Home Blog Page 2348

அனுமதிப்பத்திரங்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விதிகளை மீறிவோர் தொடர்பில் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இன மற்றும் மத பேதங்களை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தரப்பினருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாளை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்..!

நாடுமுழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம், 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், குறித்த மாவட்டங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொரோனா அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தாவடியில் மேலும் மூவருக்கு கொரோனா சந்தேகம் .

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் 18 பேருக்கு கொரோனா சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட இரத் மாதிரிகள் அநுராதபுரத்திற்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது.

அதன் முடிவுகள் சனிக்கிழமை இரவு வெளியிடப்படும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த 18 பேரில் மூவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இன்று இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டால் யாழில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கும்.

ஏனைய 15 பேருக்கும் தொற்று இல்லை என்றும், இதில் தொற்று இருப்பதாக கூறப்பட்ட மூவரும் இதற்கான சிகிச்சைப் பிரிவுக்கு செல்வார்கள் எனவும் கூறப்படுகின்றது.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 64,650 ஆக அதிகரிப்பு

உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயிற்கு இதுவரையில் 64,650பேர் பலியாகியுள்ளதுடன், 1,199,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 246,166 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்

இத்தாலி – 15,362

ஸ்பெயின் – 11,947

அமெரிக்கா – 8,441

பிரித்தானியா – 4,313

பிரான்ஸ் – 7,560

சீனா – 3,326

ஈரன் – 3,452

நெதர்லாந்து – 1,651

ஜேர்மனி – 1,444

பெல்ஜியம் – 1,283

சுவிற்சலாந்து – 666

துருக்கி – 501

பிரேசில் – 445

கனடா – 231

பிரான்சில் தாக்குதல்;இருவர் சாவு 7 பேர் காயம்

தென்கிழக்கு பிரெஞ்சு நகரமான ரோமன்ஸ்-சுர்-இசேரே ( Romans-sur-Isere) நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கத்தியைக்கொண்டு தனிநபர் ஒருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த நபர் சூடான்நாட்டைச் சேர்ந்தவர்  என அறியவருகிறது.இதுவரை தாக்குதலுக்கான காரணம் அறியப்படவில்லை.

கொரோனா பரிசோதனை எலிகளாக ஆபிரிக்கர்கள்;பிரான்ஸ் வைத்தியர்களின் இனவெறி பரிந்துரை

வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளவேண்டுமென பிரெஞ்சு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளமை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்ற போது அவர்கள் தெரிவித்த இந்த பரிந்துரையானது ஒரு இனவெறி கருத்தாக கொள்ளப்படுகிறது.

கொரோன வைரஸுக்கான தடுப்பூசி முதலில் ஆப்பிரிக்காவில் உள்ளவர்களுக்கு பரிசோதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்ததற்காக இரண்டு பிரெஞ்சு மருத்துவர்கள் இனவெறி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

பிரெஞ்சு எல்.சி.ஐ. தொலைக்காட்சியில் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தொடங்கப்படவுள்ள கோவிட் -19 சோதனைகள் குறித்தும்,அங்கு பரிசோதிக்கப்படும் பி.சி.ஜி காசநோய் தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுமா என்பது குறித்தும் பேசப்பட்டது.

‘இது பலருக்கு ஆத்திரத்தை உண்டாக்குவதாக அமையலாம். முகமூடிகள் இல்லாத, சிகிச்சையோ அல்லது தீவிர சிகிச்சையோ இல்லாத ஆபிரிக்காவில் முன்னராக விபச்சாரிகளிடையே மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் பரிசோதனைகள் போன்றே நாங்கள் இந்த விடயங்களை செய்ய முயல்கிறோம்’

என பாரிஸில் உள்ள கொச்சின் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் ஜீன்-பால் மீரா

இந்த கருத்தை ஆமோத்தித்த பிரான்சின் தேசிய சுகாதார நிறுவனமான இன்செர்மின் ஆராய்ச்சி இயக்குனர் காமில் லோச்ட்

“நீங்கள் சொல்வது சரிதான். அதே அணுகுமுறையைப் பயன்படுத்தி அதற்கிணையாக ஆப்பிரிக்காவில் ஒரு ஆய்வு மேற்கொள்வது பற்றி நாம் சிந்திக்கிறோம்.” என்று தனது பங்கிற்கு கூறினார்.

இந்த கருத்து பலவேறு தரப்புகளால் கண்டிக்கப்பட்டு வருகிறது.

“ஆப்பிரிக்கா ஒரு சோதனை க் கூடமல்ல அல்ல” “இழிவான, பொய்யான மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஆழ்ந்த இனவெறி வார்த்தைகளை நான் தெளிவாகக் கண்டிக்க விரும்புகிறேன்.”என்று கால்பந்து வீரர் டிடியர் ட்ரோக்பா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஆத்திரமூட்டல் அல்ல, இது வெளிப்படையான இனவாதம்
ஆப்பிரிக்கா ஐரோப்பாவின் பரிசோதனைக்கூடமல்ல அல்ல. ஆப்பிரிக்கர்கள் எலிகள் அல்ல!”என பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஒலிவர் கூறினார்.

பிரான்சின் SOS இனவெறி எதிர்ப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில்

“ஆப்பிரிக்கர்கள் கினிப் பன்றிகள் அல்ல”, இங்கு எய்ட்ஸ் மற்றும் விபச்சாரிகளை ஒப்பிடுவது “சிக்கலானது” மற்றும் “விரும்பத்தகாதது”
எனக்கூறப்பட்டுள்ளது.

இவர்களது இந்த கருத்துக்கள் பிரான்சினது காலனித்துவ,இனவெறி மனோபாவத்தின் இன்னும் நீடித்திருக்கும் எச்சமாகவே கருதவேண்டியுள்ளது என்கிறார்கள் நோக்கர்கள்.

துருக்கி அரசுக்கு எதிராக பட்டினிப் போரட்டம் மேற்கொண்டவர் மரணம்

துருக்கியை சேர்ந்த 28 வயதான இளம் கலைஞர் ஹெலன் போலக் துருக்கிய அரசுக்கு எதிராக கடந்த 288 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணா நோன்பு பேராட்டத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (03) உயிரிழந்துள்ளார்.

அவர்களின் இசைக் குழுவுக்கு எதிராக துருக்கி அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு எதிராகவே ஹெலனும் அவரது நண்பரும் அரசுக்கு எதிராக பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வந்திருந்தனர்.

கொரோனா தடுப்பு மருந்தை பணக்கார நாடுகள் பதுக்கி வைக்கும்

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் 44 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் மூலக்கூறு மரபியலாளர் கேட் ப்ரோடெரிக் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள உயிரி தொழில்நுட்ப நிறுவனமான இன்னோவியோவில் மருத்துவர் கேட் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.

இந்நிறுவனம் டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த 10 லட்சம் டோஸ்களை எங்கு யார் பெற்றுக்கொள்வார்கள் யாருக்குக் கிடைக்கும்.

மருத்துவர் கேட்டின் சகோதரி பிரிட்டனில் செவிலியராக பணிபுரிகிறார். ”எனது சகோதரி தினமும் கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் போராடி வருகிறார். அவர்கள் அனைவருக்கும் எப்படித் தடுப்பு மருந்துகளை அனுப்ப முடியும். இந்த தடுப்பு மருந்து இப்போதே தயாராக வேண்டும்” என்கிறார் கேட்.

ஆனால் இன்னோவியோ போன்ற நிறுவனம் உருவாக்கும் தீர்வுகளைப் பணக்கார நாடுகளால் “யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைக்கும்,” வாய்ப்புள்ளது என்ற கவலைகள் உள்ளன. அப்படி கவலையை வெளிப்படுத்தும் குரல்களில் ஒன்று தொற்று நோயியல் நிபுணர் சேத் பெர்க்லி என்பவரின் குரல்.

தடுப்பு மருந்து கிடைப்பதில் பாரபட்சமான இடைவெளி தோன்ற வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.

உலகின் 73 ஏழ்மையான நாடுகளில் நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் உலகளாவிய சுகாதார கூட்டமைப்பான ‘வேக்சின் அலையன்ஸ்’ (Gavi) என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அவர். உலக சுகாதார நிறுவனம் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒன்று.

இவ்வாறான நெருக்கடி நிலையில் “செல்வந்த நாடுகளில் தடுப்பு மருந்து அவசியம் தேவைப்படும் மக்களுக்கு மட்டுமல்லாமல் ஏழை நாடுகளில் தடுப்பு மருந்து தேவைப்படுபவர்களுக்கும் போதுமான எண்ணிக்கையில் இவை சென்று சேருவதை உறுதி செய்வதே சவால்” என்று பெர்க்லி பிபிசியிடம் கூறினார்.

ஜெர்மன் பயோடெக்னாலஜி நிறுவனமான க்யூர்வாக் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தை ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நாட்டு மக்களுக்காக மட்டும் பிரத்தியேகமாகப் பெற முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்ததாக ஜெர்மன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி-பிபிசி

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிட அமைதி வணக்கம்

வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் 3 நிமிட அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கொரோனா தொற்றால் சீனாவில் 3,300 பேர் பலியாகினர். அவர்களின் நினைவு தினத்தை இன்று அனுசரித்த சீனாவில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில், நாட்டு மக்கள் அனைவரும் 3 நிமிட அமைதி வணக்கம் செலுத்தினர்.

பின்னர் கார், ரயில்கள், கப்பல்கள் ஆகியவற்றிலிருந்து ஒலி எழுப்பப்பட்டது. நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பரக்கவிடப்பட்டது.

வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய வுஹான் நகரத்தில் போக்குவரத்து விளக்குகள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் எறியவிடப்பட்டது, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

சுகாதார அவசர நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக நம்பும் சீனா, கடந்த சில வாரங்களில், பயணக் கட்டுப்பாடுகள், மற்றும் சமூக விலகலுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது. சனிக்கிழமையன்று சீனாவில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் 18 பேர் வெளிநாட்டவர்கள்.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 59,206 ஆக அதிகரிப்பு

உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயிற்கு இதுவரையில் 59,206 பேர் பலியாகியுள்ளதுடன், 1,118,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 229,153 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்

இத்தாலி – 14,681

ஸ்பெயின் – 11,198

அமெரிக்கா – 7,402

பிரித்தானியா – 3,605

பிரான்ஸ் – 6,507

சீனா – 3,326

ஈரன் – 3,294

நெதர்லாந்து – 1,487

ஜேர்மனி – 1,275

பெல்ஜியம் – 1,143

சுவிற்சலாந்து – 591

துருக்கி – 425

பிரேசில் – 365

கனடா – 208

தென்னாபிரிக்கா – 177

ஓஸ்ரியா – 168

இந்தியா – 86

பாகிஸ்தான் – 40

இஸ்ரேல் – 40

ரஸ்யா – 34