நிதி அமைச்சரைக்கூட நியமிக்க முடியாத ஜனாதிபதியிடம் இருந்து தீர்வு எப்படி கிடைக்கும்? ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கேள்வி

நிதி அமைச்சரைக்கூட நியமிக்க முடியாத ஜனாதிபதியிடம் இருந்து தீர்வு எப்படி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று எதிர்க்கட்சி உறுப்பினரான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஒருவருக்கு பின் ஒருவர் என்ற வகையில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் வாக்குமூலம் வழங்கும் வகையில் கதைக்கின்றனர். அதேபோன்று வேலை செய்யும் வீரரை அழைத்து வந்தும் இந்த சபையில் உட்சாகமடைந்தனர். தனது வீட்டை சுற்றி வளைக்கும் போது அறிந்திருக்காதவர் ஞானா அக்காவின் வீட்டை சுற்றி வளைக்கும் போது அங்கு பாதுகாப்பை வழங்குகின்றனர்.

வேலை செய்ய முடியாத ஜனாதிபதி என்றால் பதவி விலகி போய்விடுங்கள். நிதி அமைச்சரைக்கூட நியமிக்க முடியாத ஜனாதிபதியை இந்த சபைக்கு அழைத்து வந்து சிறிய உட்சாகத்தை பெற்றுள்ளனர். இங்கு முடியாமையின் வாக்குமூலத்தையே இவர்கள் இங்கு செய்கின்றனர். எவ்வேளையிலும் யாரையாவது துன்பப்படுத்தும் வகையில் தீர்மானங்களையே எடுத்துள்ளனர். சபைக்கு வெளியே நடக்கும் பிரச்சனைகளை புரிந்துகொள்ளுங்கள்.

இப்போது வன்முறைகள் தொடர்பில் கதைக்கின்றனர். நீங்கள் அரசாங்கத்தை வன்முறைகளின் மூலமே பெற்றுக்கொண்டீர்கள் அம்பாறையில் கருத்தடை கொத்தில் ஆரம்பித்து குருநாகலில் வைத்தியர் தொடர்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் பொறுப்புகளை மீறும் அரசாங்கமாக இருக்கின்றனர். முழு நாடும் பற்றி எரிகையில் அரசாங்கம் நடந்துகொள்ளும் முறை வெட்கமாக உள்ளது. உங்களின் 69 இலட்சம் இல்லாமல் போகும் போது, எங்களுக்கு 55 இலட்சம் பேருக்கு பொறுப்பு கூற வேண்டியுள்ளது. இதன்படி அதனை நாங்கள் செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் இடைக்கால, தேசிய அரசாங்கங்கள் என்று இருந்தன. அதேபோன்று இப்போது யோசனைகள் வந்துள்ளன. இப்போது 43 பேர் ஆளும் கட்சியில் சுயாதீனமாகியுள்ளனர். வெளியே மக்கள் போராடுகையில் பின்னால் இருப்பவர்கள் தொடர்பில் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்னர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இங்கே பயந்த ஜனாதிபதியை வைத்துக்கொண்டு செல்ல முடியுமா? சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு யாரும் இல்லை.

எமக்கு இந்த பாராளுமன்றத்திற்குள் சரியான அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால் இடைக்கால அரசாங்கத்திற்காக அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவோம்.

நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறே கூறுகின்றனர். முட்டாள் தனமான அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இடைக்கால அரசாங்கம் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பது என்பது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் கூறுவோம் என்றார்.

Tamil News