கோட்டபாய அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் போராட்டம்

93 Views

வவுனியாவில் போராட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று  (07) பிற்பகல் வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரார்கள் ‘ கோட்டபாய வீட்டுக்கு செல்லுங்கள், அரசாங்கமே உடனடியாக பதவி விலகு, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கொடு’ என பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG 6254 கோட்டபாய அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் போராட்டம் IMG 20220407 WA0009 கோட்டபாய அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் போராட்டம்

அதே நேரம் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நிலைமை காரணமாக மக்களின் விரக்தி நாடு பூராகவும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் இடம் பெற்று வரும் நிலையில் கிண்ணியாவிலும் இன்று (07) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

Tamil News

Leave a Reply