இடைக்கால அரசாங்கத்தை அமைத்து, நட்பு நாடுகளிடம் உதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள்! பாராளுமன்றத்தில் விமல் விரவன்ச

நட்பு நாடுகளிடம் உதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள்

இடைக்கால அரசாங்கத்தை அமைத்து, நட்பு நாடுகளிடம் உதவிகளை பெற்று  நாட்டின் அந்நிய செலாவணி இருப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவே சிலர் முயற்சிக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் நாங்கள் முன்கூட்டியே அறிவித்திருந்தோம். ஆனால் நாங்களே கூறிய எதனையும் அசிங்கமான அமெரிக்கர் கண்டுகொள்ளவில்லை.

இப்போது சர்வதேச நாணய நித்தியத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுகின்றார். ஆனால் அப்போது நாங்கள் கூறும்போது அதற்கு ஏன் செல்லக் கூடாது என்ற யோசனையை அவர் அமைச்சரவைக்கு முன்வைத்தார். இந்நிலையில் இப்போது நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் நெருக்கடியை குறைக்க இடைக்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்த நேரத்தில் நெருக்கடி நிலைமையை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தலாம். இதற்கு இடமளிக்க கூடாது. இதனால் நாட்டை பாதுகாக்க வேண்டும். இதேவேளை நாட்டில் இப்போது அமைச்சரவை இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் இந்த பாராளுமன்றத்தின் ஊடாக பொருத்தமான அமைச்சரவையை அமைக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி அதனை அமைக்காது காத்திருக்கலாம்.

எவ்வாறாயினும், எமெக்கென பொறுப்புகள் உள்ளன. வெளிநாடுகளுளிடம் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இருக்கும் அரசாங்கம் அனைத்து நாடுகளையும் பகைத்துக்கொண்டுள்ளது. இதனால் பிரதமர் முதல் முழு அரசாங்கமும் விலக வேண்டும். அதற்கு பதிலாக புதிய இடைக்கால ஆட்சியை அமைக்க வேண்டும். அதன்போது நெருக்கடிக்கு எமது நட்பு நாடுகளிடம் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் அந்நிய செலாவணி இருப்பை அதிகரித்து பலப்படுத்த வேண்டும்.

இதன்படி உலகமும் எமது நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளும் இடைக்கால நிர்வாக ஆட்சிக்கு செல்ல வேண்டும். இதில் அரசியல் பந்தாட்டம் செய்ய முடியாது. இதில் கவனம் செலுத்தாவிட்டால் முழு நாடும் மயானத்தை நோக்கியே செல்லும். இந்த நேரத்திலும் நாங்கள் சரியான வேலைத்திட்டத்திற்குள் செல்ல வேண்டும் என்றார் விமல் வீரவன்ச.

Tamil News