Home Blog Page 101

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நாட்டில் இல்லாது செய்வதே ஜே.வி.பியின் கொள்கையாகும்.

தற்போது நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலின் போதும், ஜனாதிபதித் தேர்தலின் போதும் இதற்கான வாக்குறுதிகளை வழங்கியமை தொடர்பிலும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது நினைவுப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், ஜனாதிபதியும் இந்தவிடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துவதுடன், நீதி அமைச்சரும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில், ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கு ஏற்கனவே குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டங்களை வகுப்பதற்கும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணியில் அகழ்வு பணிகள் தொடர்கின்றன : இன்று இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று (03) இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது சிறார்களின் என்புக் கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி எஸ். வீ. நிரஞ்சன் தெரிவித்தார்.

இரண்டு சிறார்களின் என்புக்கூடுகளும், வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனிடையே, சேலை போன்றதொரு ஆடையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது முழுமையாக புதை குழியிலிருந்து அப்புறப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில், ஒரே இடத்தில் பின்னிப்பிணைந்த நிலையில் சில என்புக்கூடுகள் தொகுதியாக காணப்படுவதால் அவற்றை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மனித புதை குழியில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளில் இதுவரையில் சுமார் 40 என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. அவற்றில் 34 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ். வீ. நிரஞ்சன் குறிப்பிட்டார்

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர  இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,  மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதத்தை விட தளமாக உயர்ந்துள்ளதால், இந்த மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டதாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான தரவுகள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும், அதன் பிறகே இறுதியான விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஜூன் மாத எரிபொருள் விலை உயர்வு, மத்திய கிழக்கில் இடம்பெற்ற போரினால் ஏற்பட்டது என்றும், அதே நேரத்தில் டீசல் டேங்கர் லாரி வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அது இலங்கையின் எரிபொருள் விலை தீர்மானத்தில் நேரடி தாக்கம் ஏற்படுத்தியதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,

“எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும்போது, மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் கூட்டுத்தாபனம் செயற்படுகிறது. இருப்பினும், நாங்கள் விலையை குறைத்தால், இலங்கையில் செயற்படும் பிற எண்ணெய் வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்காக நாங்கள் நஷ்ட ஈடு செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். இதற்கான ஒப்பந்த முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தென் கொரியாவின் யொங்க்வோல் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இராஜதந்திர வழியே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை முன்மொழிந்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைப் பிரஜைகள் 5 முதல் 8 மாதங்கள் வரை யொங்க்வோல் பிரதேசத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி கிராமங்களில் வேலை செய்து வருமானம் ஈட்டவும், இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியை கொண்டு வரவும் முடியும்.

இந்த ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துள்ளது.

ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகுதியான தொழிலாளர்களை தெரிவுசெய்து விரைவில் தென் கொரியாவுக்கு அனுப்பும் என, பணியக தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வேலை வாய்ப்பிற்காக வேறு எந்த வெளி தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்க வேண்டாம் எனவும், ஏமாற்றப்படாதிருக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாவிலுள்ள திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்ற முயற்சி

Unknown 3 கன்னியாவிலுள்ள திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்ற முயற்சி

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கன்னியா வெண்ணீரூற்று அருகில் காணப்படுகின்ற சுமார் 3 ஏக்கர் விஸ்திரம் உடைய காணியை சட்டவிரோத குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக கட்டிடங்கள் அமைத்து கைப்பற்றி வருவது தொடர்பில் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.Unknown 2 கன்னியாவிலுள்ள திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்ற முயற்சி

திருக்கோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் இருந்த காணி அதன் உரிமையாளர்களால் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணியை கைப்பற்றும் நோக்குடன் குறித்த பகுதியை சாராத சிலரால் சட்டவிரோதமாக, அவசர அவசரமாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையினால் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையிலும் சட்டத்தை மீறி கட்டிடங்களை அமைத்து வருகின்றனர்.

Unknown 1 கன்னியாவிலுள்ள திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்ற முயற்சி

இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புகளுக்கு அறிவித்தும் இதுவரை எந்த ஒரு சரியான நடவடிக்கைகளும் இடம் பெறாமல் பாராதீனமாக இருப்பது குறித்த பகுதி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Unknown 4 கன்னியாவிலுள்ள திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்ற முயற்சி

உடனடியாக சட்டவிரோத கட்டிடங்கள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயங்கமுடியாத நிலையில் பாடசாலைகள்! : வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!

அதிக மாணவர்களைக் கொண்டு இயங்கிய பாடசாலைகள் கூட இன்று இயங்கமுடியாமல் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய நிறுவுநர் நினைவுநாளும், பரிசளிப்பு விழாவும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்:- போர், இடப்பெயர்வுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் எப்படியொரு சமநிலை இருந்ததோ அதைப் போன்றதொரு நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

வலிகாமம் வடக்குப் பிரதேசம் யாழ்.மாவட்டத்தில் போர் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம். மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. பல குடும்பங்கள் இங்கு வந்து மீளக்குடியமர வேண்டியிருக்கின்றார்கள்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில்கூட மக்களை இன்னமும் குடியமர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது .யாழ்.நகரப் பகுதியை நோக்கிப் போரால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு விரும்பவில்லை. வலிகாமம் வடக்கைப் பொறுத்தவரை பாடசாலைகளில் வளப்பற்றாக் குறைகள் இருக்கின்றன.

அதனை நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. இந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டமையால் அடுத்த வருடம் கிடைக்கும் நிதியில் இந்தப் பகுதிப் பாடசாலைக் ளின் கோரிக்கைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். – என்றார்.

கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது-அமைச்சர் விஜித ஹேரத் கருத்து

கச்சதீவென்பது இலங்கைக்குச் சொந்தமானது. அதனை மீளப்பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை எதுவும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக் குறித்தும் கச்சதீவு மீளப்பெறக்கூடிய சூழ்நிலை உள்ளதா? எனவும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “கச்சதீவென்பது தற்போது இலங்கைக்குச் சொந்தமான தீவாகும். தென்னிந்திய அரசியலிலேயே கச்சதீவு அரசியல் துரும்பு சீட்டாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.கச்சதீவு இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது. அது எமது மண்ணுக்குச் சொந்தமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார் .

செம்மணிப் புதைகுழிக்குள் மேலும் நான்கு சிதிலங்கள்: இதுவரை 38 என்புத்தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்புகள் மற்றும் மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் வியாழக்கிழமை  (03) அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஏழாம் நாள் நடவடிக்கைகள் புதன்கிழமை (02) நடைபெற்றது.

அன்றைய பணிகளில், நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. மேலும் சுமார் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் குழப்பமான முறையில் காணப்பட்டதால், அவற்றை அகழ்ந்து எடுக்க பணியாளர்கள் சவால்களை சந்தித்துள்ளனர்.

மேலும், நேற்றைய அகழ்வு பணிகளில் மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை சிறுவர்களுடைய எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தமாக 38 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்கேற்புடன் சந்தேகத்திற்குரிய பிரதேசங்களில் அகழ்வு பணிகள் புதன்கிழமை ( 02) ஆரம்பிக்கப்பட்டது. அதே நேரத்தில், சந்தேகமான பகுதிகளில் அகழ்வு பணிகளுக்கு முன்னதாக துப்பரவு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை வரும் இஸ்ரேலியர்கள் சிலர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தகவல்

சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும் வரும் சில இஸ்ரேலியர்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அவர்கள் நடத்தும் சட்ட அனுமதியற்ற வர்த்தக நிறுவனங்களில் பல்வேறு வகையான போதைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இது பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுற்றுலா அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வெளிநாட்டினர் இரவு விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் போன்ற வணிக முயற்சிகளை நிறுவியுள்ளனர் இஸ்ரேலியர்களின்   இலங்கை சகாக்களின் பெயர்களில்இவை இயங்குகின்றனஇ

சட்ட விதிமுறைகளைத் தவிர்ப்பதற்கான ஒரு மறைப்பாக உள்ளூர்வாசிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரையில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள அருகம்பை உல்லா கோமாரி மற்றும் பனாமா போன்ற பகுதிகளிலிருந்து வழக்குகள் பதிவாகியுள்ளனஇது இடம்பெறுகின்றது என சுற்றுலாத்துறை குறித்து நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வெளிநாட்டினர் தங்கள் சேவைகளை மற்ற சக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறார்கள். மேலும் ஈட்டப்படும் வருமானம் உண்டியல் போன்ற கட்டுப்பாடற்ற பணப் பரிமாற்ற முறைகள் மூலம் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதன் விளைவாக இலங்கைக்கு சுற்றுலாவிலிருந்து முறையான வருவாய் மறுக்கப்படுகிறது.

வட்ஸ்அப்மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் உள்ள மூடிய சமூக ஊடகக் குழுக்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த இடங்களில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதுஇ இது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான சுற்றுலா நடைமுறைகள்  பாதிப்பு குறித்து குறித்து கவலைகளை எழுப்புகிறது என சுற்றுலாத்துறை குறித்து நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வலையமைப்புகள் டிஜிட்டல் முறையில் இயங்குவதாலும் ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளாக இருக்கும் வாடிக்கையாளர்களின் நெருக்கமான குழுவிற்கு சேவை செய்வதாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வயமைப்புகளை அகற்றுவது கடினமாகக் கண்டறிந்துள்ளனர்.

சட்டவிரோதமாக வணிகங்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் உனவதுன மற்றும் வெலிகம போன்ற சுற்றுலாப் பகுதிகளில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் டாக்ஸி சேவைகளையும் வழங்குகிறார்கள்.

இலங்கை குடிவரவுச் சட்டம் முதன்மையாக புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டம் மற்றும் அதன் அடுத்தடுத்த திருத்தங்களால் நிர்வகிக்கப்படுவதால் நாட்டில் நெறிமுறை சுற்றுலாவை உறுதி செய்வதற்காக அதைத் திருத்த வேண்டியதன் அவசியத்தை அந்த வட்டாரம் வலியுறுத்தியது

முன்னதாக இஸ்ரேலியர்கள் கொழும்பு வெலிகம மற்றும் எல்லா ஆகிய இடங்களில் யூத மத மையங்களாக இருக்கும் மூன்று சபாத் ஹவுஸ்களை நடத்துவதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மத வழிபாட்டுத் தலங்களைக் கையாளும் இலங்கைச் சட்டத்தில் பௌத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் மற்றும் இந்து தொடர்பான விதிகள் உள்ளன ஆனால் யூத மதம் தொடர்பான விதிகள் இல்லை. இதன் விளைவாக புத்தசாசனம் மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் நாட்டில் உள்ள யூத மத இடங்களை நேரடியாகக் கையாள முடியாது.