Home Blog Page 2397

கச்சதீவில் காணாமல் போன 7 படகுகள் மீட்கப்பட்டுள்ளது.

கச்சதீவில் அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு சென்றவர்களின் படகுகள் காணாமல் போன நிலையில் தற்போது 7 படகுகள் மீட்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவுக்காக சென்றவர்கள் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு ஆலய பிரார்த்தனையில் ஈடுபட்டதன் பின்னர் மீள திரும்புவதற்காக கடற்கரைக்கு வந்து படகுகளை பார்த்தபோது 10 படகுகள் காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து 100 பேர் வரையில் நிர்கதிக்குள்ளாகியிருந்த நிலையில் கடற்படையினர் படகுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது 7 படகுகள் மீட்கப்பட்டு சுமார் 70 பயணிகள் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

எனினும் 3 படகுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏனைய படகுகளை கடற்படையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

மிருசுவில் படுகொலை இராணுவ சார்ஜன்டிற்கு பொது மன்னிப்பு கோத்தபயா தீர்மானம்

யாழ். மிருசுவிலில் 8 தமிழர்களை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சார்ஜன்டிற்கு ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ பொது மன்னிப்பு அளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று மிருசுவிலில் தமது வீடுகளை பார்வையிட சென்ற பொது மக்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தில் தப்பி வந்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் 14 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.

குறித்த வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் விசாரிக்கப்பட்டு, அதில் 5 இராணுவச் சிப்பாய்கள் மீது குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2015 ஜுன் 25அன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய நான்கு சிப்பாய்களும் போதிய ஆதாரமில்லையென்பதால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவிற்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலின் முன்னர் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதி முடிவு எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந்த வேட்பாளர் நியமனக் குழு கூட்டம்

கடந்த பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களும் இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபன், எஸ்.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிவமோகன், சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞா.ஶ்ரீநேசன் ஆகியோர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

கடந்த முறை தேசியப்பட்டியல் மூலம் தெரிவான சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா இம்முறை வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ச.குகதாசனும் போட்டியிடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.சத்தியலிங்கம் வன்னி தேர்தல் தொகுதியில் இம்முறை முதன்முறையாக பாராளுமன்றத் தேர்தலில் கமிறங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தன்னிறைவு காண பாடுபடுவேன் – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு இணைப்பு, தேசிய ரீதியிலான தமிழர் தாயக ஒன்று சேர்ப்பு, சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறை ஆகியவற்றை முன்வைத்தே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலையத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வெளிப்படைத் தன்மையும் தமிழ் மக்கள் சார்பான கொள்கைபாற்பட்ட சிந்தனைகளையும் கொணடது என கூறினார்.

சகல சமூகங்களும் ஒற்றுமையுடன் பயணிக்க வழியேற்படுத்துவதாகவும், பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் தன்னிறைவு காண பாடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இளநீர், தோடை, வெள்ளரிப்பழ விற்பனை சூடுபிடிப்பு

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண வெப்பநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வெப்பத்தை தணிப்பதற்காக பிரதான வீதியோரங்களில் உள்ள இளநீர், தோடை வெள்ளரிப்பழம் ஆகியவற்றை அதிகமாக கொள்வனவு செய்வதை காண முடிகிறது.

அத்துடன் இம்மாவட்டத்தில் நிலவி வரும் அதிகவான வெப்பம் காரணமாக வெள்ளரிப் பழத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

தற்பொழுது கடும் வெப்பம் நிலை ஏற்பட்டிருப்பதுடன் அதனை மக்கள் வெப்பத்தை சமாளிக்கவும் சூட்டினை தாங்கிக் கொள்ளவும் குளிரான பழங்களை அதிகம் கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதே வேளை இளநீர் ரூபா 80 முதல் ரூபா 130 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் தோடை ஒன்று 50 முதல் 70 வரை விற்பனையாகிறது.

குறிப்பாக வெள்ளரிப்பழத்திற்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வெள்ளரிப்பழம் 150 ரூபா முதல் 250 ரூபா வரை விற்கப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

இளநீர் யாழ்ப்பாணத்திற்கு குருநாகல் மற்றும் புத்தளம் பகுதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் கூட்டுத்திருப்பலி

வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் கூட்டுத்திருப்பலி இன்று (07) மிகசிறப்பாக இடம்பெற்றது.

இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜெஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்துகொண்டு இவ் திருப்பலியினை ஒப்புக்கொடுத்தார்.

இங்கு புனித அந்தோனியாரின் திருச்சுருவப்பவனியும் சிறப்பாக இடம்பெற்றன.

இவ் திருவிழாவுக்காக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு இருக்கின்றார்கள்..

இவ் நிகழ்வில் யாழ் இந்திய உதவித் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் ரூவன் வணிகசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன், காலி மறைமாவட்ட குருமுதல்வர் றேமன் விக்கிரமசிங்க, இந்தியா சிவகங்கை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை லூர்துராஐா, தஞ்சாவூர் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஞானப்பிரகாசம், மற்றும் இந்திய யாத்திரிகள்,இலங்கை பக்தர்கள்,பலரும் கலந்துகொண்டனர்.

கொரோனா பரிசோதனை நிலையமாகும் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம்

முன்னாள் கி​ழக்கு மாகாண முதலமைச்சர் எம்.எல்.ஏம்.எம் ஹிஸ்புல்லாஹுக்கு சொந்தமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை கொரோனொ தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சோதிப்பதற்காக பயன்படுத்திகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜாசிங்கே முன்னாள் முதலமைச்சர் ஹிஸ்புல்லாஹுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார் .

நுன்நிதிக் கடனால் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் தாயகம்-கோ.ரூபகாந்

காலங்களில் போரும் பொருளாதார நெருக்கடிகளும் அதன் பின்னரான இடப்பெயர்வுகள் இழப்புக்கள் என்பவற்றால் பெரிலும் பாதிக்கப்பட்ட நிலையில் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறியுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வாழ்விட வசதிகளை ஏற்படுத்த வேண்டியமை வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியமை என பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு கடன்களைப்பெற்று அவற்றை மீளச்செலுத்த முடியாமல் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வங்கிகளிலும் தனியார் கம்பனிகளிலும் நுன்கடன் நிதிநிறுவனங்களிடமிருந்தும் பல்வேறு வட்டி வீதங்களில் தொழில் தேவைகள் கருதி பெற்றுக்கொள்ளும் கடன்கள் அந்த நோக்கத்திற்காகக செலவிடப்படாமல் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை மீளச் செலுத்த முடியாமல் பல குடும்பங்கள் உள்ளன.

இதனை விடவும் தேவைகருதி வங்கிகளில் கடன்பெற்று அந்த தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டபோதும் அதனால் போதிய வருமானம் கிடைக்காமையினால் கடன்களை மீளச்செலுத்த முடியாமலும் காணப்படுகின்றன.இவ்வாறான பல்வேறுபட்ட கடன் சுமைகளால் மீள்குடியேறிய குடும்பங்களிடையே குடும்பப்பிணக்குகள் குடும்ப வன்முறைகள் தற்கொலைகள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மீள்குடியேறிய மக்களின் தேவைகருதி நிதி நடவடிக்கைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களில் பல்வேறுபட்ட பாதகசாதக நன்மைகள் தீமைகள் ஏற்பட்டுள்ளன என மத்திய வங்கியினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கிளிநொச்சியில் தற்போது அரச தனியார் வங்கிகள் என 21 வரையான வங்கி கிளைகள் இயங்கி வருகின்றன.1 நுன்நிதிக் கடனால் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் தாயகம்-கோ.ரூபகாந்

கடந்த 2009ம் ஆண்டுக்கு முன்னர் நான்கு வங்கிகள் மாத்;திரமே இயங்கி வந்தன. இதனைவிட நிதி நிறுவனங்கள் குத்தகை கம்பனிகள் என அழைக்கப்படக் கூடிய லீசிங் கம்பனிகள் இதனைவிட நுன் நிதி கம்பனிகள் எனப்படுகின்ற மைக்றோ பினான்ஸ் நிறுவனங்கள் இயங்குகின்றன. அத்துடன் கிராமிய வங்கிகள் சமுர்த்தி வங்கிகள் என்பனவும் இயங்கி வருகின்றன. அத்துடன் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அடைவுபிடிப்பவர்கள் என பல தரப்பட்டவர்கள் நிதி நடவடிக்கைகளை கையாளுகின்றனர்.

இவற்றில் வங்கிகளில் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் இலகுபடுத்தப்பட்ட வகையில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் வங்கிகளுடாக வழங்கப்பட்ட கடன்களில் பத்து வீதமான கடன்கள் மீளச்செலுத்தப்படாமல் உள்ளன.

இவ்வாறு கடன்களை செலுத்தமுடியாதவர்கள் அதிகமாக நுன்கடன் நிதி நிறுவனங்களை நாடி அதிகூடிய வட்டிக்கு கடன்களைப்பெற்று அதனை செலுத்த முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதாவது வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன்களை பெற்றுக்கொண்டு அவற்றை உரிய காலத்தில் மீளச்செலுத்தப்படாமல் இருக்குமாயின் கடன்பெற்றவரின் பெயர் தே.அ.அட்டை எண் என்பன கொடுகடன் தகவல் பணியகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் அவரது நிதி ஒழுக்கம் எவ்வாறுள்ளது என அவதானித்து எதிர்காலத்தில் கடன்களையோ அல்லது ஏனைய நிதி நடவடிக்கைகளையோ மேற்கொள்ளமுடியும்.

இவ்வாறான நிலையில் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட 46 நிதி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 26இற்கும் மேற்பட்ட நிதிநிறுவனங்கள் தற்போது வடக்கில் இயங்கி வருகின்றன. இவை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களாகும்.

இதனைவிட மத்திய வங்கியின் ஆளுகைக்குட்படாத நுண்பாக நிதி நிறுவனங்களும் இயங்குகின்றன. இவ்வாறான நிதி நிறுவனங்கள் கொடுகடன் தகவல் பணியகத்தின் தகவல்களில் பெயர் விபரங்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன பின் தங்கிய கிராமங்களில் உள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று மிகவும் இலகுவான வகையில் அதிகூடிய வட்டி வீதத்தில் கடன்களை வழங்கி வருகின்றன.அத்துடன் குறித்த நிதி நிறுவனங்களில் சேமிப்புக்களுக்கான வட்டி வீதங்களும் அதிகமாகவே உள்ளன.

இவ்வாறான நிதி நிறுவனங்களில் கடன்களை பெற்றுக்கொள்பவர்கள் அதனை மீளச்செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அத்துடன் கடன்களால் குடும்பபிணக்குகள் குடும்பங்களின் பிரிவுகள் தற்கொலைகள் என்பன இடம்பெற்று வருகின்றன.இவ்வாறான நுன்கடன் திட்டங்கள் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய தேவையும் அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவைகளும் எல்லோரிடத்திலும் உள்ளது.3 நுன்நிதிக் கடனால் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் தாயகம்-கோ.ரூபகாந்

இவ்வாறான கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலையினை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அவதானிக்க முடிந்துள்ளது.
அதாவது கடந்த வாரம் கிளிநொச்சி பொன்னகர் 72 வீட்டுத்திட்டத்தில் இவ்வாறு நுன்கடன் திட்டத்தின் மூலம் கடன்களைப்பெற்றுக்கொண்ட ஏழு வரையான பயனாளிகள் இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவினது கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் தமது முறைப்பாடுகளை முன்வைத்ததுடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் தமது முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர்.

அதாவது வீட்டுக்கே வந்து கடன்களை வழங்கும் தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து கடன்களை பெற்று கொண்டதாகவும் அவற்றை செலுத்;தி வரும் நிலையில் தற்போது தொழில் வாய்ப்பின்மை பொருளாதார நெருக்கடி வருமானமின்மை காரணமாக அவற்றை உரிய காலத்திற்கு செலுத்த முடியாதுள்ளது.இதற்காக அவர்களிடம் நாங்கள் தவணைகளை கேட்கின்றோம். அவர்கள் அதற்கு உடன்படுவதில்லை.

இந்த கடன்களை செலுத்துமாறு வற்புறுத்தி தினமும் இரவு 10.00 மணிவரையும் அதற்கு பின்னரும் வீடுகளிலேயே நிற்கின்றனர். இதனால் வயது வந்த பிள்ளைகளை வைத்திருக்கின்றோம். பெண்களாகிய நாங்களும் குடும்பத்திலும் சமுகத்திலும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் தமது முறைப்பாடுகளில் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்திற்குச் சென்று இவ்விடயம் தொடர்பாக பலரிடம் தொடர்புகொண்டு கேட்டகேட்டபோதுää வவுனியா நெடுங்கேணி மற்றும் முல்லைத்தீவு மல்லாவி மற்றும் சாவகச்;சேரிப் பகுதிகளில் இயங்கி வருகின்ற நிதி நிறுவனங்கள் அதி கூடிய வட்டிக்கு கடன்களை வழங்கியிருக்கின்றன.

இதில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களே இவ்வாறான கடண்களைப் பெற்றுள்ளன.அத்துடன் சிலர் நிதி நிறுவனங்களிடமிருந்து கடனைப் பெற்று அதனை அதிகூடிய வட்டிக்கும் அதனைவிட ஒரு தொகையினை தாம் எடுத்துக்கொண்டு மிகுதியை ஒப்பந்த அடிப்படையில் சிலருக்கு கொடுத்துவிட்டு முழுத்தொகையினையும் அந்த பணத்தினைப் பெற்றுக்கொண்டவர் கட்டுகின்ற நிலைமையினைக் கூட அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு நுன் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்பவர்களில் அதிகூடிய தொகையினர் பெண்ணாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தில் கிளைகள் எதனையும் கொண்டிருக்காத நிதி நிறுவனம் ஒன்று கிளிநொச்சியில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் மக்களிடத்தே அதிகூடிய வட்டி வீதங்களில் கடன்களை வழங்கி விட்டு அவற்றை அறவிட்டு வருவதுடன் உரிய காலத்தில் கடன்களை செலுத்தத் தவறின் பயனாளிகளிடம் அதற்குபதிலாக மிகவும் பெறுமதி வாய்ந்த வீட்டுப்பாவனைப்பொருட்களை குறைந்த தொகைக்காக பறித்துச் சென்றுள்ளது எனவும் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இரண்டு அங்கத்தவர்களைக் கொண்ட பெண்தலைமைத்துவக் குடும்பத்தில் உள்ள ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் அந்த குடும்பத்திற்கான மாத வருமானம் 18000 ரூபாவிற்கும் குறைவான தொகையாக உள்ள நிலையில் குறித்த குடும்பம் இவ்வாறான நிதி நிறுவனங்களிடமிருந்து நான்குக்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்று மாதம் ஒன்றுக்கு சுமார் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகையை வட்டியும்முதலுமாக செலுத்த வேண்டியநிலையில் 54000 ரூபாவிற்கு வாங்கிய தொலைக்காட்சிப்பெட்டியை குறித்த நிறுவனங்களில் ஒன்றுக்கு 20000 ரூபாவிற்;கு கட்டாயத்தின் பெயரில் கொடுத்துள்ளார்.

இதனைவிட அடுத்த கடனைச் செலத்த முடியாமல் உள்ள நிலையில் குளிர்சாதனப்பெட்டியை தருமாறு நிதி நிறுவனத்தினர் வற்புறுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.கடன் அறிவிடுபவர்கள் கடனைக்கட்டுமாறு வீட்டில் வந்து நிற்பதுடன் இரவு 10.00 மணி என்றாலும் அவர்கள் போக மாட்டார்கள் அதனால் மேற்படி தொலைக்காட்சிப் பெட்டியை கொடுத்தேன் இவர்கள் இரவு வேளைகளில் வீடுகளில் இருப்பதனால் நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் பல்வேறு சமுக பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம்.

இனி தற்கொலை தான் செய்து கொள்ளவேண்டும் எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.இதேபோன்று நுன்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்பெற்ற இளம் குடும்பப்பெண்ணொருவர் அதனை செலுத்த தவறிய நிலையில் கடன் அறிவிடுபவர்கள் தினமும் வருவதனாலும் இரவு வேளைகளிலும் பகல் வேளைகளிலும் காலநேரமின்றி இவர்கள் வருவதனால் எங்களது குடும்பத்தில் ஓரே பிரச்சனை அத்துடன் எனது கணவனின் உறவினர்கள் மத்தியில் நான் தவறாகப் பார்க்கப்படும் நிலை கூட காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவிலே இடம்பெற்று வருகின்றன. ஆண்மையில் மாந்தை கிழக்கு பிரதேசத்;தில் கடன் பெற்ற பயனாளி ஒருவரின் வீட்டிற்கு சென்று இரவு வேளை கடன் செலுத்துமாறு வற்புறுத்திய நிலையில் பிரதேச செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு இரவு வேளை குறித்த இடத்திற்கு சென்ற பிரதேச செயலாளரால் நிதி நிறுவனப்பணியாளர் எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நிதி நிறுவனங்கள் கடன்களை அறவிடுவதற்கு பிற்பகல் 5. 00 மணிக்கு பின்னர் அதன் பயனாளிகளின் வீடுகளுக்கு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள போதும் பின் தங்கிய பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை கடன்களை பெறும் பயனாளிகள் அதனை செலுத்த தவறிய நிலையில் பகல் வேளைகளில் வீடுகளைப் பூட்டிவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்டு இரவு வேளைகளில் வருவதும் ஒரு காரணமாகவுள்ளது.2 நுன்நிதிக் கடனால் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் தாயகம்-கோ.ரூபகாந்

இவ்வாறான கடன்அறவீடுகள் தொடர்பாகவும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் பெண்கள் அமைப்புக்கள்; மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் மாவட்ட அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற பால் நிலை மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பாக மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிற்பகல் 5.00 மணிக்குப்பின்னர் எவரும் அதன் பயனாளிகளின் வீடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் இவ்வாறு செல்வதனால் மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும் அவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நுன்கடன் நிதி நிறுவனங்கள் மற்றும் அதிகூடிய வட்டி வீதங்களைக் கொண்;டவர்களிடமிருந்து வட்டிக்கு பணம் பெற்றுக்கொள்பவர்கள் பல்வேறு தேவைகளுக்காக கடன்களைப்பெற்றுக்கொள்கின்றனர்.குறிப்பாக வீட்டுத்திட்டங்களை நிறைவு செய்தல் மற்றும் வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காக இவ்வாறு முறைகளற்ற விதத்தில் அதிகூடிய வட்டிக்கு கடன்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனால் வங்கிகளில் இதற்கான திட்டங்கள் உள்ளன. அவற்றை பெற்றுக்கொள்வதற்குரிய தகமை அல்லது ஏற்கனவே பெற்ற கடன்களை செலுத்தப்படாமை என்பவற்றால் வங்கிகளில் கடன்களை பெற்றுக்கொள் முடியாத நிலையில் உள்ளவர்களே இவ்வாறு நுன்கடன்களை பெற்றுக்கொண்டு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனைவிட வாழ்க்கைச் செலவு ஒரு புறம் மற்றவர்களை போன்று ஆடம்பரமாக வாழவேண்டும் என்றும் கடன்களைப் பெற்று கடனாளிகளாக மாறி அவற்றை செலுத்த முடியாமல் உள்ளவர்கள் ஒரு புறம் இவ்வாறு பல்வேறுபட்ட கடன் சுமைகளால் தொழில் வாய்ப்புக்கள் இன்றி ஏராளமானகுடும்பங்களில் குடும்ப வன்முறைகள் குடும்ப பிணக்குகள் குடும்பப் பிரிவுகள் தற்கொலைகள் என நீண்டுசெல்கின்றன. இவற்றை தடுக்கவேண்டிய பொறுப்பும் கடமைகளும் எல்லோரிடத்திலும் தங்கியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் காணாமல்போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வினை கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

நாளை சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்பு,காணாமல்போனோர் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

காந்திபூங்காவில் பேரணி ஆரம்பமாகி காந்திபூங்கா முன்பக்கவுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்,மீண்டும்மீண்டும் விடுதலைக்கான போராட்டமா,அரசே அரசியல் கைதிகளின் குடும்பங்களின் கண்ணீரை நிறுத்து,அரசே சர்வதேசமே பாதிக்கப்பட்ட பெண்களின் அவலக்குரல் கேட்கவில்லையா?,ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை மீறாதே,பல ஆண்டுகள் எங்கள் உறவுகள தடுத்துவைத்திருப்பதனால் நீதிக்கு அழைக்கின்றோம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பதில் கூறுவது யார் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.IMG 0041 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

இந்த போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள்,அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் ,காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நுண்கடனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தடுக்க கோரியும் காணாமல்போனவர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறும் பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் காணமல்போனவர்கள் பிரச்சினையை மறக்குமாறு சிறிலங்கா அரசுத்தலைவர் கோத்தபாய  கோரியதற்கு எதிரான கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களுக்கு பாதிப்பு.

நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் காரணமாக 74796 குடும்பங்களை சேர்ந்த 298,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, களுத்துரை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலேயே இவ்வாறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளதோடு, இவற்றில் களுத்து​றை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.