Home Blog Page 24

அநுரகுமாரவின் ‘கச்சதீவு விஜயம்’ இந்தியாவுக்கு சொல்லியுள்ள ‘செய்தி’ – விதுரன் 

சீனாவின் தியான்ஜினில் சீனாவின் ஷி ஜின் பிங், ரஷ்யாவின் விளாடிமிர் புட்டின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலக ஒழுங்கு மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவர் மீது ஒருவர் சகோதர பாசத்தை காண்பித்து கட்டிணைத்துக் கொண்டிருக்கையில் இந்தியாவின் தென்பிராந்தியத்தில் மிக நெருக்க மாக இருக்கும் இலங்கை டில்லிக்கும், தமிழ் நாட்டுக்கும் மிக அமைதியாக ஒரு பெரும் செய்தியை அனுப்பியிருக்கின்றது.
நான்காவது தடவையாக செம்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோக பூர்வ அறிவிப்புக்களைச் செய்யாது முன்கூட்டிய திட்டமிடல்கள் ஏதுவுமின்றி கடற் படையின் படகில் கச்சதீவுக்கு மேற்கொண்ட பயணம், சில மணிநேரங்களில் நிகழ்ந்தேறிய நிகழ்வு என்பதற்கு அப்பால் புவிசார் அரசியலில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
கச்சதீவு பற்றிய வரலாற்றை ஒருதடவை பின்னோக்கிப் பார்த்தால்,  பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். போருக்கு முன்னைய காலத்தில் தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களால் வலைகள் உலர்த்துவதற்கும், சிறு ஒய்வுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இக்காலப்பகுதியில் இந்தத் தீவின் உரிமை குறித்து இருநாடுகளின் அரச மட்டங்களிடையே நீண்ட விவாதங்கள் காணப்பட்டபோதும், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட இரு ஒப்பந்தங்கள் மூலம் முடிவுக்கு வந்தது. அந்த ஒப்பந்தங்களின்படி, கச்சதீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதொரு பகுதியாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
இருப்பினும், குறித்த கச்சதீவு ஒப்பந்தம் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வில்லை என்றும், இதனால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக குற்றம் சாட்டி வருகின்றன.
இத்தகையதொரு பின்னணியில், தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் அவ்வப்போது கச்சத் தீவை ‘மீட்டெடுக்க’ வேண்டும் என்று கோசமிடு கின்றனர். இதுவொரு தேர்தல் அரசியல் கோசமாக இருந்தாலும், மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு உணர்வுபூர்வமான கருவியாகவே பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என்று கருதிய பாரதீய ஜனதாக் கட்சி, தனது தமிழகத் தலைவர் அண் ணாமலையை வைத்து கச்சதீவை மீளப்பெற வேண்டும் என்ற கோசத்தை தூசி தட்டியிருந்தது. அவர், தமிழகத்தில் மட்டுமல்ல. யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்திலும் கச்சதீவு மீட்பு கோசத்தை கைவிட்டிருக்கவில்லை. இவ்வாறாக அக்கோசத்தை கையெடுத்தவர்களின் பட்டியலில் இறுதியாக இணைந்து கொண்டவர் தான் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்.
நடிகராக விஜயை தென்னிலங்கை சிங்கள மக்களும் நன்கறிந்திருந்த நிலையில் அவரது மதுரை மாநாட்டில் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற கோசம் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந் தது. கச்சதீவு வடபிராந்தியத்தில் இருந்தாலும் எமது தேசத்தை மீளப்பெற இந்தியா முயற்சிக்கின்றது என்ற பார்வையில் அதிகமான உணர்வு பூர்வமான விடயமாக மாறியிருந்தது.
ஆனால், கச்சதீவு மீட்பு பற்றிய அரசியல் வாதங்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் பயன்படுத் தும் ஆழ்கடல் மீன்பிடிப்பு போன்ற அழிவுகரமான முறைகளால் கடல்வளம் குறைந்துவரும் உண்மையான பிரச்சினையை மூடிமறைக்கின்றன. கடல்வளம் குறைந்ததால், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கின்றனர் என்றும் இதன் விளைவாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படு வது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற பிரச்சனைகள் தொடர்கின்றன என்றும் பூசிமெழுகும் நிலைமையே உள்ளது.
இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி அநுரகு மார கச்சதீவுக்கான விஜயத்தின் மூலமாக கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது. அதனுடைய இறையாண்மையை நாட்டின் தலைவராக நான் உறுதிப்படுத்துகின்றேன் என்ற செய்தியை டில்லிக்கும், தமிழ் நாட்டுக்கும் தெளிவாக சொல்லியுள்ளார்.
மேலோட்டமாக பார்க்கையில் ‘கச்சத்தீவை மீட்டெடுப்போம்’ என்று குரல் கொடுக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கு நேரடியான பதிலடி யாக அமைந்திருக்கின்றது என்றாலும், அதனைத் தாண்டியும் டில்லிக்கு வலுவானதொரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், ‘காங்கிரஸ் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டது’ என்று அண்மையில் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
அதன்பின்னர் இலங்கைக்கு வந்திருந்த பிரதமர் மோடி அநுராதபுரத்திலிருந்து இராமேஸ் வரத்துக்கு செல்கின்றபோது, இராமர் பலத்திற்கு மேலாக பறந்து சென்றிருந்தார். அத்தோடு அத்தருணத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை யும் பகிர்ந்து அவ்வழியால் பயணிப்பது பெரும் பாக்கியம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவரது கூற்று குறித்த புரிதல் இலங்கையர் களுக்கு எவ்வளவுக்கு இருந்திருக்குமோ தெரியாது. ஆனால் ஒவ்வொரு இந்தியருக்கும் அந்த புண்ணிய பயணத்தை தமது பிறவிப்பெரும்பேறாக மேற் கொள்ள வேண்டும் என்ற வேணவாவை தோற்று வித்திருக்கும்.
பிரதமர் மோடியின் எதிர்பார்ப்பும் அது தான். நிச்சயமாக கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெறுவதற்கான கோசத்தை மக்கள் மட்டத் திலிருந்து பேரலையாக எழுப்புவதை நோக்கமாக கொண்டதாகும். அதில் அவர் குறிப்பிடத்தக்க அடைவை எட்டியிருந்தார்.
அடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் மோடி கச்சதீவை மக்கள் மயப்படுத்தி தனது தமிழக அரசியல் சகாப்தத்தை ஆரம்பிப்பார் என்ற சூட்சுமமான திட்டத்தினை ஜனாதிபதி அநுர அறிந்திருந்தாரோ தெரியாது ஆனால் தனது அணுகுமுறையால் பிரதமர் மோடி யின் நகர்வை தகர்த்திருக்கின்றார்.
அடுத்து, ஜனாதிபதி அநுர, இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் கால்பதிக்காத கச்சதீவுக்குச் சென்று சிங்கள தேசியவாதிகளின் ஆதரவை மட்டுமல்ல, இலங்கை தேசப்பற்றாளர்களின் பெரு வரவேற்பையும் பெற்றிருக்கின்றார்.
குறிப்பாக, அவர் கச்சதீவில் கடற்படை அதிகாரிகளுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்த நிலையானது, ‘கச்சத்தீவை விட்டுக்கொடுக்க மாட் டோம்’ என்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார் என்ற பெரு நம்பிக்கை  சிங்கள பெரும்பான்மை சமூகத்திற்கு அளித்துள் ளது.
அதேநேரம், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, தமிழின அழிப்பின் அடையாளமாக சான்றுரைத்துக் கொண்டிருக்கும் செம்மணிக்கு அவரது அமைச்சரவை சகபாடியான சந்திரசேகரர் அறிவித்தபிரகாரம் செல்லாத ஜனாதிபதி அநுர தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக் கின்றேன் என்ற விடயத்தினையும் வெளிப்படுத்தி யுள்ளார்.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களைப் பொறுத்தவரையில் இந்திய மீனவர்களால் படுகின்ற இன்னல்கள் நாளுக்கு நாள் குறைந்த பாடில்லை. அவர்களுக்கு அந்தப் பிரச்சி னைக்கு நிரந்தமான தீர்வு தேவையாக உள்ளது. ஆகவே தமது பக்கமாக நாட்டின் தலைவரே உறுதியாக நிற்கின்றார் என்ற விம்பம் அவருக்கான ஆதரவுத்தளத்தை விரிந்ததாக மாற்றும். ஏனென் றால் யாழ்.மாவட்ட வாக்காளர் தொகையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினர் கரையோரப் பிரதேசங்களில் வசிப்பவர்கள். இந்தக் கணக்கு ஜனாதிபதி அநுரவுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், பாகிஸ்தானு டன் ஏற்படுத்திக்கொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது. காஷ்மீர் விடயத்தில் 137ஆவது பிரிவை நீக்கி சிறப்பு அந்தஸ்துக்களை அகற்றியுள்ளது. அதுபோன்ற ஒருதலைப்பட்சமான ஒப்பந்த மீறல்களை இந்தியா ‘கச்சதீவு’ விடயத்தில் செய்யாது என்று நம்பமுடியாது.
ஆகவே, பிரதமர் மோடி முந்திக்கொள் வதற்கு முன்னதாக, கச்சதீவை மீளப்பெறுவது இலகுவான விடயம் அல்ல என்று சொல்வதன் ஊடாக முன்கூட்டிய எச்சரிக்கையாகவும், இலங் கையின் இறையாண்மை ஆட்புல எல்லை உரிமை களை சட்டபூர்வமாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் உறுதிப்படுத்தும் முயற்சியாகவும் ஜனாதிபதி அநுர சிந்தித்திருக்கிறார்.
கச்சத்தீவில் கடற்படை ராடர் நிலையத்தை யும், தீவுக்கான கடற்படைப் பிரிவையும் நிறு வியுள்ளது. இந்த நடவடிக்கைகள், தீவின் மீதான இலங்கையின் கட்டுப்பாட்டை மேலும் வலுப் படுத்த உதவுகின்றன. இவ்வாறான நிலை யில் புனித அந்தோனியார் தேவாலயத்தை மையப் படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான திட்டங்களையும் அரசு பரிசீலித்து வருகிறது.
அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவ தாக இருந்தால் அந்தோனியார் திருவிழாவின் போது, அரைச்சொந்தம் கொண்டாடும் இந்தியப் பக்தர்களுக்கு, எங்களது தயவால் தான் கடவுச்சீட்டின்றி எமது நாட்டுக்குள் பிரவேசிக்கின் றீர்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை உறைப்பாக எடுத்துரைக்கும் செயற்பாடாகவும் உள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, எண்பதுக ளில் இந்திய எதிர்ப்பு வாதத்தில் இருந்த ஜே.விபி இன்னமும் அதேநிலைப்பாட்டில் அதிகாரத்துடன் மிடுக்காக உள்ளதென்ற செய்தியை டில்லிக்கு மட்டுமல்ல, சிங்கள தேசிய இடதுசாரித்துவத்துக்கும் மிகத் தெளிவாக சொல்லி யிருக்கிறார் ஜனாதிபதி அநுர.
இதேநேரம், இந்தியாவின் பின்னணியில் எதிரணிகளை குழுக்குழுக்களாக அமைத்து அரசியல் குடைச்சல்கொடுத்துக்கொண்டிருந்த ரணிலை கைது செய்து இரு நாட்களுக்கு பின்னர் பிணை வழங்கப்பட்ட நிலையில், ரணிலின் துருப் புச் சீட்டான மிலிந்த மொரகொடவை டில்லி அழைத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பை நடத்தி அநுரவை ‘குட்டிவைக்க’ முனைந்திருந்த நிலையில் அதற்கு உடனடியான பிரதிபலிப்பை செய்திருக்கிறார் அவர்.
கச்சதீவு விஜயத்தால், அநுர தென்னிலங்கை யில் அரசியல் தேசிய நாயகன். வட இலங்கை யில்  மக்கள் காப்பாளன். இந்த நிலைமை அடுத்து வருகின்ற தமிழ்நாட்டு தேர்தலுக்கு மேலும் உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், தென்பிராந்திய பாதுகாப்புக்காக வட இலங்கை யில் சீனா கால் பதிப்பதை தடுத்த இந்தியா இயல் பாகவே டில்லியுடன் எதிர்மறையான மனோ நிலையை உடைய தலைவர் எழுச்சி பெறுவதை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதில் அதன் இராஜதந்திரம் தங்கியுள்ளது.

மக்கள் 150 வயது வரை வாழும் நிலையை உலகம் எட்டுகின்றது?

சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் நீண்ட ஆயுள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் பற்றிய அரிய உத்தியோகபூர்வமற்ற உரையாடலைப் பகிர்ந்து கொள் ளும் நேரடி மைக்ரோஃபோன் ஒலி  வடிவம் கசிந்துள்ளது.
புதன்கிழமை(3), புதினும் கிம்மும் பெய்ஜிங்கில் ஜியுடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் ஏகாதிபத்திய ஜப்பானின் தோல்வி யின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் இராணுவ அணி வகுப்பைக் காண அவர்கள் தியானன்மென் வாயிலுக்கு நடந்து சென்றபோது இந்த உரையாடல் நடந் தது. அவர்களின் கருத்துப்பரிமாற்றம்  சுருக்க மாக இருந்தாலும் அது உடனடியாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. பின்னர் ஒளிபரப்பிலிருந்து ஒரு கிளிப்பை ப்ளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டிருந்தது.
“இந்த நாட்கள் 70 வயதை எட்டுவது” இனி அசாதாரணமானது அல்ல என்று ஜி மாண்டரின் மொழியில் கூறியதுடன் அந்த உரையாடல் ஆரம்பமாகியது.  “முன்பு மக்கள் அரிதாகவே 70 வயது வரை வாழ்ந்தார்கள், ஆனால் இந்த நாட்களில் 70 வயதில் நீங்கள் இன்னும் ஒரு குழந்தை.” “உயிரியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித உறுப்புகளை தொடர்ந்து இடமாற்றம் செய்ய முடியும், மேலும் மக்கள் இளமையாக வாழ முடியும், மேலும் அழியாமையை கூட அடைய முடியும்,” என ரஷ்ய அதிபர் பதிலளித்திருந்தார்.
“இந்த நூற்றாண்டில், 150 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பும் உள்ளது.” என்று ஜி கூறி முடித்ததும் கேமரா துண்டிக்கப்பட்டது. அதுவரை அவர்கள் கமரோ செயற்படுகின்றது என்பதை அறியாது பேசியிருந்தனர். ஜி மற்றும் புதின் இருவருக்கும் 72 வயது, அதே நேரத்தில் கிம்மிற்கு 41 வயது.
பின்னர் ரஷ்ய நிருபர்கள் இது குறித்து கேட்டபோது புடின் உரையாடலை உறுதிப் படுத்தினார். உறுப்புகளை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சை உட்பட நவீன மருத்துவ முன்னேற்றங்கள், ஆயுட்காலம் கணிசமாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கு கின்றன. அத்தகைய மாற்றங்கள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை” ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் : முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகின்ற நிலையில், இந்த  கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் இடமபெறவுள்ளது.

இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அரச பிரதிநிதிகள் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உள்ளிட்ட  பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இடையே விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது  கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த அமர்வில் நாட்டிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பான வரைவு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதில் அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

எந்தவொரு வெளியகபொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியொழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கின்றது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காகது. எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம்.

எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களே தங்களின் இறைமையைத் தாங்களே உறுதிப்படுத்த வேண்டிய புதிய உலக அரசியல் முறைமை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 355

கடந்த வாரத்தில், சீனா யப்பானை இரண்டாம் உலகப் போரில் வெற்றி கொண்டதற்கான 80வது ஆண்டு வெற்றிப் பெருவிழா,  இதுவரை உலகம் கண்டிராத சீனாவின் புதிய  ஏவுகணைகளை போர்விமானங்களை காட்சிப்படுத்தியவாறு, பன்னீராயிரம் படையினரின் அணிவகுப்புடன் உலங்கு வானூர்திகள் ‘நீதி வெல்லும்-அமைதி வெல்லும்-மக்கள் வெல்லுவர்’ என்னும் வரிகள் பொறிக்கப்பட்ட பட்டிகைகளை போர் உலங்கு வானூர்திகள் பறக்கவிட்ட நிலையில் சீன ரஷ்ய வடகொரியத் தலைவர்களுடன் இருபதுக்கு மேற்பட்ட உலகத்தலைவர்கள் அணிவகுப்பு மரியாதையில் பங்குபற்றிட சீனாவின் அரசுத்தலைவர் ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெற்றது, இப்பெருவிழாவில் சீன அரச அதிபர் ஷி ஜின்பிங் இங்கு உரையாற்றுகையில் “உலகம் ஒருபோதும் காட்டாட்சி சட்டத்திற்குத் திரும்பக்கூடாது. அது பலவீனமானவர்களை வலிமையானவர்கள் சுரண்டும் இடம். சீன மக்களின் எழுச்சியை யாராலும் தடுக்கவோ அழிக்கவோ முடியாது. நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம். உலகை வழிநடத்தும் நாடுகளில் சீனாவும் ஒன்று.” என புதிய உலக அரசியல் முறைமையின் பன்மைத்தன்மையை உலகிற்குப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதனை அமெரிக்காவினை அழிக்கும் கூட்டாகக் கருதிய அமெரிக்க அரசுத்தலைவர் சீன ரஸ்ய வடகொரிய முக்கூட்டுக்கு கிண்டலாக வாழ்த்துத் தெரிவித்து இந்தியாவையும் சீனா ரஸ்யாவிடம் அமெரிக்கா இழந்து விட்டதாகவும் கூறி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சினை அமெரிக்காவின் யுத்த அமைச்சாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்நிலைப்பாட்டுக்கு எதிர்வு கூறலாகவே “இன்று மனிதகுலம் அமைதி அல்லது போர், உரையாடல் அல்லது மோதல், வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற தேர்வை எதிர்கொண்டுள்ளது” என உலகிற்குத் தனது வெற்றிப் பெருவிழா உரையில் வெளிப்படுத்திய சீன அரசுத்தலைவர் “மனித நாகரிகத்தின் உன்னத இலக்கு வெற்றி பெற வேண்டும்” எனக் கூறி “ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராகவும் ஒன்றுபட அழைப்பு விடுக்கிறேன்” என நாடுகளின் இறைமையைப் பாதுகாப்பதையே சீனா தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் என்பதை உறுதி செய்திருந்தார்.
ஆயினும் நாடு என்கின்ற நிலையில் காலனித்துவவாதிகள் கைப்பற்றிய ஈழத்தமிழர்கள் போன்ற சிறுதேச இனங்கள் காலனித்துவவாதிகளுடன் தங்கள் இறைமை மீட்புக்காக போராடிய நிலையிலும் காலனித்துவவாதிகளின் சூழ்ச்சிகளால் காலனித்துவத்தால் தீ்ர்க்கப்படாத ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக இன்றும் தங்களின் இறைமையை மீளுறுதி செய்யும் முயற்சியில், இனஅழிப்பை, இனத்துடைப்பைப், பண்பாட்டு இனஅழிப்பைத் தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இனங்காணக்கூடிய அச்சமாகக் கண்டு தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தங்களின் பிரிக்கப்பட இயலாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அமைக்க முடியாமல் இருக்கின்றார்கள். இம் மக்கள் தங்களின் இறைமையைத் தாங்களே உறுதிப்படுத்த வேண்டிய புதிய உலக அரசியல் முறைமையைத் தோற்றுவித்துள்ளது சீன அரசத்தலைவரின் உரை என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது. இதனை ஈழத்தமிழர்கள் எவ்வாறு செய்யலாம் என்பதற்கும் சீனாவின் அரசத்தலைவரின் பேச்சில் விடை உள்ளது.
இன்று மனிதகுலம் தேர்வாகக் கொண்டுள்ளதாகச் சீன அரசுத்தலைவர் கூறும் மனிதகுலத்திற்கான தேர்வுகளில் ஈழத்தமிழர்கள் அமைதி அல்லது போர் என்பதில் அமைதியையும், மோதல் அல்லது உரையாடல் என்பதில் உரையாடலையும், வெற்றி அல்லது வீழ்ச்சி என்பதில் வெற்றியையுமே தங்களின் தேர்வுகளாகக் கொண்டு செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர். இதற்கு ஈழத்தமிழர்கள் தங்களிடை இவற்றை முன்னெடுப்பதற்கான உரையாடல்களைத் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் ஈழத்தமிழரிடை தொடங்கி அதன் விரிவாக்கமாகத் தங்களின் வீழ்ச்சியைத் தடுக்க தங்களின் இறைமையை உறுதிப்படுத்துமாறு  உலக நாடுகளின் மக்களுடன் உரையாடல்களை வேகப்படுத்தினாலே தங்களுக்கான பாதுகாப்பான அமைதியை மீள் உற்பத்திசெய்ய முடியும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது. இதற்கான ஆளணிச் செயலணி குழுக்களை ஈழத்தமிழர்கள் வேகமாக அமைக்க வேண்டுமென்பதே இலக்கின் அழைப்பாக உள்ளது.
இந்த செப்டெம்பர் மாதத்து 7ம் நாளுடன் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவி கிருசாந்தி குமாரசாமி தேர்வு எழுதி விட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் சந்திரிகா பண்டாரநாயக்கா காலச் சிறிலங்கா இராணுவம் அமைத்திருந்த பரிசோதனைச் சாவடியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பரிசோதனைக்கென தடுக்கப்பட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட 29ம் ஆண்டை இன்று செம்மணி சித்துப்பாத்தியில் இதுவரை கிடைக்கப்பெற்ற 240 மனித எலும்புக்கூடுகளின் நீதிக்கான ஓலத்துடன் சேர்த்து ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகெங்கிலும் மீள்நினைவேந்தல் செய்கின்றார்கள். ஆயினும் எட்டாம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா குறித்த மனித உரிமைகள் அறிக்கை ஒப்புக்குச் சிறிலங்கா பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் படைத்தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமைகள் மீறல்களை ஏற்றுக்கொள்ளத் தவறிவிட்டது எனக்கூறிவிட்டு உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பும் வரலாற்றுச் சந்தர்ப்பமும் கிட்டியுள்ளதாகச் சிறிலங்காவின் உள்ளக பொறிமுறைக்குள்ளேயே ஈழத்தமிழர்கள் மேலான சிறிலங்காவின் யுத்தக்குற்றச்செயல்கள், மனிதாயத்துக்கான குற்றங்கள், மனித உரிமை வன்முறைகளுக்கு தண்டனை நீதியையோ பரிகாரநீதியையோ வழங்கக் கூடிய வகையிலேயே மதியும் நிதியும் அளிக்கும் அறிக்கையாகவே  அமையும் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. கூடவே ரோம் உடன்படிக்கையில்  சிறிலங்கா அரசாங்கத்தைக் கையொப்பமிடுமாறும் சிறிலங்காவின் நீதிமன்ற கட்டமைப்புக்கள் விசாரணைகளை அனைத்துலக தரத்தில் நடத்துமாறும் வலிந்து  காணாமல்  ஆக்கப்பட்டோருக்கு இந்த அரசாங்கம் நிறுவியுள்ள பணிமனை மூலம் அனைத்துலக கண்காணிப்பில் செயற்படுமாறும் இந்த அறிக்கை அழைப்பு விடுக்கும். இந்த அறிக்கைக்கு அமெரிக்காவினதும் மேற்குலக நாடுகளதும்  ஆதரவைத் தேடும் வகையிலேயே சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிலோ அல்லது சீனாவின் யப்பான் மீதான வெற்றியின் 80வது ஆண்டுப் பெருவிழாவிலோ சீன ஆதரவு அரசான சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக அமைகிறது. ஒரு கல்லில் இரு மாங்காய் என இந்தியாவுக்கும் தேசிய மக்கள் சக்தி சீனாவுக்குச் சார்பானதல்ல என்ற நல்லெண்ணத்தை உருவாக்கவும் இது உதவியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சீனாவுடன் நெருங்கிய பொருளாதாரத் தொடர்புடைய இத்தாலியுடன் கடந்த வாரத்தில் சிறிலங்காவின் பிரதமர் முதன்முறையாக கூட்டுக் கலந்துரையாடல் நடத்தி அதன்வழி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவையும் சிறிலங்கா பெற முயற்சித்துள்ளது.
இவைகள் எல்லாமே ஈழத்தமிழர்கள் செயலணிகளை அமைத்தே தங்கள் எதிர்காலத்தை  முன்னெடுக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்துகின்றன என்பதே இலக்கின் இவ்வார ஆணித்தரமான எண்ணம்.  மேலும் வெளிநாடுகளுக்கு ஒரு நாட்டின் மக்களின் இறைமையப் பாதுகாக்கும் நோக்கை விடத் தங்கள் நலனே முக்கியம் என்பதற்கு உக்ரேனில் போரழிவு தொடர்கின்ற நிலையில் 26 ஐரோப்பிய நாடுகள் சமாதானத்தின் பின்னர் பாதுகாப்புக்கென நிலைகொள்ள முயற்சிப்பதும், பலஸ்தீனிய தேசத்துக்கான அங்கீகாரத்தை இவ்வாரத்தில் பிரான்சு உட்பட்ட மேற்குலக நாடுகள் சில செய்ய இருக்கின்ற நிலையிலும் பலஸ்தீன மக்களின் இருப்பே இல்லாதாக்கப்படுவதும் சாட்சியங்களாகின்றன. இந்நிலையில் எந்த நாட்டிலும் தங்கி நில்லாது தங்கள் மக்களிலேயே தங்கும் செயலணிகள் காலத்தின் தேவையாகிறது என்பது இலக்கின் உறுதியான எண்ணம்.
 ஆசிரியர்

Tamil News

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி: இதுவரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று சனிக்கிழமை (06) யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Ilakku Weekly ePaper 355 | இலக்கு-இதழ்-355 | சனி, 06 செப்டம்பர் 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 355 | இலக்கு-இதழ்-355 | சனி, 06 செப்டம்பர் 2025

Ilakku Weekly ePaper 355

Ilakku Weekly ePaper 355 | இலக்கு-இதழ்-355 | சனி, 06 செப்டம்பர் 2025

Ilakku Weekly ePaper 355 | இலக்கு-இதழ்-355 | சனி, 06 செப்டம்பர் 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • மக்களே தங்களின் இறைமையைத் தாங்களே உறுதிப்படுத்த வேண்டிய புதிய உலக அரசியல் முறைமை| ஆசிரியர் தலையங்கம்
  • அநுரகுமாரவின் ‘கச்சதீவு விஜயம்’ இந்தியாவுக்கு சொல்லியுள்ள ‘செய்தி’ – விதுரன்
  • திருகோணமலை முத்து நகரில் சூரிய சக்தி மின் திட்டத்தால் சூறையாடப்படும் விவசாய நிலம் – பா. அரியநேத்திரன்
  • அநுர அரசு மக்கள் ஆணையை நிறைவேற்றத் தவறி விட்டதா? திரு. சரவணன்
  • மீனவர்களின் சவால்களை கண்டுகொள்ளாத அரசு – கிண்ணியான்
  • மக்களை மறந்து ரணிலுக்காக ஒன்றிணைந்த மலையக கட்சி தலைவர்கள் – மருதன் ராம்
  • இந்தியாவின் புதிய உத்தரவு தமிழீழத்தை நோக்கி வெளிவரும் மறைமுகச் சிக்னல்கள் – ஆதி வழக்கறிஞர் – மதுரை
  • நீதிகோரலுக்கு ஏற்ற பொறிமுறை எது? – பொறிமுறை வாரியாக ஒரு பகுப்பாய்வு
  • சீனாவின் பிரமாண்ட அணுவாயுத அணிவகுப்பு உலகிற்கு கூறும் செய்தி | வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

 

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு தடை!

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ் , இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனை, நேபாள தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென பலமுறை சமூக வலைதளங்களுக்கு அரசு அறிவித்திருந்தும் இதற்கு சமூக வலைதள நிறுவனங்கள் எந்த பதிலும் அளிக்காத நிலையில் கடந்த 4ம் திகதி,  26 சமூக வலைதளங்களுக்கான தடை உத்தரவு அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டிக்டொக் மற்றும் வைபர் உள்ளிட்ட 5 சமூக வலைத்தளங்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்துள்ளதால், அவை தொடர்ந்து நேபாளத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்பு, நேபாளத்தின் உயர் நீதிமன்றம் அனைத்து சமூக ஊடக தளங்களும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அதிகாரியிடம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கை பதிலளிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது.

இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் அடிப்படையாக அமைந்த மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இத்தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது

இதுபோன்ற வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரியுள்ளது.

நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது.

மன்னார் மக்கள் காற்றாலைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை: ரவிகரன் எம்.பி

மன்னார் மக்களின் அனுமதியின்றி மன்னாரில் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த முடியாதெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்தவிடயத்தில் தாம் எம்போதும் மன்னார் மக்களின் பக்கமே செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் 13ஆம் திகதியன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் மற்றும் மன்னார் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் குறித்த காற்றாலைத் திட்டம்தொடர்பில் உரியதரப்பினர் மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், இக்காற்றாலைத் திட்டம்தொடர்பில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்தோடு அதுவரை ஒருமாதகாலத்திற்கு குறித்த காற்றாலைத் திட்டத்தினை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் மன்னார் மக்களுக்கு குறித்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

குறிப்பாக மன்னார்த்தீவில் இக் காற்றாலைத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ள சாந்திபுரம், தாழ்வுபாடு, தோட்டவெளி, ஓலைத்தொடுவாய், பேசாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு குறித்த காற்றாலைத் திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தலை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டு, தெளிவுபடுத்தல் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் முதலாவது தெளிவுபடுத்தல் கலந்துரையாடலானது மன்னார் சாந்திபுரம் பகுதியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மக்கள் இந்தக் காற்றாலைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

மக்களின் அனுமதியில்லாமல், மக்களின் ஒத்துழைப்புக்களில்லாமல், மக்களை எதிர்த்துக்கொண்டு இந்தக் காற்றாலைத் திட்டத்தை மன்னாரில் அமுல்படுத்த முடியாது.

இந்த விடயத்தில் நான் எப்போதும் மன்னார் மக்களின் பக்கம்தான் இருப்பேன் – என்றார்.

கிழக்கு மாகாணசபை தேர்தல் குறித்து கபே அமைப்பு அரசிடம் கேள்வி

கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது எனவே; ஜனநாயத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் என்றால் மாகாணசபை தேர்தல் நடாத்த அவசரமாக நடவடிக்கை எடுக்க சட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்  அல்லது இந்த முறைமை  பொருத்தம் இல்லை இதை நீக்குவது என மக்களுக்கு அரசு கூறவேண்டும் என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வலிறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்ள சுதந்திரமானதும் நீதியானதும் மக்கள் இயக்கமான கபே அமைப்பின் காரியாலயத்தில்  வெள்ளிக்கிழமை (5) மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப்  தலைமையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுதந்திரமானதும் நீதியானதும் மக்கள் இயக்கம் 2008 தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் நடாத்தப்பட்ட ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது. அதேபோல தேர்தல் அல்லாத காலத்தில் வாக்காளர்களுக்கு தேவையான அறிவுறுத்தல் நிகழ்சிகளை நடாத்தி வருகின் றோம்.

அதேவேளை தேர்தல்கள் உரியகாலத்தில் நடாத்தப்படுவது தொடர்பில் ஒவ்வொரு காலத்திலும் மிக அவதானம்; செலுத்தி வருகின்றோம். இலங்கையை பொறுத்த ளவில் கடந்த கால அரசியல் வரலாற்றை பார்க்கின்றபோது  தேர்தல்கள் நடாத்த ப்படும் காலத்தை பார்த்தால் உத்தியோக பூர்வ கால எல்லை முடைவடைவதற்கு முன்னர் அந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் அவர்களுக்கு சாதகமான காலங்கள் வருகின்றபோது தேர்தல்களை நடாத்தி இருக்கின்றனர் .

அதேபோல உத்தியோக பூர்வ கால எல்லை முடிவடைந்தும் பதவியில் இருக்கும் அரசாங்கத்துக்கு ஒரு சாதகமான காலம் வரும் வரைக்கும் பல மாதங்கள் பல வருடங்கள் நாட்களை கடாத்திவிட்டு அந்த தேர்தல்களை தொடர்ச்சியாக பிற்போட்டு பிற்போட்டு நடாத்தி இருப்பதை நாங்கள் அவதானித்திருக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், மாகாணசபை தேர்தல், உள்ளுராட்சி மன்ற தேர்தலகள்; நடாத்தப்படவேண்டியது உத்தியோக பூர்வமாக கால எல்லைகள் வரையறைகள் வழங்கப்பட்டிருந்தாலும் கடந்த காலங்களில் வரைய றைகள் இருந்த சந்தர்ப்பங்களை  மீறி காலங்கள் கடத்தியும் காலங்கள் முடிவடைவற்கு முன்னரும்  ஏன்  ஜனாதிபதி தேர்தல் கூட பதவிக்காலம் ஒரு வருடத்துக்கு இருக்கின்றபோது கூட அப்போது இருந்த ஜனாதிபதி சுயமாக விருப்பத்தை தெரிவித்து அவர் முன்கூட்டியே தேர்தலை நடாத்திய வரலாற்றை கண்டிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணசபை தேர்தல் கடைசியாக 2012 செட்டெம்பர் மாதம் 8 ம் திகதி நடைபெற்றது இந்த மாகாணசபை தேர்தல் உத்தியோக பூர்வ கால எல்லை 2017 செட்டெம்பர் மாதம் 30 ம் திகதி முடிவடைந்தது. இருந்தபோதும் 2017 இருந்து  இது வரைக்கும் ஓரு மாகாணசபைக்கான 5 வருட ஆயுட்காலம் முடிந்;து 4 வருடங்கள் கடந்தும் நடாத்தப்படாமல் உள்ளது.

ஆனாலும் அந்த தேர்தலை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடாத்தப்படுவது போல மக்களுக்கு காட்டப்பட்டு அது பல்வேறு காரணிகளால் பிற்போடப்பட்டுள்;ளது. சட்ட சிக்கல் இருப்பதால் இந்த தேர்தலை நடாத்த ப்படாமல்  இருப்பதை காணப்படுகின்றது.

எனவே சட்ட சிகல் இருப்பதாக இருந்தால் இந்த சட்டசிக்கலை இல்லாமல் ஒழிப்பதாக இருந்தால் மீண்டும் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமாக இருந்தால் இன்னும் பல வருடங்களை கடாத்துவதற்கு உரிய  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம். அதனால் இன்னும் பல வருடங்களுக்கு மாகாணசபை தேர்தலை நடாத்த முடியாமல் போகும்.

ஆனாலும் இப்போது பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை செய்துவரும்  அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக இந்த மாகாணசபை தேர்தல் தொடர்பாக தீர்மானங்களை எடுக்க முடியும்.

கபே அமைப்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடிதமூலம் ஜனாதிபதிக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை மக்களுக்கு கூறுமாறு வேண்டுகோள் விடுத்தது.

தற்போது ஆட்சியில் இருக்கம் அரசாங்கம் இலங்கையில் மாகாணசபை பெருத்தமில்லை என சிந்திப்பதாக இருந்தால் மக்களுக்கு கூறவேண்டும் இந்த மாகாணசபை முறைமை பொருத்தமில்லாது எனவே இதை இல்லாதொழிக்க நடவடிக்கையை எதிர்காலத்தில் எடுப்போம் என அதேபோன்று பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கின்றது இந்த மாகாணசபை தொடர்பாக அவர்களது நிலைப்பாட்டை கூறவேண்டும். அதாவது மகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டுமா? அல்லது தேவை இல்லையா? ஏன ஒரு சரியான நிலையை ஒவ்வொரு கட்சியும் கூறுமாறு இந்த ஊடக சந்திப்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட ங்களில் இருந்து மக்களின் வாக்குகளால் பிரதிநிதகள் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்த இடத்திலே கடந்த 2017ம் ஆண்டில் இருந்து சுமார் 5 வருடகாலங்கள் ஆளுநரின் நேரடி கண்காணிப்பில் ஆட்சி  செய்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் பல இருந்த இடத்தில் ஒரு ஆளுநர் செயல்ப டுவதாக இருந்தால் நிச்சயமாக ஜனநாயகத்துக்கு விரோமான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை கடந்த காலங்களில் மாகாணசபை தேர்தலை வைக்கவேண்டும் என அப்போது இருந்த ஆட்சியாளர்களுக்கு கூறியிருந்தோம். அது தொடர்பாக சட்டங்கள் கொண்டுவரப்பட்டது எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அப்போhது கூட்டமைப்பாக ஆட்சி அரசாங்கம் இதற்கு தேவையான ஆதரவை பாராளுமன்றத்தில் அப்போது இருந்த உறுப்பினர்கள் ஊடாக வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது இருக்கும் ஆட்சியை பெறுப்பேற்ற அரசாங்கம் அவர்களது கொள்கை பிரகடணத்தில் முக்கியமாக ஜனநாயத்தை மதிப்பது என தெரிவித்த அரசாங்கம்  ஜனநாயத்தை மதிக்கின்ற ஆட்சியாளர்கள்; என்றால் காலம் தாழ்த்தாமல் மாகாணசபை தேர்தல் தொடர்பாக உரிய நடவடிக்கையை அவசரமாக எடுக்கவேண்டும் அதற்கான சட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் அல்லாவிட்டால்  மாகாணசபை முறை பொருத்தம் இலலை அதை நீக்குவதாக மக்களுக்கு கூறவேண்டும் என அவர்  வலியுறுத்தியுள்ளார்.