Home Blog Page 2250

ஆனந்தசங்கரி கனடா தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான கனட தூதுவர் டேவிட் மக்னொன் இன்று(05) தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனடா நாட்டு தூதுவர் டேவிட் மக்னொன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கட்சியின் செயலாளர் இரா.சங்கையா மற்றும் அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பு தொடர்பில் வீ.ஆனந்தங்கரி கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய சந்திப்பில் தமிழ், இஸ்லாமிய சமூகங்களிற்கிடையில் நல்லிணக்கம் காணப்பட வேண்டும் என்பது தொடர்பில் அவர் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

சிறுபாண்மை சமூகங்களிற்கிடையில் இவ்வாறான ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பதை அவர் விரும்புவதாகவும் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் இஸ்லாமிய இனங்களிற்கு இடையில் நல்லிணக்கம், ஒற்றுமை காணப்பட வேண்டும் என அவர் தெரிவித்ததாக வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.

பிரதமர் உருத்திரகுமாரனின் கடிதம் ஸ்டாலினிடம் கையளிப்பு !

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதம், நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு தலைமைதாங்கிய மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூறும் வகையில் அமைந்துள்ள இக்கடித்தில், இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும், இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத்தீவு தொடர்பான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அரசையே மையமாக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், சிறிலங்கா ஆடசியாளர்களுடன் உறவாடித் தமது நலன்களை  அடைந்து கொள்ள
முடியும் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கின்றார்கள். இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிங்கள அரசுக்கு சார்பாக அமைந்து விடுவதற்கு இது வாய்பளிக்கின்றது.

தங்களது தலைமையில் இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் மூலம் இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் செயற்படுவதற்கு தாங்கள் வழிகாட்ட வேண்டும் என தங்களிடம் தோழமையிடன் வேண்டிக் கொள்கின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்ட கணிகளையும் அபகரிக்கின்றது சிறீலங்கா அரசு

மாந்தை – வெள்ளாங்குளம் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட மரமுந்திரிகை காணிகளை சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் கையாடல் செய்ய முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.

இந்தக் காணிகளை போரால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வழங்குவது என எட்டப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெளிவுபடுத்தினார்.

1994இல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், 2008இற்குப் பின்னர் இவை இராணுவத்தினர் வசம் இருந்ததையும் சபையினர் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். குறித்த 275 ஏக்கர் காணியை  போரால் கணவனை இழந்த பெண்கள், மற்றும் முன்னாள் போராளிகளுக்கு பகிர்ந்தளித்துவிட்டு, வன இலாகா திணைக்கள அதிகாரத்தின் கீழ் இருக்கும் காணிகளை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு வழங்குமாறும் கேட்டுள்ளார்.

புதிய கிழக்கு ஆளுநர் நியமனம்

கிழக்கு மாகாணத்தின் புதிய கவர்னராக முன்னாள் தெற்கு முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்விஜயலால் சிறிலங்கா ஜனாதிபதி அவருக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னராக கிழக்குமாகாண ஆளுநராக இருந்து பதவி விலகிய
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புயாவின் இடத்திற்கு இவர் நியமியப்பட்டுள்ளார்.

 

சிவில் பாதுகாப்புப் படையினர்க்கும் ஓய்வூதியம்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் 20வருட சேவையை முடித்த 50 வயதை எட்டிய பெண் உறுப்பினர்களும், 22 வருடகால சேவையை நிறைவு செய்த 50 வயதை எட்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற நிதியமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ கட்டுப்பொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமைக் கட்டிடத்தை நேற்று (04) திறந்து வைத்துப் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2015 தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, 23.04.2015 இற்கு முன்னர் 60 வயதை அடைந்து, விலகிய சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்கு கொடுப்பனவுகளை வழங்கி கௌரவித்தார்.

சிறுபான்மை இன மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைப்பற்றி கலைப்படாத சிறீலங்கா அரசு தனது பாதுகாப்புப்படையினர் மற்றும் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஒவ்வொரு நலனிலும் அக்கறையோடு செயற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

‘இலங்கை இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளது’ – இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? – பிபிசி தமிழ்

இந்து மாமன்றம்

இலங்கையில் நிலைகொண்டுள்ள மதத் தீவிரவாதத்திற்கு மாத்திரமே எதிராக செயற்படுவதாக அகில இலங்கை இந்து சம்மேளனம் தெரிவிக்கின்றது.

முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த சம்மேளனத்தின் தலைவர் நாரா.பி.அருண்காந்த் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கையில் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள், இஸ்லாமியவாத தீவிரவாத செயற்பாடுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான இஸ்லாமியவாத தீவிரவாதத்திற்கு எதிராகவே தாமும் களமிறங்கிய பௌத்த தேரர்களுடன் போராட்டங்களை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.download 'இலங்கை இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளது' - இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? - பிபிசி தமிழ்

பாரம்பரிய முஸ்லிம்களுக்கு தாம் ஒருபோதும் எதிர்ப்பு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சில முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மீது மாத்திரமே தாம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததாக கூறிய அவர், ஆனால் அனைத்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் பதவி விலகியமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மிகவும் ராஜதந்திர ரீதியாக செயற்பட வேண்டிய காலம் இதுவென அருண்காந்த் குறிப்பிடுகின்றார்.

சிலோன் தௌஹித் ஜமாத்

‘ஒரு மனிதனை வாழ வைத்தவன், முழு மனித சமூகத்தையே வாழ வைத்தவனாக கருதப்படுகின்றான், ஒரு மனிதனை கொலை செய்தவன், முழு மனித சமூகத்தையே கொலை செய்தவனாக கருதப்படுகின்றான்.”

இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்-குரான் வசனங்களின் மூலமே உறுதிப்படுத்தப்படுவதாக சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் துணை செயலாளர் எம்.எப்.எம்.ரஷ்மீன் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஒன்று கிடையாது என சுட்டிக்காட்டிய அவர், தீவிரவாதத்திற்கு முழுமையான எதிர்ப்பை கொண்ட மார்க்கமே இஸ்லாம் எனவும் கூறுகின்றார்.

இந்த நிலையில், பேரினவாத பௌத்த பிக்குகளின் பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் தீர்மானங்கள் எட்டப்படுமாக இருந்தால், அது ஜனநாயக நாடு என்ற வகையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பை மீறும் செயற்பாடு என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறான அடிப்படைவாதிகள் கருத்துகளை கேட்டு, செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகம் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என எம்.எப்.எம்.ரஷ்மின் குறிப்பிடுகின்றார்.attack sl 2019 'இலங்கை இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளது' - இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? - பிபிசி தமிழ்

அரசியலமைப்பை தாண்டி, அதிகாரங்களை ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ கைகளில் எடுக்குமாக இருந்தால், அந்த செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதேவேளை, முஸ்லிம்கள் ஒன்றிணைவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தபோதும், முஸ்லிம் சமூகம் அதனை தவறவிட்டதாக எம்.எப்.எம்.ரஷ்மின் கூறுகின்றார்.

அருந்தந்தை சக்திவேல் (கிறிஸ்தவப் பாதிரியார் )

மன்னாரின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்தவர்களினால், இந்துக்களின் அலங்கர வளைவு பலகை சேதமாக்கப்பட்ட விவகாரத்தின் ஊடாகவே, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் சந்தர்ப்பத்தில், இந்து மற்றும் பௌத்த மதவாதிகள் ஒன்றிணைந்து, கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகின்றார்.sakthivel 572x400 'இலங்கை இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளது' - இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? - பிபிசி தமிழ்

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியுடன் தமிழர்களை தமது கைகளுக்குள் கொண்டு வந்து விட்டதாக நம்பும் பெரும்பான்மை சமூகம், தற்போது முஸ்லிம்களை தமது கைகளுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இன்று இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகின்றார்.

பௌத்த பேரினவாத பிக்குகளின் போராட்டங்களினால் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிக்ள பதவி விலகியமையானது, ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தோல்வி என அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகிய பின்னணியில், ஆளுநராக முஸ்லிம் ஒருவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளமையானது, ஒரு காட்டிக் கொடுப்பாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒட்டு மொத்தத்தில் இலங்கையில் தற்போது இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் அனைத்தும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே தாம் கருதுவதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டார்.

சிங்கள பௌத்த பேரினவத்தற்கு எதிராக கருத்துத் தெரிவித்த மூன்று சிங்கள அமைச்சர்களுக்கு தடை

முக்கியமான இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரை இனிமேல் விகாரைகளுக்கு அனுமதிப்பதில்லை என்று தென்னிலங்கையின் பௌத்த சங்கம் ஒன்று தீர்மானித்திருக்கிறது.

கம்பஹா மாவட்ட பௌத்த சங்கமே இந்த தீர்மானத்தை நேற்றிரவு மேற்கொண்டுள்ளது.

இதன்படி அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சதுர சேனாரத்ன ஆகியோரையே கம்பஹா மாவட்டத்தின் எந்தவொரு விகாரை நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லையென மாவட்ட பௌத்த சங்க சபை தீர்மானித்துள்ளது.

குறித்த மூவரும் தமது மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட காரணத்தாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்படி பௌத்த மகா சங்கச் சபை கூறியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு விசாரணைகளை உடன் நிறுத்துமாறு மைத்திரி பணிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்க ள் தொடர்பாக பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளிடம் நடத்தப் பட்டுவரும் விசாரணை விசாரணையை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் கருஜயசூரயவிடமும் ஜனாதிபதி இந்த உத்ரவை விடுத்தார்.

தெரிவுக்குழுவின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாதென ஜனாதிபதி பணித்திருந்த நிலையில் நேற்றையதினமும் அதனை ஒளிபரப்புச்செய்ய தெரிவுக்குழுவினர் முயற்சித்தவேளை அதனை ஜனாதிபதி தடுத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் ஒளிபரப்பு விடயம் குறித்து பேச்சு நடத் தினார்.இதன்போது ஒளிபரப்பை மட்டுமல்ல தெரிவுக்குழு விசாரணைணையே உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்தும் விசாரணையை தொடர்ந்துட மேற்கொண்டால் நாடாளு மன்றையே ஒத்திவைக்கவேண்டிய நிலை ஏற்படலாமென நேற்றுமுன்தினம் பிரதமர் ரணிலை சந்தித்தவேளை ஜனாதிபதி கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணுக்கழிவுகளை புதைக்கும் இடமாக தமிழ்நாடு- கொந்தளிக்கும் மக்கள்

அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க தொழில்நுட்பங்கள் இல்லாத நிலையில், அதை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் ஜூலை 10ந்தேதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் அணுஉலைகள் மூடப்பபட்டு வரும் நிலையில், இந்தியாவில் தற்போது வரை 22 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் 2 அணுஉலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 2அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் மேலும் 20 அணு உலைகள் புதியதாக வரப்போவ தாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் மையம் அமைக்க கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கில், கூடங்குளத்தில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற நீதிமன்றத்தில் கேள்விக்கு, தேசிய அணுமின் கழகம், நாட்டில், அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்றும், `கூடங்குளத்தில் உற்பத்தி யாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போகிறோம்’ என தெரிவித்தது. அத்தீர்ப்பு வெளியான சில மணிநேரங்களில் கர்நாடகா, தங்கள் மாநிலத்தில் அணுக்கழிவுகளை கொட்ட விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை 10ந்தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த இருப்பதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.

இந்த கருத்துக்கேட்பு கூட்டம் ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் இந்த கூட்டம் நடை பெறும் என்றும், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களை கொண்டு வந்து, தமிழகத்தை சுடாகாடாக மாற்றி வரும் மத்தியஅரசு, தற்போது அணுக்கழிவு களை பாதுகாக்கும் மையம் அமைக்க கூடங்குளத்தையே தேர்வு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க புதிய தொழில்நுட்பங்கள் இல்லாமல் உலக நாடுகளே திணறி வரும் நிலையில், இந்தியா கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க முன்வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை நிர்முலமாக்க மத்திய மோடி அரசு முடிவு செய்துள்ளதுபோலும்

இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் – பதியுதீன்

என்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.அதற்காக என்னை பழிவாங்குவதாக தெரிவித்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கோ முஸ்லிம்களின் பொருளாதார நிலையங்களை தாக்கவோ வேண்டாம்.

அத்துடன் நாங்கள் யாருக்கும் பயந்து அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவில்லை.நாட்டுக்காகவே இராஜினாமா செய்தோம்.இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று தேயிலை சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், உலக பயங்கரவாதம் இந்த நாட்டில் புகுந்து இலங்கையிலுள்ள சில முஸ்லிம் இளைஞர்களை அதற்குள் சம்பந்தப்படுத்தி இந்த நாட்டில் நாம் எதிர்பார்க்காத பயங்கரவாதத்தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலுடன் அப்பாவி 22 இலட்சம் முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி வகாபிவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் அழகாக சிங்கள மொழியில் பேசுகின்ற அரசியல்வாதிகள் இந்தப் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் உருவாகியுள்ளனர். முஸ்லிம்களையும் உலமாக்களையும் மிக மோசமான வார்த்தைகளால் பேசுகின்ற செயற்பாட்டினை நாம் பார்க்கின்றோம்.அதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றன.

நாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உணர்வோடுதான் இன்றுவரை முஸ்லிம் சமூகம் உள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத செயலை கண்டித்ததோடு மட்டுமல்லாது அந்த செயலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சொந்தங்களாக,நண்பர்களாக இரத்த உறவுகளாக இருந்தாலும் கூட அவர்களைக் காட்டிக்கொடுக்கும் பணியை முஸ்லிம் சமூகம் செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.