார வர்க்கம் வளரும் நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராக இயங்குகின்றன என்பதையும் தான் இந்த உழைக்கும் மக்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களும் ஐநாவும் கூட அதிகார வர்க்கம் சார்ந்தே இயங்குகின்றன என்பதை இந்த உழைக்கும் மக்கள் புரிந்து கொள்வதில் தான் பிரச்சனைகள் உள்ளன. இந்த சர்வதேச அமைப்புக்களின் தலைமைகளும் மேற்கூறிய மையநீரோட்ட கருத்துக்களை எதிர்ப்பதில்லை என்பதிலிருந்து இவற்றின் போக்கை நாம் ஊகிக்க வேண்டும். ஆனால் இவ்வமைப்புக்கள் உழைக்கும் ஏழை மக்களின் நலன்களுக்காக இயங்குகின்றன என்ற கருத்து உழைக்கும் மக்களின் மனதில் வேரூன்றியுள்ளது என்பதுதான் பிரச்சனை. இவ்வமைப்புக்களும் தங்களுக்கு கிடைக்கும் நிதியின் பலத்தை கொண்டு உழைக்கும் மக்களை ஏமாற்றி வருகின்றன.
அண்மையில் புலம்பெயர் தமிழ் பள்ளி ஒன்றில் ஒரு நிகழ்வுக்காக ஒரு ஈழத்து மீனவர் பாடலை யூரியூப்பில் தேடினார்கள். கிடைத்த வீடியோ பாடல் முல்லைத்தீவில் ஒரு பாடசாலை பிள்ளைகள் பாடியது. இப்பிள்ளைகள் அமர்ந்திருந்த அரங்கின் பின் கட்டியிருந்த பனரில் கொட்டை எழுத்துக்களில் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஏராளமான அரசசார்பற்ற நிறுவனங்களும் பனரில் குறிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த பனரில் தமிழ் மொழி மருந்துக்கும் இல்லை. காலம் காலமாக காலனியாளர்கள் காலனி நாட்டினரை அடிமைகளாக கையாண்டதையே இது நினைவுக்கு கொண்டு வருகிறது. அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் யாருடைய நலனுக்காக உழைக்கின்றன என்பதை இதிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
அதிகாரத்தை அண்டி வாழும் மனித இயற்கைக்கும் அப்பால், அறிவியல் வளர்ச்சியிலும் இன்று சமநிலை இல்லாமையும் உழைக்கும் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மையநீரோட்ட ஊடகங்கள் பற்றிய விழிப்புணர்வு உழைக்கும் மக்களுக்கு தேவை. அதற்கான மக்களின் அறிவை வளர்ப்பது மாற்றத்திற்கான முதலாவது படி.
இதை உணர்ந்து உழைக்கும் மக்களின் கல்வியை முன்னெடுத்தவர்களில் லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த போலோ ஃபிராரி முதன்மையானவர். மையநீரோட்ட ஊடகங்களை புரிந்து கொண்டால், உழைக்கும் மக்கள் கைகோர்ப்பதில்தான் மாற்றம் வரும் என்ற முடிவுக்கு உழைக்கும் மக்கள் வருவார்கள். அப்போதும் ஐ-அமெரிக்கா பார்த்துக்கொண்டு இருக்காது. விழிப்புணர்வு உள்ள குழுமங்களை தேடி அழிக்கும். விடுதலைப்புலிகளை அழித்தது போல.
இவ்வாக்கத்தில் பல ஆய்வாளர்களின் கருத்துக்கள் மேலோட்டமாக தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. அதிகாரம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பெட்ரன்ட் ரஸ்சல் (Betrand Russel), primatogy ஆய்வாளர்களின் பெண்கள் கூட்டொருமையில் இயங்கும் பொனொபோக்கள், David Sloan Wilson ஆய்வாளரின் சிறிய மானிட சமூகங்களும் ஒத்துழைப்பும், லத்தீன் அமெரிக்காவில் தோன்றிய சார்புக்கோட்பாடு, வில்லியம் பிளமின் ஐ-அமெரிக்கவின் “நம்பிக்கை கொலை” பற்றியவையே இவை. இவற்றையும் விட நவதாராளவாதம் பற்றிய அறிவும் முக்கியமானது. அதுபற்றியும் நோம் சொம்ஸ்கி உட்பட பலரின் கருத்துக்கள் இப்பத்தியில் முன்னர் எழுதப்பட்டுள்ளன.
ஆசியாவில் படைப் பரம்பலை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் திட்டத்தின் நோக்கம். திருமலை துறைமுகம்இ கொழும்பு துறைமுகம் என்பன இதன் பிரதான நோக்கமாக இருக்கின்றது. எனினும் இந்த துறைமுகங்கள் அமெரிக்காவின் கடற்படை கப்பல்களின் நடவடிக்கைகளுக்கு போதுமானது அல்ல.
எனவே இரு துறைமுகங்களையும் சுற்றியுள்ள நிலங்களை கைப்பற்றி துஐறமுகங்களை விரிவுபடுத்துவதுஇ அதன் பின்னர் இரு துறைமுகங்களையும் இணைக்கும் விரைவு நெடுஞ்சாலையை அமைப்பதே அமெரிக்கா உடன்பாட்டின் பிரதான நோக்கம்.நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்திற்கு ஏதுவாக அமெரிக்கா அரசு இரு துறைமுகங்களுக்கும் அண்மையாக உள்ள நிலங்கள் தொடர்பில் தகவல்களை சேகரித்து வருகின்றது.
ஏழு மாவட்டங்களை இணைத்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அதாவது அமெரிக்காவின் உடன்பாடு கைச்சாத்திடப்பட்டால் சிறீலங்காவின் வளங்கள் அனைத்தும் அமெரிக்கா வசம் சென்றுவிடும் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. அதாவது சீனாவின் பிரசன்னத்தை ஆசியாப் பிராந்தியத்தில் முறியடிப்பதே அமெரிக்காவின் திட்டம் என அது மேலும் தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் உடன்பாடானதுஇ இந்தியாவுக்கு மிகப்பெரும் ஆபத்தானது என படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறீலங்காவில் அமெரிக்கா படையினர் நிலைகொண்டால் அது இந்தியாவை தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் ஆபத்தாகும். இது இந்தியாவிற்கு நேரிடையான ஆபத்தை ஏற்படுத்தும்.
சீனாஇ இந்தியாஇ ஈரான் என அமெரிக்கா தனது எதிரிகளை வரிசைப்படுத்த இந்த உடன்பாடு உதவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் சக்திவாய்ந்த மையமாக சிறீலங்கா மாற்றம் பெற்றதே தற்போதைய நெருக்கடிகளுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.