பொது மக்களின் போராட்டத்திற்கு அரச உத்தியோகத்தர்களும் உதவ வேண்டும் – இம்ரான் எம்.பி கோரிக்கை

பொருட்களின் கண்மூடித்தனமான விலையேற்றம், வாழ்க்கைச் செலவு உயர்வு என்பவற்றைக் கண்டித்து பொதுமக்கள் முன்னெடுத்து வரும் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு சகல அரச உத்தியோகத்தர்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டுமென திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்  கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (25) கருத்து  தெரிவித்த அவர்,

இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சின்னாபின்னமாகியுள்ளது.  பொருட்களின் விலை நாளாந்தம் உயர்த்தப் படுகின்றது. இதனால் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்தப் பொருளாதார சீரழிவினால் அரச உத்தியோகத்தர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த விடயம் சொகுசு வாழ்க்கை வாழும், ஜனாதிபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், பதவி ஆசை கொண்டு அமைச்சுக்களை பொறுப்பெடுத் துள்ளோருக்கும் தெரியா விட்டாலும் எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் மக்களோடு மக்களாகவே இருக்கின்றேன்.

எனவே, பாதிக்கப்பட்டோர் என்ற வகையில் பொதுமக்கள் முன்னெடுத்து வரும் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு சகல அரச உத்தியோகத்தர்களும் ஜனநாயக ரீதியில் தமது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply