தேர்தலில் களமிறங்காமல் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்லத் தயாராகும் சம்பந்தன்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் இடம்பெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தில், ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

யாழ், வன்னி, மட்டக்களப்பு, திருமலை ஆகிய மாவட்டங்களில் தமிழரசுக் கட்சியின் ஊடாக இளம் புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைமை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான சம்பந்தன் தேர்தல் களத்தில் களமிறங்காது தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரசன்னமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.