“நான் அனைவருக்குமான அதிபராக இருப்பேன்”2ம் முறையாக தேர்தலில் வென்ற பிரான்ஸ் அதிபர்

நான் அனைவருக்குமான அதிபராக இருப்பேன்

பிரான்ஸ் அதிபராக இம்மானுவல் மக்ரோங் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தனக்கு எதிராக போட்டியிட்ட லீ பென்னை அவர் தோற்கடித்தார்.

இது வரை வலதுசாரி தலைவர்கள் பெற்ற வாக்குகளை விட லீ பென் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தபோதிலும், இத்தேர்தலில் அவர் தோற்றுள்ளார்.

இந்த தேர்தலில் மக்ரோங் 58.55 சதவீத வாக்குகளையும் லீ பென் 41.45 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளார்.

தேர்தலில் வெற்றி உறுதியான பின்னர், ஈஃபிள் டவர் அருகே தன் ஆதரவாளர்களிடையே உரையாற்றிய மக்ரோங், தான் “அனைவருக்குமான அதிபராக இருப்பேன்” என தெரிவித்தார்.

அதே நேரம் தேர்தலில் தோல்வியுற்றாலும், தான் பெற்ற வாக்குகள் வெற்றியை குறிப்பதாக லீ பென் தெரிவித்தார்.

மக்ரோங் வெற்றிக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tamil News