Home Blog Page 2345

அழிவைநோக்கி கிளிநொச்சி;சமூக அக்கறைகொண்டோர் யாருமில்லையா? -சுடர்

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மனிதர்களுக்கிடையேயான இடைவெளி முறையாக பின்பற்றப்படுவது மிக அவசியமெனஅறிவியலாளர்கள்,மருத்துவராகள், அரசுகள் கூறிவரும் நிலையில் இன்று ஊடரங்கு தளர்வின் போது கிளிநொச்சி நகரில் நாம் கண்ட காட்சி மிக்க கவலையளிப்பதாக உள்ளது.

கொடிய போரொன்றின் மைத்துள் பலகாலம் வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து,உடமைகளை இழந்து இன்னும் நிமிரமுடியாமல் தவிக்கும் ஒரு சமூகம் தமது சுயபத்துகாப்பை முற்றக்கப் புறந்தள்ளி பெரும் கூட்டமாக
பொருள் கொள்வனவில் ஈடுபட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி நிற்கிறது.

தமிழீழ நடைமுறையரசில் பிரமிக்கத்தக்க வகையில் ‘தமிழீழ சுகாதார சேவைகள்’ செயலாற்றிய அந்த நாட்கள் கண்முன் விரிகின்றன.

குறைவான வளங்களுடன் எந்த தொற்றுநோய்யும் அங்கு பரவிவிடாவண்ணம் அன்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இலங்கைத்தீவு முழுவதும் சிக்குன்குனியா (Chikungunya) பரவி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியபோது வன்னிநிலப்பரப்பு எந்தவித நோய்த்தொற்றுமின்றி காக்கப்பட்டது.kkk அழிவைநோக்கி கிளிநொச்சி;சமூக அக்கறைகொண்டோர் யாருமில்லையா? -சுடர்

போராளிகள்,தமிழீழ காவல் துறையினர், வைத்தியர்கள்,சுகாதார பணியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து
மக்கள் நலனில் அக்கறைகொண்டு செயற்பட்டதால் எந்த தொற்று நோயையும் அன்று வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது.

ஆனால் இன்றோ நிலைமைகள் தலைகீழாக உள்ளது.

இன்று ‘சமூக இடைவெளி பேணல்’ என்பதை புறந்தள்ளி மக்கள் நடந்துகொண்டுள்ளனர்.அதற்கு பலவாறான காரணங்கள் கூறப்படலாம்.ஆனாலும் இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டியவைகளே

மக்கள் இவ்வாறு நடந்துகொள்வதை தடுத்து உரிய வழிகாட்டல்களை வழங்க அங்கு யாரும் இல்லையா? மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையினர்,காவல் துறையினர் மாவட்ட மட்ட அரசாங்க நிருவாக அலுவலர்கள் ,சமூக ஆர்வலர்கள் எவருக்கும் இந்த மனிதர்களின் உயிர்களில் அக்கறையில்லையா?

ஊரடங்கு தளர்வின்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதால் இலங்கையில் மற்றைய இடங்களில் எல்லாம் காவல்துறை ஈடுபடுத்தப்பட்டிருந்ததே, ஏன் இங்கு அவ்வாறு எதுமே இடம்பெறவில்லை.

ஏற்கனவே தனது இருப்பை சிறிது சிறிதாக இழந்துகொண்டிருக்கும் தமிழ் சமூகம்,இந்த கொரோனா நோயாலும் மேலும் அழியவேண்டுமா?

இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க
அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள்,குறிப்பாக எமது இளையோர்
நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கவேண்டும்.

மீண்டும் ஊரடங்கு;வெறிச்சோடிய வீதிகள்

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் வெறிச்சோடி காணப்படுகின்றது.

எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக் கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.IMG 5033 மீண்டும் ஊரடங்கு;வெறிச்சோடிய வீதிகள்

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈழத்தமிழர் மனிதஉரிமைகளுக்கு அனைத்துலகப் பொறி முறை உடன்தேவை

உலகம்  கொரோனோ வைரசின் தாக்கத்தால் தனது சமுக பொருளாதார அரசியல் நடைமுறைகளைச் செயற்படுத்த இயலாதுள்ள மனிதகுலத்தின் மிகமிக அவலமான இந்தக்காலகட்த்தில், அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் மனிதத்துவத்தைக் காக்கும் பெருமுயற்சியில் உலக நாடுகள் அனைத்துமே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த மனிதகுலத்தின் இக்கட்டான நிலையையும் கூடத் தங்கள் அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்தும் கேவலத்தைச்; சிறிலங்கா தொடரட்கிறது. மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுத்தமிழரை,அவர்கள் இனஅழிப்புச் செய்யப்படுவதற்கான சிறு தடயம் கூட இருக்கக் கூடாதென்பதற்காகச் சத்தமின்றி அவர்களைக் கொல்லவேண்டும் என்ற பொறிமுறையாக, அவர்களின் கழுத்தில் படுகாயத்தை ஏற்படுத்தி அந்த அதிர்ச்சியினாலும் இரத்தப்பெருக்கினாலும் அவர்களைக் கொன்றழித்த கொடூரமான இனக்கொலையைச் செய்தவர் எனச், சிறிலங்காவின் நீதிமன்றமே மரணதண்டனை விதித்து அதனைச் சிறிலங்காவின் உயர்நீதிமன்றமே மீள் உறுதி செய்தவரான, சிறிலங்காப் படையினனான சுனில் ரத்தநாயக்காவை, அந்தப்போர்க்குற்றங்கள் நடத்த காலத்தில் சிறிலங்காப் படைகளுக்குக் கட்டளையிடும் நிலையில் இருந்த இன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சா, ‘ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு’ என்ற பெயரில் விடுதலை செய்துள்ளார்.

சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் ரத்தநாயக்காவின் தீர்ப்பை உறுதிசெய்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி தன்னளவில் குற்றமனோநிலையில் இருந்து எந்தவித சீர்திருத்தத்தையும் பெறுவதற்கான சந்தர்ப்பமே இடம்பெறுவதற்குக் காலஅவகாசமே இல்லாத நிலையில், அந்தக் குற்றவாளிக்கு இன்றைய ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதி என்ற அப்பட்டமான அரசியல் செயற்பாடாக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு என்பது கருணையின் அடிப்படையில் அல்ல போர்க்குற்றவாளிகள் கதாநாயகர்களாகச் சிங்கள பௌத்த அரசியல் தலைமைகளால் போற்றப்படுவார்கள் என்ற சிங்களபௌத்த மேலாண்மை அரசியல் கோட்பாட்டினை உறுதிப்படுத்தும் செயலாக இடம்பெற்றுள்ளது.

இது ஈழத் தமிழ் மக்களை இன்றும் இனம்காணக்கூடிய அச்சத்துடன் சிறிலங்கா அரசாங்கம் வாழவைத்துää அவர்களின் அரசியல் பணிவைப் பெறுகிறது என்ற உண்மையை உலகுக்கு மீண்டும் தெளிவாக நிரூபித்துள்ளது. சிறிலங்கா அரசத்தலைவர் சர்வாதிகாரத்தனமான முறையில் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியமை என்பது,ஈழத் தமிழ் மக்கள் தங்களின் உள்ளகசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தற்போது உள்ள சிறிலங்கா அரசாங்கத்திடம் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய எந்த வளர்ச்சிகளையும் பெற இயலாது என்பதையும் மீளவும் உலகிற்குத் தெளிவாக்கியுள்ளது.

அத்துடன் ஈழத் தமிழ்மக்கள் தங்களின் வெளியகசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உலக நாடுகளிடமும் அனைத்துலக அமைப்புக்களிடமும் தங்களுக்கான பாதுகாப்புடன் கூடிய அமைதியான வளர்ச்சியைத் தாங்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என விடுத்து வரும் அவர்களின் வெளியகச் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை உலக நாடுகளும் அமைப்புக்களும் உடனடியாகக் கவனத்தில் எடுக்கவேண்டிய தேவையையும் வெளிச்ச மிட்டுக்காட்டியுள்ளது. சிறிலங்காவின் இன்றைய நடைமுறைகள் சிறிலங்காவுக்கு உள்ளகப் பொறிமுறை மூலம் ஈழத்தமிழர்களுக்கான மனிதஉரிமையையோ நீதியையோ வழங்குவதற்கான எண்ணம் கூட இல்லை என்பதை உலகுக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

இதனாலேயே உலகின் முக்கிய நாடுகளும் அமைப்புக்களும் ஊடகங்களும் இச்செயல்கள் குறித்த பலத்த கண்டனத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

எனவே சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைகள் ஈழத்தமிழரின் மனித உரிமைகளை மீள்விக்கும் நடைமுறையாகாது என்பதனால் அனைத்துலகப் பொறிமுறைகள் உடன் தொடங்கப்பட வேண்டும்.

இல்லையேல் உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் முன்னுதாரணங்களாகச் சிறிலங்காவின் செயல்கள் தொடரும். இந்த உண்மைகளை விளக்கிப் புலம்பெயர் தமிழர்கள் கொரோனோ அவலங்களுக்கு மத்தியிலும், அனைத்துலகப் பொறிமுறைகள் உரிய காலத்தில் தொடங்கப்படுவதற்காக உழைக்க வேண்டிய நேரமிது.

-இலக்கு மின்னிதழ்-

மட்டுநகரில் பொருள் கொள்வனவில் பெருமளவான மக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00மணி தொடக்கம் பிற்பகல் 2.00மணி வரையில் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் பெருமளவான பொதுமக்கள் இன்று காலைமுதல் பொருள் கொள்வனவில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் பல்பொருள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று பொருட்களை கொள்வனவு செய்ததை காணமுடிந்தது.IMG 4764 மட்டுநகரில் பொருள் கொள்வனவில் பெருமளவான மக்கள்

குறிப்பாக இன்றைய தினம் மக்கள் சமூக இடைவெளியை பேணிய வகையில் நின்று பொருட்கள் கொள்வனவுசெய்வதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாநகரசபை பகுதியில் மட்டக்களப்பு பொதுச்சந்தை மூடப்பட்டு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பொதுச்சந்தை வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம்,ஊரணி பூங்கா,சின்ன ஊறணி பாடசாலை விளையாட்டு மைதானம்,சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானம் ஆகியன பொதுச்சந்தைகளாக ஒதுக்கப்பட்டுள்ளது.IMG 4815 மட்டுநகரில் பொருள் கொள்வனவில் பெருமளவான மக்கள்

குறித்த பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளிகளை பேணி பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மட்டுமே திறக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலர் அத்தியாவசியமல்லாத பொருட்கள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் நேரடியாக சென்று குறித்த வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்தார்.IMG 4879 மட்டுநகரில் பொருள் கொள்வனவில் பெருமளவான மக்கள்

இன்றைய தினம் பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வவுனியாவில் இலவசமாக மரக்கறி வினியோகம்!!

வவுனியாவில் ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டிருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வவுனியா நகரிற்கு அதிகமாக வருகைதந்தனர்.

இந்நிலையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றால் மரக்கறிவகைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது.

இதேவளை வங்கிகள்மற்றும்,வவுனியா பொதுவைத்தியசாலைக்கு இன்றயதினம் அதிகளவான பொதுமக்கள் வருகைதந்திருந்தநிலையில் வரிசையில் நின்று தமது சேவைகளை பூர்த்திசெய்திருந்தமை குறிப்பிடதக்கது.

254 வவுனியாவில் இலவசமாக மரக்கறி வினியோகம்!!

viber image 2020 04 05 23 44 42 வவுனியாவில் இலவசமாக மரக்கறி வினியோகம்!!

viber image 2020 04 05 23 44 43 1 வவுனியாவில் இலவசமாக மரக்கறி வினியோகம்!!

viber image 2020 04 05 23 44 57 வவுனியாவில் இலவசமாக மரக்கறி வினியோகம்!!

யாழ் கமநல சேவைத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 4 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி விசேட செயலணிக்குழு மற்றும் மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிப்பின் பேரில் கமநல அபிவிருத்தித் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

அதன்படி யாழ்மாவட்டத்தில் முதற்கட்டமாக 7500 வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்ய யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ் வேலைத்திட்டத்தின் கீழ் 0.25g கத்தரி, 0.25g மிளகாய், 1.67g வெண்டி, 3g பயிற்றை (ஒவ்வொன்றிலும் 25-30 விதைகள் ) மற்றும் 3g அவரை (8-10 விதைகள் )அடங்கிய பொதி ரூபா.20 வீதம் வழங்கப்படும் .எனவே அர்வமுள்ளவர்கள் தங்களது பெயர்,முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை தங்களது பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கமநல சேவைகள் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்து விதைப்பைக்கற்றுக்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இவ்விதைகளுக்கு மேலதிகமாக வேறு விதைகள் மற்றும் நாற்றுக்கள் தேவைப்படின் இயலுமானவரை அவற்றினை வழங்க கமநல சேவைகள் நிலையங்களூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொலைபேசி இலக்கங்கள்.
1. சாவகச்சேரி – 0779231738
2. கைதடி- 0778205566
3. நல்லூர் – 0773446026
4. வேலணை – 0776628336
5. புங்குடுதீவு – 0776578125
6. தொல்புரம் – 0777647477
7. கீரிமலை- 0775841254
8. உடுவில் – 0774135082
9. புத்தூர்- 0703503909
10. உரும்பிராய் – 0779489650
11. புலோலி- 0774004554
12. அம்பன்- 0778075510
13. காரைநகர்- 0779055960
14. சண்டிலிப்பாய்- 0773688410
15. கரவெட்டி – 0779078020
16. மாவட்ட அலுவலகம் – 0703503900

உதவி ஆணையாளர்
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
யாழ்ப்பாணம்

ஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியாவின் நிலவரம்.

கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வவுனியாவில் 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் நகரசபையினால் நகரை அண்டிய பகுதிகளில் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும் அதிகளவான மக்கள் இன்றைய தினம் நகரை நோக்கி வருவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை பொலிஸாரினால் கொரோனா தொற்று நோய் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் மக்களிற்கு வழங்கப்பட்டதோடு விழிப்புனர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன் பல்பொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்ததுடன் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

IMG 20200406 090852 ஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியாவின் நிலவரம்.

IMG 20200406 090721 ஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியாவின் நிலவரம்.

IMG 20200406 091004 ஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியாவின் நிலவரம்.

IMG 20200406 091105 ஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியாவின் நிலவரம்.

IMG 20200406 091117 ஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியாவின் நிலவரம்.

17 ஆம் திகதிக்குள் நாட்டில் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுதியாகலாம்- அனில் ஜாசிங்க

எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் நாட்டில் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுதியாகலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க எமது செய்தி சேவைக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பயண மட்டுப்படுத்தல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றினால் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நோய் அறிகுறி தென்படாத சிறார்களுக்குள் கொரோனா வைரஸ் காணப்படக் கூடும் என சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வைரஸ் தொற்றக் கூடும் என்ற அச்சம் உள்ள பின்னணியில் அது தொடர்பில் சிறார்கள் மற்றும் தாய்மார் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் அரசாங்கம் கூறிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 138 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

அதேநேரம், 33 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வனவிலங்கு பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது காவல் துறை துப்பாக்கி பிரயோகம்.

லுணுகம்வெஹர – வனவிலங்கு பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்த மூவரை கைது செய்வதற்காக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காவற்துறை ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை குறித்த மூன்று பேரும் வனவிலங்கு பூங்காவிற்குள் நுழைந்ததாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

இதற்கமைய வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டின் போது ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் தனமல்வில மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் ஒரு பேர்ள் ஹாபர் தாக்குதல், இரட்டை கோபுர தகர்ப்பு;தயாராகுமாறு அறிவுறுத்தல்

ஜப்பான் படையினர் நடத்திய பேர்ள் ஹார்பர் தாக்குதல், நியூயோக் இரட்டை கோபுரம் தகர்ப்பு ஆகியவற்றின் போது அமெரிக்க மக்கள் சந்தித்த துயர நிலையை மக்கள் இந்த வாரம் சந்திக்கப் போகிறார்கள், மிக,மிக எச்சரிக்கையாக இருங்கள் என்று அமெரிக்காவின் அரசின் தலைமை அறுவைசிகிச்சை நிபுணர் ஜெரோம் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்

உலகம்முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸால் ஒவ்வொரு நாடுகளும் பெரும் அச்சத்தில் இருக்கின்றன. இதில் அமெரிக்கா கரோனா வைரஸின் தாக்குதலுக்கு மோசமான பாதிப்பை நாள்தோறும் சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 3.36 லட்சம் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,616 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள்.

இந்நிலையில் அடுத்துவரும் இரு வாரங்கள் அமெரிக்க மக்களுக்கு மோசமானதாகஇருக்கும் என்பதால் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும், சமூக விலக்கலை கடைபிடிக்க வேண்டும், சுத்கமாக இருக்க வேண்டும் என அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்நிலையில் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் வைஸ் அட்மிரல் மருத்துவர் ஜெரோம் ஆடம்ஸ் நேற்று மக்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்து பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியதாவது:

அமெரிக்க வரலாற்றில் கரோனா வைரஸ் பெருந்தொற்று மிகப்பெரிய இருண்ட சம்பவங்களை உருவாக்கப்போகிறது. இதற்குமுன் அமெரிக்கா இரு மோசமான சம்பவங்களைத்தான் வரலாற்றில் கண்டது.

ஒன்று ஜப்பானிய படையின் பேர்ள் ஹார்பர் தாக்குதல், 2-வது தீவிரவாதிகளின் செப்டம்பர் 11,நியூயார்க் இரட்டை கோபுரம் தாக்குதல். அதன்பின் எதையும் மக்கள் பார்க்கவில்லை.

ஆனால் அடுத்தவாரம் பியரல் ஹார்பர், இரட்டை கோபுரம் தாக்குதலில் மக்கள் அனுபவித்த வேதனைகளைப் போன்று அனுபவிக்கப்போகிறார்கள். மிகமோசமான சம்பவங்கள், அமெரிக்க மக்கள் வாழ்க்கையில் சந்தித்திராத கடினமான சம்பவங்களை எதிர்கொள்ளப்போகிறார்கள்.041720 news jerome adams மீண்டும் ஒரு பேர்ள் ஹாபர் தாக்குதல், இரட்டை கோபுர தகர்ப்பு;தயாராகுமாறு அறிவுறுத்தல்

இந்த சூழலை நம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கரோனா வைரஸ் வளைவு கோட்டை நாம் மட்டப்படுத்த வேண்டுமானால், அனைவரி்ன் பங்களிப்பும் அவசியமானதாகும். 90 சதவீத அமெரிக்கர்கள் தங்கள் பங்களிப்பை செய்து வருகிறார்கள். மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அடுத்த 30 நாட்களுக்கு நாங்கள் அளிக்கும் விதிமுறைகளை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க ஊக்கமளிக்க வேண்டும். அதுதான் இப்போது தேவை, மாநிலங்கள் தங்களுக்குள் என்ன முடியுமோ அதைச்செய்து கொள்ளுங்கள்

இந்த வாரம் நிச்சயம் நமக்கு மோசமான வாரமாக இருக்கும், நமது வாழ்க்கையில் சந்திராத மோசமான அனுபவங்களை சந்திப்போம். வாஷிங்டன், கலிபோர்னியா மோசமான உயிரிழப்பு இருக்கும். இதைத் தவிர்க்க அமெரி்க்கமக்கள் வீ்ட்டுக்குள் இருக்கவேண்டும்.இவ்வாறு ஆடம்ஸ் தெரிவித்தார்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணிப்பின்டி அடுத்து வரும் வாரங்களில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் அமெரிக்க மக்கள் உயிரிழக்கக் கூடும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.