மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து அனுமதிக்கப்பட்டவருக்கு கொரனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
குறித்த நபர் இன்று சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த ஒருவர் இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக கொரனா சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைகளுக்கா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.
இவர் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவருவதற்கு அப்பகுதி மக்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.
எனினும் அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் எந்தவித தொற்றும் இல்லாத காரணத்தினால் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 8 அரசியல் கட்சிகளும், 8 சுயாதின குழுக்களும் வேட்பு மனுக்களை கையளித்துள்ளன.
150 சுயாதின குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களுக்காக இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை மேலே…
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாவீரர், முன்னாள் போராளிகள், செஞ்சோலைப் பயனாளிகள் முதலானோர் குடும்பங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ளன. தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பண்டிதரின் (சின்னத்துரை இரவீந்திரன்) தாயார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதேவேளை ஞானசார தேரர் சுதந்திரமாக உலா வருகிறார். எனவே சட்டம் புரியாத சாதாரண மக்களாகிய நாம் மிக எச்சரிக்கையுடனேயே எமது கருத்துக்களை, எதிர்பார்ப்புக்களை வெளியிட வேண்டியுள்ளது.
“பிரபாகரன், கிட்டு, பொட்டு மட்டுமல்ல இந்தியாவில இருக்கிற நெடுமாறன் ஐயாவும் வந்துபோன வீடு இது. அவையின்ர காலடிபட்ட ஒரு நினைவுச் சின்னமா இருக்கிற இந்த வீட்டை மாவீரற்ற ஆன்மாக்கள் எண்டாலும் மீட்டுத் தர வேணும்”, என்று கண்ணீருடன் புலம்புகிறார் பண்டிதரின் அம்மா. “நாங்கள் வட்டுவாகலிலேயே போய்ச் சேர்ந்திருக்க வேணும். இதை எல்லாம் காண வேணும் எண்டு தலையெழுத்து”, என்று இடிந்து போய் நிற்கிறார்.
இடப்பெயர்வைக் கண்டிருப்பம். சாமான் சக்கட்டைக்கட்டி, கொண்டு போகேல்லாதததைக் கழிச்சு வெளிக்கிட ரெண்டு, மூண்டு மணித்தியாலம் செல்லும். ஆனா… ஒரு மணித்தியாலத்துக்குள்ள வெளிக்கிட வேணும் எண்டு சொல்லி வீட்டுச் சாமானெல்லாம் தூக்கி…”, என்று அந்தக் காட்சியை மனதில் கொண்டு வந்து விபரிக்கின்றனர் குடும்பத்தினர்.
சுற்றுப் புறங்களை பார்த்தால் பயன்தரும் வாழை மரங்கள் வெட்டுப்பட்டுக் கிடக்கின்றன. மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக அலங்கரிப்புக்கு வாழை மரங்களை வெட்டாதீர்கள் எனப் புலிகள் விடுத்த அறிவிப்பு நினைவுக்கு வந்தது. நீதிமன்றம்தான் இந்தச் சொத்து அவர்களுக்குரியது என்று சொல்லி விட்டதே. அப்படியாயின் காணியில் உள்ள வாழை, முருங்கைகளும் அவர்களுக்குத்தானே. அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தில் ஒரு காட்சி. தனது மனைவி சந்திரமதியை விலை கூறி விற்று விடுவான் அரிச்சந்திரன். வாங்கிய ஐயர் மகன் லோகிதாசனையும் இழுப்பார். கேட்டதற்கு “மாடு வாங்கினால் கன்றும் எனதுதானே?”, என்று வாதிடுவார். அதுபோல காணியே கைமாறும்போது வாழை, முருங்கை மரங்களை வெட்டத் தேவையில்லைத்தானே என்ற கேள்வி மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படியாயின் இந்தச் சொத்தின் உரிமை குறித்து அவர்கள் மனதில் ஏன் நம்பிக்கை பிறக்கவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகின்றது.
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒரு கருத்தும் கவனத்தைப் பெறுகிறது. ஸ்ரீதர் தியேட்டர் தொடர்பானது இது. “அடாத்தாக ஒரு இடத்தில் 10 வருடங்கள் இருந்தாலே அதனை உரிமை கோர இடமுண்டு. ஆனால் நான் இங்கே 20 வருடங்களாக இருக்கிறேன்.”, 2018 ஜூலை 4-10 எதிரொலி வார இதழில் இக்கருத்து வெளியானது. (உண்மையான உரிமையாளர் வந்தால் தான் அதனைக் கையளிக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.)
“யாரொடு நோவோம்; யார்க்கெடுத்துரைப்போம்” என்ற தலைப்பில் பரவலாக இணையத்தளங்களில் வெளியான கட்டுரை ஒன்று வட மாகாண சபையின் 38 உறுப்பினர்களில் எவரது கவனத்தையும் ஈர்க்கவில்லை. மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்பங்களில் அவலநிலை பற்றியது அது. தமது குடும்பத்தினருக்காகப் போராளிகளால் பணம் கொடுத்து வாங்கப்பட்ட காணிகள் முன்னைய உரிமையாளர்களால் அபகரிக்கப்பட்டமை பற்றியும் இவ்வாறு பாதிக்கப்பட்ட சிலரது விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
உதாரணத்திற்கு தினேஸ் மாஸ்ரரின் வீடு பற்றியது. இவர் கிளிநொச்சி கணேசபுரத்தில் ஒரு காணியை வாங்கினார். எந்தக் காலத்திலாவது புகையிரதம் ஓடும் எனக் கூறிய அவர், அதற்கேற்றவாறு உறுதியான அத்திபாரம் போட்டு மாடி வீடொன்றைக் கட்டினார். பின்னாளில் வடக்கு மாகாண சபை உறுப்பினராக விளங்கிய சு.பசுபதிப்பிள்ளைதான் இக்காணியை வாங்குவதற்கு தொடர்பாளராக இருந்தார். இறுதிப் போரில் தினேஸ் மாஸ்ரர் ஆகுதியானதும், அந்த வீட்டில் இருந்த தினேஸ் மாஸ்ரரின் மாமியாரை விரட்டி விட்டு அக்காணியையும் வீட்டையும் அபகரித்துள்ளார் முன்னாள் பொலிஸ்காரரான மச்சேந்திரராசா. இவ்விடயமாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பசுபதிப்பிள்ளையிடம் விசாரித்துள்ளனர். அவரும் நடந்ததைக் கூறினார். தன்னைப் பயமுறுத்தியே காணியை வாங்கியதாக மச்சேந்திரராசா கூறினார். முதலில் இந்த வீட்டையே தானே கட்டியதாகச் சொன்னார். இன்றுள்ள சூழலில் பலவந்தமாகத் தன்னிடம் காணியை வாங்கியதாக அவர் சொல்வதை நீதிமன்றம் நம்பக்கூடும்.
மலையாளபுரத்தில் அமைந்திருந்த செஞ்சோலை தமது வளாகத்திலிருந்து சகல உடைமைகளையும் ஏற்றிக் கொண்டு, வள்ளிபுனத்துக்குப் புறப்பட்டனர் செஞ்சோலைப் பிள்ளைகளும் பராமரிப்பாளர்களும். (இறுதியுத்தத்தின்போது) அச்சமயம் ஒரு முதியவர் தன்னிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட காணியின் பெயரால் இன்னமும் ஒரு இலட்சம் ரூபா தர வேண்டியுள்ளது என்று சொன்னார். இவ்விடயமாக தலைவர் பிரபாகரனின் கவனத்துக்கும் கொண்டு போயிருந்தார். மிகுதித் தொகையைக் கொடுத்து விடுமாறு அவரும் செய்தி அனுப்பியிருந்தார். அதற்கமைய அத் தொகை அம் முதியவரிடம் வழங்கப்பட்டது இன்று மலையாளபுரக் காணிகளுக்கு உரிமைகோரி வந்திருப்போரில் அவரும் ஒருவர்.
இக்காணிகளின் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டு வீட்டுத் திட்டமும் கிடைத்தது. காணிச் சட்டத்தின்படி ஒருவருக்கு அரச காணி ஒரு இடத்தில்தான் வழங்க முடியும். அதன் பிரகாரம் காணியும் வீட்டுத் திட்டமும் பெற்றவர்கள் பழைய காணியும் கோருகின்றனர். அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இவர்கள் முறைப்பாடு செய்தனர். அவர்கள் பழைய உரிமையாளர்களிடமே காணிகளை ஒப்படைக்குமாறு பிரதேச செயலருக்கு அறிவித்தனர் எனவும் செய்திகள் தெரிவித்தன. இந்த விவகாரம் தற்போது இழுபறியாக உள்ளது.
அடுத்த விடயம் பரம்பரைக் காணிகள் தொடர்பானது. பொட்டம்மான் குடும்பத்தினருக்குச் சொந்தமான இரு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. எந்தச் சட்டபூர்வமான ஆவணமும் இல்லாமல் இக்காணிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது மின்சார சபை. ராஜேஸ்வரி வீதி, இராமநாதன் வீதிச் சந்தியில் உள்ள வீட்டுடனான காணி பொட்டம்மானின் சகோதரிக்கு சீதனமாக வழங்கப்பட்டது. அகில இலங்கைக் கம்பன் கழகம் ஆரம்பிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டதும் இந்த வீட்டில்தான்.
இந்த வீட்டில் பொட்டுவின் அண்ணன் சிவஞானகுமார் நாட்டுக்கு வரும் சமயங்களில் தங்குவது உண்டு. இந்தக் காணியில் தாங்கள் இராணுவத்தின் ஆதரவாளர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஒரு அடாவடிக் குடும்பம் குடியேறியுள்ளது. அந்தக் குடும்பத்துக்கு இந்த வீட்டின் ஒரு அறையில் சிவஞானகுமார் தங்குவது பிடிக்கவில்லை. விளைவு அடிக்கடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்அவர். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் வீதியில் விழுந்து மரணமானார். அதன்பின் அந்தக் குடும்பம் முழுமையாக ஆக்கிரமித்து தனது வெற்றிக் களிப்பை அடிக்கடி வெளிப்படுத்தியது. இக்காணியின் உரிமம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களோ, வடக்கு மாகாண சபையின் 38 உறுப்பினர்களில் எவருமோ கவனம் செலுத்தவில்லை. தேர்தல் சமயத்தில் சிவஞானகுமார் மரணித்திருந்தால் சிலவேளை தேசியத்தின் பெயரால் பலரும் கவனமெடுத்திருப்பார்களோ?
அடுத்தது, கனகரட்ணம் வீதிக் காணி. இதில் அடாத்தாகப் புகுந்த ஒரு பெண்மணி தனது இரண்டாவது கணவனுடன் குடும்பம் நடத்தினார். தற்போது மூன்றாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். (இக்கட்டுரை அச்சுக்குப் போகும்வரை) சனசமூக நிலையங்கள், பொது நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்கள், கிராமசேவை அலுவலர்கள் முதலான சகலருக்கும் இந்த இரு காணிகளின் ஆக்கிரமிப்புப் பற்றித் தெரிந்தும் தமக்கும் புலி முத்திரை குத்தப்படும் என்றெண்ணி ஊமையராகவும் செவிடராகவும் நடந்து கொள்கின்றனர்போல உள்ளது.
மட்டக்களப்பு நாவற்கேணியில் போராளி இளங்கோ (மேரிதாஸன்) தனது மனைவியின் பெயரில் ஒரு காணியை வாங்கினார். கடமையின் நிமித்தம் திருமலைக்குச் சென்ற இடத்தில் இராணுவ முற்றுகையில் சிக்கி உயரிழந்தார். நிறைமாதக் கர்ப்பவதியான தனது மனைவியின் வேண்டுகோளைப் புறக்கணித்து கடமையே பெரிதெனப் பணியாற்றிய அவர் தனது மூன்றாவது பிள்ளையை (தேன்மொழி) கண்ணாலும் காணவில்லை. காலவோட்டத்தில் இந்தப் பிள்ளையும் போராளியானது. இளங்கோவின் காணியை அயலவரான தியாகராஜா என்பவர் தனது காணியுடன் இணைத்திருந்தார். சுனாமியின் அழிவுகளைப் பார்வையிடச் சென்ற இளங்கோவைத் தெரிந்த ஊடகவியலாளர் அங்கு சென்றார். இந்த ஆக்கிரமிப்பை அவதானித்திருந்தார். இது பற்றிக் கேட்டபோது, “சுனாமி வீட்டுத் திட்டத்திற்குக் காணி எடுக்கிறார்கள். அதனால்தான் வேலியை வெட்டி எனது காணியுடன் இணைத்துள்ளேன். இளங்கோ குடும்பத்தினர் வந்து கேட்டால் உடன் வழங்குவேன்”, என்றார்.
இறுதி யுத்தத்தில் எல்லோரும் செத்துத் தொலைந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஏதோ ஒரு மோசடி செய்து காணியை விற்றுவிட்டார். கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்ததும் தமிழரசுக் கட்சியின் செயலர் கிழக்கின் விவசாய அமைச்சரனார். அவரிடம் சென்ற இந்த ஊடகவியலாளர் ஒரு மாவீரர் குடும்பத்தின் காணி மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்.
சம்பந்தப்பட்டவரின் பெயரைக் கேட்டார் அமைச்சார். “தியாகராசா”, எனப் பதிலளித்ததும், “சின்னவனா”, என்று வினாவினார். “ஆம்”, என்றதும் அமைதியாகி விட்டார். சின்னவன் என்பவர் அமைச்சருக்காக தேர்தல் வேலை செய்தவர். மாவீரர் குடும்பத்தினருக்குப் பரிகாரம் காண்பதை விட அடுத்த தேர்தலிலும் தனக்காக வாக்கு வேட்டையாடக்கூடிய ஒருவரின் உறவே அமைச்சருக்கு முக்கியமாகிற்று. இப்படியாக தமிழ் அமைச்சர்கள் முதல் பெரும்பாலான கட்டமைப்புகள் மாவீரர் குடும்பங்களை முகவரி இல்லாமல் ஆக்கவே முயல்கின்றன. எதிர்வரும் தேர்தலுக்காக – தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக காசி ஆனந்தனின் கவிதைகளைப் பாடிக் கொண்டு வாக்கு வேட்டைக்கு வருவோரே தவிர மாவீரர் குடும்பத்துக்கு உதவ முன்வர மாட்டார் செயலர்.
இந்தக் கோளாறுகளின் உச்சம் தலைவர் பிரபாகரன் குடும்பத்தினரின் காணி அபகரிப்பு. இதன் போதும் தேசியவாதிகள் அனைவரும் மௌனம் காத்தனர். திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி வவுனியா புளியங்குளத்தில் 200 கி.மீ. அடையாளக் கல்லுக்கு எதிரே உள்ளது. அதனைப் புத்தளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டானியல் கிறிஸ்ரி என்பவர் அபகரித்துள்ளார். (முன்னர் இந்த இடத்தில் கள்ளுத் தவறணை இருந்தது) இவரது மனைவி சரியாக தமிழ் தெரியாவிட்டாலும் தமிழே தனது பூர்வீகம் என்கிறார். ஆப்கானிஸ்தான் அகதிகளை வவுனியாவில் தங்க வைக்கக்கூடாது என முழக்கமிட்ட அரசியல்வாதிகள் பிரபாகரனின் காணி பறிபோவதைக் காணாமல் இருந்தமையை என்னவென்று சொல்வது.
வட மாகாண ஆளுநர் காணிப் பிணக்குகள் தொடர்பாகக் குழுவொன்று நியமித்துள்ளார் எனத் தெரிய வருகிறது. எப்படியும் போராளிகள் ஆயுத முனையிலேயே காணி வாங்கியதாக சிலர் வாதிடக்கூடும். எனினும் உண்மையைக் கண்டறிய வேண்டும் வடக்கு ஆளுநர். விசேட கவனம் இதில் செலுத்தாது விட்டால் மாவீரர், போராளிகள் குடும்பங்கள் பாதிக்கப்படும். நிலை நிச்சயம் தோன்றும்.
எது எவ்வாறாயினும் பண்டிதர் அம்மா குறிப்பிட்டது போல அந்த நினைவுச் சின்னத்தை எப்படியும் பாதுகாக்க வேண்டும். என்ன விலை கொடுத்தேனும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில், இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.
சீன நகரமான ஜிங்ஜோவில் 21 வயதான கெம் சென்யு என்பவர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனை சேர்ந்த இவர், சீனாவை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே இருந்து இதனை எதிர்கொண்டுள்ளார்.
“என்ன ஆனாலும் பரவாயில்லை. நான் இதனை ஆப்பிரிக்காவிற்கு சென்று பரப்பிவிடக்கூடாது என்று நினைத்தேன்” என்று தன் பல்கலைக்கழக விடுதியில் இருக்கும் அவர் கூறுகிறார். அவர் மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.
முன்னதாக காய்ச்சல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
“முதன்முறையாக நான் மருத்துவமனைக்கு செல்லும்போது இறந்துவிடுவேன் என்று நினைத்தே சென்றேன்” என்கிறார் அவர்.
உள்ளூர் சீன மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கெம், 13 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். எச்ஐவி பாதிப்புக்கு கொடுக்கப்படும் நுண்ணுயிர் கொள்ளி மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் கெம்மின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட முதல் ஆப்பிரிக்கர் இவர்தான். இவருடைய மருத்துவ செலவுகளை சீன அரசு ஏற்றுக் கொண்டது.
“நான் என் படிப்பை முடிக்காமல் நாடு திரும்ப விரும்பவில்லை. கொரோனா தொற்று அச்சத்தால் யாரும் நாடு திரும்ப வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அனைத்து மருத்துவ செலவுகளையும் சீன அரசே ஏற்கிறது” என்று கெம் கூறுகிறார்
‘வைரஸ் இருந்தும் தனிமையில் இருந்தும் மீண்டு வந்தேன்’
சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களில் ஜூலியும் ஒருவர்.
இந்த வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் அதிலிருந்து மீண்டு வந்த கதையை பகிர்ந்து கொண்டார்.
“கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியன்று எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. நான் அதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். உடல்நிலை சரியான மாதிரி இருந்தது. ஆனால், நாள் முழுவதும் சோர்வாகவே உணர்ந்தேன். தூங்கிக் கொண்டே இருந்தேன். காய்ச்சல் போன பிறகு, ஒருவாரம் நன்றாக இருந்தேன். இருமல், தும்பல் ஏதுமில்லை.
எனினும் பிப்ரவரி 7ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நான் எழுந்தபோது, நான் இருந்த அறையே சுற்றியதுபோல இருந்தது” என்கிறார் ஜூலி.
அடுத்தநாள் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து அவர் தனிமையில் வைக்கப்பட்டார்.
அந்த அனுபவத்தையும் ஜூலி கூறுகிறார்.
சுற்றி நான்கு சுவர்கள் மட்டுமே இருக்கும். ஒரே ஒரு கதவு. ஒரு சிறு இடத்தில் நுழைவு மாதிரி இருக்கும். அதன் வழியே எனக்கு உணவு கொடுக்கப்படும். அதோடு என் மருந்து மாத்திரைகள், மாற்றுத்துணி எல்லாம் எனக்கு வழங்கப்பட்டது. என்னிடம் அலைப்பேசி இருந்தது. நீங்கள் யாருடனாவது அதில் பேசலாம். வீடியோ கால் செய்யலாம். ஆனால் நிஜத்தில் எந்த மனிதரிடத்திலும் பேசாமல் இருப்பது கடினமாக இருந்தது. சுவற்றில் தட்டி சத்தம் எழுப்பி என் பக்கத்து அறையில் இருக்கும் நபரிடம் பேச வேண்டும் போல இருந்தது.
நான் தீவிர நிலையை எட்டியபோது, மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டேன். சாதாரண நாட்களில் நாம் மூச்சுவிடுவது குறித்து எதையும் கவனித்திருக்க மாட்டோம். என் படுக்கையில் இருந்து, கழிவறை செல்லக்கூட முடியாமல் இருந்தேன். அவ்வளவு தூரம் கூட என்னால் நடக்க முடியவில்லை.”
ஒன்பது நாட்கள் கழித்து குணமடைந்த ஜூலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
கொரோனா வைரஸ் – உயிரிழப்பு விகிதம் என்ன?
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 1000 பேரில் 5 முதல் 40 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.
1000 பேரில் 9 பேர் இறக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 3.4 சதவீதம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்பதால் இறப்பு வீதம் குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
எனினும், கொரோனா பாதிக்கப்பட்ட 30 வயதுக்கு கீழ் உடையவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. 30 வயதுக்கு கீழ் உடைய 4,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
பெண்களைவிட ஆண்களே இந்த தொற்றால் அதிகம் உயிரிழந்துள்ளார்கள்.
தமிழர் அல்லாத ஒருவரை பட்டிருப்பு தொகுதி தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாமல் ஏன் நியமித்தீர்கள்என என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம், தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராசா மட்டக்களப்பில் வைத்து கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் ‘யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து மட்டக்களப்பு சம்பந்தமான முடிவுகளை நீங்கள் எடுப்பதென்றால் நாங்கள் ஏன் இங்கு தமிழரசுக்கட்சி என்று இருப்பான்’ எனவும் அவர் கேட்டுள்ளார்.
மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழரசு வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மட்டக்களப்புக்கு கடந்த புதன்கிழமை மாவை சேனாதிராஜா விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு மட்டுமாவட்ட தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களையும் கட்சியின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடிய வேளையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் வேட்பாளர் தெரிவு தங்களைமீறி முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் செல்வராசா சுட்டிக்காட்டியிருந்தார்.
பட்டிருப்பு தொகுதியில் தமிழர் அல்லாத ஒருவரை பட்டிருப்பு தொகுதி தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாமல் ஏதோ செல்வாக்கின் அடிப்படையில் வேட்பாளர் நியமனம் யாழ்பாணத்தில் இருந்து தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பின்பு மாவை தனக்கு நெருக்கமானவர்களிடம் செல்வராசா இப்படியொரு வினாவை தொடுப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லையெனவும் தனக்கு பெரும் மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு (13) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மற்றொருவர் வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று தாக்கம் குறித்து அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் முரண்பட்டதாகவே உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்களை அரசாங்கம் அமைப்பதானது தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற சதி நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது கொரோனா தொற்று தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
கொரோனா தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து அரசியல் நோக்கம் கொண்டதாக அரசின் முடிவுகள் அமையக் கூடாது.
உண்மையில் வடக்கிலோ அல்லது முழு நாட்டிலோ பாதிப்பு இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பது அவசியமானது தான்.
ஆனால் அந்த நடவடிக்கைகள் சரியான முறையில் கலந்து பேசி ஆராய்ந்து எடுக்கப்படுவதே பொருத்தமானதாக இருக்கும்.
ஆனால் இன்றைக்கு அரசாங்கம் எடுக்கின்ற முடிவுகள் என்பது மிகவும் முரண்பட்ட முடிவுகளாகவே இருக்கின்றது. இவ்வாறாக முரண்பட்ட முடிவுகளை ஏன் எடுக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இத்தாலி அல்லது தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் விமான நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தி மேலதிக சோதனைகளுக்காக மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.
அவ்வாறு அங்கு சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் தான் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால் சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. ஏனெனில் சீனாவில் தற்பொது கொரோனா தாக்கம் குறைவடைந்து வருவதாக அதற்கு காரணமும் கூறுகின்றது.
உண்மையில் இந்த கொரோனா தொற்று தாக்கம் சீனாவில் தான் உருவாகியது. அங்கு பலர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போதும் வைத்தியசாலையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனனர்.
ஆக மொத்தத்தில் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை இல்லை. ஆனால் இத்தாலியோ தென்கொரியாவோ அல்லது வேறு நாடுகளிலோ இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை என அரசின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் என்பது மிகவும் முரண்பட்ட நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகிறது.
ஆகவே அரசின் இத்தகைய முரண்பட்ட முடிவுகள் என்பது மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆகையினால் இவை தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக வடக்கு கிழக்கு என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்டடு இருக்கிற நிலையில் அங்கு கொண்டு செல்வதென்பது ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையா என்று சந்தேகம் கொள்ளத் தோன்றுகிறது.
இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடாத்துகின்றனர். ஆகவே மிக நீண்ட தூரம் கொண்டு சென்று பரிசோதிப்தை விடுத்து விமான நிலையத்திற்கு அண்மித்ததாக உள்ள பிரதேசங்களிற்கு கொண்டு சென்று பரிசோதிப்பதே பொருத்தமாகும்.
அரசின் இத்தகைய நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் அரசின் மேல் பெறுப்பை தான் ஏற்படுத்தும் என்றார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கை கேலி கூத்தாக இருக்க முடியாது. அதற்காகவே நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணையினை கோருகிறோம் என நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக்குழுவின் அருட்தந்தை வி.பி.மங்களநேசன் அடிகளார் கூறியிருக்கின்றாா்.
மேற்படி விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
கடந் த 3 வருடங்களாக 8 மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றாா்கள். ஆனால் எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை.
மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் மண்ணுக்குள் தோண்டி எடுக்கவேண்டும் எனவும், வெளிநாட்டில் உள்ளாா்கள் எனவும், இறந்துவிட் டாா்கள் எனவும் அரசாங்கம் கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கிறாா்கள்.
எவாிடம் ஒப்படைத்தோம், எந்த இடத்தில் ஒப்படைத்தோம், எப்போது ஒப்படைத்தோம் என கூறுவதற்கு சாட்சிகள் உள்ள நிலையில் நீதி கோாி தொடா்ந்தும் போராட்டம் நடாத்துவோம்.
ஆனால் உள்ளக விசாரணை ஊடாக எமக்கு தீா்வு வழங்கப்ப டாது. அதில் நாம் மிக தெளிவாக இருக்கிறோம். உள்ளக விசாரணை மீது நமக்கு நம்பிக்கை இல்லாமைக்கு நிறையவே அனுபவங்கள் உள்ளன.
குறிப்பாக திருகோணமலை 5 மாணவா்கள் கொலை, கொழும்பில் 11 போ் கடத்தல் உ ள்ளிட்ட பல சம்பவங்களில் உள்ளக விசாரணை ஊடாக என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தொியும். அதனை சொல்லி புாிய வைக்கவேண்டிய அவசியம் கிடையாது.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேலி கூத்தாக இருக்க முடியாது. எனவே எமக்கு சா்வதேச விசாரணை ஊடாக நீதி வழங்கப்படவேண்டும். மேலும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அதன் ஊடாக இந்த நாட்டில் நல்லிணக்கம் சாத்தியமாகும் என்றாா்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில் 60 இலங்கையர்களும் இரண்டு வெளிநாட்டவர்களும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசாங்க தொற்றுநோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் சமித்த குருகே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சுற்றுலா வழிகாட்டிக்கும் அவரது நண்பருக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட வைத்தியசாலைகள், அநுரதபுரம் மற்றும் பொரல்லை வைத்தியசாலைகள், ராமக, கம்பஹா, நீர்கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, குருநாகல் மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் ஏனைய 62 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 5000 பேர் வரை மரணமாகியுள்ளனர். 117 நாடுகளில் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. ஒரு லட்சத்து 34ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் மாத்திரம் 3117 பேர் மரணமாகினர். அங்கு 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 ஆயிரம் பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கையில் இந்த நோயில் இருந்து மீளும் சிகிச்கைகள் வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்திய நிபுணர் குருகே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் எந்தவொரு அரசியல் இலாபமும் கருதாமல் நாட்டு மக்களின் நன்மையை மாத்திரம் கருத்தில் கொண்டு மேற்குறித்த நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
தற்போது நாடு விழுந்துள்ள பள்ளத்தில் இருந்து மீண்டெழ எதிர்க்கட்சி என்ற வகையில் பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைகளை கூறி அரசியல் ரீதியாக ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை மேற்கொள்ளாது ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.