Home Blog Page 2384

இலங்கையில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா!

இலங்கையில் மார்ச் 13 வரை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று (14) மாலை நேரம் ஆகும் போது அந்த தொகையானது 10 ஆக அதிகரித்ததாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

56 வயதான பெண்ணொருவரும், 17 வயதான இளம்பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

குறித்த பெண் இந்த மாதம் 7ஆம் திகதி இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே இவருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இலங்கையில் இதற்கு முன்னதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் ஒருவரின் உறவினரே 17 வயதான இளம்பெண் எனவும் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து வருகைத் தந்த நிலையில், பொலன்னறுவை – கந்தகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட ஒருவரே 8 ஆவதாக கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டவர் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் தற்போது பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 9 இலங்கையர்களும், 1 சீன பிரஜையும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வெளிநாட்டு பிரஜை பூரண குணமடைந்து சீனா நோக்கி பயணித்துள்ளார்.

எனினும், பாதிக்கப்பட்ட 9 இலங்கையர்களும் தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 103 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கொரோனா தொற்று காணப்படுவதாக சந்தேகிக்கப்படுபவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலைக்கு மேலதிகமாக, தேசிய வைத்தியசாலை, ராகமை, கராபிட்டிய, குருநாகல், கண்டி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், கம்பஹா, நீர்கொழும்பு, இரத்தினபுரி, பதுளை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கைக்கு விஜயம் செய்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக தமது நாட்டிற்கு செல்ல முயற்சித்த நான்கு போலாந்து நாட்டு பிரஜைகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையிலேயே அவர்கள், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய மறை மாவட்டங்களிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஆராதனைகளை ரத்து செய்யுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தவக்கால விசேட ஆராதனை நிகழ்வுகளை இடைநிறுத்துவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு நேற்று (14) முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கைதியொருவரை பார்வையிட மூன்று பேருக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (14) முதல் ஒருவர் மாத்திரமே கைதியொருவரை சென்று பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு உயிரியல் திணைக்களம் ஆகியவற்றிற்கு கீழுள்ள மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்களே இவ்வாறு மூடப்படுகின்றன.

கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சினிமா திரையரங்குகள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.

அதிகளவிலான கூட்ட நெரிசல் காணப்படும் பகுதிகளை மூடும் திட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற நிலையிலேயே இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

மக்கள் ஒன்று திரளும் வகையிலான பொது கூட்டங்களை நடத்த எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்குடன் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் ஒன்று கூடும் கூட்டங்களை நடத்த பொலிஸார் இதுவரை அனுமதி வழங்கி வந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு அந்த அனுமதியை வழங்க மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

(பிபிசி தமிழ்)

வடக்கு மாகாணத்தில் 34 சுயேச்சைகள் கட்டுப்பணம்.

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை இலங்கை முழுவதும் 150 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 16 குழுக்களும், வன்னியில் 18 குழுக்களும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.

இலங்கையில் வன்னி மாவட்டத்திலேயே அதிகளவான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 2 சுயேச்சைக் குழுக்களும், வன்னியில் ஒரு சுயேச்சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

கொரோனா சிகிச்சை பிரிவுக்கு வவுனியாவில் வேண்டாம் – கண்டன ஆர்ப்பாட்டம்

வவுனியா – பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டதனை கண்டித்து நெளுக்குளத்தில் கண்டன போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெளுக்குளம் சந்தியில் இன்று காலை 10 மணியளவில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அகற்று அகற்று கொரோனா முகாமை அகற்று, கொரோனா வைரஸ் வவுனியாவிற்கு வேண்டாம், தமிழர் பிரதேசத்தில் கொரோனா முகாமை எதற்காக அமைத்தாய் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்,

வவுனியா பம்பைமடு பிரதேசத்திற்கு இனங்காணப்படாத கொரோனோ என சந்தேகிக்கும் 265 பேர் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

எங்களுடைய மக்கள் பீதியிலே காணப்படுகின்ற நிலையில் இலங்கையிலேயே பல்வேறு மாவட்டங்கள் இருக்கின்ற போது வட கிழக்கிலே இவ்வாறான நோயாளர்களை கொண்டு வருவது ஏற்று கொள்ள முடியாது.

சஹரான் குண்டு தாக்குதலின்‌ போதும் வெளிநாட்டவர்களை வவுனியா பூந்தோட்டத்திலே குடியேற்றப்பட்டிருந்தார்கள்.

வடகிழக்கிலே இவ்வாறானவர்களை குடியமர்த்துவதென்பதை இன அழிப்பாகவே சிந்திக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் பல்வேறு இடங்கள் இருக்கின்ற போது அவர்களை அங்கே வைத்து அவர்களின் நோய் தொற்றை ஆராய முடியாதா? வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் குடியமர்த்துவதென்பது கண்டிக்கத்தக்க விடயம்.

பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பம்பைமடுவில் குப்பை கொட்டும் இடம் காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் நோயாளிகளின் குப்பை அங்கே கொட்டப்படும் போது எங்களுடைய தொழிலாளிகள் அங்கே சென்று வரும்போது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே உடனடியாக இந்த முகாமை அகற்ற வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக காணப்படுகின்றது‌ என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை போராட்டம் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

22 1 1 கொரோனா சிகிச்சை பிரிவுக்கு வவுனியாவில் வேண்டாம் - கண்டன ஆர்ப்பாட்டம் 22 2 1 கொரோனா சிகிச்சை பிரிவுக்கு வவுனியாவில் வேண்டாம் - கண்டன ஆர்ப்பாட்டம் 22 3 1 கொரோனா சிகிச்சை பிரிவுக்கு வவுனியாவில் வேண்டாம் - கண்டன ஆர்ப்பாட்டம்

தனித்து போட்டி போட தீர்மானம் -டக்ளஸ் தேவானந்தா

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிலே ஈ.பி.டி.பி. கட்சி வீணைச் சின்னத்திலே தனித்து போட்டி போட இருக்கின்றோம். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒர் இரு தினங்களில் வெளியிடுவோம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு முகத்துவாரத்தில் அமைந்துள் சுற்றுலா விடுதியில் நேற்று சனிக்கிழமை (14) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அமைச்சர்,

கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு காரணங்களுக்காக விஜயம் மேற்கொண்டுள்ளேன் ஒன்று என்னுடைய அமைச்சோடு சம்மந்தபட்ட வேலைத்திட்டங்களை பார்ப்பதற்கும் ஜனாதிபதியும் பிரதமரும் என்மேல் இருக்க கூடிய நம்பிக்கை காரணமாக எனக்கு இந்த அமைச்சு பதவியை தந்திருக்கின்றார்கள்.

அதன் ஊடாக நாடு தழுவிய ரீதியில் கடற்தொழிலாளர்கள் எதிர் கொள்ளுகின்ற பிரச்சனைகளை விரைவாக தீர்ப்பதற்கும் இனங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வை ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாட்டிலே நியாயமான விலையிலே போசாக்கு உணவை பெற்றுக் கொள்வதற்காகவும் அந்நிய செலவணியை அதிகரிப்பதற்காக இந்த அமைச்சு பொறுப்பை தந்திருக்கின்றார்.

அந்த ரீதியில் நாடுதழுவிய ரீதியில் அதனை பார்ப்பதற்காக பிரயாணித்து கொண்டிருக்கின்றேன். அத்தோடு எனது கட்சியின் அரசியல் கொள்கைகள் அரசியல் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கும் வந்துள்ளேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண தமிழர்கள் கூட்டமைப்பு என தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் இருந்து பல பிரமுகர்கள் வந்து என்னுடன் பேசினார்கள் அப்போது நாங்கள் வாக்குகள் சிதறக் கூடாது என உடனடியாக ஏற்றுக் கொண்டு அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றதாக தெரிவித்து அண்மை நாட்கள்வரை அதனை தெரிவித்தும் செய்தும் வந்திருக்கின்றோம்.

ஆனால் அப்படி கூட்டமைப்பு என்று வந்தவர்கள் இரண்டாக பிரிந்தனர். அதன் பின் அதற்குள் இருக்க கூடிய அரசியல் கட்சிகளும் வெவ்வேறு போக்கில் போயிருக்கின்றனர். ஐக்கியத்துக்கான பல முயற்சிகள் செய்து அது வாய்க்கவில்லை ஆனால் நாங்கள் தேசிய பட்டியலை கருத்தில் வைத்துக் கொண்டும் கட்சியின் கொள்கைகள் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் முன்வைத்து அவர்களது ஆணையை பெறுவது தான் எங்களுடைய நோக்கம். அந்தவகையில் இந்த தேர்தலில் தனித்து களமிறங்குவதாக முடிவெடுத்துள்ளோம்.

எனவே தேர்தலில் போட்டியிடுவபர்களின் பெயர் பட்டியலை வெகு விரைவில் அறிவிப்போம். என்றார்

தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமான தலதா மாளிகைக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க ​தேல தெரிவித்துள்ளார்.

முதற் காரணியாக, மாளிகைக்குள் வருவோர் முகம்,கை,கால் கழுவிட்டு தூய்மையாக உள்வருவதற்கான ஏற்பாடுகளும், விஷக்கிருமிகளை அழிப்பதற்கான மருந்து வகையொன்றை பெற்றுக்கொடுத்த பின்னர் உள்நுழைய முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி, விஷக் கிருமிகளை ஒழிப்பதற்காக மேறகொள்ளப்பட்டுள்ள சில ​பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மாளிகைக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி அந்த சூழலில் நடமாட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும் கொரோனாவின் அச்சம் காரணமாக சில இடங்களில் பொது மக்களின் நடமாட்டம் குறைந்திருக்கிறது. எனினும் பொது மக்கள் எவரும் அச்சமடைய வேண்டாம் என்று அராசங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை வைத்து கோட்டா அரசு அரசியல்; சுட்டிக்காட்டுகிறார் சுரேஷ்

கொரோனோ தாக்கம் குறித்து அரசு எடுக்கின்ற நடவடிக்கைகள் முரண்பட்டதாகவே உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், அரசியல் உள்நோக்கம் கொண்டதாக எடுக்கின்ற நடவடிக்கைகளை அரசு நிறுத்தவேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டமக்கள்வாழ்கின்றவடக்கு-கிழக்கு குதிகளில்கொரோனா பரிசோதனைமுகாம்களை அரசு அமைப்பதானது தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாகஅழிக்கின்றசதிநடவடிக்கையா என்று சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனோ தொடர்பில் ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து அரசியல் நோக்கம் கொண்டதாக அரசின் முடிவுகள் அமையக்கூடாது. உண்மையில் வடக்கிலோ அல்லது முழு நாட்டிலோ பாதிப்பு இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பது அவசியமானதுதான். ஆனால் அந்த நடவடிக்கைகள் சரியான முறையில் கலந்து பேசி ஆராய்ந்து எடுக்கப்படுவதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் இன்று அரசு எடுக்கின்ற முடிவுகள் என்பது மிகவும் முரண்பட்ட முடிவுகளாகவே இருக்ன்றன. இவ்வாறாக முரண்பட்ட முடிவுகளை ஏன் எடுக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இத்தாலி, தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் விமான நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தி மேலதிக சோதனைகளுக்காக மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். அவ்வாறு அங்கு சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் தான் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அரசு கூறுகின்றது.

ஆனால்சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகின் றவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை என்று அரசு கூறுகின்றது. ஏனெனில் சீனாவில் தற்போது கொரோனா தாக்கம் குறைவடைந்து வருவதாக அதற்கு காரணமும் கூறுகின்றது. உண்மையில் இந்த கொரோனா தொற்றுதாக்கம் சீனாவில் தான்உருவாகியது. அங்கு பலர் உயிரிழந்துள்ள நிலையில்தற் போதும் வைத்தியசாலையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனனர்.

ஆக மொத்தத்தில் சீனாவில் இருந்து வருபவர்களுக்குப் பரிசோதனை இல்லை. ஆனால் இத்தாலியோ தென்கொரியாவோ அல்லது வேறு நாடுகளிலோ இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை என அரசின் செயற்பாடகள் முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் என்பது மிகவும் முரண்பட்ட நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றன.

ஆகவே அரசின் இத்தகைய முரண்பட்ட முடிவுகள் என்பதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையினால் இவை தொடர்பில் அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதே நேரம் இப்போதுதேர்தல்காலம்என்பதால்மக்களுக்கான சரியான நடவடிக்கைகளையே அரசு எடுக்க வேண்டும். அதனை விடுத்து தேர்தலுக்காக அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமாதல்ல” என்றார்.

பொதுத் தேர்தலை ஒத்திவையுங்கள்: ஜனாதிபதியிடம் ரணில் கோட்டாவிடம் கோரிக்கை

நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளமையுடன் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாரென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடு பெரும் அச்ச சூழ்நிலைக்குள் சிக்கியுள்ள இந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் அவலப்படும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு நாட்டை ஆபத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் அரசு இறங்கவேண்டும் என்றும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயாராக உள்ளார் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்யாதீர்- Dr. விஷ்ணு சிவபாதம்

இந்தப் பதிவானது எதிர்மறையான கருத்துக்களை ஏற்படுத்தலாம் என்பதற்காக நேற்று இதை எழுதவில்லை. ஆனாலும் இன்று மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவங்களால் ஒரு வைத்தியராக என்னால் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை.

சிறுவயதில் அம்புலன்ஸ் சத்தம் கேட்டால் அதனில் உள்ள நோயாளி விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்வேன். பின்னர் ஒரு வைத்தியராக அவ் வண்டியில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது ஒருவிதமான திருப்தி ஏற்படும்.

ஆனாலும் அம்புலன்ஸ் வண்டியில் அரச வைத்தியசாலைக்கு வரும் நோயாளியை தங்களது சுயநலத்திற்காக திருப்பி அனுப்பிய சமூகத்தில் நான் வாழ்கிறேன் என்று நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இதை உள்ளூர் அரசியல் வாதிகளும் தங்களுக்கு ஏற்றால்போல் பயன்படுத்திக்கொள்வது மிகவும் பாரதூரமானது. இதனால் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சற்று விளக்கம் இல்லாமலேயே இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் ஆனது உலகளாவிய ரீதியில் மிக வேகமாக பரவி வருகின்றதை மறுக்க முடியாது. எனவே உலக நாடுகளில் உள்ள இலங்கையர்களும் இங்கு வர நினைப்பது சாதாரணமானதே.

அதனால் அவர்களை சிறிது காலம் தனிமைப்படுத்தி வைத்து அவதானிக்க வேண்டியது கட்டாயமாகின்றது. அந்த அவதானிக்கும் இடமானது மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு பிரதேசமாக இருக்க வேண்டும்.

ஆனாலும் அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் எல்லோருக்கும் நோய்த்தொற்றுக்கு உள்ளாக்குவது இல்லை. அதாவது உதாரணமாக ஒரு மாதத்துக்கு முன்னர் சீனாவில் இருந்து வருகை தந்த மாணவர்கள் அனைவரும் நோய்த்தொற்று இல்லாமல் அவதானிப்பின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.IMG 7432 கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்யாதீர்- Dr. விஷ்ணு சிவபாதம்

அவ்வாறானதொரு பின்னணியிலேயே அவர்கள் புனாணையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நோய்த்தொற்றக்குரிய அறிகுறிகளை வெளிப்படுத்தும், வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் மட்டும் அண்மையில் உள்ள பொலன்னறுவை, அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்.

அதிலும் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படும் இடத்து அவர்கள் கொழும்பிலுள்ள தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள். இதுதான் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குமுறை.

அங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களை பராமரிப்பது இராணுவத்தின் கடமையாக பணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இராணுவத்தினரும் எம்மைப்போல் சாதாரண மனிதர்களே. அவர்கள் இக்கொடிய நோயானது இலங்கை முழுவதும் பரவுவதை தடுப்பதற்காக தங்களை அர்பணித்துள்ளனர்.

இன்று மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இவ்வாறாக வெளிநாடுகளிலிருந்து திரும்பும் நபர்களை அவர்களுடைய வீட்டுக்குச் செல்ல அனுமதித்தால் இந்நோய் பரவும் வேகம் எவ்வாறு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஏனென்றால் சீனாவிலிருந்து கொழும்புக்கு வந்த வைரசுக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும்?

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன நடக்கும்?

இல்லையென்றால் உங்களுக்கோ அல்லது உங்களுடைய உறவினருக்கோ கொரோனா தொற்று ஏற்படும் பொழுது நீங்கள் அவர்களை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா?

அப்படி என்றால் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற பின்னர் எங்களது வைத்தியசாலைக்கு வந்து நீண்ட நேரம் வரிசையில் நின்று இரத்தம் கொடுத்தது அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்துக்காக மட்டுமா?

ஆக எமது மனிதநேயத்தை அளவிடுவதற்கு ஒரு சிறு வைரஸ் போதுமானதா?IMG 7367 கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்யாதீர்- Dr. விஷ்ணு சிவபாதம்

ஏற்கனவே இலங்கையில் ஐந்து பேருக்கு இந்நோய் தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கொழும்பிலுள்ள தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கோடையில் உள்ள அந்த வைத்தியசாலை ஆனது மக்கள் செறிவுடைய பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. அங்குள்ள மக்கள் எவரும் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்யவில்லை தானே.

நாம் இனம் மதம் பிரதேசம் என்று பிரிந்து நின்றால் வைரஸுக்கு இலகுவாகிவிடும் அல்லவா?

எம்மை நாமே அழித்துக் கொள்வதா?

இந்த கொடிய நோயை குறுகிய நோக்கத்துக்காக மக்கள் பிரதிநிதிகள் கையில் எடுத்துக்கொள்வது பொருத்தமாகுமா?

எமது மாவட்டத்தில் இருந்து கண்டி, கொழும்பு போன்ற பிற வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்படும் நோயாளிகளுக்கு அவர்கள் இதயசுத்தியுடன் எதிர்காலத்தில் சிகிச்சை அளிப்பார்கள் என்பது நிச்சயமா?

இவ்வாறான செயற்பாடுகள் எமது வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

அல்லது இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் மட்டக்களப்பை இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என நம்புகிறீர்களா?

ஆனாலும் கடந்த காலத்தில் எமது வைத்தியசாலையைப் பற்றியும், வைத்தியஙர்களைப் பற்றியும் பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் களங்கப்படுத்திய பொழுதும், இந்த நோயானது நோயாளர்களை நேரடியாக தொடுவதன் மூலம் பரவும் என்று தெரிந்திருந்தும் எமது வைத்தியர்களும் தாதியர்களும் மற்றைய சுகாதார உத்தியோகத்தர்களும் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் நோயாளிகளை பராமரிப்பதற்கு தயாராகி விட்டார்கள் அல்லவா?

ஒரு வைத்தியராக நான் இதில் பெருமை அடைகிறேன்.

எனவே சுயநலம் பற்றியே எப்பொழுதும் சிந்திக்காமல் சற்று பொதுநலத்துடன் நடந்து கொள்வோமேயானால் என்றால் சிங்கப்பூர் போன்ற நாடுகளை போன்று நாங்களும் இந்த வைரஸினை வெற்றி கொள்ளலாம்.

Dr. விஷ்ணு சிவபாதம்,
MBBS, DCH, MD Paediatrics
குழந்தைநல மருத்துவ நிபுணர்,
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தையல் கடை விசமிகளால் தீக்கிரை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் அமைந்துள்ள தையல் கடை ஒன்றுக்கு இன்று 14.03.2020 காலை விசமிகளால் தீவைக்கப்பட்டதில் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்

நேற்று (13.03.2020) இரவு குறித்த தையல் கடை உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட கடையினை பார்வையிடுவதற்காக இன்று (14) காலை தடையவியல் பொலிசார் மற்றும் பொலிசார் வருகை தருவதை அறிந்து குறித்த கடைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தடயவியல் பொலிசார் மற்றும் பொலிசார் வருகைதந்தவேளை தையல் கடை தீப் பற்றி எரிந்த வண்ணம் இருந்த நிலையில் கடையினை அருகில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து சென்றுள்ளார்கள்.

இதன்போது பாடசாலை மாணவர்களின் சீருடைகள் உள்ளிட்ட தையல் இயந்திரங்கள் என ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்தது

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.

இத்தாலியிலிருந்து வருகை தந்த 56 வயது பெண்ணுக்கும் அவரது உறவினரான 17 வயதுடைய ஒருவருக்குமே கொரோனா தொற்று இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

56 வயதான பெண் கடந்த 7 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.அவர் தற்போது ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்
இலங்கையில் எட்டாவது கொரோனா நோயாளியும் அடையாளம் காணப்பட்டார்.
625.0.560.350.390.830.053.800.670.160.91 1 2 இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்தது

இலங்கையில் மற்றுமொரு கொரோனா நோயாளியும் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்ச்சு சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இன்றையதினம் மூன்று கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் எட்டாக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட மூவரும் இத்தாலியிலிருந்து வந்தவர்கள் எனவும் 44,43 மற்றும் 42 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எட்டாவது நபர் கந்தகாடு இடைத்தங்கல் முகாமில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
625.0.560.350.390.830.053.800.670.160.91 4 இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்தது