Home Blog Page 2404

ஸ்ரீலங்கா தீவின் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் தேர்தலுக்கான திகதிகள் அறிவிப்பு

புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது. நாடாளுமன்றம் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு கலைக்கப்பட்டது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியான இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது

இதற்கான வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

Capture 01 ஸ்ரீலங்கா தீவின் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் தேர்தலுக்கான திகதிகள் அறிவிப்பு

Capture 2 ஸ்ரீலங்கா தீவின் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் தேர்தலுக்கான திகதிகள் அறிவிப்பு

10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற வவுனியா இளைஞன்.

31 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியாவை சேர்ந்த க.நிசோபன் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02-2020 ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்களுக்கான பிரிவில் 10000மீற்றர் ஓட்டப்போட்டியில் 10000 மீற்றர் தூரத்தை 35.16.10 நிமிடத்தில் ஓடிமுடித்து தங்கப்பதக்கத்தை பெற்று வவுனியாவை சேர்ந்த க.நிசோபன் அவர்கள் வவுனியா மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளதோடு வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

J.Thanusiya 02 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற வவுனியா இளைஞன்.

K.Nishopan 01 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற வவுனியா இளைஞன்.

carom 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற வவுனியா இளைஞன்.

இதேவேளை 29-02-2020 அன்று இடம்பெற்ற 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கான பிரிவில் 5000மீற்றர் வேகநடை போட்டியில் 5000 மீற்றர் தூரத்தை வேகநடையாக 32.21.42 நிமிடத்தில் ஓடிமுடித்து வவுனியாவை சேர்ந்த ஜெ.தனுசியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார் .

இதேவேளை வவுனியா மாவட்டமானது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கபடி போட்டியில் 3ம் இடத்தையும் ஆண்களுக்கான உதைபந்து போட்டியில் 2ம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற யாழ் இளைஞன்.

தட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற யாழ் இளைஞன். தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பிரகாசிக்கும் யாப்பாணம்.

31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 42.50 மீற்றர் தட்டெறிந்து யாழ்பாணத்தை சேர்ந்த து.மிதுன்ராஜ் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02-2020 ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் தட்டெறிதல் போட்டியில் 42.50 மீற்றர் தட்டெறிந்து தங்கப்பதக்கத்தை பெற்று யாழ்பாணத்தை சேர்ந்த து.மிதுன்ராஜ் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளதோடு வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதேவேளை யாழ் மாவட்ட வீரர்கள் தேசிய ரீதியில் பிரகாசித்து வருகின்றனர்.

அந்தவகையில் 28-02 இடம்பெற்ற 20 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்கள் பிரிவில் 110 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் யாழ்பாணத்தை சேர்ந்த ர.சதீசன் 3ம் இடத்தை பெற்றுள்ளார்.

29-02 இடம்பெற்ற 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் நீளம் பாய்தல் போட்டியில் 4.23 மீற்றர் தூரம் பாய்ந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த அ.நர்மதா 3ம் இடத்தை பெற்றுள்ளார்.

அதேபோன்று 29-02 இடம்பெற்ற 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் தட்டெறிதல் போட்டியில் 28.40 மீற்றர் தட்டெறிந்து யாழ்பாணத்தை சேர்ந்த ர .சுஜிபா 3ம் இடத்தை பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
A.Narmathaa 02 தட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற யாழ் இளைஞன்.

A.Narmathaa 05 தட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற யாழ் இளைஞன்.

evets photo 5 தட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற யாழ் இளைஞன்.

evets photo 10 தட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற யாழ் இளைஞன்.

R.Satheesan 01 தட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற யாழ் இளைஞன்.

R.Sujeepaa 1 தட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற யாழ் இளைஞன்.

T.Mithunraj 01 தட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற யாழ் இளைஞன்.

இதேவேளை பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தங்க பதக்கத்தையும், ஆண்களுக்கான வலைப்பந்து போட்டியில் தங்க பதக்கத்தையும், பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் தங்க பதக்கத்தையும், பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் இரண்டாமிடத்தினையும், ஆண்களுக்கான கரம் போட்டியில் 3ம் இடத்தினையும் பெற்று தேசிய விளையாட்டு விழாவில் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு யுவதி தேசிய ரீதியில் சாதனை

முல்லைத்தீவு யுவதி சசிகுமார் சரணியா 1500 மீற்றர் ஓட்டத்தில் தேசிய ரீதியில் 3 ம் இடம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02 ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 1500 மீற்றர் ஓட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சசிகுமார் .சரணியா 3 ஆம் இடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளதோடு வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்

.DSC00127 முல்லைத்தீவு யுவதி தேசிய ரீதியில் சாதனை

DSC00129 1 முல்லைத்தீவு யுவதி தேசிய ரீதியில் சாதனை

DSC00148 முல்லைத்தீவு யுவதி தேசிய ரீதியில் சாதனை

போர்க் குற்றத்திலிருந்து இலங்கை தப்ப முடியாது

ஐ.நா. சபையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக எடுத்துள்ள முடிவிற்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் தியர்ரி மேத்து தெரிவித்துள்ளதாவது,

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம், இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், குறைந்தது ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரிக்க, 2015ஆம் ஆண்டு ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மாநாட்டில் தெரிவித்துள்ளது.

தீர்மானத்திலிருந்து விலகுவதாக முடிவெடுத்தால், அந்த தீர்மானம் மறைந்து விட்டது என்று அர்த்தமல்ல. தீர்மானம் உயிர்ப்புடன் தான் இருக்கினற்து. எந்த ஒரு நாடும் பயங்கரவாதத்தை வளர்ப்பதை ஐ.நா. ஏற்காது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடக்கும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலகுவதாக இலங்கை எடுத்துள்ள முடிவிற்கு ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷல்ட், “இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வித்தியாசமான முறையில் நடத்தப்படுவது வருத்தமளிக்கின்றது. நல்லிணக்கம், மனித உரிமைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வது குறித்தான தீர்மானத்தில் இருந்து விலகுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பது கவலையளிக்கின்றது” என்று வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், பிரான்சும் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. “இது இலங்கை அரசிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்“ என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

சஜித் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் சென்னையில் ரவூப் ஹக்கீம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசாவின் கூட்டணியில் தாம் தொடர்ந்தும் நீடிப்போம் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சென்னையில் தெரிவித்துள்ளார்.

நேற்று (01) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த ரவுப் ஹக்கீமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், சென்னை கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆசாத், மாவட்ட சிறுபான்மை இணைச் செயலாளர் இப்ராஹிம் கனி, திருச்சி ஊடகவியலாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த ரவூப் ஹக்கீம், கருத்துத் தெரிவிக்கையில்,

துறைமுகம் எம்.எல்.ஏ சேகர் பாபு ஏற்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்தேன். இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து போராட்டம் நடைபெறுகின்றது. இந்தப் போராட்டம் மிகவும் கவலைக்குரியது. ஒரு சட்டமூலம் நிறைவேறி இருக்கின்றது என்பது தொடர்பாக தொப்புள்கொடி உறவுகளாக இலங்கையில் வாழ்ந்து வரும் நாங்களும் கவலை கொள்கிறோம். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். என்று கூறினார்.

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்துக் கேட்ட ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையில்,

ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது பிழையான தகவல். உத்தியோகபூர்வமான நிகழ்ச்சிகளில் சிங்கள மொழியில் பாடுவதுடன் தமிழ் மொழியிலும் தேசிய கீதம்பாடுவதை முந்தைய அரசு இருந்த காலகட்டத்தில் நாங்கள் வழமையாகக் கொண்டிருந்தோம். அந்த வழமையை இப்போதைய அரசு மாற்றி, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றது. நல்லிணக்கம் கருதி கொண்டு வரப்பட்ட அந்த வழமை தற்போது மாற்றப்பட்டுள்ளதால், அது தமிழர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கின்றது. அதுவே தற்போது இலங்கையில் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது என்று கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக இதுவரை விசாரணை நடைபெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கவலை தெரிவித்திருக்கின்றார். இனியேனும் அந்த விசாரணை நடைபெறுமா என்று கேட்டதற்கு,

இலங்கையில் தற்போது உள்ள அரசு ஐக்கிய நாடுகள் சபையுடன் கூட்டாக நிறைவேற்றிய பிரேரணையில் தமது இசைவைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசு எடுத்து வரும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது. இலங்கையில் நடைபெற்ற போரின் போது போர்க் குற்றங்கள் நடைபெற்றனவா இல்லையா என்பதில் சர்வதேச அரசியல் தலையீடு எதுவும் இருக்கக்கூடாது என்பது தற்போது இலங்கையை ஆட்சி செய்பவர்களின் நெடுநாள் கொள்கையாக உள்ளது. எனவே இது குறித்து சர்ச்சை சர்வதேச அளவில் இன்னும் விரிவடையும் வாய்ப்பு இருக்கின்றது. என்று கூறினார்.

இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாயத்தில் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற பின்னர் அங்கிருக்கும் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பில் பிரச்சினை நிலவியதே? அதன் தற்போதைய நிலை என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

அந்தப் பதட்டம் தற்போது ஓரளவு தணிந்துள்ளது. இருந்தாலும், ஆத்திரமூட்டும் பேச்சுக்களைத் தொட்ந்து பொது வெளியில் சில அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருப்பதால், அது மனங்களை வேறுபடுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டும் என்பதே எமது அவா என்று கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தங்களின் தேர்தல் நிலைப்பாடு எப்படியிருக்கும்? என்ற கேள்விக்கு பதிலளிக்யைில்,

திங்கட்கிழமை நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்பது உறுதியான தகவல். கடந்த தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராகக் களம் கண்ட சஜித் பிரேமதாசா தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்கின்றோம். இக்கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்ற நிலையே தற்போது உள்ளது என்று ரவூக் ஹக்கீம் கூறினார்.

பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விநியோகிப்பு இறுதிக்கட்டத்தில்

வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

தொழிலை எதிர்பார்ப்போர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதல் பட்டம் அல்லது அதற்கு நிகரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிப்ளோமா பாடநெறியை 2019.12.31க்கு முன்னர் நிறைவு செய்திருக்க வேண்டும்.

70,000திற்கும் மேற்பட்ட தொழில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 56,000 விண்ணப்பங்கள் சரியான மாதிரிகளுக்கமைய பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. அவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்களில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. பட்டம் அல்லது டிப்ளோமா சான்றிதழ் உட்பட அடிப்படைத் தகைமைகளை பெற்றிருந்தாலும் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நியமனத்திற்கு 42,000 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இலங்கை தபால் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இன்று மாலைக்குள் தகுதிபெற்ற அனைத்து விண்ணதாரிகளுக்குமான நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. அனைத்து நியமனக் கடிதங்களுக்குமான விநியோகிப்பு பற்றுச் சீட்டினை தபால் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நியமனத்திற்கு பொறுப்பானவராவார். நியமனம் பெற்ற மூன்று நாட்களுக்குள் தமக்குரிய பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடுதல் வேண்டும். நியமனக் கடிதம் கிடைத்து 07 நாட்களுக்குள் பயிற்சி நெறிக்கு சமூகம் தராதவிடத்து அந்நியமனம் இரத்து செய்யப்படும்.

ஒரு வருட பயிற்சிக் காலத்தில் ரூபா 20,000 கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சிக் காலத்தின் பின்னர் ஓய்வூதியத்துடன்கூடிய அரச நிரந்திர சேவையில் உள்வாங்கப்படுவர். மாவட்ட ரீதியாக நியமனம் வழங்கப்படுவதுடன், முதல் நியமனம் பெற்ற மாவட்டத்தில் 05 வருடங்கள் சேவையாற்றுவது கட்டாயமானதாகும்.

இலங்கை பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைப்பு – தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத்தமிழர் இனப்படுகொலை: ஐ.நா. சார்பில் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வை.கோபாலசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றை இன்று விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர் மற்றும் இனப்படுகொலை குறித்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்ததைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 2015 செப்டெம்பரில் ஐ.நா. பொதுப் பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளியானது. அதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் 30/1 நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு இலங்கை அரசு கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவை வலியுறுத்தியது. ஆனால் இலங்கையில் மைத்திரிபால சிறிசேன அரசு, ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தின்படி, போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவோ, பொறுப்பு ஏற்கவோ ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மேலும் 2 ஆண்டுகள் காலக்கெடு நீடிப்பு தேவை என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது ஆண்டுக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டது.

ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில், இலங்கை அரசு சார்பில் பங்குபற்றிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, ஐ.நா. பேரவை நிறைவேற்றிய தீர்மானங்கள் 30/1, 40/1 ஆகியவற்றில் இருந்து இலங்கை அரசு விலகுவதாகவும், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் மீது, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைப்போம் என்றும் கூறி இருக்கின்றார்.

மேலும், நல்லிணக்க முயற்சிகளில் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைக் காப்பு விடயங்களில் இருந்தும் இலங்கை அரசு பின்வாங்குவது ஆபத்தான நடவடிக்கை இலங்கை அரசு சிறுபான்மை சமூகங்களின் தேவைகளுக்காக செயற்பட வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கைகூட இலங்கை பாதுகாப்புப் படைப்பிரிவினரால் கண்காணிக்கப்படுவதும், மனித உரிமைகள் காப்பாளர்கள் மற்றும் ஊடகங்களின் செய்தியாளர்கள் தாக்கப்படுவதும், வெறுக்கத்தக்க பேச்சுக்கள், சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் கவலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் தொடருவதையும், ராஜபக்ஸ சகோதரர்கள் ஆட்சியின் கொடூரங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்திட, பன்னாட்டு நீதி விசாரணை நடத்த ஐ.நா. மன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப்புலிகள் பற்றி பேசுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவித அருகதையும் இல்லை

தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி கதைப்பதற்கோ, விமர்சிப்பதற்கோ, கொச்சைப்படுத்துவதற்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எந்தவித அருகதையும் கிடையாது என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலையை மேற்கொண்டு தான் தனி இயக்கமாக வளர்ந்து வந்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அவர் அவ்வாறு வெளியிட்ட விடயத்திற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்தே சட்டத்தரணி சுகாஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கோ சுமந்திரனுக்கோ எந்தவித அருகதையும் கிடையாது எனவும், தமிழ் மக்கள் தான் விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்கள் எனவே விடுதலைப்புலிகளைப் பற்றி கதைப்பதற்கு எம். ஏ. சுமந்திரனுக்கு எந்தவித அருகதையும் இல்லை எனத் தெரிவித்தார்.