ஊழல் மற்றும் கலவரத்திற்கு காரணமான மஹிந்த உட்பட அவரின் குழுவினர் கைது செய்யப்பட வேண்டும் – கிழக்கு மக்களின் குரல் அமைப்பு

இலங்கையில் இடம்பெற்றுள்ள பல ஊழல் மற்றும் நாட்டில் இடம்பெற்ற கலவரங்களுக்கு சூத்திரதாரிகளான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச  மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவரும் பாரபட்சமின்றி கைது செய்யப்பட வேண்டுமென கிழக்கு மக்களின் குரல்  அமைப்பின் அமைப்பாளர் சட்டத்தரணி  அருண் ஹேமச்சந்திர கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ச  அவர்களின் தலைமையில் உருவான அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பல அரசியல்வாதிகளின் ஊழல் மிக்க ஆட்சியினால் நாடு இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்ததாகவும் கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டத்தில் குண்டர்களை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர்கள்,மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற வன்முறைக்கு மூல காரணமான அனைவரும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

மேலும் இவ்வாறான ஊழல் மிக்க ராஜபக்சே குடும்பத்தினர் மட்டுமல்லாது முன்னாள் அமைச்சர்களை கலவரத்திற்கு காரணமான குண்டர்களை ஏவி விட்ட அரசியல்வாதிகளை திருகோணமலை கடற்படை முகாமில் மறைத்து வைத்துக்கொணடு ஊழல் வாதிகளையும் வன்முறை காரர்களையும் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும்  அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamil News