Home Blog Page 2378

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் விநியோகம் இடைநிறுத்தம்

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும். இருப்பினும் இணையத்தளத்தின் ஊடாக இந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு முடியும் என்று அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்கு கொடுப்பனவு அல்லது தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதத்தை எதிர்கொள்ளும் நபர்களுக்கு வீதி பரிசோதனையின் போது நிவாரணம் வழங்குமாறு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது

வாழ்வதற்கேற்ற வசதிகள் இன்மையால் வெளியேறும் கப்பாச்சி கிராம மக்கள்-கோ, ரூபகாந்தன்

வாழ்வதற்கு ஏதுவான வசதிகள் எதுவும் இன்றி குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து கப்பாச்சி கிராம மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேறி செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவில் முகத்தான்குளத்தின் குளக்கட்டினை பிரதான வீதியாக கொண்டு அமைந்துள்ள கப்பாச்சி கிராமம் கவனிப்பாரற்ற வாழ்விடமாக மாறி வருகின்றது.

95 குடும்பங்களைக் கொண்ட இக் கிராமத்தில் மக்கள் 1977ஆம் ஆண்டு குடியேறியிருந்த போதிலும், அக்காலப் பகுதியில் மக்கள் செறிவுத் தன்மை காரணமாக வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். 1990ஆம் ஆண்டு எற்பட்ட நாட்டின் ஸ்திரமற்ற தன்மையினால், இக் கிராம மக்கள் வெளியேறி மடு பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.

எனினும் மடு பிரதேசத்தில் இருந்த குறிப்பிட்ட குடும்பத்தினர் மீண்டும் அங்கிருந்து இந்தியாவிற்கு அகிகளாக சென்றுவிட மிகுதியாக இருந்த சுமார் 40 குடும்பங்கள் வரையில் மீளவும் தமது கிராமத்தில்  குடியேற விரும்பியிருந்தனர்.3 1 வாழ்வதற்கேற்ற வசதிகள் இன்மையால் வெளியேறும் கப்பாச்சி கிராம மக்கள்-கோ, ரூபகாந்தன்

இந் நிலையிலேயே முகத்தான்குளத்தை அண்டிய பகுதியில் தாம் குடியேறினால் நீர் வசதியுடன் வாழலாம் என்ற எண்ணத்தில் இருந்த சமயம், 1994ஆம் ஆண்டு காலப் பகுதியில் அப் பிரதேசத்தின் செயலாளர் கப்பாச்சி கிராமத்தின் மேட்டுப் பிரதேசத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினை அமைத்து அதனை சூழ மக்களை குடியேற்றுமாறு உத்தரவிட்டிருந்தாக அக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரச அதிகாரிகளின் உத்தரவிற்கமைய அப்பிரதேசத்தில் தாம் குடியேறிய போதிலும், குடிநீர் வசதிகளோ ஏனைய போக்குவரத்து வசதிகளோ இன்றி தாம் வாழ்ந்ததாகவும், 6 குழாய் கிணறுகள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றில் 1 கிணற்று நீரை மாத்திரமே குடிப்பதற்கு பயன்படுத்த முடியும் எனவும், ஏனையவை குடிநீருக்கு உகந்தது இன்மையால் நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீர் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளதால் கிராம மக்கள் குடிநீருக்கு பெரும் அல்லல்படும் நிலை இன்றும் காணப்பட்டு வருகின்றது.3 2 வாழ்வதற்கேற்ற வசதிகள் இன்மையால் வெளியேறும் கப்பாச்சி கிராம மக்கள்-கோ, ரூபகாந்தன்

இந் நிலையில் திறந்த கிணறுகளை அமைப்பதென்பது எட்டாக்கனியாகியுள்ள இக் கிராமத்தில், சுமார் 150 அடி ஆழமான ஒரு கிணறு வெட்டப்பட்டுள்ள போதிலும் அதிலும் கோடை காலத்தில் நீர் இன்றியே காணப்படும் என்கின்றனர் ஊர்வாசிகள். இது மாத்திரமின்றி குளக்கட்டினை மாத்திரம் பிரதான வீதியாக கொண்டமைந்த இக் கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் ஏதுமின்மையால், பொது மக்கள் சுமார் 3 கிலோ மீற்றர்கள் நடந்தும் துவிச்சக்கர வண்டிகளிலுமே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இருந்த போதிலும் பாடசாலை மாணவர்கள் பலர் துவிச்சக்கர வண்டிகள் இன்மையால் சுமார் 35 மாணவர்கள் நடைபவனியாகவே வெயிலிலும் மழையிலும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறான நிலையில் இக் கிராம மக்களின் உயிரை காவு கொள்ளும் வகையில் யானைகளின் நடமாட்டமும் தற்போது கிராமத்திற்குள் காணப்படுதுடன், மின் கம்பங்களை உடைப்பதும் வீடுகளின் சுவர்களை தள்ளுவதுமாக யானைகள் அட்டசகாசம் புரிவதனால்   இக் கிராமத்தில் மக்கள் வாழ முடியாதுள்ளதாகவும்  கிராம மக்கள் தெரிவிக்கின்றர்.

இந் நிலையில் இக் கிராமத்தில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு முக்கிய காரணியாக இருந்த பல நோக்கு கூட்டறவுச் சங்கம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு விட்டமையினால் பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடம் பாழடைந்து கவனிப்பாரற்று காணப்படுவதுடன் கிராம மக்களும் தமது அன்றாட பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கப்பாச்சி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள முதலியார்குளம் கிராமத்திற்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.4 வாழ்வதற்கேற்ற வசதிகள் இன்மையால் வெளியேறும் கப்பாச்சி கிராம மக்கள்-கோ, ரூபகாந்தன்

இதேவேளை இக் கிராமத்திற்கு கிராம சேவகரோ சமுர்த்தி உத்தியோகத்தரோ வராமையினால் தமது நிலைமைகளை அரச அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவதற்கு கூட எவரும் அற்ற மக்களாக தாம் உள்ளதாக ஆதங்கத்தை வெளியிடும் இக் கிராம மக்கள், தமது கிராமத்தில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் வெளியேறி வருவதனால் பல வீடுகள் தற்போது பற்றைகள் மூடி காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே தமது கிராமத்தை அழிவில் இருந்து காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் கப்பாச்சி கிராம மக்கள்.

 

வெலிகந்தை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு

கொரோனா விசேட சிகிச்சை பிரிவொன்று வெலிகந்தை வைத்தியசாலையில் நிறுவப்பட்டது.

இதன் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு, சிகிச்சை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் குறித்த பிரிவில் நிறுவப்ப்படுவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில், இட வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படுமாயின், தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சை வழங்குவதற்காக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் விசேட பிரிவு நிறுவப்படுகின்றது.

வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் கூட்டமைப்பின் வேட்பாளர்களான செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், வினோநோகராத லிங்கம், செ.மயூரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் வவுனியா மாவட்டசெயலகத்திற்கு வருகைதந்திருந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
a3 வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்

a2 வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்

a வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்

கைதிகளை இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள கைதிகளை நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது என சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இருவாரங்களுக்கு பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என சிறைச்சாலை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நாளை முதல் இரு வாரங்களுக்கு சிறைகளில் உள்ள கைதிகளை பார்வையிட பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளது

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நாளை முதல் வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் பார்வையாளர்கள் எவரும் சிறைச்சாலைக்கு வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு

இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான விசாகளுக்கான கால எல்லை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 2020 மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல் 30 தினங்களுக்கு அனைத்து வகையான விசாக்களில் கால எல்லையும் நீடிக்கபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாட்டினுள் பரவிவரும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற மூவர் கைது.

இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதியில் இலங்கை செல்லும் திட்டத்துடன் இலங்கை சேர்ந்த 3 பேர் தங்கியிருப்பதாக தமிழக கடலோர காவல் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலயடுத்து ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நடத்திய சோதனையில் 3 இலங்கை அகதிகள் பிடிபட்டனர்.

விசாரணையில், இலங்கை, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வரசுனன் (30), யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த அருள் வசந்தன் (42) வவுனியா மாவட்டதை சேர்ந்த மயூரான் (28) ஆகிய மூவரும் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு அகதிகள் முகாம்களில் வசித்து வந்தாகவும், தனுஸ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கள்ளதோணியில் இலங்கைக்கு தப்பி செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த தமிழக கடலோர காவல் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் காவல் துறையினர் விசாரணையின் போது தாங்கள் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தங்களது உயிர்களை காப்பாற்றி தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும் தற்போது இலங்கையில் பிரச்சினை இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தங்களது உறவினர்கள் கூறியதையடுத்து இலங்கைக்கு சட்டவிரோதமாக திரும்பி செல்ல ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து இலங்கை அழைத்து செல்ல இலங்கை மன்னாரை சேர்ந்த நந்தா என்பவரிடம் தலா 1 லட்சம் என 3 லட்சம் ரூபாய் இலங்கை பணம் பிடிபட்டவர்களின் உறவினர்கள் கொடுத்துள்ளதாகவும் தனுஸ்கோடி பகுதியை சேர்ந்த ஏஜென்ட் சதீஸ் என்பவர் தனுஸ்கோடியில் இருந்து படகில் அனுப்பி வைக்க ராமேஸ்வரம் வர சொன்னதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், சமீப காலமாக தனுஸ்கோடி கடல் பகுதியில் இருந்து கஞ்சாவும் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளும் கடத்தப்பட்டு வருகிறது. எனவே பிடிபட்ட மூன்று பேரும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக ராமேஸ்வரம் வந்தனாரா என்ற கோணத்தில் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர்களிடமிருந்து இந்திய பணம் மற்றும் பாஸ்போர்ட் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கி கணக்கு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலை அரசு ஒத்திவைக்க வேண்டும்; கபே அமைப்பு கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலைப் பிற்போடுமாறு கபே அமைப்பு (சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்)தேர்தல் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கபே அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: –

”தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச சூழ்நிலையில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். இந்நிலையில் தேர்தலை நடத்துவதென்பது அசாதாரண நிலைமையாகும். குறிப்பாக வேட்பு மனு தாக்கல் செய்யும்போது ஏற்படக்கூடிய விடயங்கள் மற்றும் அதன்பின்னர் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு சிக்கல்கள் காணப்படுகின்றமையினால் தேர்தல் நடவடிக்கைகளை பிற்போடுவது அவசியமாகும்ஃ

மேலும் நிர்வாக சேவைகள் சிலவற்றை மாத்திரம் திறந்து தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாகும். சிலநாடுகளில் நடைபெறக்கூடிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கூட பிற்போடுகின்ற நிலையில் இலங்கையில் தேர்தலை பிற்போடுவது குறித்து அரசாங்கம் எந்ததொரு அறிவிப்பையும் இதுவரை விடுக்கவில்லை.

மேலும் தேர்தலுக்கு முன்னர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தான் தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானதொன்றாக காணப்படுகின்றமையினால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

புத்தளம் பகுதியில் 60 குடும்பங்கள் வீட்டுக்காவலில்! இத்தாலியிலிருந்து வந்தவா்களாம்

இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்து, புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் உள்ளிட்ட 60 குடும்பங்கள், சுகாதாரச் சேவை அதிகாரிகளால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற முடியாத வகையில், நீதிமன்ற ஆணை பெறப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார தெரிவித்தார்.

இந்த நபர்கள், சுகாதாரச் சேவை அதிகாரிகளின் ஆலோசனைகளை புறக்கணித்துச் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்துள்ளனர். இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வந்த 800க்கும் அதிகமானவர்கள், வென்னப்புவ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தங்கியுள்ளனர்.

இவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளார். இவர்களில் பலர், புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில், பல விருந்துபசாரங்களையும் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருவதாக சுகாதாரச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

வெளிநாட்டு பயணிகள் இலங்கையில் நுழைவதற்கு அனுமதி மறுப்பு

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கையினுள் உள்நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலிற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 28பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 15 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 204பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.