சார்பு கோட்பாடும் சமத்துவமும் – ந.மாலதி

இவ்வருடம் மே மாதம், ஒரு சர்வதேச அரசியல் ஆய்வேடு ஒன்றில் (startfor.com) வெளியான ஒரு கட்டுரை, ஐ‑அரெிக்காவும் சீனாவும் வரலாற்றில் எவ்வாறு பொருளாதார ரீதியாக வளர்ந்து தேய்ந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது. அதில் வந்த ஒரு விளக்கப்படம் இது. ஏறக்குறைய ஆயிரமாண்டுகளாக உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை படம்பிடிக்கிறது. இந்த ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஒவ்வொரு பிரேதேசத்தினதும் பங்கு காலரீதியாக எவ்வாறு மாறுகிறது என்பதையே இவ்விளக்கப்படம் காட்டுகிறது.sarpu சார்பு கோட்பாடும் சமத்துவமும் - ந.மாலதி

பிரித்தானிய காலனிய காலம் எப்போது ஆரம்பிக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு இப்படத்தை புரிந்து கொள்ளவது பயனுள்ளது. சீனாவில் பிரித்தானியாவின் தலையீடும், தெற்காசிய பிராந்தியத்தில் பிரித்தானிய காலனிய காலமும் 1800களில் ஆரம்பிக்கிறது. பிரித்தானிய காலனிய கால ஆரம்பத்தில் உலகிலேயே அதிக பொருளாதார நடவடிக்கைகள் இடம்பெற்ற இடமாக சீனாவும் இந்தியாவும் உள்ளன என்பதை இப்படத்தில் காணலாம். காலனியாதிக்கம் உறுதியாக இப்பிராந்தியத்தில் இடம்பெற, மிகவும் ஏழ்மையில் இருந்த பிரித்தானியாவின் பொருளாதாரம் விரிவடைவதையும் இப்பிராந்தியங்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் இப்படம் காட்டுகிறது.

An Era of Darkness The SDL970221712 1 93e8e சார்பு கோட்பாடும் சமத்துவமும் - ந.மாலதி

மிகவும் பிரபலமான ஒரு யூரியூப் வீடியோவில், சாசி தரூர் என்ற கேராளாவை சோர்ந்த அரசியல்வாதி, எவ்வாறு பிரித்தானிய இந்தியாவை சுரண்டி வளர்ந்தது என்பது பற்றி பேசியிருக்கிறார். இதை இவர் பிரபலமான ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக, 2016 விவாதத்தின் போதே முதலில் பேசினார். பின்னர் இது மிகவும் பிரபலமடைந்ததால், இதுபற்றி ஒரு நூலும் எழுதியிருக்கிறார். மேலே உள்ள படத்திற்கும் சாசி தரூரின் பேச்சுக்கும் உள்ள ஒற்றுமை வெளிப்படை.

 

சார்பு கோட்பாடு (Dependency Theory)

இதை இன்னும் விரிவாககவும் ஆழமாகவும், 1950களில், சார்பு கோட்பாட்டின் மூலம்  விபரித்தவர் ஆர்ஜடீனாவை சேர்ந்த ராகுல் பிரபிஸ் என்பவர். இவர் ஐநா சபையின் லத்தீன் அமெரிக்க பொருளாதார கமிசனின் தலைவராக இருந்து, இச்சார்பு கோட்பாட்டை பிரபலமாக்கினார். தொடர்ந்த சில தசாப்தங்களுக்கு ஐ‑அமெரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் சார்பு கோட்பாட்டை அடிப்படையாக வைத்து பல ஆய்வுகள் நிகழ்ந்தன. சார்பு கோட்பாடு என்றால் என்ன?

மூன்றாம் உலக நாடுகளுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையே விளங்கும் ஏற்றத்தாழ்வுகளின் காரணங்களை பொருளாதார நிபுணர்கள் பலவழிகளில் விளக்குவார்கள். மேற்குலக பொருளாதார நிபுணர்கள் இதற்கான காரணங்களை மூன்றாம் உலநாடுகளுக்கு உள்ளே மட்டுமே தேடுவார்கள். ஆனால் ஒரு மூன்றாம் உலக பொருளாதார நிபுணரான ராகுல் பிரபிஸ், அதற்கான காரணத்தை சரியாகவே உலகளாவிய ரீதியில் தேடினார். அதுவே சார்பு கோட்பாடு. இன்று நவதாராளவாதத்தை முன்னிறுத்தி, சார்பு கோட்பாட்டை பெருமளவு மறுத்துவிட்டார்கள். ஆனால் இதிலுள்ள உண்மை வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு தெளிவாகவே தெரிய வேண்டும். இச்சார்பு கோட்பாடு பற்றிய சுருக்கமான விளக்கம் கீழே.

சர்வதேச ரீதியாக நாடுகள் உருவாகியிருக்கும் முறையில், வளரும் நாடுகள் வளர்ச்சியடைவது தடுக்கப்படுகிறது என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படை.kk 1 சார்பு கோட்பாடும் சமத்துவமும் - ந.மாலதி

சார்பு கோட்பாடடின் முதலாவது அம்சம் சர்வதேச ரீதியில் நாடுகளை நான்கு பிரிவாக அதன் சர்வதேச உழைப்பு அடிப்படையில் பிரிக்கிறது.

முதலாவது பிரிவு  மையத்தில் உள்ளவை மைய நாடுகள் (மை-மை நாடுகள்). ஐ‑அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அதற்கு உதாரணம்.

இரண்டாவது பிரிவு மையத்தில் உள்ள விளிம்பு நாடுகள் (மை-வி நாடுகள்). இவையும் வளர்ச்சியடைந்த செல்வம் மிக்க நாடுகளே.உதாரணமாக கனடா, ஜப்பான் போன்ற நாடுகள். ஆனால் இவற்றிற்கு மை-மை நாடுகள் அளவு அதிகாரம் இல்லை.

மூன்றாவது  பிரிவு விளிம்பு மைய நாடுகள் (வி-மை நாடுகள்). இவற்றிக்கு உதாரணமாக இந்தியா, தென்னாபிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளை சொல்லலாம். இவை கொஞசம் செல்வமுள்ள நாடுகளாக இருந்தாலும் வளரும் நாடுகளாகவே உள்ளன.

இறுதியாக மிகவும் ஏழ்மையான விளிம்பு விளிம்பு நாடுகள் (வி-வி நாடுகள்). இவற்றிற்கு உதாரணமாக கம்போடியா, எல்சல்வடோர் போன்ற நாடுகளை சொல்லாம்.

சர்வதேச உழைப்பு அடிப்படையில், மை-மை நாடுகளிலேயே தொழிற்சாலைகளும், தொழில்நுட்பமும், அதிக முதலீடுகள் தேவையான ஆய்வுகளும் நடக்கின்றன. விளிம்பில் உள்ள ஏனைய நாடுகள் எல்லாம் மை-மை நாடுகளின் பொருளாதார நன்மைகளுக்காக உழைக்கின்றன. மை-வி நாடுகள் மை-மை நாடுகளின் பொருளாதார நன்மைகளுக்காக உழைக்கின்றன. வி-மை நாடுகள், மை-மை மற்றும் மை-வி நாடுகளின் பொருளாதார நன்மைகளுக்காக உழைக்கின்றன. அதே போல வி-வி நாடுகள் ஏனைய மூன்று தொகுதி நாடுகளுக்காகவும் உழைக்கின்றன.

சார்பு கோட்பாட்டின் இரண்டாவது அம்சம், உலக நாடுகள் எல்லாவற்றிலுமே செல்வம் அதிகம் உள்ள ஒரு சிறிய தொகுதி மக்கள் இருக்கிறார்கள் (படத்தில் காட்டப்பட்டது போல). நான்கு தொகுதி நாடுகளிலும் உழைக்கும் மக்கள் பெரும் தொகையாக உள்ளார்கள். எல்லா நாடுகளிலும் உள்ள செல்வம் அதிகமுள்ளவர்கள், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலமுள்ளவர்கள். இவர்கள் ஒன்றாக இணைந்து செயற்படுகிறார்கள். அதன் மூலம் தங்கள் அதிகாரத்தை பாதுகாத்து, தங்கள் செல்வத்தையும் அதிகரிக்கிறார்கள். இதற்காக இந்த சர்வதேச முறை மாறாமல் இருப்பதற்காக ஒத்துழைக்கிறார்கள்.

சார்பு கோட்பாடடின் மூன்றாவது அம்சம், இந்நாடுகள் எல்லாம் உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார கொள்கையுடன் இயங்குகின்றன. அதாவது உலனளாவிய ரீதியல் நவதாராளவாத கொள்கைகளும், திறந்த சந்தை கொள்கைகளும் இச்சர்வதேச முறையை பாதுகாப்பதற்காகன வழிகளாக ஆதிக்கம் செலுத்துகின்றன. இவையெல்லாம் முக்கியமாக மை-மை நாடுகளின் நன்மைகளையே முன்னிறுத்துகின்றன.

பல்தேசிய கார்பரேசனகளும், வங்கிகளும் இதை அடைவதற்கான கருவிகளே. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இதையே முன்னிறுத்துகின்றன. கல்வி முறைகளும் மைய நீரோட்ட ஊடகங்களும் இதையே செய்கின்றன. இவையெல்லாம் சேர்ந்து மை-மை நாடுகளின் நன்மைக்காகவே இயங்குகின்றன. இதனாலேயே ஏனைய நாடுகள் வளர்சியடைவது தடைசெய்யப்படுகிறது.

இதுவே இன்று மறுக்கப்பட்டுள்ள சார்பு கோட்பாடு. தமிழீழ போராட்டத்தின் சர்வதேச பரிமாணத்தை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கும் இதிலுள்ள உண்மை புரியும்.