இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த உலங்குவானுர்தி விபத்து

509 Views

முப்படைகளின் தளபதி பயணித்த உலங்குவானுர்தி

இந்தியா: இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த உலங்குவானுர்தி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான இராணுவ உலங்குவானுர்தியில்  முப்படைகளின் தளபதி பிபின் ராவத் யணித்தார் என்று  இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை 1:00 மணி வானில் பறந்து கொண்டிருந்த இராணுவ உலங்குவான் ஊர்தி   திடீரென கிழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த உலங்குவானுர்தியில் 14 பேர் பயணம் செய்ததாகவும் 13 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

முப்படைகளின் தளபதி பிபின் ராவத், படுகாயம் அடைந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பாக  மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply