திருகோணமலை:கிண்ணியா பகுதியில் படகு கவிழ்ந்ததில் பலர் பலி

167 Views

படகு கவிழ்ந்ததில் பலர் பலி

திருகோணமலை – கிண்ணியா, குருஞ்சங்கேனி பிரதேசத்தில் மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் பலர் பலியாகியுள்ளனர். பாடசாலை மாணவர்கள் 4 பேர் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வருவதால் அவ்விடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மோட்டார் இழுவை படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

அத்துடன் மேலும் சிலர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த வைத்தியசாலை யின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சிலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந் தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த விபத்தில் பலர் மரணித்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படும் நிலையில் தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

படகின் கொள்ளவை மீறி பயணிகளை ஏற்றிச்சென்றமையாலேயே விபத்து சம்பவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply