எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்னர். பழைய முகங்களே மீண்டும் களமிங்குகின்றன.
வன்னித் தேர்தல் மாவட்டத்தை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழரசு கட்சியில் சார்ல்ஸ் நிர்மலநாதன்,
சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி ஸ்ரீகந்தராசா, பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழீழ விடுதலை இயக்கத்தில் (ரெலோவில்) செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், செந்தில்நாதன் மயூரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், கந்தையா சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவர் என அறியமுடிகிறது.
ரெலோவில் போட்டியிடும்மூன்றாவது வேட்பாளர் இதுவரை தேர்வுசெய்யபடாத நிலையில் முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்
மயூரனை வேட்பாளராக நியமிக்க கட்சியின் தலைமை குழு தீர்மானித்துள்ளதுடன் அதனை மயூரன் ஏற்றுகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் இன்று காலை திருகோணமலையில் உள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் நடை
பெறுகிறது.
காலை 11 மணிக்குக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூடுகிறார்கள். வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து
இன்று கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை, கூட்டத்தில் சில கருத்துமுரண்பாடுகள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
வன்னி மாவட்ட வேட்பாளர்கள் தெரிவு கிட்டத்தட்டமுடிந்து விட்ட நிலையில், நேற்று முன்தினம் மாவை சேனாதிராசா மன்னார் சென்றிருந்தார்.
இந்துசமயப் பிரதிநிதிகளை மாவை சந்தித்தபோது, மன்னாரில் இந்து வேட்பாளர்களை இறக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். வன்னியில் தமது வேட்பாளர் தெரிவு முடிந்து விட்டதாகவும், ரெலோவின் சார்பில் ஓர் இந்து வேட்பாளரை இறக்குமாறு கோரவுள்ளதாக மாவை தெரிவித்திருந்தார்.
எனினும், ரெலோ சார்பில் மூவர் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவிலும் சச்சரவு நீடிக்கிறது. இளைஞரணி தலைவர் கி.சேயோனும் களமிறங்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளார். அவரை இளைஞரணி முழுமையாக ஆதரிக்கிறது. இளைஞரணியின் இன்னொரு பிரதிநிதியான சாணக்கியன் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை இளைஞரணி ஆதரிக்கவில்லை.
நேற்று மட்டக்களப்பிற்குச் சென்ற மாவை சேனாதிராசாவை சந்தித்த இளைஞரணி பிரமுகர்கள்,சேயோனை களமிறக்கும்படி கேட்டுள்ளார். இளைஞரணி சார்பில் ஒருவரை தெரிவு செய்து முன்மொழியும்படி, மாவை குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், கட்சியின் இளைஞரணியினரின்பெரும்பகுதியினர் சேயோனை ஆதரிக்கி
றார்கள்.
இதேவேளை, மட்டக்களப்பில் பெண் வேட்பாளர் நளினி நீக்கப்பட்டுள்ளார். கட்சியிடம் வேட்புமனுக் கேட்டு விண்ணப்பம் செய்த இன்னொரு பெண்
வேட்பாளரான சட்டத்தரணியும் பட்டிருப்பு தொகுதியை சேர்ந்தவர். சாணக்கியனும் பட்டிருப்பு தொகுதியை சேர்ந்தவர். ரெலோ சார்பிலும் பட்டிருப்பில்
ஒரு வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதனால் பெண் வேட்பாளராக சட்டத்தரணியை இறக்குவதிலும் சிக்கல் உள்ளது. மூவரும் ஒரே தொகுதியில் களமிறங்குவது புத்திசாலித்தனம்
அல்லவென்பதால், அந்த பெண் வேட்பாளர் நீக்கப்படுவார். அல்லது, சாணக்கியன் நீக்கப்பட்டு கல்குடா தொகுதியில் சேயோன் களமிறக்கப்படு
வதுடன், பெண் சட்டத்தரணி பட்டிருப்பில் களமிறக்கப்படலாமென தெரிகிறது.
சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 4000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றனர் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க, “இலங்கையில் சுமார் 4443 சீனர் சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனாவின் தற்போது நிலைமை ஒரு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. தினசரி சுமார் 40 பேரே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றார்கள். அவ்வாறு சீனாவில் அந்த எண்ணிக்கையில் கூட ஒரு வீழ்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இப்போது வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலியே” என்றார்.
தற்போது வரையில் உலகின் 114 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் உலக நாடுகள் எங்கும் தொற்றுதலை ஏற்படுத்தும் நோய் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் இன்று (11) அறிவித்துள்ளது.
இந்த அறிவித்தல் உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கையில் அல்லது இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெற்ரோஸ் அடோம் கிபிரேயஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் எந்தப் பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்படி கருத்தை வெளியிட்டிருந்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில் கூட்டணியின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது.
வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு 12ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும். அத்தோடு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுத் தேர்தல் பரப்புரை வரும் 15ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பிக்கப்படும்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் பிளவு என்று ஊடகங்களில் வந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. நாம் பங்காளிக் கட்சிகளுடன் பேசி தகுந்த தீர்மானத்திற்கு வந்துள்ளோம் என்றார்.
ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக தண்டனை பெற்று வரும் நளினி, தான் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக தண்டனை பெற்று வரும் 7பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தும், ஆளுநர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தன்னை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் என நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்திருந்தது. நளினி தரப்பு வாதங்களை விசாரணை செய்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறி தீர்ப்பளித்தனர்.
ஆளுநரின் அதிகாரத்தின் மீது கேள்வி எழுப்ப முடியாது. நளினி சட்டவிரோத காவலில் இல்லை. அத்துடன் மத்திய அரசும் தங்களின் அனுமதியின்றி 7பேரையும் விடுதலை செய்ய முடியாது எனக் கூறியிருந்தது. என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா குகனேஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சி வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிடும் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வில் இவர் ஈ.பி.டி.பி கட்சி செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
1994ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா குகனேஸ்வரன் இம்முறை ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குலசிங்கம் திலீபன், வவுனியா நகர பொது சுகாதார பரிசோதகராக நகரசபையில் கடமையாற்றிய சி. கிரிதரன் ஆகியோரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரனா வைரஸ் மட்டக்களப்பு வரமாட்டாது என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாது எனவே இங்கும் சிகிசிச்சை நிலையம்,மற்றும் கண்காணிப்பு நிலையம் என்பன அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டாக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று மட்டு ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
போலியான முகப்புத்தகம் ஊடாக தம்மீது பொய்யான சேறுபூசல்களை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.தோற்றுநோய்கள் தம்மை தாக்கும்போது அதனை எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் தயாராக யிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் என்பது ஏனையவர்களுக்கும் கொரனா பரவாது தடுப்பதற்கான நடவடிக்கை.அது அனைத்து இடங்களிலும் அமைப்பதானது அது அரசாங்கம் மேற்கொள்ளும் கடமையாகும்.
மட்டக்களப்பில் ஒருவர் கொரனாவினால் பாதிக்கப்படும்போது அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.அதேபோன்று அவரது குடும்பத்தினரையும் தனிப்படுத்தி சோதனைகளுக்குட்படுத்தவேண்டும்.சனநடமாட்டம் இல்லாத ஏதோவொரு இடத்தில் 14நாட்கள் அவர்களை வைத்திருந்து அவதானிக்க வேண்டிய நிலைவரும்.
இல்லாவிட்டால் அவர்கள் மூலமாக இந்த மாவட்டத்தில் விரைவாக பரவக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.அதன்காரணமாகவே மட்டக்களப்பில் தனிப்படுத்தல் கொரண்டன் பகுதி தேவையென்பது வலியுறுத்தப்படுகின்றது.
கோரணா என்பது சுகாதாரத்துறைக்குரிய நோய் மட்டுமல்ல அதுவொரு சமூக நோயாகும்.இதனை தடுப்பதற்கான பங்கு அனைவருக்கும் உள்ளது.ஆகவே நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு இடத்தினை தீர்மானிப்போம் என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டது.
நாங்கள் கட்டாயம் இந்த இடத்தில்தான் செய்யுங்கள் என்று எப்போதும் கூறவில்லை.ஆனால் அதற்கான இடத்தினை பார்க்காமல் இருக்கவேண்டாம் கட்டாயம் ஒரு இடம்பார்க்கவேண்டும் என கூறியிருந்தோம்.இங்கு ஒருவர் கொரனாவினால் பாதிக்கப்படும்போது என்ன செய்வது?நாங்கள் வருவதற்கு முன்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சுகாதாரம் அவர்களின் நன்மை கருதியே நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.அதற்காக நாங்கள் மாந்தீவைத்தான் கொடுக்கவேண்டும் என்று கூறவில்லை.
முட்டக்களப்பு கம்பஸோ வேறு இடங்களோ தெரிவுசெய்யப்பட்டதானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துயைல்ல.அது சுகாதார அமைச்சினுடைய கடமையாகும்.
ஊலகின் எந்த நாடுகளானாலும் அந்தந்த நாடுகளின் சுகாதார அமைச்சுகள் நடவடிக்கைகள் எடுப்பதுபோன்று எமது சுகாதார அமைச்சும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இவ்வாறான காலப்பகுதியில் சுகாதார அமைச்சுக்கு எமது வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடான சேவையினை வழங்குவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம
ஆசியாவின் முத்து என்று அழைக்கப்பட்ட இலங்கையில் அடுத்தடுத்து வரப்பேகும் தேர்தல்களினால் அதன் பொருளாதார நிலைமைகள் மாததிரமின்றி அரசியல் சமநிலையற்ற செயற்பாடுகளும் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளமை தற்போது அறியப்பட்டு வருகின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தில் பொருளாதார நிலை மிகவும் கீழ் இறங்கிய நிலையில் காணப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் நிறைபெற்றிருந்தது. குறித்த தேர்தலுக்கான செலவீனங்களை ஈடு செய்வதில் ஏற்பட்ட நிதி நிலைமைகளை சீர் செய்வதற்காக பல்வெறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெறப்பட்டு வேலைத்திட்டஙகளும் இடைநடுவில் கைவிடப்பட்ட நிலைமை காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே இவ்வாண்டு தேர்தல் ஆண்டாக பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற மற்றும் மாகாணசபை தேர்தல்களை வைத்தேயாகவேண்டிய நிலையில் புதயி அரசு தள்ளப்பட்டுள்ள நிலையில் கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியோக இருந்த போது சர்வதேச ரீதியில் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய காலமும் எதிர்வரும் ஆண்டுகளாகவே உள்ளது.
2021 முதல் 2024 என்பது கடனை அதிகளவில் செலுத்தும் காலப்பகுதியாக பொருளியலாளர்களாலும் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளாலும் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த பொருளாதார சுமையை எவ்வாறு நாட்டு மக்கள் ஈடு செய்யப்போகின்றர் என்பதே தற்போதைய கேள்வியாகவுள்ளது.
ஏற்கனவே அரச ஊழியாகளின் சம்பள அதிகரிப்பு தொடுர்பான வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றுவது எனவும் புதிய ஒரு லட்சம் வேலை வாய்ப்பை வழங்குவதிலும் புதிய அரசு பல சாவால்களை முகங்கொடுக்கவுள்ள நிலையிலேயே தேர்தல்களை சந்திக்க நேர்கின்றது.
வெறுமனே பாராளுமன்ற தேர்தலை மையமாக கொண்டு வாக்குறுதிகளை வழங்குவதில் புதிய அரசு காட்டி வரும் சிரத்தை தேர்தலின் பின்னரான காலத்தில் எவ்வாறு நிறைவேற்றுவது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமை தற்போது வெளிநாட்டு பணியாளர்களின் மூலமான பிரதான வருமானத்தில் தங்கியுள்ள நிலைக்கு சென்றுள்ளமையானது பெரும் துர்ப்பாக்கியமாகவே பார்க்கப்படுகின்றத.
தேயிலை,இரப்பர் கொக்கோ போன்றவற்றினை பிரதான வருமானக கொண்ட இலங்கை பெருந்தோட்ட காணிகளை மக்கள் குடியியிருப்புக்களாகவும் குடியேற்றங்களாகவும் மாற்றதியன் விளைவே வெளிநாடடு பணியாளர்களின் வருமானத்தினை பிரதான வருமானமாக பார்க்க வைத்துள்ளது.எனவே இலங்கை போன்ற சிற்ய நாடுகள் எதிர்கால நிட்டமிடல் இன்றி நாட்டில் செயற்படுததும் ஒவ்வொரு நகர்வும் அதன் பொருளாதார ஸ்திரதன்மையை சீர்குழைக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே இவ்வாறான நெருக்கடிகள் குடிமக்களை நிதியியல் ரீதியில் பாதிப்படையச்செய்யும் போதே மக்கள் அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த முனைவர். அதற்கான சூழல் இலங்iகில் மிகவும் அண்மித்துக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றபோது பாராளுமன்ற தேர்தலுக்கான செவீனங்களை எவ்வாறு புதிய அரசு ஈடு செய்யவுள்ளது என்பதே தற்போதைய கேள்வியாகும்.
உலக வங்கியின் தகவலின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார செயற்றிறன் திருப்திகரமானதாக அமைந்ததாக கூட்டிக்காட:டுவதுடன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் எனவும் தெரிவித்திருந்தது, இதன் காரணமாக 2015 ஆம் ஆண்டில் காணப்பட்ட 7.6 என்ற நிதிப்பற்றாக்குறை 2016 ஆம் அண்டில் 5.4 சதவீதமாக குறைவடைந்திருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்ட வரட்சியினால் விவசாயத்துறையில் ஏற்பட்ட தாக்கம் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதமாக குறைவடைந்திருந்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான ஏற்ற மற்றும் இறகக் நிலையிலான பொருளாதார நிலைமைகளை கட்டுப்படுத்தி உள்ளுர் உற்பத்தியை பெருக்கும் வேலைத்திட்டத்தினை தற்பேயை அரசு செயற்படுத்த முனைகின்றது.
பல விவசாய உற்பத்தி பொருட்களுக்கான இறக்குமதி தடை ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் உள்ளுரில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமானதாக என்பதனை சிந்திக்க வேண்டியுள்ளது.
2006 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வெளியிட விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு வருவதற்கான தடைவிதிக்கப்பட்டிருந்தமையினால் உள்ளுர் விவசாய உற்பத்தி பெருக்கம் அதிகமாக காணப்பட்டது. தன்னிறைவான விவசாயம் காணப்பட்டது.
உணவு பொருட்களினால் அங்கிருந்த மக்கள் எவ்வித பாதிப்புக்களையும் எதிர்கொள்ளதாததுடன் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான விலைகளும் மிகவும் குறைவான நிலையிலேயே காணப்பட்டது.
இதேபோன்றதான நிலையையே தற்போது இலங்கை கையாள நினைக்கின்றது. குறித்த செயற்பாடு வரவேற்கத்தக்கதாக காணப்பட்ட போதிலும் விவசாய நிலங்களில் ஏற்படுத்தப்பட்டு வரும் குடியேற்றங்களும் நீர் நிலைகளில் மக்களால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களும் இலங்கையின் விவசாய துறையிலான வளர்ச்சிக்கு பங்கமாகவே அமைய வாப்புக்ளதாக பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையிலேயே இலங்கiயின் அண்மைய நாடான இந்தியாவிலும் 2019 ஆம் அண்டு பொருளாதார வளர்ச்சிய சரிவை நோக்கி சென்றதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிய 7 வீதமாக இருக்கும் என கணித்த ரிசேர்வ் வங்கி தற்போது வளர்ச்சி விதம் 6.9 வீதத்தைவிட குறைவாக்கும் என தெரிவித்துள்ளது. இந் நிலையில் பொருhளதார ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.2 வீதத்தை தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.
எனவே அண்மைய நாடுகளில் அதிலும் இலங்கைக்கு உதவும் நாடுகளில் ஏறட்படுள்ள தாக்கங்கள் இலங்கையின் அரசியல் கட்டமைப்பினூடாக அதன் கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த வாப்புள்ளது.
இந்தியா அதனது பொருளாதார வளர்ச்சி விதத்தினை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களில் அவதானம் செலுத்தி வரும் நிலையில் அங்கிருந்து இலங்கைக்கு பிரதானமாக இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான இறக்குமதி தடையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது . எனவே குறித்த தடையினை நீக்க வேண்டிய அல்லது மறைமுகமாகவேனும் அனுமதி வழங்க வேண்டிய நிலைக்கு இரங்கை அரசு தள்ளப்படும்.
இவ்வாறான சூழலில் தன்னிறைவு விவசாய உற்பத்தியினை இலங்கை காணுவதற்கான வர்புக்கள் குறைவடைகின்ற போது பொருட்களின் விலையேற்றத்தினை கட்டுப்படத்த முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.இந் நிலையில் இவ்வாறான நிலைமைகளை சீர் செய்வதற்கான வாப்பு எந்த அரசு ஆட்சிப்பீடம் ஏறினாலும் மக்களுக்கு தீர்வு என்பது எட்டாக்கனியாகவே போகும்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை கொரனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தொவித்து மட்டக்களப்பில் சட்டவாளர்கள் பணி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டவாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை முதல் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்த சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கோரனா வைரஸ் மட்டக்களப்புக்கு வேண்டாம்,கொரனாவிற்கு கிழக்குதான் இலக்கா?,மட்டக்களப்பினை சுடுகாடாக்காதே,கொரனாவிற்கு கிழக்குத்தான் இலக்கா போன்ற சுலோகங்கள் தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் செயற்பாடானது மட்டக்களப்பு மாவட்டத்தினை முற்றுமுழுதாக பாதிப்புக்குள்ளாக்கும் எனவும் இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சட்டவாளர்கள் சங்க தலைவர் சிரேஸ்ட சட்டவாளர்கள் பே.பிரேம்நாத் தெரிவித்தார்.