Home Blog Page 2397

தென்கொரியா , இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமில்

தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இவர்கள் இன்று (10) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களில் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 3.33 மணியளவில் குறித்த பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த 166 பேரும் பெட்டிக்கலோ கெம்பஸில் தங்கவைக்கப்பட்டு 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்கள் தற்போது தயார்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வருகைதரும் பயணிகள் பெட்டிக்கலோ கெம்பஸ் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றுக்கு அனுப்பப்படவுள்ளதுடன்,

இந்த நடவடிக்கைகள் இன்று (10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு!!

திருவள்ளுவர் குரு பூசைதினமான இன்று வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி குரு பூசைதினம் அனுஷ்ட்டிக்கப்பட்ட்து.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமயில் நடைபெற்ற.இந்நிகழ்வில் தமிழருவி சிவகுமாரன் மற்றும் தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

நிகழ்வில் நகரசபைஉறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன்,நா.சேனாதிராஜா,சுமந்திரன்,தமிழ்விருட்சம் கண்ணன்,நகரசபைஊழியர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

viber image 2020 03 09 20 23 17 1 திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு!!

viber image 2020 03 09 20 23 28 திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு!!

viber image 2020 03 09 20 23 43 திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு!!

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் விசாரணை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில்

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான சண்முகம் தவசீலனது வழக்கு விசாரணை இன்று(10.03) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

கடந்த வருடம் (30.07) ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து இன்றையதினம் (10.09) மன்றில் ஊடகவியலாளர் மற்றும் குறித்த முறைப்பாடு செய்த கடற்படை சிப்பாய் ஆகியோரை ஆஜராகுமாறும் அத்தோடு பொலிசாரை மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் ஏற்கனவே நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு கடந்த ஏழாம் கடந்த வருடம் யூலை மாதம் 30 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இன்று வழக்கு தவணை இடப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார்.

இதன் போது செல்வபுரம் பேரூந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், ஊடகவியலாளர்களையும் இனம் தெரியா நபர் ஒருவர் போராட்டகாரர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தவேளை அவரை ஆர்ப்பாட்ட காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்ட வேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்ட காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என அடையாளப்படுத்திய போது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது அவரை குறித்த இடத்தில் வருகைதந்த பொலிசாரிடம் ஒப்படைத்து திரும்பியுள்ளார்.

இந்நிலையினை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான ச.தவசீலன் அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைது செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்ளக முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ள சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் – ஆணைக்குழுவுக்கு அழைப்பு

உள்ளக முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ள சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று (10) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இன்று காலை 10.30 க்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபை கட்சி, லிபரல் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு முன்னணி ஆகிய 6 கட்சிகளே இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

மேற்குறித்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதுடன் கட்சியின் உரிமை தொடர்பிலும் உள்ளக முரண்பாடுகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பை எந்த தினத்தில் நடத்தலாம் என்பது குறித்த இறுதி தீர்மானமும் இன்று எட்டப்படவுள்ளதாக குறித்த பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தபால் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை (11) இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் இதுவரை 24 சுயேற்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சாரதி கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து முச்ச்க்கர வண்டியில் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியின் சாரதி நேற்றிரவு (09) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தின் பேரூந்து இன்மையினால் குறித்த மாணவி தாண்டிக்குளம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனிமையில் மாணவி இருந்ததினை அவதானித்த முச்சக்கர வண்டியின் சாரதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குறித்த மாணவியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டதினை அடுத்து முச்சக்கர வண்டியின் சாரதியினை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியினை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சஜித் கூட்டணி தலைமையகம் திறப்பு

சஜித் பிரேமதாசா தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் எதுல்கோட்டே, ஈ.டபிள்யு. பெரேரா மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் குறித்த காரியாலயம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

சஜித் பிரேமதாசா தலைமையில் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்ட சமகி ஜன பலவேகய என அழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை அம்பிகா சற்குணநாதன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியாகிய செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை எனவும், அந்த விடயம் தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அணையாளர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது இராஜினாமா குறித்து ஊடகங்களில் ஆதாரமற்ற மற்றும் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட தவறான தகவல்கள் காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக தனது இராஜினாமா பற்றி தான் தீர்மானித்ததாகவும் அதன் பிரகாரமே தான் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். மேலும் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

எனினும் நாட்டிற்கான தனது பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே 11 ஆம் திகதி பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பம்

அரச சேவைகளுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாவதாக அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தார். அதன்படியே பட்டதாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரம் நாளை மறுதினம் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் சிந்திக்க வேணடிய நேரம் இது- மன்னார் ஆயர்

இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயரால் கத்தோலிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இந்த நாட்டு மக்களாகிய நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களாகிய எமக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் எமது வாக்களிக்கும் உரிமை தான்.

முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழம்பிப்போய் உள்ளது. இந்நிலையில் மிகுந்த ஞானத்தோடும் நிதானத்தோடும் நாம் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

சமய அடிப்படையில் கட்சியாகவோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாகச் சிதைத்து சின்னாபின்னமாகி விடும்.

இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். கத்தோலிக்க மக்களாகிய நாம் நாட்டு நலனையும் நமது இனத்தின் நலனையும் முன்னிறுத்தி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.

எனவே கத்தோலிக்க சமயம் சார்பாக கட்சியாக தேர்தலில் போட்டியிடுவது மன்னார் மறை மாவட்டத்தின் கொள்கை அல்ல என்பதை தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசுக்கெதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினை வலியுறுத்தியும் வேறு பல கோரிக்கையினை விடுத்தும் மட்டக்களப்பில் மாபெரும் கவனஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது

இதன்போது மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பேரணி ஆரம்பமாக பிரதான வீதியூடாக காந்திபூங்காவிரையில் பேரணி வந்ததும் காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி  விடுதலை செய்யப்படவேண்டும்,உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம்,காணாமல் போனோருக்கான அலுவலகத்தினை நிராகரிக்கின்றோம்,காணாமல் போனோரை கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்,சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்கப் படவேண்டும்,கலப்பு பொறிமுறை வெறும் கண்துடைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.IMG 0255 சிறிலங்கா அரசுக்கெதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

இதன்போது தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 43வது மனித உரிமை பேரவைக்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்றும் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால் வாசிக்கப்பட்டது.IMG 0264 சிறிலங்கா அரசுக்கெதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

காணாமல்போனவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவருவதாகவும் தமிழ் தலைமைகளும் தங்களை ஏமாற்றியள்ளதாகவும் இங்கு காணாமல்போனவர்களின் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.இன்றைய கவன ஈர்ப்பு பேரணி மற்றும் போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.