Home Blog Page 2415

விளையாட்டு ரசிகர்களை கொடுரமாக தாக்கிய ஸ்ரீலங்கா இராணுவம்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நேற்று நடந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது பதற்ற நிலை ஏற்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மைதானத்திற்குள் செல்ல ரிக்கெட் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது.

பெருமளவு ரசிகர்கள் குழப்ப நிலையை ஏற்படுத்தியமையினால் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

இதன்போது கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவம் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவத்தினர் பார்வையாளர்களை துரத்தி துரத்தி தாக்குவதனை அவதானிக்க முடிந்த நிலையில், “ஐயோ தாக்காதீர்கள் கடவுளே” என பார்வையாளர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

தேசிய கொடியுடன் முகத்தில் நாட்டின் கொடியை வரைந்து கொண்டு இலங்கை அணியை உற்சாகப்படுத்த சென்ற ரசிகர்களை இராணுவத்தினர் துரத்தி துரத்தி அடிப்பது யாருக்கு பெருமை? என தென்னிலங்கை ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முப்படையினரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பமானது. இவ்வாறான அசம்பாவிதங்கள் வீதி போக்குவரத்து நடவடிக்கையிலும் ஏற்படும் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணம் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ராஜபக்ஷர்களின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து இலங்கை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொந்தப் பகுதியிலேயே இராணுவத்தினர் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டமை குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி!

போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு வரை குறித்த தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்த நல்லாட்சி அரசாங்கமே குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, “2021 ஆம் ஆண்டு இறுதி வரை குறித்த தீர்மானத்தில் நாங்கள் இணை அனுசரணையாளர்களாக இருக்கிறோம். அதில் இருந்து வெளியேற முடியாது.

2021 க்குப் பின்னரே அடுத்த தீர்மானத்திற்கு நீங்கள் இணை அனுசரணை வழங்குவீர்களா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும்” என கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது 2015 ஆம் ஆண்டில், யு.என்.எச்.ஆர்.சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அதில் பெரிய அளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

இதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணை, அந்த நேரத்தில் இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு முக்கிய படியாக காணப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தாமதித்தமை குறித்து தமிழ் தலைவர்கள் கடும் கவலை வெளியிட்டிருந்த நிலையில் 2017 ல் அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு கோரியது.

அதன்படி கடந்த ஆண்டு, மனித உரிமை மீறல்கள் குறித்து கூறப்படும் நம்பகமான விசாரணையை முன்னெடுக்க இலங்கைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க மனித உரிமைகள் பேரவை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வாழ்வெட்டு கும்பலின் அட்டகாசம் – 3 இடங்களில் தாக்குதல்

யாழ்.வண்ணார்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

நேற்று மாலை 6 மணியளவில் வண்ணார்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற வாள்வெட்டு கும்பல், கடையை அடித்து நொருக்கியதுடன், உாிமையாளரையும் தாக்க முயற்சித்துள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 போ் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடாத்தியிருக்கின்றது. குறித்த கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும், அதற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீதும் தாக்குதல் நடாத்தியிருக்கின்றது. முகங்களை மூடியிருந்ததுடன், இலக்க தகடுகளற்ற மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே இந்த தொடா் தாக்குதலை நடாத்தியிருக்கின்றது.

சம்பவம் தொடா்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சட்டவிரோத இரசாயனப் பொருட்களுடன் ஒருவர் கைது.

2020 பிப்ரவரி 25 ஆம் திகதி ஓமந்தை இராணுவ புறக்காவல் நிலையம் அருகே கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடற்படை மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அருகே நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வேனை பரிசோதிக்கப்பட்டன.

அப்போ அங்கிருந்து சட்டவிரோத கிளைபோசேட் கொண்ட 1897 இரசாயன பொருள் பாக்கெட்டுகளை (189 கிலோ மற்றும் 700 கிராம்) மீட்டுள்ளனர்.

இந்த இரசாயன பொருள் பாக்கெட்டுகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் போது இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன் மேலும் ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் வேயங்கொடை பகுதியில் வசிக்கின்ற 49 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர், வேன் வண்டி மற்றும் கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒருபுறம் பதவிஆசை மறுபுறம் ஊழல் – ரணிலைச் சாடும் மைத்திரி

“ஊழல், மோசடிகளினால் நாட்டை நாசமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் சிங்கள மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.” என அறைகூவல் விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் ஓரணியில் நின்று கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தபடியால் அவர் அமோக வெற்றியடைந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் படுதோல்வியடைந்தார்.

ஐ.தே.க. தலைமையிலான கூட்டணியின் படுதோல்விக்கும் அந்தக் கூட்டணி இன்று பிளவடைந்து காணப்படுகின்றமைக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே முழுப் பொறுப்பு.

ஒரு புறத்தில் பதவி ஆசையில் பிரதமர் கதிரையில் அமர்ந்திருந்த ரணில், மறுபுறத்தில் ஊழல், மோசடிகளுக்குத் தலைமை தாங்கினார்.

நல்லாட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி தலைமையில் அமைகின்ற அரசு தக்க தண்டனையை வழங்கியே தீரும்.

எனவே, பொதுத் தேர்தலில் சிங்கள மக்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள மூவின மக்களும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி வெற்றியடையும் வகையில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்” – என்றார்.

தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்

தாயகத்தில்  தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொல்பொருள்ச் சின்னங்கள்,ஆலயங்கள், மரபுப் பொருட்களை அபகரித்து வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் சிறிலங்கா அரசும்,அதன் அரசியல்வாதிகளும்,பௌத்த பிக்குகளும் அன்றுமுதல் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர். இந்த செயற்பாடுகள் போருக்கு பின்னான இந்த காலப்பகுதியில் மேலும் தீவிரம் பெற்றுள்ளன.

சிங்கள பௌத்த மேலாதிக்கம் காரணமாக வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம்,மகாவலி அபிவிருத்தி திணைக்களம்,தொல்லியல் திணைக்களம், என முக்கியமான திணைக்களங்களை ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக இருக்கும் பொளத்த தலைவரின் நேரடி கண்காணிப்பில் இருக்குமளவுக்கு சட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

மேற்குறித்த திணைக்களங்களில் எந்த செயற்பாடுகள் செய்யவேண்டுமாக இருந்தாலும் ஜனாதிபதியில் அனுமதியின்றி செய்யமுடியாது.இவ்வாறு இருக்கும் ஸ்ரீலங்கா அரசின் நிர்வாக எல்லைக்குள் தமிழர்களின் பூர்வீகம் அழிக்கப்படும் அபகரிக்கப்பட்டும, மறைக்கப்பட்டும் வருகின்றது.3 3 தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்

இந் நிலையில் இவ்வாறான அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரிய சொத்தான வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தையும் அதன் வழங்களையும் அபகரிக்கும் முயற்சியில் வனவளத் திணைக்களமும், தொல்லியல் திணைக்களமும்,பொலிஸாரும் இணைந்து நீதிமன்றில் பல வழக்குகளை தெடுத்துள்ளனர்.

ஆலயத்தின் அமைவிடமும் வரலாறும் வவுனியா நெடுங்கேணி நகர்ப் பகுதியிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் வெடுக்குநாரி மரங்கள் சூழ்ந்த அடந்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர்.

4000 வருடங்களுக்கு முன்பிருந்து பரம்பரை பரம்பரையாக வெடுக்குநாரி மலை ஆலயத்தில் மரபு வழி வழிபாடு, மற்றும் பூசை முறைகள் நடைபெற்று வருகின்றது.

ஒலுமடு சந்தியிலிருந்து அடர்ந்த காட்டுப் பாதை ஊடாக 4.5 கிலோமீற்றர் உழவு இயந்திரத்தின் மூலமும் நடந்துமே குறித்த ஆலயத்திற்கு செல்லமுடியும்.2 1 தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்

கதிர்காமம் மலைக்குச் சொல்லும் அனுபவத்தை வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் அனுபவிக்கமுடியும். 4.5 கிலோமீற்றர் காட்டுபிரதேசப் பயணம் அதன்பின் சுமார் 100 அடி உயரமுடைய மலையில் செயற்கை படி மற்றும் பெரிய மரங்களின் வேர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியே மலை உச்சியில் இருக்கும் ஆதி லிங்கேஸ்வரரை வழிபடமுடியும்.

இவ்வாறு இயற்கை மற்றும் வரலாற்று சிறப்புடைய வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீது தற்போது ஸ்ரீலங்கா சிங்கள பௌத்த தலைவர்களின் கண்பட்டுவிட்டது.

இதன் பிரதிபலிப்பு ஆலய நிர்வாகத்தினர் மீது வழக்குத்தாக்கள், தொல்பொருற்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் முற்றுகை,வனவளம் பாதிக்கப்படுவதாக வனவளத் திணைக்களம்,வனஜீவராசிகள் பாதிக்கப்படுவதாக வனவளத் திணைக்களம் என சுற்றிவளைத்து தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதபூமியை அபகரித்து சிவனைத் துரத்தி புத்தரை வரவழைக்கும் முயற்சியில் நேர்முகமாக பலரும் மறைமுகமாக பலரும் ஸ்ரீலங்கா அரச துணையுடன் 24 மணிநேரமும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.6 தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்

இந் நிலையில் கோவில் நிர்வாகத்தினரின் முயற்சியில் விசேட நாட்களில் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில் கடந்த 21.02.2020 அன்று மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வவுனியா, களிநொச்சி,முல்லைத்தீவு,ஆகிய மாவட்டங்களில் இருந்து பொக்கிசம் கனடா அனுசரணையில் இயங்கும் அறநெறியில் கல்வி கற்கும் 500 மாணவர்கள் வெடிக்குநாரி மலைக்கு வருகைதந்து ஆலயத்தை தரிசித்த அதே வேளை, கலை நிகழ்வுகளையும் நடாத்தியிருந்தனர்.

இதேபோல ஒலுமடு,மற்றும் நயிநாமடு பாடசாலை மாணவர்கள் சிவராத்திரி தினத்தன்று இரவு விசேட கலைநிகழ்வுகளை அரங்கேற்றியிருந்தனர்.

போக்குவரத்து, குடிநீர்,மின்சாரம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத வெடுக்குநாரிமலை காட்டுப் பகுதியில் பாரம்பரியத்தையும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறையை வெளிக்காட்டும் முயற்சியில் இவ்வருடம் சிவன் ராத்திரி வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலையத்தில் நடைபெற்றமை மற்றுமொரு வரலாற்று சிறப்பு.

வெடுக்குநாரிமலையில் ஸ்ரீலங்கா அரசின் ஒடுக்குமுறை ஆலயத்தியத்தில் ஒலிபெருக்கித் தடை,மலையில் ஏறும் ஏணி வைப்பதில் தடை, பூசைகள் செய்வதற்கு தடை மக்கள் செல்வதற்குத் தடை என பல தடைகளை போட்டாலும் மக்களின் எழுட்சியில் இன்றும் வெடுக்குநாரி மலையில் பூசைகள் நடைபெற்று வருகின்றது.

தமிழ் இனத்தின் அழிவுக்கு காரணமாக இருந்த நபரே இன்று ஸ்ரீலங்காவின் சனாதிபதி இவருடைய ஆற்சிக் காலத்திலும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றுச் இடங்கள் பறிபோகக்கூடாதென இன்றும் தாயக உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.4 தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்

இந் நிலையில் புலம் பெயர் உறவுகளும் தாயக பிரதேசங்களுக்கு விடுமுறையில் வரும்போது கதிர்காமம் போகவேண்டாம் என்று சொல்லவில்லை எமது மண்ணில் இருக்கும் வெடுக்குநாரி மலைக்கு சென்று சிவனின் ஆசியைப் பெற்று உலகுக்கு வெளிப்படுத்த்தி தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பாற்ற உங்கள் கரம் உயரட்டும்.

கதிர்காமக் கந்தன் இன்று ஸ்ரீபாத புத்தனாக மாறிவிட்டான்,திருகோணமலை வெண்ணீரூற்று சிவன் கோவில் இன்று பௌத்த கோவில்,பொளத்த ஆதிக்கம் சப்ரகமுவ கதிர்காமத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வரை வந்துவிட்டது.

தற்போது தமிழர் தாயகப்பிரதேசங்காளான வவுனியா,மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை போன்ற அனைத்து மாவட்டங்களிலும் புத்தர் வந்து குடியமர்ந்து விட்டார்.

இதில் வேடிக்கையான விடையம் புத்தரின் பக்தர்கள் இல்லாத இடங்களில் அமைக்கப்பட்ட பொளத்த விகாரைகள் இன்று பறவைகள்,குரங்குகளின் சரணாலயமாகிவிட்டது. இருந்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிது புதிதாக தினம்தோறும் பௌத்த விகாரைகள் முளைத்துக்கொண்டே செல்கிறது.

7 1 தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்

இந் நிலை தொடர்ந்தால் பௌத்த பிக்குமார் அடிக்கடி மேடைப் பேச்சுக்களில் சொல்லுவது போல் இலங்கை எதிர்காலத்தில் சிங்கள பௌத்த நாடாக மாறும் என்பதில் ஐயப்பாடில்லை.

இவற்றை மாற்றியமைக்க புலம்பெயல் தமிழரும் ஈழத் தமிழரும் நவநாகரீக வாழ்க்கையில் மூழ்கிப்போகாது எமது தாயகத்தைக் காப்பாற்ற நீண்டதூர நோக்குடன் திட்டங்களை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தி எமது மண்ணையும் தமிழர்களின் வரலாற்றையும் பறைசாற்றவேண்டியது தலையாய கடமையாகும்.

ஐரோப்பாவில் கொரோனா, இத்தாலியில் அதிகமானோர் பாதிப்பு

பல்வேறு ஐரோப்பிய நாடுகள்,தங்கள் நாடுகளில் கொரோனா தொற்று இருப்பதாக முதன் முறையாக அறிவித்துள்ளன.

கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 2700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒஸ்திரியா, குரேஷியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இத்தாலிக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒஸ்திரியாவில், இன்ஸ்ப்ரக் நகரில் இளம் இத்தாலிய தம்பதியினருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் பணிபுரிந்த விடுதி மூடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், 70களில் இருக்கும் முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

குரேஷியாவில் இத்தாலியிலிருந்து திரும்பிவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் டெனிரிஃப் பகுதியில், ஒரு விடுதியில் தங்கியிருந்த மருத்துவர் மற்றும் அவரின் மனைவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த விடுதியில் இருந்த சுமார் 1000 பேரை பூட்டி வைத்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இத்தாலிக்கு சென்று திரும்பி வந்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்பினால் விலகிக்கொள்கிறோம் புதிய கட்சிகளை உருவாக்காதீர்கள் என்கிறார் ஜி.ரி.லிங்கநாதன்

தேர்தலில் போட்டியிட விரும்பினால் நாங்கள் விலகிக்கொள்கின்றோம். அதற்காக தற்போதைய நிலையில் புதிய கட்சிகளை உருவாக்குவது எமக்கு ஆபத்தானது என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

வவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய அலங்கார நுழைவாயிலின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றுகையில்,

சாள்ஸ் நிர்மலநாதனை விட வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்து ஆலயங்களிற்கு உதவி செய்வதாக நான் நம்பவில்லை.

ஆனாலும் இம்முறை தேர்தலை இலக்காக கொண்டு இந்துக்கள் சார்பாக ஒரு அணியும், கிறிஸ்தவர்கள் சார்பாக ஒரு அணியும் உருவெடுத்திருக்கிறது. நாங்கள் ஏற்கனவே தமிழ் பேசும் மக்களாக இருந்து மதத்தால் பிரிந்திருக்கிறோம். இன்னுமொரு மதத்தாலும் பிரிவோமேயானால் இந்த நாட்டில் இரண்டாவது இனமகாக அல்ல நான்காவது, ஐந்தாவது இனமாக இந்துக்களும், தமிழர்களும் வந்துவிடுவோம்.

ஆபத்தை உணர்ந்தவர்களாக நாம் மாத்திரம் அல்ல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு பின்னர் வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு உறவினர்களுக்கு உள்ளே பிரிவுகள் ஏற்பட்டு பல கட்சிகள் உருவாகின்ற நிலைமை காணப்பட்டு கொண்டு இருக்கின்றது. தயவுசெய்து இவ்வாறான வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

நீங்கள் தேர்தலில் ஈடுபடப்போகின்றீர்களே ஆனால் கூறுங்கள் நாங்கள் விலகிக்கொள்கின்றோம். ஆனால் புதிது புதிதாக கட்சிகளை உருவாக்கி மக்களை பிரித்து எமது இனத்தை சிறு கூறுகளாக்கி விடாதீர்கள். ஏற்கனவே பௌத்த சிங்கள வாக்குகளை நம்பி ஒரு ஜனாதிபதி வந்திருக்கிறார். அவர் தற்போது தனக்கு பெரும்பான்மையை கேட்டு நிற்கின்றார்.

அவர் சிறுபான்மை இனத்தை பற்றி சிந்திப்பதாக இல்லை. இவ்வாறான நிலையில் நாங்கள் மத ரீதியாக பிளவுபடும் போது பௌத்த சிங்களம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுத்தால் நாங்கள் இங்கு வாழ்வதா இல்லை என்கின்ற மிகப்பெரிய ஐயப்பாடு உருவாகும்.

ஆகவே புதிதாக உருவாகின்ற கட்சிகளும், அதை உருவாக்குபவர்களும் தற்போது உள்ள காலத்தை உணர்ந்து மீண்டும் ஒரு முறை சிந்தித்து செயற்படுங்கள் என்பதையே நாங்கள் கோரி நிற்கின்றோம் என தெரிவித்தார்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.

புதிய அரசினால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கான நேர்முக தேர்வுகள் இன்று புதன்கிழமையில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த நேர்முக தேர்வில் விண்ணப்பதாரிகளை நேர்முகம் காண்பதற்காக ஒரு அரச உத்தியோகத்தரும் இரண்டு இராணுவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளளனர்.

unnamed 1 3 ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.

unnamed 2 3 ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.

unnamed 3 3 ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.

unnamed 10 ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 890 பேர் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் இன்று ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கான நேர்முக தேர்வுகள் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெறுகின்றது.

இவ்வாறு அரச உத்தியோகத்தர்களுடன் இராணுவத்தினரை நேர்முகம் காண்பதற்கு இணைந்துக்கொண்டமை சமூக ஆர்வலகர்கள் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

மனித உரிமைகள் பேரவையிலிருந்து சிறிலங்கா விலகாது

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்து மாத்திரமே இலங்கை அரசாங்கம் விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மனித உரிமைகள் பேரவைகள் பேரவையிலிருந்து முழுமையாக விலகத் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த ​பிரேரணையிலிருந்து விடுபட்டாலும், மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலக தீர்மானிக்கவில்லை என்றும், அந்த ஆணைக்குழுவுக்குள் ஒரு நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ச்சியாக நீடிக்கும் என்றார்.

அத்தோடு, அந்த அமைப்பிலிருந்து இலங்கைக்கு அவசியமான விவகாரங்களின் போது இணைந்து செயற்படுவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.