தாயக மேம்பாடு: வடக்கு மாகாண மீன்பிடி வளம்
மீன்பிடித் தொழில் என்பது மீன் பிடித்தல், மீன் வளர்த்தல், மீன் அல்லது மீன் பொருட்கள் விற்பது, பதப்படுத்துவது, பாதுகாப்பாக சேமித்து வைப்பது, இடத்துக்கு இடம் எடுத்துச் செல்வது என அனைத்தும் உள்ளடக்கியதாகும். வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில், பொருளாதாரத்தில் விவசாயத்திற்கு அடுத்ததாக அமைவது இந்த கடல் வளமே.
மீன்பிடி விருத்திக்கு ஏதுவான காரணங்களாக பல்லுருவ கடற்கரை, கண்ட மேடைகள், உகந்த காலநிலைகள், தொழிலாளர் வசதிகளை குறிப்பிடலாம்.
மணல் பகுதிகள், பொங்கும் முகங்கள், சதுப்பு நிலங்கள் போன்றவை மீன் உருவாக்கத்திற்கு துணை புரிகின்றது. இது மட்டுமல்லாது ஆழம் குறைந்த பகுதிகளில் கண்ட மேடைகள் துணை புரிகின்றது.
வடபகுதி காலநிலை தன்மைகளை அவதானிக்குமிடத்து, வடபகுதியானது வடகீழ் பருவக் காற்றின் செல்வாக்குக்கு உட்பட்ட பகுதியாகும். மீன்பிடித் தொழிலுக்கு சாதகமான சூழ்நிலை வடபகுதியில் காணப்படுகின்றது.
சுதந்திர காலத்துக்கு முன்னர் வீச்சு வலை, கட்டுவலை, கரைவலை மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டன. 1980 ஆம் ஆண்டுகளின் பின் இத்தொழில் மட்டப்படுத்தப்பட்ட இடங்களில் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இன்று யுத்தம் முடிவடைந்த பின்னும் தொழில் வளர்ச்சி அடையவில்லை. பல இடங்களில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி தொழில் செய்து வருகின்றனர். கடந்த பத்து வருடங்களாக போதிய அளவு மீன்பிடி வலைகள், உபகரணங்கள் மற்றும் படகுகள் போதியளவு வழங்கப்படவில்லை.
மன்னார் மாவட்டத்தில் சவுத்பார் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி மீனவ குடியிருப்புகளை அமைத்து மீன்பிடித்து வருகின்றனர். இது மட்டுமல்லாது உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வட பகுதியில் நிரந்தரமாக உள்ள மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
யாழ் மாவட்டத்தில் பலாலி, மயிலிட்டி, காங்கேசன்துறை சேத்தாங்குளம் ஆகிய பகுதிகள் மீளவும் மீனவர்கள் பாவனைக்கு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுதந்திரமாக மீன்பிடித் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை அங்கு காணப்படுகின்றது.
மீன்கள் பழுதடையாமல் இருக்க யாழ்ப்பாணத்தில் 9ம், கிளிநொச்சியில் 1ம், முல்லைத்தீவில் 3ம், என பனிக்கட்டி ஆலைகள் (Ice Planet) உருவாக்கப்பட்டுள்ளன.
படகுகளை பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் 6676ம், மன்னாரில் 4088ம், கிளிநொச்சியில் 827ம், முல்லைத் தீவிலும் 1411ம் ஆக படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு மீன்பிடி தொழிலைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணத்தில் 3147 மெட்ரிக் டொன், கிளிநொச்சியில் 781 மெட்ரிக் டொன், மன்னாரில் 815 மெட்ரிக் டொன், முல்லைத்தீவில் 740 மெட்ரிக் தொன் என மீன்பிடி மீன் அளவு காணப்படுகின்றது.
கரையோர மீன்பிடித் தொழிலானது தரையிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்திற்கும், ஆழ்கடல் மீன்பிடி தொழிலை பொறுத்த வரையில் இயந்திரப் படகுகளின் உதவியுடன் 75 கிலோ மீட்டர் வரை தொழில் நடைபெறுகின்றது.
எமது தேசிய உற்பத்தியில் மீன்வளம் பிரதானமாக உள்ளது. யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தீவை அண்டிய நீண்ட கடற்கரை காணப்படுவதாலும், கண்ட மேடைகள் அதிகம் காணப்படுவதாலும், மீன் வளம் அதிகமாக காணப்படுகின்றது.
மீனவர்கள் சுயமாக உற்பத்தி செய்கின்ற கண்டமேடைகள் ஆழம் குறைந்த கரையோரத்தில் அதிகம் காணப்படுகின்றது.
எனவே இந்த பகுதியில் மீன் வளத்தை எல்லா காலங்களிலும, ஒரே சீராக வைத்து இருக்க வேண்டுமாயின், மீன்கள் குஞ்சு பொரிக்கும் காலத்தில் வழிச்சல் வலையை பயன்படுத்தி மீன் பிடி தடை செய்யப்பட வேண்டும்.
கரையோரத்தில் வாழும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கணவரை இழந்த மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே அம்மக்களின் அடிப்படை தேவையாகும்.
என வெளிநாடுகளில் உள்ள தாயக உறவுகள் மீன்பிடி தொழில் தொடர்பான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே மீனவ மக்களின் உடனடித் தேவையாகும். இதனை தவறாமல் வழங்க முன்வர வேண்டும் என்பதே வடக்கு வட மாகாண மீனவ மக்களின்இன்றைய எதிர்பார்ப்பாகும்.
- மலையக மக்களும் சவால்களும் | துரைசாமி நடராஜா
- மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய தேவைப்பாடுகள் | க.மேனன்
- இலக்கு மின்னிதழ் 175 ஆசிரியர் தலையங்கம்
[…] வடக்கு மாகாண மீன்பிடி வளம்: மீன்பிடித் தொழில் என்பது மீன் பிடித்தல், மீன் வளர்த்தல், மீன் அல்லது மீன் பொருட்கள் விற்பது, பதப்படுத்துவது, பாதுகாப்பாக சேமித்துமேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/weekly-epaper-175-march-27/ https://www.ilakku.org/ […]