Home Blog Page 2337

மருத்து நீரை வீடுகளிலேயே தயாரித்து புதுவருடத்தை கொண்டாடுங்கள் பிரபாகரக்குருக்கள் தெரிவிப்பு

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இம் முறை புதுவருடக் கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி மருத்து நீரைத் தயாரித்து கோவில்களுக்கு வருவதைத் தவிர்த்து இயன்றவரை பாதுகாப்பான முறையில் உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு மகிழ்வுடன் புதுவருடத்தை கொண்டாடுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 14 ஆம் திகதி கோவில்களுக்கு வருபவர்கள் தங்களுடையதும் சமூகத்தினுடையதும் நலனைக்கருததில் கொண்டு முகக்கவசங்களை அணிவதுடன் கோவில்களில் சமூக இடைவெளியை பின்றபற்றுமாறும் கோரியுள்ளார்.

வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

வவுனியா மாவட்டத்தில் தற்போதும் வீடுவாசல் இல்லாமல் மந்தைகள் வசிக்கும் இடங்கள் போல கொட்டகைகளுக்குள் கைக் குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பங்களும் வாழ்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஊரடங்குச் சட்ட காலகட்டத்தில் கூலிவேலைகள் கூட கரம் கிட்டாமல் அன்றாடம் அரைவயிற்றுக் கஞ்சிக்கே கஸ்டப்படும் நிலையில் வாழ்கின்றனர்.

93264652 3180112822213314 1118586410761191424 n வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

நீங்கள் பார்க்கும் இடம் ஆடுமாடுகள் வசிக்கும் இடமல்ல மனிதன் வசிக்கும் கூடாரம் அதுவும் வவுனியா தவசிகுளம் ஆற்றங்கரை ஓரக் குடியிருப்பிலேயே இந்த இளம் குடும்பம் வசித்து வருகின்றது.

IMG 0698 வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

IMG 0702 வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

IMG 0685 வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.IMG 0679 வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

IMG 0671 வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.

இவ்வாறு வவுனியா மாவட்டத்தில் யேசுபுரம், கிறீஸ்தவகுளம், ஆச்சிபுரம், ஈஸ்வரிபுரம், கப்பாச்சி, வீரபுரம், மரையடித்தகுளம், விளக்குவைத்தகுளம், போன்ற பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட 10 வருடங்கள் கடந்தும் இன்றும் அவலநிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் வாழ்க்கை முறைபற்றி இதுவரைகாலமும் எந்த அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் கவனம் செலுத்தாமல் அசண்டையாக இருப்பது மிக வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரிய விடையம்.

தாயகத்தில் சிலஇடங்களில் மனிதம் வாழ்ந்தாலும் பல இடங்களில் மனிதம் மரணித்து போய்விட்டது.

பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பம்.

இந்த ஆண்டின் இரண்டாம் தவணை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டாம் தவனை இம் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த இந்த திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அmதேபோல் ,பலக்லைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுட்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தினத்தை தங்களது வீடுகளின் இருந்து அனுட்டிக்குமாறு கிறிஸ்தவ மக்களிடம், கிறிஸ்தவ மதகுருமார்கள் கோரியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கிறிஸ்தவ மக்களுக்கும், நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்கும் சவால் நிலை ஏற்பட்டுள்ளதாக பேராயார் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

நாட்டு மக்கள் என்ற ரீதியில் பிரிவினை மற்றும் தவறான புரிந்துணர்வுகளை விடுத்து சிறந்த வாழ்க்கை முறையினை ஏற்படுத்த வேண்டும்.

இந்த முறை உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளை வீட்டில் இருந்தவாரே அனுட்டிக்கவும்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் சகலரினதும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

அதனை முழுமையாக ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே எந்தவொரு மதத்தினை பிற்பற்றுவராக இருப்பினும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்று பட்டு இந்த வைரஸ் தொற்றினை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என பேராயார் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

இதேவேளை, தற்போது கொரோனா வைரஸ் பரவுவதுடன் உலக மக்கள் முகம்கொடுத்துள்ள பாரிய அனர்த்தம் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடும், மக்களும் சவால் மிகுந்த சுகாதார அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினதும் சுகாதார அதிகாரிகளினதும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப வீடுகளில் இருந்து இயேசு கிறிஸ்துவுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்றம் தாக்குதலின் துன்பியல் நினைவுகள், நாட்டு மக்களின் நினைவுகளில் இருந்து நீங்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் இடம்பெறாமல், தாய்நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில், அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் உள்ளதாக, உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு உலகமும் தற்போது வைரஸ் தொற்றினால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டு மக்கள் தேவாலயங்களுக்கு செல்லாமல், வீடுகளிலேயே தங்களின் சமய வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,108 பேர் மரணம்

கோவிட்-19 வைரசின் தற்போதைய மையப்புள்ளியாக காணப்படும் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,108 பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 777 பேர் மரணமடைந்துள்ளனர்.

இருந்தபோதும் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறைந்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது வரையில் அமெரிக்காவில் 18,761 பேர் மரணமடைந்துள்ளதுடன், 503,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் 18,849 பேர் மரணமடைந்துள்ளதுடன், 147,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் கொடுமையிலும், பொருளாதாரத் தடைகள்; இனப் படுகொலைகளுக்குச் சமம்: கியூபா

தங்கள் நாட்டின் மீது 60 ஆண்டுகால பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா இந்த கொரோனா கொடூரத்திலும் நீட்டித்து வருவது கொரோனாவை விடவும் கொடூரமானது என்று கியூபாஅமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது.

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் கொரோனாக்கு 15 பேர் மரணமடைந்துள்ளனர், 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் பொருளாதாரத் தடையினால் தங்கள் நாட்டுக்குத் தேவையான மருத்துவ பொருட்களை வாங்குவதில் கடும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

கியூபா நாட்டு சுகாதார அமைச்சக பன்னாட்டு உறவுகள் இயக்குநர் நெஸ்டர் மரிமோன் கூறும்போது, “அமெரிக்காவின் பொருளாதார-நிதித் தடைகள் மிகவும் நியாயமற்றது, ஒரு நாட்டுக்கு எதிராக இன்னொரு நாடு ஏற்படுத்திய நீண்ட காலத் தடை ஒன்று உண்டு என்றால் அது கியூபாமீதான தடையாகவே இருக்க முடியும்.

சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளடு, எங்கள் நாட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பொருளாதாரத் தடை கொடூரமானது மற்றும் இனப்படுகொலைக்குச் சமமானது.” என்று வேதனை வெளியிட்டுள்ளார்.

முதன் முதலில் கியூபா மீது அக்டோபர் 19, 1960-ல் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. காரணம் அமெரிக்காவின் கச்சா எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்களை கியூபா தேசியமயமாக்கியது. அதிலிருந்து இருநாடுகளுக்கு இடையே கடும் பனிப்போர் இருந்து வருகிறது.

1992- முதல் கியூபாவின் மக்களுக்காக மட்டும் பயன்படும் வகையில் மருந்துகளை அமெரிக்கா அனுமதித்தது. ஆனால் கியூபாவுடன் உறவு வைத்து கொண்டால் அது தங்களை பாதிக்கும் என்று வங்கிகளும் நிறுவனங்களும் அஞ்சி கியூபாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன.

ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தடைகள் இன்னும் இறுகி பிற நாடுகளும் கியூபாவுக்கு பொருட்களை அனுப்ப முடியாதவாறு செய்து விட்டார்.

சமீபமாக சீனாவின் அலிபாபா ஆன்லைன் ஜெயண்ட் நிறுவனம் கியூபாவுக்கு டெஸ்ட் கருவிகள், முகக் கவசங்கள், சுவாசக்கருவிகள் ஆகியவற்றை நன்கொடையாக அளித்தது, ஆனால் அதைக் கொண்டு வர வேண்டிய அமெரிக்க போக்குவரத்து நிறுவனம் அமெரிக்க தடைகளை மீறிவிடுவோம் என்று அஞ்சி அதை சப்ளை செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் கியூபா இந்த பொருட்களை வேறு சந்தைகளிலிருந்து வாங்க நேரிட்டுள்ளதால் விலை இருமடங்கு மும்மடங்கு அதிகமாகியுள்ளது. மேலும் பொருட்களும் தாமதமாக வருகிறது.

இதனால் கியூபாவுக்கு சுமார் 220மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்கிறார் மரிமோன்.

1962 முதல் இந்தத் தடைகளினால் கியூபாவுக்கு சுமார் 3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஒக்ஸ்பாம் அறக்கட்டளை அமெரிக்காவை கடுமையாகத் தாக்கி இந்த தடைகளை உடனடியாக அகற்றுமாறு வலியுறுத்தியுள்ளது.

கோவிட்-19: மருத்துவப் பணிக்கு திரும்பும் ‘மிஸ் இங்கிலாந்து’

தற்போது மிஸ் இங்கிலாந்தாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இந்த நேரத்தில், மருத்துவ பணியை தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்த இருந்த சுவாச நிபுணரான பாஷா முகர்ஜி, தற்போது பிரிட்டன் திரும்பியுள்ளார். அந்நாட்டு சுகாதார சேவையில் இவர் பணியாற்ற இருக்கிறார்.

24 வயதான பாஷா முகர்ஜி, லின்கன்ஷைரில் உள்ள பாஸ்டன் பில்க்ரிம் மருத்துவமனையில் அடுத்த வாரம் தன் பணியைத் தொடங்க உள்ளார்.

தொண்டூழிய பிரசார நோக்கங்களுக்காக ஆசியா முழுவதும் பயணம் செய்துவந்த அவர், இந்தியாவுக்கும் வந்திருந்தார். அடுத்து பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாகியது தெரிய வந்தது. அங்கு மருத்துவ பணியாளர்களின் சுமையை பகிர்ந்த கொள்வதற்காக அவர் பிரட்டன் சென்றார்.

பிரிட்டனில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணிக்கு வருமாறு அந்நாட்டு தேசிய சுகாதார சேவை கேட்டுக்கொண்டுள்ளது.

இளநிலை மருத்துவரான தனக்கு இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க கூடுதல் பயிற்சி மற்றும் கூடுதல் பொறுப்பும் வழங்கப்படும் என்பது பாஷா முகர்ஜிக்கு நன்கு தெரியும்.

கோவிட்-19 நோயாளிகள் இருக்கும் அறைகளுக்கு செல்வதில் உள்ள ஆபத்தும் அவர் அறிந்த ஒன்றே.

ஆனால் அதைப் பற்றி தான் கவலை கொள்ளவில்லை என்று பாஷா கூறுகிறார்.

நன்றி-பிபிசி

யேமனில் போர் நிறுத்தத்தை அறிவித்தது சவுதி கூட்டணி

COVID-19 நோய்த்தொற்றை அடுத்து யேமனில் இரண்டு வார போர் நிறுத்தத்தை சவுதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.

யேமனில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடியும் என சவுதி கூட்டணி அறிக்கை வௌியிட்டுள்ளது.

யேமனுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவரின் அழைப்பிற்கிணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வார கால போர் நிறுத்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார்.

எவ்வாறாயினும், சவுதி தலைமையிலான கூட்டணியின் அறிவிப்பில் தமக்கு முழுமையான ஈடுபாடு இல்லை என ஹவுதி கிளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

யேமனில் கடந்த ஐந்து வருடங்களாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருவதுடன், இதில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாகிறது

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக் கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதுடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களையும் பொது மக்கள் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுவருகின்றனர் இதன் அடிப்படையின் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டத்தின் போது, சிறிலங்கா காவல்துறை அனுமதியுடன் வீதிகளில் பயணிக்கும் அனைவரும் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்நிலையங்களுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தாலும் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தும் உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பதில் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்..

வாகனங்களில் பயணிப்போர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்

உள்வாங்கப்பட்டதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகிய வற்றுக்கு தற்காலிகமாக உடனடியாக மாற்றப்பட்டு வருகின்றன.

நேற்று (10.04.2020) வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகிய வற்றுக்கு உடனடியாக மாற்றப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி கடற்கரை வீதியில் கடற்கரையை அண்டியவாறு அமையப் பெற்றுள்ள காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக உள் வாங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்; இயங்கி வந்த வெளிநோயாளர் பிரிவு, குழந்தை பிரசவ விடுதி, மற்றும் கிளினிக் ஆகிய சேவைகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகிய வற்றுக்கு தற்காலிகமாக மாற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றன. இதற்காக காத்தான்குடி நகர சபை இந்தக் கட்டிடங்களை வழங்கியுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தாhர்.

குருதி சுத்திகரிப்பு பிரிவு, மற்றும் உள நல மருத்துவப்பிரிவு என்பனவு நிருவாக நடவடிக்கையும் தொடர்ந்து காத்தான்குடி வைத்தியசாலைக் கட்டிடத்திலேயே இயங்குமென காத்தான்குடி ஆதார வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர்;, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் வைத்தியர்கள் ஊழியர்கள் நகர சபை ஊழியர்கள் இதனை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.