கிளிநொச்சி பூநகரி வாடியடியில் சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றுள்ளது.
தமிழ் தேசிய மாவீரர் நாளானது எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கின்ற நிகழ்வு பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையிலே கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்கான மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று பகல் கிளிநொச்சி பூநகரி வாடியடி சந்தியில் நடைபெற்றுள்ளது.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவ கட்சியினுடைய செயலாளர் நாயகமுமான முருகேசு சந்திரகுமார் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு மாவீரரின் பொதுப் படம் மற்றும் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் பெற்றோர்களால் பிரதான மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




