Home Blog Page 106

செம்மணியில் புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் எலும்புக்கூடு

செம்மணி – சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றும் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள், ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட துணியிலான புத்தகப்பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகளில் தற்போது வரை 33 மனித என்புத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங்காணபட்ட மனிதப் புதைகுழியில் நேற்று இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நேற்றுமுன்தினம் வரை நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளில் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்துபோதும், ஆடைகளோ, வேறு பொருள்களோ இனங்காணப்படவில்லை. நேற்று நடத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளில் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த அதேவேளை, என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள் நீலநிற துணி புத்தகப்பை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கங்களில் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப்பையை ஒத்ததாக காணப்பட்டாலும், அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

புதைகுழி அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தின் மண் மாதிரியைப் பரிசோதிப்பதற்கு சட்ட மருத்துவ அதிகாரிகள் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கொழும்பில் இருந்து நேற்று வந்த குழு ஆய்வுக்கான மண் மாதிரிகளைச் சேகரித்தது.

இந்த அகழ்வு நடவடிக்கைகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும், பேராசிரியருமான சோமதேவவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. அகழ்வு நடவடிக்கைகளின் போது சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஆகியோரும் பிரசன்னமாகி வருகின்றனர்.

யாருக்கு சாதகம்? விதுரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் நான்கு நாள் இலங்கைப் பயணம் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்த விஜயத்தின் விளைவுகளை அறிவதற்கு அடுத்த செப்டெம்பர் வரையில் பொறுத்திருக்க வேண்டியுள்ளது.
ஆனால் அவரது விஜயத்தின் போதான செயற்பாடுகளையும், அவரது பிரதிபலிப்புக்கள் சிலவற்றையும் உற்றுநோக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த தரப்புக்களின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு உதவுவதாக இருக்கும். அத்துடன் உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியிருக்கும் சில நிலைப்பாடுகள் முரண்பாடுகளையும் ஏற் படுத்தியிருக்கின்றது.
முதலாவதாக ஒருவிடயத்தினை தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் இலங்கை விஜயமானது இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வமான அழைப்பில் இடம்பெற்றதொன்றாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த இரண்டு அமர்வுகளிலும் உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கை மற் றும் அமர்வு ஆரம்ப உரைகளில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக குறித்துரைக்கப்பட்டிருந்தது.
சுட்டிக்காட்டப்பட்டு கரிசனைகள் வெளிப் படுத்தப்பட்ட அத்தனை விடயங்களையும் ஆட்சி யில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முழுமையாக நிராகரித் திருந்ததோடு ‘தேசிய உள்ளகப் பொறிமுறை’ மட்டுமே அமுலாக்கப்படும் என்றும் வெளிப் படையாக தெரிவித்திருந்தது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரை களையோ யோசனைகளையோ தீர்மானங்களையோ ஏற்றுக்கொண்டதாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.
அவ்வாறான நிலையிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரை நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு உத்தியோக பூர்வ மாக அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது என்றால் நிச்சயமாக அவரை எதிர்கொள்வதற்கான அத்தனை வியூகங்களையும் அது வகுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்தவகையில் பார்க்கின்றபோது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரதிநிதிகளுடான சந்திப்பில் ஐ.நா.உயர்ஸ்தானிகர்வெ ளிப்படுத்தியிருக்கும்  விட யங்கள் அரசாங்கத்துக்கு சாதகமானவையாக அமைந்திருக்கின்றன.
குறிப்பாக, அரசாங்கம் தாம் ஆட்சிக்கு வந்து சொற்ப நாட்களே ஆகின்றன ஆகவே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெ டுப்பதற்கு கால அவகாசம் தேவையாக உள்ளது என்பதை உயர்ஸ்தானிகர் ஏற்றுக் கொண்டிருக் கின்றார்.  அதுமட்டுமன்றி, அனைத்துப் பிரஜை களையும் சமத்துவமாக நடத்துவதும், பொருளாதார ரீதியாக நாடு மீளக் கட்டியெழுப்புவதையே முதன்மை விடயமாகவும் அரசாங்கம் கொண்டிருக்கின்ற ஈடுபாடுகளையும் அவர் வரவேற் றுள்ளார்.
அத்துடன், தேசிய ஒற்றுமை, ஒருமைப் பாட்டு அலுவலகம் , வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு பணியகம் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச கண்துடைப்புக் கட்டமைப்பு அதிகாரிகளை மூடிய அறையில் சந்தித்த உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் அக்கட்டமைப்புக்களின் செயற்பாடுகளை அங்கீகரித்துள்ளார்.
மேலும், அக்கட்டமைப்புக்கள் தொடர்ச்சி யாக செயற்பட வேண்டும் என்பதையும், அக்
கட்டமைப்புக்களின் வினைத்திறனான செயற்பாடு களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மலினப்படுத்தும் உள்நோக்கத்துடன் பொருளாதார நெருக்கடிகளை முன்னிலைப்படுத்தும் அரசாங்கத்தின் நகர்வுக்கு உயர்ஸ்தானிகர் வரவேற்ப ளித்துள்ளமை கவலைக்குரியது.
அதேபோன்று, பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக நிராகரிக்கின்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆட்கள் பற்றி அலு வலகம் மற்றும் இழப்பீட்டு பணிகயம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு அலு
வலகம் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளித்துள் ளமையானதும் துரதிஸ்டவசமானது.
அரசாங்கத்துக்கான பாராட்டும், அவர்களின் தேசிய நல்லிணக்க முயற்சிகளை எடுக்கவுள்ளதாக கூறிய விடயங்களுக்கு வரவேற்பு அளித்ததும், உள்ளகப் பொறிமுறைக் கட்டமைப்புக்களை அங்கீகரித்து அவற்றுக்கு ஒத்துழைப்புக்களை அளிப்பதாக கூறியதும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் பாரதூரமான விடயமாகும்.
அடுத்த செப்டெம்பர் மாத கூட்டத்தொட ரில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக கொண்டுவரவுள்ள புதிய பிரேரணையையும் வெகுவாக மலினப்படுத்தும் செயலாகவே இருக்கும்.
அதுமட்டுமன்றி, உயர்ஸ்தானிகரின் அறிக்கையைக்கூட அவரது கருத்துக்களே வலுவிழக்கச் செய்யும். ஏனென்றால், பொறுப்புக்கூறல் விடயங் களை உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டும் போது, அரசாங்கம் நிச்சயமாக தமது செயற்பாடுகளுக்கு உயர்ஸ்தானிகர் அளித்த வரவேற்பை முன்னி லைப்படுத்தி பதிலளிக்கவே செய்யும்.
தேசிய உள்ளகப் பொறிமுறைகளை முன்னிலைப்படுத்தி அதன் செயற்பாடுகளை நியாயப் படுத்தி அரசாங்கம் தனது பதிலளிப்புக்களை வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இட மில்லை.
அதேநேரம், உயர்ஸ்தானிகர் தனது உத்தி யோக பூர்வமான விஜயத்தின் இறுதி அம்சமாக கொழும்பில் நடத்திய ஊடகவியாலாளர் சந்திப் புக்கு முன்னதாகவே ஜனாதிபதி அநுரகு மாரவைச் சந்தித்திருந்தார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க விடயமாகின்றது. அதன்பின்னர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று தேவை என்பதை வெளிப்படுத்தவில்லை.
அதேநேரம், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் அவரது விஜயத்துக்கு முன்னதாக வும், அவருடனான சந்திப்பின்போதும் பாதிக்கப்பட்ட மக்களாலும், சிவில் அமைப்பின் பிரதி நிதிகளாலும், தமிழ் அரசியல் தலைவர்களாலும் வாய்மூலமாகவும், எழுத்துமூலமாகவும் முன் வைக்கப்பட்டன. ஆனால் அந்த விடயங்கள் பற்றி உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் வாய் திறக்கவே இல்லை. ஒன்றரை தசாப்தமாக பொறுப்புக்கூறலுக்காக போராடிவரும் அனைத்து தரப்புக்களுக்கும் இதுவொரு பெரிய ஏமாற்றமாகும்.
அதேபோன்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கீழ் செயற்படும் இலங்கையில் நடைபெற்ற மீறல்கள் பற்றிய சாட்சியங்களை திரட்டுவதற்காக உருவாக்கப் பட்டுள்ள ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட் டம்’ முக்கியமானது.  அதன் அதிகாரிகளை உள்நாட்டுக்குள் பிரவேசிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப் பதற்கு உயர்ஸ்தானிகர் ஆகக்குறைந்தது வேண்டுகோள்களையோ வலியுறுத்தல்களையோ செய்யவில்லை. இதனால் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் ஆயுட்காலம் எப்படியிருக்கும் என்ற கேள்விகள் வலுவாக எழுந்திருக்கின்றன. ஒருபக்கத்தில் ஐ.நா.வின் நிதி நெருக்கடி குறித்த செயற்றிட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தவுள்ளது.
இதேநேரம், ஐ.நா.உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் செம்மணிக்குச் சென்றமையும் அங்குள்ள மனித புதைகுழியைப் பார்வையிட்டமையும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்து அவர்களின் துயரங்களை நேரடியாக அறிந்துகொண்டமையும் நிம்மதி அளிக்கின்றது. செம்மணிப்போராட்டம் தமிழினத்தின் திரட்சியாக அமைந்திருக்க வேண்டும். துரதிஸ்டவச மாக கட்சி அரசியலும், உட்கட்சி மோதல்களும் உணர்வுரீதியான ‘அணையா விளக்கு’ போரா ட்டத்தின் வீச்சினை குறைத்து விட்டன.
அதேநேரம், உயர்ஸ்தானிகர் முள்ளிவாய்க்காலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப் பட்டபோதும், அவர் அங்கு சென்றிருக்கவில்லை. இருப்பினும் அவர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டமையும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தமையும் ஆறுதல் அளிக்கின்றது.
செம்பணிப் புதைகுழி உட்பட மனிதப்பு தைகுழிகள் சம்பந்தமாக சர்வதேச தரத்துடனான ஆய்வுகளை முன்னெடுத்து உண்மைகளை கண்ட றிய வலியுறுத்தியிருப்பது நிம்மதி அளிக்கின்றது. பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், நீக்கப்படும் வரையில் அச்சட்டத்தின் இடை நிறுத்தம், அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங் களை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப் பாடுகளை நேரடியாக கூறாது விட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்துவதற்கு சர்வதேச தரத்திலான தீர்வுகள் அவசியம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஆழமான அடையாள அரசியல் கலாசாரத்திலிருந்து விடுபடுவதற்கான அரசாங்கத் தின் பேரவாவை கண்டதாக உயர்ஸ்தானிகர் கூறியிருக்கின்றார். ஆனால் அரசாங்கத்துக்குள் ஒழிந்திருக்கும் அடையாள அரசியல் நீக்கத்தின் பின்னால் உள்ள ‘ஒருகட்சி ஒற்றை ஆட்சி’ கோட்பாட்டை அறிந்து கொள்வதற்கு சில காலம் தேவைப்படலாம்.

பிரித்தானியாவில் இருந்து வெளியேறும் செல்வந்தர்கள்!

பிரித்தானியாவில் இருந்து பல பத்தாயிரம் செல்வந்தர்கள் வெளியேறிவருவதாகவும் அது இந்த வருடம் மேலும் அதிகரித்துள் ளதாகவும் தெரிவிக்கப்படுகின் றது.
பிரித்தானியாவில் ஏற்படுத் தப்பட்ட வரி மறுசீரமைப்பு, அரசியல் உறுதியற்ற தன்மையே அதற்
கான காரணம் என பிரித்தா னியாவின் ஊடகம் கடந்த வியாழக் கிழமை(26) தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு 16,500 செல்வந்தவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளனர் என ஹென்லி பிறைவேற் வெல்த் மைக்கிரேசன் நிறுவனம் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியேறும் செல்வந்தர்களில் பலர் சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
பிரித்தானியாவில் முன்னர் இருந்த வரிச் சலுகைகள் செல்வந்தர்களுக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதன் மறுசீரமைப்பு அவர்களைவெளியேற வைத்துள் ளது. 2024 ஆம் ஆண்டும் 10,800 செல்வந்தர்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தனர். 2025 ஆம் ஆண்டு வெளியேறிய செல்வந்தர்களின் முதலீட்டு சொத்து மதிப்பு 90 பில்லியன் டொலர் களாகும்.
சீனாவில் இருந்தும் ரஸ்யாவில் இருந் தும் செல்வந்தர்கள் வெளியேறினாலும், பிரித்தானியாவில் இருந்து வெளியேறுபவர்கள் சீனாவை விட இரண்டு மடங்கு அதிகமமாகவும், ரஸ்யாவை விட 10 மடங்கு அதிகமாகவும் உள்ளனர்.ஒரு மில்லியன் டொலர்களை பணமாக முதலீடு செய்யும் நிலையில் உள்ளவர்கள் செல்வந்தர்கள் என்ற தரவரிசைப்படுத்தப்படு கின்றனர்.

ஐ நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றம்: பா.அரியநேத்திரன்

ஐநா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் இலங்கை வருகையில் தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். செம்மணியில் அவர் நேரில் சென்று பார்த்தபோது அங்கு கூறிய கருத்து தமிழர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தபோதும் மறுநாள் ஜனாதிபதி அநுரவுடனான மறுநாள் சந்திப்பில் அவர் கூறிய கருத்து தமிழர்களுக்கு வேதனையை கொடுத்ததாகவே காணலாம்.
மறக்கப்பட முடியாத ஒரு கடந்த காலம் செம்மணியில் புலப்படுவதால் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளுக்கு அனைத்துலக தடயவியலாளர்களின் பிரசன்னம் தேவையென கடந்த (25/06/2025) செம்மணியில் வைத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் தெரிவித்திருந்தார்.
இது சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களின் உதிரப் பழிசார்ந்த சர்வதேச அழுத்தத்தைக் குறைப்பதற்காக நகர்த்தும் புதிய தந்திரங்களுக்கு ஒரு பாதக செய்தியை வழங்கியுள்ளது. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானகரமான ஒரு நிகழ்ச்சி நிரல் எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சி நிரலை ஜெனிவாவில் இருந்து அகற்ற அநுரகுமார திசாநாயக்கா அரசாங்கம் முயற்சி களை மேற்கொள்கிறது.
\இந்த நிலையில் அகாலமாக குரோதத்துடன் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களின் உடல்கள் அடங்கியுள்ள செம்மணிக்கு சென்று மலர்தூவி அஞ்சலித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர், செம்மணி போல அட்டூழியங்களால் உருவாக்கப்பட்ட இடங்களை தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களேஅகழ்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டமை சிறிலங்கா அரசாங்கங்கள் தொடர்ந்தும் நிராகரித்துவரும் அனைத்துலக விசாரணைப்பொறி முறையின் அவசியத்தையும் எழுப்பியிருந்ததுடன் அவர் கூறிய கருத்து ஓரளவு தமிழர்களுக்கு திருப்தியாகவே தென்பட்டது. ஆனால் (25/06/2025) ல் யாழ்ப்பாணத்தில் இப்படி கூறிய ஐநா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் மறுநாள் (26/06/2025)ல் கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுடனான சந்திப்பின்போது செம்மணியில் கூறிய கருத்துக்கு எதிர்மறையாக அமைந்துள்ளது. அதாவது உள்நாட்டு பொறிமுறையை இலங்கை நிறுவ வேண்டும் எனவும், அது சர்வதேச விதிமுறைகளுடன் ஒத்துப்போகவேண்டும் எனவும் கூறிச்சென்றுள்ளார். சர்வதேச விதிமுறை என்ன என்பதே இலங்கை ஆட்சியாளர்களுக்கு இதுவரை தெரியாது.
செம்மணியில் “அணையாதீபம்” போராட்டத்தி லும், திருகோணமலையில் இடம்பெற்ற கவன ஈர்ப்பிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் கேட்டதெல்லாம் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என்பதே.
மிகவும் கரிசனையாகவும் அமைதியாகவும் தமிழ்மக்களைடைய உணர்வுகளை நேரடியாக செவி மடுத்துவிட்டு அவர் கொழும்பு சென்றார்.
அதேவேளை சகல தமிழ் அமைப்புகள், யாழ் பல்கலைக்கழக மாணவர்அமைப்பு, தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய கட்சிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமிழ் வர்த்தக சங்கங்கள், முன்னாள் போராளிகள், உலகத்தமிழர்கள் எல்லோரினதும் ஒற்றைச்சொல் சர்வதேச விசாரணை அப்படியாக பலரின் கோரிக்கைகளை செவிமடுத்தும் உள் நாட்டு பொறிமுறையை மீண்டும் இலங்கை ஜனாதிபதி அநுரவுக்கு வலியுறுத்தியுள்ளதை பார்த்தால் கடந்த 16, வருடங்களாக அனைத்து இராஜதந்திரிகளும் கூறுவதையே  ஐநா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் இலங்கையில் மூன்று நாட்கள் தங்கி இருந்தும் தமிழர்களின் உணர்வுகளை உதாசீனம் செய்து இலங்கையை மீண்டும் பிணை எடுத்துள்ளார் என்றே எண்ணத்தோன்றுகிறது.
எதிர்வரும் செப்டம்பரில் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைப்பேரவையின் 59, வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விடயம் எந்தளவில் ஈழத்தமிழர்களுக்கு சாதக மாக மாறும் என்பதில் பலத்த சந்தேகம் உண்டு.
16, வருடங்களாக புலம்பெயர் தமிழ் உறவுகள் தொடர்ச்சியாக நடத்தும் கவன ஈர்ப்பு போராட் டங்கள், ஈழத்தமிழர்கள் இலங்கையில் நடத்தும் அனைத்து போராட்டங்கள் எல்லாம் இலங்கை பொறுப்பு கூறவேண்டும் என கேட்கவில்லை, இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை சர்வதேச பொறிமுறை, இனப்படுகொலைக்கான சர்வதே விசாரணைமட்டுமே வேண்டும் என்பதையே வலியுறுத்தி வரும் நிலையில் ஐநா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் உள்நாட்டு பொறிமுறையை இலங்கை நிறுவ வேண்டும் என கூறிவிட்டு சென்றுள்ளமை மிகுந்த ஏமாற் றத்தை தமிழ்மக்களுக்கு தந்துள்ளது என்பதே உண்மை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டேர் லெவென் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கொண்டு வரு வதற்கு தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தம்மால் பெறமுடியும் என ஐரோ ப்பிய ஒன்றியத்தின் நாடா ளுமன்றக் குழு ஒன்று தெரிவித்ததாக பிரித் தானியாவைத் தளமாகக் கொண்ட த பைனான்ஸியல் ரைம்ஸ் கடந்த வியாழக்கிழமை(26) தெரிவித்துள் ளது.
கோவிட் தடுப்பு மருந்து விவகாரத்தின் பைசர் என்ற நிறுவனத்துடன் பல பில்லியன் டொலர்கள் பெறு மதியான நிதி பரிமாற்றத்தில் அவர்   ஈடுபட்டது தொடர்பான விசாரணைகளு க்கு அவர் ஒத்துழைக்க மறுப்பதே இந்த நம் பிக்கையில்லா பிரேரணைக்கான கார ணம்.
கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருக்கும் பைசர் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான தொடர்பாடல்களை பெறுவது தொடர்பான அமெரிக்க ஊடகத்தின் முயற்சிக்கு ஐரோப்பிய நீதிமன்றம் சாதகமான பதிலை வழங்கவில்லை.
தமது குழுவினர் 72 நாடாளுமன்ற உறுப்பினர்க ளின் கையொப்பங்களை பெற்ற பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக றோமானியாவின் நாடா ளுமன்ற உறுப்பினர் கேயொர்ஜி பிப்பேரா தெரிவித்துள்ளார். உர்சுலா தொடர்பாடல்கள் தொடர்பான தகவல்களை கொடுப்பதற்கு மறுத்துவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வெளிப்படைத் தன்மையை பேணத்தவறி வரும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

ரஸ்யாவின் ஏற்றுமதியில் 80 வீத எண்ணையை வாங்கிய இந்தியா

உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடு கள் பொருளாதார தடைகளை விதித்த போதும், ரஸ்யா கடல் மூலம் ஏற்றுமதி செய்யும் எரி பொருட்களில் 80 வீதத்தை இந்தி யாவே கொள்வனவு செய்துள்ளது.
இந்தியாவின் நயாரா மற்றும் றிலையன்ஸ் ஆகிய நிறுவ னங்கள் ரஸ்யாவில் இருந்து 80 வீத எரிபொருட்களை கொள்வனவு செய்துள்ளன. இந்த வருடம் மட்டும் இந்தியா 231 மில்லி யன் பரல்கள் எண்ணையை கொள்
வனவு செய்துள்ளதாக த புளும் பேர்க் என்ற ஊடகம் கடந்த புதன் கிழமை(25) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் செல்வந்தரன முகேஸ் அம்பானியின் றியலை ன்ஸ் நிறுவனம் மட்டும் இந்த வருடம் 77 மில்லியன் பரல்கள் உரல்ஸ் எண்ணையை கொள்முதல் செய்துள்ளது. தின மும் 500,000 பரல்கள் எண்ணெயை கொள் வனவு செய்வதற்கு அம்பானியின் நிறுவனம் வருடத்திற்கு 13 பில்லியன் டொலர்கள் பெறுமதி யான உடன்பாட்டைச் செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் – ரஸ்ய போர் ஆரம்பமாகிய பின்னர் ரஸ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவு நாள் ஒன்றிற்கு 1.8 மில்லியன் பரல்களாக உயர்ந்திருந்தது. கடந்த மாதம் இந்தியாவின் பிரதான எரிபொருள் விநியோகஸ்தராக ரஸ் யாவே இருந்தது.

கென்யாவில் மக்கள் போராட்டம் – பெருமளவானோர் பலி

கென்யாவில் அரசின் ஊழல்கள் மற்றும் காவல்துறையி னரின் வன்முறைகளுக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத் தில் கடந்த புதன்கிழமை(25) 23 பேர் கொல்லப்பட்டதுடன், 400 பேர் காயமடைந்துள்ளதாக கிழக்கு ஆபிரிக்க தேசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 23 மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள் ளன. கொல்லப் பட்டவர்களில் பெரும்பாலானோர் கென்யா காவல்துறையினரின் தாக்குதலில் இறந்துள்ளனர். கடந்த வருடம் மக்களிடம் இருந்து 2.7 பில்லியன் டொலர்களை வரிகளாக சேகரிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் 60 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
தற்போதைய போரட்டமும் அதன் தொடர்ச்சியாகவே மேற் கொள்ளப்படுகின்றது. பெருமளவான இளையோர் இந்த தடவை போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்கள் கடந்த வருடம் கொல்லப்பட்டவர்களின் படங்களையும் தாங்கி போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் அரச தலைவர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். போரட்டத்தை முறியடிப் பதற்காக அரச படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

வெலிஓயா, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது – ரவிகரன் நா.உ. வலியுறுத்தல்

வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியு ள்ள பெரும்பான்மை இனத்தவர் களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடி யாதென  நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள் ளார்.
அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணி
களை, மீளவும் தமிழ் மக்களி டம் ஒப்படைத்துவிட்டு பெரும்பா ன்மை இனத் தவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டுமெனவும் எச் சரித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 25.06.2025 அன்று இடம் பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கடற் றொழில் அபிரிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார்.குறித்த கூட்டத்தில் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் கடற்றொழில்மேற்கொள்வதற்கு நாயாறுப் பகு தியில் இறங்குதுறை வழங்குமாறு அனுமதி கோரியிருந்தனர்.
இதன்போது கருத்துத்  தெரிவித்த  அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாய்தொடக்கம், பேப்பாரப்பிட்டி வரைக்குமான பகுதியே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதியாகும். இந்த கரையோரப் பகுதிகளிலேயே கடற்றொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வெலிஓயா பிரதேசம் என்பது கடற்பகுதி யற்ற ஒரு பிரதேசம். இந்நிலையில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு அங்கு அத்துமீறிக் குடியிருக்கின்ற பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்களும் கடற்றொழில் செய் வதற்கு இறங்குதுறை கேட்டால், கடலைப் பிரதானமான வாழ்வாதாரமாக நம்பி வாழும் கடற்றொழிலாளர்கள் எங்குசெல்வது.
கடல்பகுதியே இல்லாத வெலிஓயா பகுதியில் அத்துமீறிக்குடியிருக்கின்றவர்களை கடற்றொழிலாளர் சங்கமாகப் பதிவுசெய்ததுயார். அவர்கள் நன்னீர் மீன்பிடிச்சங்கமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பின் கடலில் இறங்குதுறை கேட்கமுடியாது.
கடந்த 1984ஆம் ஆண்டிற்கு பிற்பாடு தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, தமிழர்க ளது பூர்வீக மணலாற்றை வெலிஓயாவாக மாற்றி அங்கு அத்துமீறித் தங்கியிருக்கும் பெரும்பான்மையினத்தவர்கள், தமிழ் மக்களிடம் காணிகளை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறவேண்டும்.வெலிஓயா பகுதியில் அத்துமீறிக் குடியிருக்கும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்களுக்கு நாயாற்றில் இறங்குதுறை வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடி யாது – என்றார்.

கைதுசெய்யப்பட்ட தமிழ் நாட்டு மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் மீனவர்களை  எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை உத்தரவிட்டார்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று ஞாயிற்றுக்கிழமை (29) ஞாயிறு அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து  கைது செய்யப்பட்ட  இராமேஸ்வர 8 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்கடையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த மீனவர்களை  மன்னார் கடற்றொழில் திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை  மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

கச்சதீவை எக்காரணத்துக்காகவும் இந்தியாவிடம் மீள வழங்க முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

இராஜதந்திர ரீதியிலும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்ச தீவு எக்காரணத்துக்காகவும் இந்தியாவிடம் மீள கையளிக்கக்கப்பட மாட்டாது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் ஏற்படுத்தும் அழிவினால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவில் தேர்தல் அண்மிக்கும் போது குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கைகளிலெடுக்கும் முதலாவது ஆயுதம் கச்சதீவாகும். கச்சதீவினை இலங்கைக்கு வழங்கியது தவறு என்றும், அதனை நாம் மீளப் பெற்றுக் கொள்வோம் என்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது வழமையான ஒன்றாகும்.

இது அவர்கள் தமது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் உத்தியாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரும் இவ்விடயம் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது தவறு என்றும், அந்த சந்தர்ப்பத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைளால் எமது மீன்வளம் மாத்திரமின்றி முழுக்கடல் வளமும் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். இந்த அழிவு தொடருமானால் வரும் 15 – 20 ஆண்டுகளில் இலங்கையின் கடல் பாலைவனமாகும் அபாயத்தை தவிர்க்க முடியாது. தமிழ்நாட்;டு அரசியல்வாதிகளின் சதித்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என ஜெய்ஷங்கரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

சர்வதேச சட்டத்துக்கமைய சட்ட ரீதியாக ஜனநாயகமான முறையிலேயே நாம் கச்சதீவினைப் பெற்றுக் கொண்டோம். எனவே அதனை மீண்டும் வேறு எவரும் கையகப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. நாம் இது குறித்து இந்திய மத்திய அரசாங்கத்திடமும், தமிழ்நாட்டு அரசாங்கத்திடமும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். எனவே இந்த பிரச்சினை தொடர்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.